Wednesday, January 2, 2013

ஜெயமங்களம் சுபமங்களம்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

பூமகளின் அவதாரம் என்பதால் பொறுமை யின் சிகரமாக விளங்கிய சீதை ஏர் முனையில் கிடைத்தவள் .. 
உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளிபொழிகின்ற புவி மடந்தை, திருவெளிப் பட்டென்ன பெண்ணரசி தோன்றினாள்.
கற்புக் கனலியாக விளங்கினாள். 
சிவனின் நிறம் சீதைக்கும், உமையின் நிறம் ராமனுக்கும்அமைந்திருந்தது.

பாற்கடல் வாசனின் படுக்கையான ஆதிசேஷனே ராமனுக்குத் தம்பி லட்சுமணன் அவதரித்தான். வெளியில் உலவும் ராமனின் உயிர் போன்றவன். தொண்டு செய்யவே பிறந்த உத்தமன்.லட்சுமணனது மனைவி ஊர்மிளா; மகன்கள் அங்கதன், சந்திரசேது.

 திருமாலின் சக்ராயுதமே பரதனாகப் பிறந்தது ..
ராமபிரான் வனவாசம் செல்லும்போது அவரின் பாதுகைகளைப் பெற்ற பரதன் ராமர் திரும்பி வந்ததும் அவற்றை ராமனின் கால்களில்  அணிவித்தான் ...
ஜனகனின் தம்பி குசத்வஜனின் மகள் மாண்டவி என்பவள்தான் பரதனின் மனைவி; தக்ஷன், புஷ்கலன் ஆகியோர் மகன்கள்.


சத்ருக்ணன் திருமாலின் சங்கு அவதாரம் ... ஐம்புலன்களை வென்றவன். லவனும் குசனும் ராம சரிதத்தைப் பாட, முதலில் கேட்டவன் . சத்ருக்ணன் லவண துர்க்கையின் அருளால் லவணாசுரனை வென்றவன். குசத்வஜனின் இரண்டாவது மகள் சுருதகீர்த்தியை மணந்தவன்.

லவன், குசன்: இராமபிரானின் இரட்டைப் பிள்ளைகள். குசனை கோசல நாட்டு மன்னனாகவும்; லவனை உத்தர நாட்டு மன்னனாகவும் ராமர் முடிசூட்டினார்.

 வைகுண்டத்தில்  எம்பெருமாளின் பாதுகையை சங்கும் சக்கரமும் ஏளனம் செய்தன. 
ராமாவதாரத்தின்போது சக்கரமான பரதனும், சங்காகிய சத்ருக்ணனும் அதே பாதுகையை 14 ஆண்டுகள் பூஜிக்கும்படி செய்தார் பகவான்  என்பது புராணம் .

ராம ராம ஜெய ராஜாராம்; 
ராம ராம ஜெய சீதாராம்.

அயோத்தியில் உதித்த ஆனந்தராமனுக்கு - 
கோசலைபெற்ற கோதண்டராமனுக்கு 
ஜானகியை மணந்த ஜானகிராமனுக்கு - 
மாருதி சேவித மங்களராமனுக்கு 
ராவணனை அழித்த ராஜாராமனுக்கு - 
பவித்ரமான பட்டாபிராமனுக்கு 
பங்கஜலோசன பரந்தாமனுக்கு - 
ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் 

ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்
ஜெயமங்களம் நித்ய சர்வமங்களம் - ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

\\
Balasubramaniam G.M ஐயா அவர்கள் அனுப்பிய படம்

17 comments:

 1. மங்களகரமான பதிவு.

  ReplyDelete
 2. படங்களும், பகிர்வும் அருமை.

  ReplyDelete
 3. ராம சகோதரர்கள் பற்றிய விபரம் இப்பகிர்வின் ஊடாக தெரிந்து கொண்டேன். அழகான படங்கள். ரெம்ப நன்றி.

  ReplyDelete
 4. உங்கபக்கம் வந்தாலே மனசெல்லாம் சந்தோஷமா இருக்கு. சிறப்பான பகிர்வும் படங்களும், பார்க்க படிக்க அவ்வளவு சிறப்பாக இருக்கிறது, நன்றிங்க.

  ReplyDelete
 5. அன்பின் இராஜ ராஜேஸ்வரி

  அருமையான படங்கள் - இராம சரித்திரம் அழகான் விளக்கம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

  ReplyDelete
 6. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அழகிஅய் படங்கள் - அருமையான ராம் சரித்திரம் பற்றிய விளக்கம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரி...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. ஆன்மீக தகவல்களும் படங்களும் வெகு சிறப்பு! மிக்க நன்றி!

  ReplyDelete
 9. இனிய நல்ல ஆக்கம் வாழ்த்துடன்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  வேதா. இலங்கதிலகம்.

  ReplyDelete
 10. Balasubramaniam G.M
  5:26 PM (24 minutes ago)

  to me
  இராஜராஜேஸ்வரி. ம் உங்கள் பதிவு ஜெயமங்களம் சுப மங்கள்த்துக்கு நான் வரைந்த படம். . பதிவில் அதிகம் அறியப்படாத விஷயங்கள் நிறைய. வாழ்த்துக்கள்.//

  கருத்துரைக்கும் அனுப்பிய அருமையான படத்திற்கும் இனிய நன்றிகள் ஐயா...

  படத்தை பதிவில் இணைத்திருக்கிறேன் ஐயா...

  ReplyDelete
 11. அரிய படங்களுடன், அழகிய வண்ணக்கலை நயத்துடன் கருத்தைக் கவரும் பதிவு!
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 12. இனிஒய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிய படங்களும் உங்களின் புதிய பதிவு ஜெயமங்களமும் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete

 13. படம் பதிவில் வரவில்லையே. ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ.?

  ReplyDelete
 14. ஜெயா மங்களம் நித்ய சுப மங்களம் - பாடலை எழுதி வைத்துக் கொண்டேன். அழகான மங்கள் பாடல். நன்றி!

  ReplyDelete
 15. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 16. ஜெய மங்களம்
  சுப மங்களம்

  தலைப்பு அருமை.

  ஜெயமங்கள ஸ்லோகங்கள் தாங்கள் பாடுவது போலவே நினைத்து மகிழ்ந்தேன்.

  பட்டாபிஷேக ஸ்ரீ ராமர் படங்கள் எல்லாமே நல்ல அழகு.

  மிகவும் மனதுக்கு சந்தோஷம் தரக்கூடிய நல்ல படிவு.

  லவ குசா படங்களும் சூப்பர் ;)))))

  ReplyDelete