.gif)
ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானதில் அபயமென்றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு
ஆதிரை ஆலமர் ஆரணா!
மதிநிறைந்த நன்னாளாம மார்கழித்திங்கள் முழு நிலவு நன்னாளில் உற்சவமாகக் கொண்டாடப்படும் திரு நாளாகத் திருவாதிரை திகழ்கிறது.....
சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியான ரைவதம் என்னும் சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார்.
பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக நம்பிக்கை ....
ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் அரூப வடிவில் வழிபாடு செய்வதாக ஐதீகம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் அபயவரதீஸ்வரர் வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும்.
அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. அங்கு சென்று சரணடைந்தவர்களை சிவபெருமான் அபயம் தந்து காப்பாற்றுவார்.
திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர்.
இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர்
ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக அபயவரதீஸ்வரர் ஆலயத்தில் அதிக அளவில் செய்யப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

திரிநேத்ர சக்தி கொண்ட தலம் தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக இறைவன் விளங்குகிறார்.
அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.
அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில்
அதிராம்பட்டினம்-614 701
பட்டுக்கோட்டை தாலுக்கா,
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
கங்காதர ஷங்கர கருணாகரா மாமவ பவசாகரா தாரகா
நிர்குண பரப்ரம்மா ஸ்வரூபா கமகம பூதா பிரபஞ்ச ரஹிதா
நிஜ குஹநிஹித நிதாந்தகனந்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க
திமித திமித திமி திமிகிட கிடதோம்
தோம் தோம் கிடதக தரிகிட கிடதோம்
மதங்க முனிவர வந்தித ஈசா
சர்வ திகம்பர மேச்டிதவேசா
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா
ஈசா சபேஷா சர்வேஷா
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ
-- தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய பாடல் கேட்கத் திகட்டாத்து ..




