மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
"இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது.
பழயன கழிந்து புதியன புகுதலே தை பொங்கலின தாத்பர்யம்
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது.
கரும்பின் ன் மேல்பகுதிஉப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும்.
வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது.
அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
தைமாச பல்லாக்கில் வருகிறது தித்திக்கும் திருவிழா
உள்ளங்கள் பொங்கி வழிய பொங்கல் திருவிழா
வாழ்விற்கு வசந்தம் சேர்த்த மகுடம் சூட்டி மகிழ்ந்த
பூமித் தாயே பெருமிதம்கொள்
பண்பட்ட கலாச்சாரத்தின் விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த விந்தைகள் எதுவும் இல்லை
திங்கள் பார்த்து பொங்கி வழியும் பொங்கல் பானைகளாக
நம் அனைவரின் இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .
பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்..
சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது.
உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது.
பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள்.
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை
கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிக்கும் அன்புத்திருநாள் ...

பிழைப்புக்காக திரைகடல் ஓடி திரவியம் தேட திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் ஒன்றுகூடி மகிழும். திருநாள் ...
மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாக விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்...