Saturday, January 19, 2013

சஞ்சீவி தாங்கிய சிரஞ்சீவி






indian god wallpaper. Hanuman Wallpapers,Pictures

உலகம் யாவையும் தாமுளவாக் கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே


ஆஞ்சனேயர் ரகுவம்ச ரட்சகன்  எனத்திகழ்கிறார் ..  

அசோக வனத்தில், இராவணனின் இம்சை பொறுக்காத சீதை தன்னை மாய்த்துக் கொள்ள முயல, அப்போது அங்கு வந்த அனுமன் ராமனின் கணையாழியைக் காட்டி சீதை ஆவி காத்த உத்தமர் அனுமன் ...
யுத்தத்தின்போது மேகநாதனான இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மூர்ச்சை யடைந்ததுகண்ட ராமர், "எது போனாலும் நான் கவலைப்படமாட்டேன். ஆனால் உன்னைப் பிரிந்திருக்க முடியாது' எனக் கூறி உயிர்விடத் துணிந்தபோது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வந்து இலக்குவணனைப் பிழைக்க வைத்து ராமரையும் காப்பாற்றினார்.
இராமன் சீதையை மீட்டுக்கொண்டு அயோத்தி திரும்பும்போது, சுகப்பிரம்ம மகரிஷி வற்புறுத்தியதால் அவர் ஆசிரமத்தில் தங்கினார். 

பரத, சத்ருக்னர்கள் ராமர் சரியான தருணத்தில் வராததால், அக்னியை வலம் வந்து அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தனர். 
அவ்வேளையில், ராமரின் ஆலோசனைப்படி ஆகாய மார்க்கமாக வந்த அனுமன், ராமர் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என ஆவி காத்த உத்தமர் அனுமன் .. indian god wallpaper. Hanuman Pics, Hindu God
ரகுவம்ச வாரிசுகளான லவன், குசன் இருவரும், ராமர் தன் தந்தை என அறியாமல் அவரை எதிர்த்துப் போரிட்டனர். 

பொறுமை இழந்த ராமர்,  தன் ராம பாணத்தை எய்ய முயலும்போது, அனுமன் சீதையை அங்கு அழைத்து வந்து தடுத்து, லவன், குசனைக் காப்பாற்றினார்.
இப்படி ஒவ்வொரு சமயத்திலும் அனைவரையும் அனுமன் காத்ததால் ரகுவம்ச ரட்சகன் எனப்படுகிறார்.

25 comments:

  1. இனிய காலை நேரத்தில் அனுமனின் வித விதமான தரிசன காட்சி..! இன்றைய காலை நேரத்தின் விடியலை மங்களமாக அனுமனின் தரிசனத்தை காண செய்த தங்களுக்கு நன்றி .

    ReplyDelete
  2. சனிகிழமை காலையில் ஆஞ்சநேயரின் தரிசனம் மிக அருமை.
    பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  3. சனிகிழமை காலையில் ஆஞ்சநேயரின் தரிசனம் மிக அருமை.
    பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  4. சனிகிழமை காலையில் ஆஞ்சநேயரின் தரிசனம் மிக அருமை. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  5. சனிகிழமை காலையில் ஆஞ்சநேயரின் தரிசனம் மிக அருமை. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  6. Tremendous things here. I am very happy to peer your article.
    Thank you so much and I am having a look forward to contact you.
    Will you please drop me a e-mail?
    Visit my blog post ... cheap nike free run

    ReplyDelete
  7. இரகுவம்ச ரட்சகன் மட்டுமல்ல; உள்ளத்தில் இறைவனை நினைத்திருப்போருக்கும் ரட்சகன்! பேரருளாளனை உள்ளத்தில் நிலைபெறச் செய்த அனுமனின் புகழ் கூறும் பெருமைமிகு பதிவு! நன்றி!

    ReplyDelete
  8. ரகுவம்ச ரட்சகனின் படங்கள் அருமை.

    ReplyDelete
  9. ragu vamsa ratchagan - nice and meaningful words

    ReplyDelete
  10. ரகுவம்ச ரட்சகன்... - நல்ல பெயர் தான்....

    படங்களும் பகிர்வும் ரசித்தேன்..

    ReplyDelete
  11. இந்த அருமையான பக்திப் பதிவை வாசிக்கும் போது இரண்டு சமூகக் கேள்விகள் மனதில் எழுகின்றன.

    1. இன்று சஞ்ஜீவி மலை இருந்திருந்தால்...?
    2. இன்று சஞ்ஜீவிகள் யார்..?

    சிந்திக்க வைத்த பதிவுக்கும், பக்த அனுமானின் படங்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  12. சனிக்கிழமையில் ஹனுமனின் தரிசனம் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  13. வணக்கம்
    இராஜராஜேஸ்வரி(அம்மா)


    சஞ்சீவி தாங்கிய சிரஞ்சீவி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள படைப்பு மிக அருமையாக உள்ளது படங்கள் எல்லாம் பார்த்தவுடன் பக்தி உணர்வு பொங்கி வருகிறது பாரட்டுக்கள் அம்மா

    -நன்றி,
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேய தரிசனம் மிக சிறப்பானது.
    கால நேரத்திற்கு தகுந்த உங்கள் பதிவுகளும் பகிர்வுகளும் மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

    பகிர்வுக்கு மிக்கநன்றி சகோதரி!

    ReplyDelete

  15. Advocate P.R.Jayarajan said...


    1. இன்று சஞ்ஜீவி மலை இருந்திருந்தால்...?
    2. இன்று சஞ்ஜீவிகள் யார்..?


    அச்வத்தாமன், மஹாபலி, வ்யாஸர், ஹநுமார், விபீஷணன், க்ருபர், பரசுராமர் என்ற இந்த ஏழு பேரும் சிர்ஞ்சீவிகள்...

    அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மலை ஆங்காங்கே விழுந்து மூலிகை செடிகளுடன் அநேக இடங்களில் காணக்கிடைக்கின்றன...

    சஞ்சீவி மலை இலங்கையில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் ...

    சிந்தனையைத் தூண்டிய கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  16. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கடவுள் வாழ்த்தோடு தொடங்கிய அனுமனைப் பற்றிய பதிவு! படிக்கவும் வண்ணப் படங்களைப் பார்க்கவும் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete

  17. அருமையான பதிவு. சிரஞ்சீவிகள் நாம் காண இயலாதபடி நம் நம்பிக்கையில் இருக்கிறார்களா? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஆபத்சகாயன் ஆஞ்சநேயர் பற்றிய தகவல்களும் படங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete

  19. வணக்கம்!

    காற்றின் மகனைக் கனிந்துருகும் வண்ணத்தில்
    போற்றிப் படைத்தீா் பொலிந்து!

    தெய்வ மாக்கவி கம்பன் தன் காவியத்தல் அனுமனைக் குறித்துச் சொல்லும் பாடல் பல உண்டு!

    எனக்குப் பிடித்த பாடலை இங்குத் தருகிறேன்!

    அஞ்சிலே ஒன்று பெற்றான்!
    அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
    ஆா்உயிர் காக்க ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற
    அணங்கை கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான்
    அவன்எம்மை அளித்துக் காப்பான்!

    சொல்லின் செல்வன்

    இல்லாத உலகத்து எங்கும்
    இங்குஇவன் இசைகள் கூரக்
    கல்லாத கலையும் வேதக்
    கடலுமே என்னும் காட்சி!
    சொல்லாலே தோன்றிற்று அன்றே!
    யார்கொல் இச்சொல்லின் செல்வன்!
    வில்ஆா் தோள் இளைய வீர!
    விரிஞ்சனோ! விடைவலானோ!

    - கம்பராமாயணம், பாடல் 3768

    ReplyDelete
  20. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  21. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமையன பதிவு - கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள் - ரகுவம்ச ரட்சகன் - எத்தனை இடங்களில் இரட்சித்திருக்கிறார் - ஒவ்வொரு செய்தியும் விளக்கமாக அழகான படத்துடன் விவரிக்கப் பட்ட விதம் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. சஞ்சீவி தாங்கிய சிரஞ்சீவி, ரகுவம்ச ரட்சகன் புகைப்படங்களும், தகவல்களும் அற்புதம்!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  23. சிறப்பான ஆஞ்சநேய தர்சனம்.

    ReplyDelete
  24. //ஒவ்வொரு சமயத்திலும் அனைவரையும் அனுமன் காத்ததால் ரகுவம்ச ரட்சகன் எனப்படுகிறார்.//

    ரகுவம்ஸ ரக்ஷகனின் புகழ் போல இந்தப்பதிவரின் புகழும் என்றும்
    வாழ்க வாழ்கவே!!!

    ReplyDelete