Monday, January 21, 2013

ஞான சூரியன்



விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.

இந்து தர்மத்தின் ஆன்மீக ஒளியை சுடர்விடச் செய்த ஞான சூரியன் சுவாமி விவேகானந்தர் பிறந்ததும் பொங்கல் திருநாள் அன்று தான்.

இந்த ஆண்டு (2013), விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிற ஆண்டாகும். 
அவருடைய கருத்துகளையும் எண்ணங்களையும் பரப்பும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. 

பல அமைப்பினரும் அவரது 150-வது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராகியுள்ளனர். 

அவருடைய பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் நாள் தேசிய இளைஞர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 


1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் பங்கேற்று, "சகோதர... சகோதரிகளே...' என்று மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை அழைத்து, இந்துமதத்தின் பெருமைகள் குறித்து அவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாகும். 

உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். 
அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம்  அதிர்ந்தது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஜப்பான், அமெரிக்கா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள் என பலவற்றிற்கும் அவர் கப்பலில் பயணம் மேற்கொண்டு அங்கு இந்துமதக் கருத்துகளைப் பரப்பினார். 

தனது குருநாதரான ராமகிருஷ்ணர் பெயரில் மடம் நிறுவினார். 

இந்து  மதத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்டவராக விளங்கிய விவேகானந்தர் தனது இளம் வயதிலேயே 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் காலமானார்.  

உடலாலும் உள்ளத்தாலும் தெம்பும் துணிவும் கொண்ட இளைஞர்களால்தான் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பது விவேகானந்தரின் கொள்கை. 

""எழுமின்.. விழிமின்.. இலக்கை அடையும்வரை ஓயாதிருமின்'' என அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமம் எனும் சாதி ஒடுக்குமுறையை ஒழிக்கவேண்டும் என்பதுதான் விவே கானந்தரின் எண்ணமாக இருந்தது. 

அப்போதுதான், இந்துமதம் உண்மையாக வளரும் என அவர் நம்பினார். அவருடைய எண்ணமும் நம்பிக்கையும் நனவாகட்டும் ..!  


அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.

தேசிய இளைஞர் தினம்:இன்றைய இளைஞர்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்து தான் நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவரும், ஆன்மிகவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை, யோகா, சொற்பொழிவு, கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தனர். "நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் ' என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.
இளைஞர்களின் பொறுப்பு : நாட்டில் 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 42 கோடி பேருக்கு மேல் உள்ளது. இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞரிடமும் உள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நல்வழியில் பயன்படுத்தினால் இந்தியாவின் வல்லரசு கனவு எளிதில் நிறைவேறலாம். இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

23 comments:

  1. அவரது இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரின் வார்த்தைகள் நமக்கு துணிவை தரட்டும்.

    இளைஞர்களின் எழுச்சி மந்திரங்கள் அல்லவா அவரின் உரைக்கோவை!

    ReplyDelete
  2. நல்ல படங்கள் + விளக்கங்கள்.

    ReplyDelete
  3. பல நல்ல அரிய தகவல்கள்.... நன்றி...

    ReplyDelete
  4. பல நல்ல அரிய தகவல்கள்.... நன்றி...

    ReplyDelete
  5. இவரும் ஓர் கடவுள் தான் .
    இதுவும் ஓர் ஆன்மீகப் பதிவுதான்.

    ReplyDelete
  6. நல்ல அறிய தகவல்கள் . நன்றி

    ReplyDelete
  7. //இலக்கை அடையும் வரை ஓயாது இருமின்...//

    இந்த வரியின் சக்தியை உணர்ந்து பலன் கண்டவர்கள், படிப்படியாக தங்கள் இலக்கின் எல்லையை விரிவாக்கி வருவர். தங்கள் பதிவுலக இலக்கும் விரிவடையும் என்று கருதுகின்றேன்.

    ReplyDelete
  8. இவருடைய வரலாற்றையும், எழுதிய புத்தகங்களையும் ஊன்றி படித்தால் நம்மில் மாற்றம் உண்டாவது உறுதி.

    ReplyDelete
  9. அனைத்துப் புகைப்படங்களும் அருமை! GOLDEN RULES அனைத்தும் அற்புதம்!

    ReplyDelete
  10. இளைஞர் சமுதாயத்திற்கு உரமூட்டும் நல்ல செய்திகளைத் தந்த உன்னத அறிஞர் அல்லவா!

    நல்ல படங்கள். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  11. காலையில் ஸ்வாமி விவேகானந்தரை பார்த்தது மகிழ்ச்சி, உற்சாகம். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு. அவரது வார்த்தைகள் இளைஞர்களுக்கு உத்வேகத்தை தரும்.

    ReplyDelete
  13. காலையில் ஸ்வாமி விவேகானந்தரை பார்த்தது மகிழ்ச்சி, உற்சாகம். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  14. காலையில் ஸ்வாமி விவேகானந்தரை பார்த்தது மகிழ்ச்சி, உற்சாகம். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  15. காலையில் ஸ்வாமி விவேகானந்தரை பார்த்தது மகிழ்ச்சி, உற்சாகம். பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  16. புத்தகக் கண்காட்சி - ஓர் உற்சவம்
    http://sattaparvai.blogspot.in/2013/01/blog-post_21.html

    நெஞ்சம் மறப்பதில்லை ....!
    http://sattaparvai.blogspot.in/2013/01/blog-post_7467.html

    ReplyDelete
  17. விவேகானந்தரை பற்றிய தகவல்களும் பொன்மொழிகளும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. முற்போக்குச் சிந்தனை கொண்ட அவரின் எண்ணங்கள் நனவாகட்டும்.

    ReplyDelete
  19. இன்றைய தலைமுறைக்கு புகட்ட வேண்டிய பொன்மொழிகள் அவருடையது.

    ReplyDelete
  20. நானும் விவேகானந்தரைப் பற்றிப்
    படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
    உங்களின் கட்டுரை எனக்குப் பயனுள்ளதாக அமைந்து விட்டது்.
    படங்களும் அருமை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. உன்னத புருஷரைப் பற்றிய உன்னதமான ஒரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  22. விவேகானந்தரைப் பற்றி அருமையான தகவல்கள் அறிந்துகொண்டேன். அழகிய படங்களுடன் சுவாரசியமான பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  23. மிகவும் விவேகத்துடன் எழுதப்பட்டுள்ள
    ஆனந்தமான பதிவு.

    ”ஞான சூர்யன்” என்ற தலைப்புத்தேர்வும் அருமை.

    இந்த தங்களின்

    ”ஞான சூர்யன்” ஐப் படிப்பவர்களுக்கு

    ‘ஞான சூன்யம்’ இல்லாமல் இருக்கும்.

    பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete