Friday, January 23, 2015

குடை தந்த விநாயகர்



வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்               
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. 

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை  

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், 105 மாணலூர் கிராமத்தில் அமைந்துள்ள  மிகவும் தொன்மை வாய்ந்த சிவாலயம் அதீத சிறப்பம்சம் கொண்ட திருக்கோயில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகின்றது.

 சிவபக்தர் ஒருவர் தான தருமங்களை செய்து வந்தார்.
தானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமானதால் பக்தரால் தானதருமங்களை நிறைவாக வழங்கமுடியவில்லை.

மிகவும் வேதனையடைந்த அவர், சிவபெருமானை வணங்கி
கண் கலங்கினார்.

 அவ்வழியே தானம் பெற வந்த ஒருவர், சிவபக்தரின் மனக்கவலையை அறிந்து "தான் ஒரு ஜோதிடர் என்றும் தங்களின் ஜாதகத்தை தாருங்கள் பலன் சொல்லுகிறேன்' எனவும் கூறி சிவபக்தரின் ஜாதகத்தை பார்த்து ""ஐயா! தாங்கள் அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசிக்கு சொந்தக்காரர், எனவே பெரிய பணக்காரராக நீங்கள் இருந்தாக வேண்டும்'' என்று கூறி சென்றார்.

நிறைய தானம் செய்ய வேண்டும் என்று எண்ணிய சிவபக்தர், சிவபெருமானை நோக்கி புன்னை வனத்தில் தவமிருந்தார்.

 தவத்தினை கண்ட பிரம்மாவும், விஷ்ணுவும் பக்தருக்கு வேண்டும் வரம் அளிக்கக்கூடியவர் சிவ பெருமான் என்பதை உணர்ந்து, வரத்தை கும்பராசிக்கு மட்டும் தந்துவிட்டால் மற்ற கிரகங்களுக்கு பலன் இல்லாமல் போய்விடுமே என்று வருணணை அழைத்து மழை பெய்து சிவ பக்தரின் தவத்தினை கலைக்க வேண்டினர்.

உடனே வருண பகவான் மழை பொழிய வைத்தார். அப்போது சிவ பக்தர் கவலையுற்று மழையை நிறுத்துமாறு விநாயகரை வேண்டினார்.

விநாயகர் தனது ஆள்காட்டி விரலை தனது தலைக்கு மேல் சுற்றினார். இதனால் மழையானது இவ்வூரில் மட்டும் நின்று பிற்பகுதியில் பெய்தது.

பக்தரின் தவம் நிறைவடைய, சிவபெருமான் நேரில் தோன்றி ஆசி வழங்கி, "கிரகங்கள் தனது பணியை சரியாகச் செய்யும்போது அதை நாம் தடுக்க இயலாது. உனது நோக்கத்தை மெச்சி வரம் தருகின்றேன்'' என்று கூறி, ""கும்பராசி அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய கிரக கோளாறுகள் நீங்க, இத்திருத்தலம் வந்து என்னை வழிப்பட்டு நிவர்த்தி பெறட்டும். மேலும் உனது வீட்டில் தவிட்டு பானையெல்லாம் தங்கமாய் இருக்கும்! உனது தரும காரியம் தடையில்லாமல் நடக்கும்'' என அருளாசி வழங்கினார்.

மழையை நிறுத்தி சிவபக்தனின் தவத்தை காத்ததால் விநாயகர் தலையில் குடையுடன் காட்சி அளிக்கின்றார்.

 குடை விநாயகரை வழிபடுவோர் விபத்துக்களிலிருந்து காப்பாற்றப்படுவார் என்பதுடன் குபேர யோகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

இங்கு சுந்தரவள்ளி அம்மனை வழிபடுவோருக்கு அழகிய மேனியையும், திருமண யோகத்தையும் அருள்கிறார்.

அதோடு வெண்புள்ளி நோய் உள்ளவர்கள் ஆலயத்திற்கு எதிரில் உள்ள திருத்தேர் குளத்தில் நீராடி தாமரை மலர்களை அம்மனுக்கு சாற்றி 11 வாரம் வியாழக்கிழமையில் வழிபட்டால் அந்த நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

சிவன் புன்னை வனத்தில் தோன்றியதால் புன்னைவன நாதர் எனவும் விநாயகர் மழையை தடுத்ததால் குடை தந்த விநாயகர் எனவும் அம்மன் அழகு மேனியை அருள்வதால் சுந்தரவள்ளி எனவும் தானதருமங்கள் சிவபக்தர் நிறைய செய்ததால் அவர் வாழ்ந்த ஊர் மாநல்லூர் எனவும் அழைக்கப்படுகிறது.

இன்றளவும் மழையானது இவ்வூரைச் சுற்றி பெய்து விட்டு கடைசியில் இங்கு பெய்யும் அதிசயம் நடைபெறுகிறது.

இத்தகைய தலவரலாற்றுப் பெருமைமிக்க இக்கோயிலில்திருப்பணியில் பங்குபெற்று இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 89405 87036/ 90036 99973. (மாணலூருக்குச் செல்ல: கீழ்வேளூர்} திருத்துறைபூண்டி மார்க்கத்தில் கிள்ளுக்குடி என்கிற ஊரில் இறங்க வேண்டும்.

22 comments:

  1. சிறப்பை அறிந்தேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. குடை தந்த விநாயகர் அனைவரையும் காத்தருள்வாராக!..

    ReplyDelete
  3. அதிசயமான விநாயகர். அவிட்ட நட்சத்திரகாரர் தவிட்டுப்பானையில் பொன் எடுக்கும் காரணத்தகவல்கள் சிறப்பு. அழகான படங்கள்.

    ReplyDelete
  4. வித்தியாசமான கோவில் பற்றிய அறிமுகம் அம்மா....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  5. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  6. மாநல்லூர் மிக அருமையான தலமாய் இருக்கிறது.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. குடை தந்த விநாயகர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  8. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    ReplyDelete
  9. இன்று தான் உங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந்தது என்பதை வலைச்சரத்தில் அறிந்தேன். வருத்தமுற்றேன்.
    மனச் சோர்வு முழுவதுமாக நீங்கி உடல் நலம் பழையபடி ஆரோக்கியமடைந்து மன மகிழ்வையும் திரும்பவும் பூரணமாகப் பெற வேண்டுகிறேன்!

    ReplyDelete
  10. எனக்கு மாத்திரைகளால் சரியாகாத உயர் இரத்த அழுத்தம் கீழ்க்கண்ட பயிற்சியால் மறுபடியும் கட்டுக்குள் வந்தது. இன்று வரை சரியாக இருக்கிறது. அதை என் வலைத்தளத்தில் வெளியிட்டுமிருக்கிறேன். கீழே அந்த இணைத்துள்ளேன்.

    http://www.muthusidharal.blogspot.in/2012/08/blog-post_19.html

    ReplyDelete
  11. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

    ReplyDelete
  12. ஒரு குடைகீழ் புவனம் ஆளும் மஹாகணபதி அல்லவா??

    ReplyDelete
  13. புதியதகவல்கள் .
    மிக்க நன்றி.
    நிச்சயமாக தாங்கள் கருத்திடவராததால்
    சுகயீனம் என்றே புரிந்து கொண்டேன்.
    நலம் பெற இறையருள் நிறையட்டும்.
    வேதா. இலஙங்காதிலகம்.

    ReplyDelete
  14. my rasi-natchathiram same. thanks

    ReplyDelete
  15. சிவன் கதை நன்று. எப்படியெல்லாம் கட்டியிருக்கிறார்கள் என்று வியக்கிறேன்.

    ReplyDelete
  16. மேடம் நலம் தானே?

    ReplyDelete
  17. அன்புடையீர் வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (02.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    http://blogintamil.blogspot.in/2015/06/2.html

    ReplyDelete
  18. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
    http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_13.html
    அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு-1
    ஆயிரம் நிலவே வா ! ஓர் ஆயிரம் நிலவே வா !!
    அதிசயப் பாறைகள்-2
    கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்-3

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  19. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
    http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_13.html
    அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு-1
    ஆயிரம் நிலவே வா ! ஓர் ஆயிரம் நிலவே வா !!
    அதிசயப் பாறைகள்-2
    கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்-3

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  20. அன்பு சகோதரி / சகோதரர் அவர்களுக்கு வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இரண்டாம் முறையாக, இன்று (03.06.15) அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு எனது உளங்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள். மற்றும் பாராட்டுக்கள்.

    வலைச்சர இணைப்பு:
    http://blogintamil.blogspot.in/2015/06/3.html

    ReplyDelete
  21. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
    வலைத்தளம்: மணிராஜ்

    http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html
    குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி-4

    http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_25.html
    கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்-

    http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_21.html
    புதுமை புதுமை கொண்டாட்டம்-6

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  22. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/4.html#comment-form

    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
    வலைத்தளம்: மணிராஜ்

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_31.html
    ஆதரவு அளிக்கும் ஆம்பரவனேஸ்வரர்-7

    http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_27.html

    மிஞ்சிய பலன் தரும் இஞ்சி-8


    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_08.html

    பஞ்ச வர்ணக்குருவிகள்-


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete