காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை திருமணமான பெண்கள் உண்ணாமல் நோன்பிருந்து தங்கள் கணவரின் உடல்நிலனுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கும்
பண்டிகையாக கார்வா சௌத் கொண்டாடப்படுகிறது...
நிலவு வந்ததும் அதை நீரிலோ, சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். பிரார்த்தனை செய்வார்கள்...
ஐப்பசி மாத முழு நிலவு கழிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிற நோன்பு சரத் பூர்ணிமா முடிந்து சதுர்த்தி அன்று வரும், நமக்கு அன்று சங்கட சதுர்த்தி இருக்கும்.
chowth என்றால் சதுர்த்தி. அன்று அவர்கள் காலை சூரியன் உதித்த பின், தண்ணீர் கூட இல்லாமல் இரவு வரை விரதம் இருந்து பின் சந்திரனைக் கண்டபின் சப்பிடுகிறார்கள்,

கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு - பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள்.
மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.
மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது.
கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டு, கை நிறைய வளையல் அழகாய் அடுக்கி
முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.
மாலை வட்டமாக உட்கார்ந்து, நடுவில் ஒரு பெரிய விளக்கு வைத்து பேணி என்ற விரத சேவை , பல வித பழங்கள், கேசரி போல் பிரசாதம் வைத்து பூஜை ஆரம்பிக்கிறார்கள்.
கையில் ஒருதட்டில் கோதுமை மாவில் செய்த விளக்கேற்றி நடுவில் வைத்து, வீராவதி கதையைப் பாட்டாகப் பாடி, ஒவ்வொருவராகத் தட்டை பெற்று ஆரத்தி எடுக்கிறார்கள்
ஏழு சகோதர்களுக்கு நடுவில் செல்லப் பெண்ணாக் பிறந்த வீராவதி விரத்தத்தின் போது - சகோதரன் காட்டிய கண்ணாடியின் பிரதிபிம்பம் மரத்தின் இடுக்கு வழியாகத் தெரிய, வீராவதி சந்திரன் என்று நினைத்து நோன்பை முடித்து சாப்பிட்டுவிட்டதால் உடல் நலம் குன்றிய கணவரின் நலனுக்காக இடைவிடாப் பிரார்த்தனையில் பிரத்யட்சமாகிய சிவன் பார்வதியிடம் வீராவதி மனமுருகி மன்னிப்புக் கேட்க கணவன் பிழைத்து எழுந்தாரம் ....
அன்றிலிருந்து கடும் விரதமாக சந்திரனைப் பார்க்கும் வரை பட்டினி கிடக்கும் கொள்கை வந்ததாம்.
சாவித்திரி சத்தியவான் கதை மாதிரி இருக்கிறது..
கர்வா சௌத் தினத்தில் நிலவைப் பார்ப்பதென்பது பகீரதத் தவம்!
சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; ! அன்று தான் அளவுக்கு அதிகமாக மேக மூட்டம் காணப்படும்.





