ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே
பூமகளின் அவதாரம் என்பதால் பொறுமை யின் சிகரமாக விளங்கிய சீதை ஏர் முனையில் கிடைத்தவள் ..
உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளிபொழிகின்ற புவி மடந்தை, திருவெளிப் பட்டென்ன பெண்ணரசி தோன்றினாள்.
கற்புக் கனலியாக விளங்கினாள்.
சிவனின் நிறம் சீதைக்கும், உமையின் நிறம் ராமனுக்கும்அமைந்திருந்தது.


பாற்கடல் வாசனின் படுக்கையான ஆதிசேஷனே ராமனுக்குத் தம்பி லட்சுமணன் அவதரித்தான். வெளியில் உலவும் ராமனின் உயிர் போன்றவன். தொண்டு செய்யவே பிறந்த உத்தமன்.லட்சுமணனது மனைவி ஊர்மிளா; மகன்கள் அங்கதன், சந்திரசேது.
திருமாலின் சக்ராயுதமே பரதனாகப் பிறந்தது ..
ராமபிரான் வனவாசம் செல்லும்போது அவரின் பாதுகைகளைப் பெற்ற பரதன் ராமர் திரும்பி வந்ததும் அவற்றை ராமனின் கால்களில் அணிவித்தான் ...
ஜனகனின் தம்பி குசத்வஜனின் மகள் மாண்டவி என்பவள்தான் பரதனின் மனைவி; தக்ஷன், புஷ்கலன் ஆகியோர் மகன்கள்.

சத்ருக்ணன் திருமாலின் சங்கு அவதாரம் ... ஐம்புலன்களை வென்றவன். லவனும் குசனும் ராம சரிதத்தைப் பாட, முதலில் கேட்டவன் . சத்ருக்ணன் லவண துர்க்கையின் அருளால் லவணாசுரனை வென்றவன். குசத்வஜனின் இரண்டாவது மகள் சுருதகீர்த்தியை மணந்தவன்.
லவன், குசன்: இராமபிரானின் இரட்டைப் பிள்ளைகள். குசனை கோசல நாட்டு மன்னனாகவும்; லவனை உத்தர நாட்டு மன்னனாகவும் ராமர் முடிசூட்டினார்.


வைகுண்டத்தில் எம்பெருமாளின் பாதுகையை சங்கும் சக்கரமும் ஏளனம் செய்தன.
ராமாவதாரத்தின்போது சக்கரமான பரதனும், சங்காகிய சத்ருக்ணனும் அதே பாதுகையை 14 ஆண்டுகள் பூஜிக்கும்படி செய்தார் பகவான் என்பது புராணம் .
ராம ராம ஜெய ராஜாராம்;
ராம ராம ஜெய சீதாராம்.

அயோத்தியில் உதித்த ஆனந்தராமனுக்கு -
கோசலைபெற்ற கோதண்டராமனுக்கு
ஜானகியை மணந்த ஜானகிராமனுக்கு -
மாருதி சேவித மங்களராமனுக்கு
ராவணனை அழித்த ராஜாராமனுக்கு -
பவித்ரமான பட்டாபிராமனுக்கு
பங்கஜலோசன பரந்தாமனுக்கு -
ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்
ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்


Balasubramaniam G.M ஐயா அவர்கள் அனுப்பிய படம்
