Showing posts with label shiva. Show all posts
Showing posts with label shiva. Show all posts

Monday, March 17, 2014

நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்









அப்பனை நந்தியை ஆரா அமுதினை 
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை 
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால் 
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே 

- திருமூலவர் திருமந்திரம்
புத்திரபாக்கியம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்த சிலாதமுனிவரது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அருளால் பிறந்தவர்  நந்தி பகவான்..
மகன் பிறந்த மகிழ்ச்சியை  முழுமையாக அனுபவிக்க முடியாமல்.  பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான்.

பெற்றோரின் கவலை  உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் அறிந்து. "கவலை வேண்டாம்' என்று அவர்களை ஆறுதல்படுத்திய நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்கொண்டான். 

சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றான். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றான்.
நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண் டார். 

உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மண மகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் திருமழபாடியில்  கோலாகலமாக சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
 பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார். 

திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வர். இதைத்தான் "வருவது வைத்தியநாதன்பேட்டை; போவது புனல்வாசல்' என்பர்.

நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன

திருவேதிக்குடியிலிருந்து வேதியர்கள் வந்தனர். 

திருப்பழனத்திலிருந்து பழ வகைகள் வந்தன. 

திருப்பூந்துருத்தியிலிருந்து மலர் மாலைகள் வந்தன. 
திருநெய்த் தானத்திலிருந்து யாகத் திற்கும் சமையலுக் குமான நெய் வந்தது. 

திருச்சோற்றுத் துறை யிலிருந்து அறுசுவை அன்ன வகைகள் வந்தன. 

இந்தத் தலங்க ளெல்லாம் திருமழ பாடியைச் சுற்றி அமைந்துள்ளன.

நந்தி திருமண விழா காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். 
"நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்;சுபகாரியங்களும் நடை பெறும் .
நந்தி ஸ்லோகம் திருமூலவர் அருளியது

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுகிறார்..!

அழிவே இல்லாத தருமம். விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். 

தருமம் இறைவனைத் தாங்குகிறது. 

நந்தி விடும் மூச்சுக்காற்றுதான் சிவபெருமானுக்கு உயிர்நிலை தருகிறது. 

இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. 

இந்த மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது. ..!
பிரதோஷ காலங்களில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் சிவ தரிசனம் பெறுவதும் ,நந்தி வாகன சேவையும் மிகவும் விஷேசமான பலன்களைத் தரும்.








Monday, April 1, 2013

துளசீஸ்வரர்.





பறீ மன் நாராயணன் துளசிப்பிரியன் ..
 குளத்தூரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் துளசீஸ்வரர்.  

அகத்தியர், கயிலாயத்திலிருந்து  தென்பகுதிக்கு வந்தபோது, எங்கு பார்த்தாலும் துளசிச்  செடிகள் நிறைந்த வனமாகக் காட்சி தந்த இந்த தலத்திற்கு வந்தார்.  

சிவ வழிபாட்டிற்குரிய நேரம் ஆனதால், சுற்றும்  முற்றும் பார்த்தார்.  எங்கும் கோயில் காணப்படவில்லை.

அப்போது, "அகத்தியரே, என்னைத் தேடி வேறெங்கும்  அலைய வேண்டாம்.  நான் இங்கே துளசிச் செடிகள் சூழ  மறைந்து இருக்கிறேன்" என்று அசரீரி ஒலித்தது.  
ஒலி வந்த வடதிசையில் சுயம்பு லிங்கம் ஓன்று காணப்பட்டது.  

துளசியையே  இறைவனுக்கு சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை 
செய்தார்.  

சிவபெருமான் தலையை சற்று சாய்த்து  அவரது பூஜையை ஏற்று, சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்தார்.   
இன்றும் ஈஸ்வரனை துளசியில் அர்ச்சித்து, துளசியையும்
துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

இந்தப் பிரசாதம் உடல் நலத்திற்கு சிறந்தது, ஜுரம்,  இருமல் 
போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் ...
துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால்  துளசீஸ்வரர் என்று பெயர்.  

அருள் புரியும் அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. 

துளசீஸ்வரரை திங்கட்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் 
சிவனருள் கிட்டும்.  
ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்து இருந்தாலும், சந்திர தோஷம் இருந்தாலும் திங்கட் கிழமைகளில் சந்திர ஹோரையில் இந்த ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகும்.

பௌர்ணமி அன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது
வெள்ளை அரளி மலர்கள் சாத்தி, துளசியால் அர்ச்சனை 
செய்து வழிபட்டால், பௌர்ணமி நிலவின் குளுமையை 
பக்தர்கள் வாழ்வில் அடைவர் என்பது ஐதீகம்.
Kulathoor, near Singaperumal kovil,
Chengalput district,

Tuesday, December 11, 2012

சங்கடம் தீர்க்கும் சங்கரனுக்கு சங்காபிஷேகம்!



om namah shivay





கழுகுதொழு வேதகிரி சிகரி கரிவீறு கதிருலவு வாசல்                   நிறைவானோர்
கடலொலியதான தமிழ் மறைகள்யோது கதலிவன மேவு               பெருமாளே!
அருணகிரிநாதர் – திருப்புகழ் -திருக்கழுக்குன்றம்


கலங்கி வந்தவர்களுக்கு கலங்காமலே  கழுக்குன்றிலே அருள் காட்டி கலக்கம் தீர்க்க திருக்கழுக்குன்றம் அமர்ந்து  அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கித் தொழுதால் நம் வினைகள் தவிடுபொடியாகும்..

 சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள திருக்கழுக்குன்றம்வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கும் மலை மேலுள்ள மலைக்கோயிலில் மூலவரின் பின்புறம் ஈசனின் திருமணக் கோலச் சிற்பம் அதி அற்புதமானது ...


 சொக்கநாயகி என்ற திருப்பெயரில் பார்வதி தேவி சொக்கவைத்து அருள்பாலிக்கிறாள்.

மலைக்கோயில் ஈசனை இந்திரன் "இடி வழிபாடு' செய்து வழிபடுகிறான்.  ""இடி வழிபாடு' மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருந்து  நிரூபிக்கிறதாம் ...

வேதகிரீஸ்வரரை வழிபட  மார்கண்டேயர் வந்தபோது அபிஷேகம் செய்ய விரும்பினார். அபிஷேகம் செய்ய தீர்த்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து வர மார்கண்டேயர் ஈசனை வேண்ட அந்த தீர்த்தக் குளத்தில் வலம்புரி சங்கு தோன்றிய வலம்புரி சங்கால் வேதகிரீஸ்வரரை அபிஷேகித்து வழிபட்டார்.

அன்று முதல் குளமும் சங்கு தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படும் .குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரி சங்கு தோன்றும் சங்குகள்  "தாழக்கோயில்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்த வசலேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கடலில் சங்கு கிடைப்பது வழக்கம். ஆனால், குளத்தில் சங்கு கிடைப்பது அரிதிலும் அரிதானது...

திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 
சங்கு பிறப்பது சிறப்பு.


ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், கார்த்திகை மாத கடைசி திங்களன்று வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது சங்கு தீர்த்தக் குளத்தில் கிடைத்த சங்குகளே முதன்மை பெறும்.
சங்கரனுக்கு நிகழும் சங்காபிஷேகத்தை தரிசித்தால் சங்கடங்கள் தீரும் ..!



கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.

சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து,  சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன்  ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்.இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.

சங்கு அபிஷேகம் காண்டு சங்கடங்கள் நீங்கப் பெற சங்கல்பிப்போம் ....