Friday, January 4, 2013

கீர்த்தி தரும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு ...




shivlingshivling


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
திருக்கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளி அருள்பொழியும்  மிகப் பழைமையான திருத்தலங்களில்  தஞ்சை மாவட்டத்தின் திருக்கோயில் நகரமாம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அம்மாசத்திரம் என்னும் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்பு பெற்றது ....
பார்வதிதேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளானஅத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மரிசி ஆகிய 7 முனிவர்களும் முருகப்பெருமானால் சபிக்கப்பட்ட சாபம் நீங்க சப்தரிஷீஸ்வரர் கோவிலில் தவம் செய்து சாபம் நீங்கப்பெற்றதால், சிவபெருமான், சப்தரிஷீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஈடிணையற்ற சக்திவாய்ந்த சிவபெருமானைப் பூஜித்த சப்தரிஷிகளுக்கும்  சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பு ..
ஸ்ரீ மாங்கல்ய மகரிஷி என்ற முனிவருக்கும் மற்றும் சப்தரிஷிகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் உடன் திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.
பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி  சிலைகள் உள்ளன.
 சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினால் குஷ்டம் மற்றும் தீராத நோய் நீங்கும் என்றும் கூறுகிறார்கள்.  
சித்தர்கள் போற்றிய செல்வனான சிவபெருமான் கருவறையில் கருணையே வடிவமாக ருத்ராட்சப் பந்தலின்கீழ் அமர்ந்து அருள்பாலிக்கும் திவ்ய திருக்காட்சி 




ஞானத்தின் வடிவமாக விளங்கும் ஸ்ரீ ஞானேஸ்வரனின் வாம பாகத்தைப் பெற்ற அம்பிகை, ஸ்ரீஞானாம்பிகை என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கின்றாள். 

தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு அபயம் அளித்து,வேண்டிய வரமெல்லாம் அருளும் வரப்பிரசாதியாக, ஞானஒளி பொங்கும் திருமுகத்தில் புன்னகை மலர, கண்களில் கருணை வெள்ளமெனப் பொங்கிவர, அருட்காட்சி கொடுக்கின்றாள் அம்பிகை ஸ்ரீஞானாம்பிகை.
ஸ்ரீ ஞானாம்பிகை சந்நிதியில் உள்ள மண்டபத்தில், உட்புறவிதானத்தில்  12 ராசிகள் பொறிக்கப்பட்டு இருப்பதோடு, நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் எனும் அமைப்பில் 81 கட்டங்களுடன் ‘நவக்கிரக சக்கரம்’ கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பதுவரை உள்ள எண்களின் தமிழ் வடிவம் இலக்கமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

எந்த வரிசைக் கட்டத்திலும் எண்களைக் கூட்டினால் 45 என்ற எண்ணிக்கை வரும். இதன் கூட்டுத்தொகை  9 ஆகும். நவக்கிரகங்கள்(9) சுழற்சியைக் குறிக்கும் வகையில், விஞ்ஞான, வானியல் பூர்வமாக உணர்த்தும் அரிய  வடிவமைப்பு!
பன்னிரண்டு ராசிகளையும் உள்ளடக்கிய, தமிழ் எண்கள் கொண்ட ஒரே  நவ கிரக சக்கரம் கல்வெட்டு இதுவாகத்தான் இருக்க வேண்டும் ...

அம்மாசத்திரம் தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.

 காசியில் உள்ளவர்களுடைய பாவங்களையும் போக்கும் சக்தி அம்மாசத்திரம் ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு உள்ளது என்று ஸ்ரீ பவிஷ்யோத்தர புராணம் கூறுகின்றது. 

 ஸ்ரீ காலபைரவருக்குத் தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ ஹோமங்களும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.


பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது.

இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

இந்த காலபைரவருக்கு ஜனவரி 4 அன்று காலை 10 மணிக்கு ருத்ராபிஷேகம், 12 மணிக்கு மகாதீபாரதனை, மாலை 5 மணிக்கு அஷ்டமி பெருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம், தீபாரதனை, வடமாலை அணிவித்தல் ஆகியவை நடைபெறும் ..

தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்வதால் அமைதியின்மை, மனோ வியாதிகள், செய்வினை தோஷங்கள், இனம்புரியாத பயம், பொறாமையினால் உறவினர் தொல்லைகள், நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் (Negative effects) ஆகிய கொடிய துன்பங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும் என்று மிகப் பழைமையான ஓலைச்சுவடிகளிலிருந்து அறியமுடிகின்றது. 

மனநிலை பாதிக்கப்பட்டோரும், தீயசக்திகளால் பீடிக்கப்பட்டவர்களும் இச்சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி நாளில் வந்து வழிபாடு செய்து தங்கள் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பெறுகின்றார்கள்.

காலம் தாழ்த்தாது கைகொடுத்து, அருள்பாலிக்கும் இந்தக் காலபைரவர் திருச்சந்நிதியில் வழிபட்டால்,நமது கஷ்டங்கள் யாவும் தீரும் என்பது உறுதி.

தட்சிண கங்கை என்று பூஜிக்கப்படும் காவிரி நதிக்கரையின் தென்புறத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குக் கிழக்கே ஐந்து கி.மீ. தூரத்திலும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலுக்கு மேற்கே நான்கு கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளது அம்மாசத்திரம் திருத்தலம்.
 நன்றி :http://hinduspritualarticles.blogspot.in/
உற்சவர் ...
Devotees pulling the car of the Arulmigu Saptharisheeswarar Temple 
through the streets of Lalgudi 
Devotees pulling the car of the Arulmigu Saptharisheeswarar Temple through the streets of Lalgudi on Friday. SPECIAL ARRANGEMENT.

14 comments:

  1. படங்களை விட்டு கண்கள் அகலவில்லை...
    நிலைகுத்தி போய்விட்டன....
    அழகோ அழகு...

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் . நன்றி

    ReplyDelete
  3. காலபைரவர்,அம்மாசத்திர கோவில் பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டேன். படங்கள் ந‌ன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  4. காலபைரவர் வழிபாடு இப்பதான் மா கேள்விப்படுகிறேன். படங்கள் அவ்வளவு அழகா, தெளிவான விளக்கங்களுடன், பகிர்வு சூப்பரா இருக்கும்மா. நன்றி

    ReplyDelete
  5. பைரவர் வழிபாடு அதன் நன்மைகள் எல்லாம் அருமை.அழகிய படங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையான தகவல் இன்று....

    ´கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு´ என்ற ஔவையார் கூற்றுப்படி நான் கற்றது கைமண் அளவும் இல்லை...:)

    நீங்கள் தரும் தகவல்தான் எத்தனை எத்தனை...அறிந்திராத அறிந்திருக்க வேண்டிய அவசியமான விஷயங்களை அழகாக, காணற்கரிய படங்களுடன் தொகுத்துத் தருகின்றீர்கள்...
    உங்கள் தன்னலமற்ற சேவையை எண்ணி வியக்கின்றேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சகல சௌபாக்கியமும் கிடைத்திட வேண்டிப் ப்ரார்த்திக்கின்றேன்...

    பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றி சகோதரி......

    ReplyDelete
  7. சூப்பர் படங்கள்... ப்பிரம்ம முஹாரி.. பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்... நல்ல விஷயங்கள் பகிர்ந்திருக்கிறீங்க..

    ReplyDelete
  8. அரிய ஆலயங்களை தேடிப்பிடித்து அறிமுகப்படுத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள்! படங்கள் பதிவிற்கு அழகு சேர்க்கின்றன! நன்றி!

    ReplyDelete
  9. கால பைரவர் பற்றிய நல்ல பதிவு

    ReplyDelete
  10. கால பைரவர் பற்றிய விஷயங்கள் மிகவும் அருமை.
    லால்குடியில் தேரை இழுத்தது போன்ற அனுபவம் கிடைத்தது.

    பகிர்வுக்கு நன்றி,
    ராஜி

    ReplyDelete
  11. madam.
    padangal ellam nandraga irukkiradhu.
    Oru arumaiyana koil patri thagaval koduthamaiku nandri.

    ReplyDelete
  12. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - கால் பைரவர் - பதிவு - படங்கள் - விளக்கங்கள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. காலபைரவர் பற்றிய அழகான விளக்கங்களும் அற்புதமான படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி அம்மா.

    ReplyDelete