Thursday, December 6, 2012

ஹரே கிருஷ்ணா





ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


வில்வமங்கள சுவாமிகள்  கேரளத்தில் இளா நதியில் நீராடி, மண்ணால் கிருஷ்ணர் திருவுருவம் செய்து அதற்கு மலரிட்டும், மந்திரங்கள் கூறியும் பூஜைகள் செய்வார் 

வில்வமங்கள சுவாமிகள்    கண்ணனின் அற்புத லீலைகளில் மனம் ஒன்றிப் போய்,  இனிய கவிதைகளைப் பாடும் கவிதைகளைக் கேட்டு, கண்ணனின் களிமண் விக்கிரகமும் தலையை அசைத்துப் பாராட்டுமாம்!

குருவாயூருக்குச் சென்று கருவறையில் பாலகிருஷ்ணனைக் கண்டு களித்தார். குருவாயூரப்பன் அவருக்குப் பல கோலங்களில் தரிசனம் காட்டி அருளினான். குருவாயூர் அவருக்கு ஆயர்பாடியாகத் தோன்றியது!


சிறுவன் கண்ணன் ஆயர் சிறுவர்களுடன் ஓடி விளையாடக் கண்ட வில்வமங்களர், கண்ணனைப் பிடிக்க முயன்றார்.

ஆனால், அவன் அவரிடம் பிடிபடவில்லை!

“எப்படியும் கண்ணனைப் பிடிப்பேன்!” என்று உறுதி கொண்டு
 தவமியற்றிக் கண்ணனைக் கண்டார். 
கண்ணன் அவர் விரும்பியவாறு திருவருள் செய்தான். 
கண்ணனை வில்வமங்களர் போற்றிப் பாடிய இனிய பாடல்களே, '
ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம்' என்ற நூலாகத் திகழ்கிறது. 
வில்வமங்கள சுவாமிகளே, 'லீலாசுகர்' என்று பெயர் பெற்றார்....
வில்வமங்கள சுவாமிகளைத் தன் குருநாதராகக் கொண்டு உபதேசங்கள் பெற்ற.கோழிக்கோடு நகரத்திலிருந்து அரசாண்டு வந்த மானவிக்ரமன் என்னும் மன்னன் வில்வமங்கள சுவாமிகள் குருவாயூர் கோவிலில் அமர்ந்து, கண்ணனை உள்ளே கண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அத்தகைய காட்சிகளைத் தனக்கும் காட்ட வேண்டுமென்று சுவாமிகளிடம் வேண்டினான்.

வில்வமங்களர் தன்னைத் தொட்டுக் கொண்டு, கோவில் நந்தவனத்தில் இருந்த இலஞ்சி மரத்தைக் காணும்படி கூறினார்.

இலஞ்சி மரக் கிளையில் பாலகிருஷ்ணனைக் கண்டு பரவசம் எய்தினான்  மன்னன்.
 
குழந்தை கண்ணனை வாரி அணைத்துக் கொள்ள எண்ணி அருகில் சென்றான். கண்ணன் தலையில் அணிந்திருந்த மயிற்பீலி மட்டும் மன்னனின் கையில் கிடைத்தது!

வில்வமங்களரை வணங்கி மயிற்பீலியைப் பத்திரப்படுத்தி பாலகிருஷ்ணன் கொடுத்த மயிலிறகைக் கொண்டு, 'கிருஷ்ணாட்டக் களி' என்ற நூலை எழுதினான். 

வில்வமங்கள சுவாமிகளின் ஆசியுடன் கிருஷ்ணாட்டக் களியை  நாடக வடிவத்தில், குருவாயூர் கோயில் கூத்தம்பலத்தில் அரங்கேற்றினான். 

பாலகிருஷ்ணனாக வேடம் ஏற்று நடிக்க இருந்த சிறுவன்  வர இயலாமல் போயிற்று. எவரும் எதிர்பாராத விதமாக மற்றொரு சிறுவன் அந்த வேடத்தை ஏற்க முன்வந்து நாடகம் இனிதே அரங்கேறியது. 
கண்ணனாக நடித்தவன் பாலகிருஷ்ண லீலைகளை, தத்ரூபமாக நடித்து அனைவரையும் வியக்கச் செய்தான்.

சாமூதிரி மன்னன் அச்சிறுவனை வலம் வந்து வணங்கினான்!

விலையுயர்ந்த இரண்டு மோதிரங்களை அச்சிறுவனுக்கு அணிவித்தான்.

அடுத்தநாள் காலையில் நிர்மால்ய தரிசனத்திற்கு நடை திறந்தபொழுது, குருவாயூரப்பன் திருவடியில் மன்னன் கொடுத்த மோதிரங்கள் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். 

கபட நாடக சூத்திரதாரி என்று பெயர் பெற்ற கண்ணனே சிறுவனாக வந்து நடித்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.


Wednesday, December 5, 2012

செழிப்பு தரும் செந்தூர விநாயகர்



அல்லல் போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிகமாம் 
அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியைக் 
கைதொழுதக் கால் 

-‘‘எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும். பிறவி எடுக்கக் காரணமாக உள்ள, அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் இனி இருக்காது. திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை தொழுது கும்பிட்டால் போதும்;சகல வினைகளும் தீர்ந்துபோகும். ஞானம் கைமேல் கனியாக வரும்’’ 


"அதிருங் கழல்பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!  
 மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் அருமையான திருப்புகழ்ப் பாடல்கள்..
திருவண்ணாமலை கோயிலில்  செல்வ கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்பந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. 

 திருவண்ணாமலை தலத்திலுள்ள ஆனைமுகனுக்கு அனுமன் போலவே செந்தூரம் பூசுகிறார்கள். 
சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். 
அசுரனை அழிக்க  விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக் கொண்ட 
அடிப்படையில் சித்திரைப் பிறப்பு,  விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். 

 யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில்  இருக்கிறார்.  
Ganesh Wallpapers, Full screen wallpapers of Ganesh, Hindu God Ganesha

Ganesh

திருவண்ணாமலை கோயில் நந்தி


படிமம்:திருவண்ணாமலை கோயில் நந்தி.jpgபடிமம்:அண்ணாமலையார் திருக்கோயில்.JPG