Thursday, January 31, 2013

கார்த்த வீர்யார்ஜுனன்


 ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம: |
கார்த்த வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்  ||
தஸ்ய ஸ்மரந  மாத்ரேன கதம் நஷ்டம் ச லப்யதே ||

    கார்த்த வீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பதால் தன ஆயிரம் கைகளால் நஷ்டம் வராமல், காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்க உதவ  உதவிக்கழைக்கும் சுலோகம் இது.

ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹாசூஷ்மாய தீமஹி
தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்.

 திருமாலின் சுதர்சன சக்கரம் திருமாலின் ஆணையின்பேரில் 
கார்த்தவீர்யார்ஜுனனாகப் பிறந்தது. 

கிருதவீர்யன் என்ற அரசன் வினாயகரை நோக்கி செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று வினாயகருக்குவிரதமிருந்து அங்காரக
பூஜையையும் சந்திர பூஜையையும் செய்து வினாயகரை வழிபட்பிள்ளைவரம் வேண்டி தவமிருக்கும் கிருதவீர்யனுக்கு மகனாக சுதர்சனம் பிறந்தது...

சுதர்சனச் சக்கரத்துக்கு ஆயிரம் ஆரங்கள். ஆயிரம் சுவாலைகள்.

அந்த ஆயிரம் ஆரங்கள்தான் கைகளும் கால்களுமில்லாமல் பிறந்து விநாயக ஏகாக்ஷரி என்னும் மந்திரத்தை பன்னிரண்டு ஆண்டுகள் ஜபம் செய்து தவமியற்றின கார்த்தவீர்யார்ஜுனனுடைய
ஆயிரம் கைகளாக தரணீதர விநாயகரால் கொடுக்கப்பட்டிருந்தன

தேவர்களை வென்றடக்கிய ராவணனையே வெல்லக்கூடிய
வலிமை மனித க்ஷத்திரியனாகிய கார்த்தவீர்யனுக்கு இருந்தது.


நர்மதை ஆற்றில் கார்த்தவீர்யார்ஜுனன் ஜலக்கிரீடையாக ஆற்றின் குறுக்கே தன்னுடைய ஆயிரம் கைகளையும் வைத்து தண்ணீரை அணை போல் தேக்கிவைத்து அதில் நீந்திக்குளித்துக்கொண்டு திடீரென்று கைகளை எடுத்துவிடும்போது அடைபட்ட தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப்பெருக்கு போல் ராவணனின் சிவபூஜையைக் குலைத்துவிட்டது. 

கோபப்பட்ட ராவணன் கார்த்தவீர்யனைக் குத்தச்சென்றான். 

                
கார்த்தவீர்யன் திரும்பிக்கூடப் பார்க்காமல் குத்தச்சென்ற கையைப் பிடித்துக்கொண்டான். 

இராவண்னுக்கு இருபது கைகள்...  ஒவ்வொரு கையையும் கால்களையும் பிடித்துக்கொண்டுவிட்ட பின்னரும் கார்த்தவீர்யனின் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு கைகள் மீதமிருந்தன. 

                ராவணன். கொஞ்சமும் அசைய முடியவில்லை. மூச்சு முட்ட. பார்க்குமிடமெல்லாம்   எல்லாமே கார்த்தவீர்யனின் கைகள்.

ராவணனிடம் இருக்கும்  வரங்கள்  அவனைக் கொல்ல விடவில்லை ..கார்த்தவீர்யன் கடைசியில் ராவணனின் பரிதாப நிலையைப் பார்த்து ராவண்னை விரட்டிவிட்டான். 


                
            
கார்த்தவீர்யன் தன்னுடைய படைகளுடன்  நர்மதைக் கரையிலிருந்த ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில்  விருந்து உண்ட கார்த்தவீர்யன்,  நினத்ததையெல்லாம் கொடுக்கக்கூடிய காம் தேனுவைக் கேட்டதற்கு ரிஷி மறுத்துவிட அவரை வாளால் வெட்டிவிட்டு தேனுவைக் கவர்ந்து சென்றான்.

 ஜமத்னி முனிவரின் மகன் பரசு ராமன்  கார்த்தவீர்யனின் ஆயிரம் கைகளையும் தலையையும்  கிரீடத்துடன் வீழ்த்தினார் ...


திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. கடன்பிரச்னை நீங்க, தொலைந்தபொருட்கள்  மீண்டும் கிடைக்க, மரணபயம் நீங்க, நியாயமான வழக்குகளில் வெற்றி பெற, கல்வியில் சிறந்தோங்க என்று பக்தர்களின் பல்வேறு குறைகளை நீக்க  பல்வேறு பூஜைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. 

13 comments:

 1. தாடிக்கொம்பு ஆலயத்தின் சிற்பங்கள் அற்புதமானவை.

  ReplyDelete
 2. நல்ல தகவல் . நன்றி

  ReplyDelete
 3. ரசித்தேன்... படங்களும் தகவல்களும் அருமை... நன்றி...

  ReplyDelete
 4. கார்த்தவீரியனின் கதை தெரிந்து கொண்டேன். நன்றி !

  ReplyDelete
 5. அப்பாடா... எங்க ஊர் பக்கம் வந்துட்டீங்க...

  ReplyDelete
 6. கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் நாம் இழந்தவைகளையும், நம்மால் நம் கவனக்குறைவால் காணாமல் போக்கப்பட்டவைகளையும், கண்டுபிடித்து நம்மிடம் சேர்க்கக்கூடிய சக்தியுள்ள மஹா மந்திரம் என்பதில் சந்தேகமே இல்லை.

  இதைப்பற்றி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கூட என்னிடம் தனியாக நிறையவே பேசியுள்ளார்கள்.

  அதைத்தான் நான் தங்களின் பழைய பதிவு ஒன்றில் [இதே தலைப்பில் தங்களால் எழுதப்பட்ட ஒன்றில்] என் பின்னூட்டத்திலும் சொல்லியிருந்தேன்.

  இப்போது தங்களின் இந்தப்பதிவினால் நடுவே காணாமல் போய் விட்ட நான் இப்போது உங்கள் முன் பின்னூட்டமிட வந்துள்ளேன் என்பதிலிருந்தே இந்த மஹா மந்திரத்தின் சக்தியையும், அதைவிட உங்களின் அபார சக்தியையும், மஹிமையையும் என்னாலும் உணர முடிகிறது.

  மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)

  அற்புதமான தங்களின் இந்தப்பதிவுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
 7. காரத்தவீரயனின் கதை அறிந்தேன் .
  தாடிக் கொம்பு கோவில் சிற்பங்களும் அருமையாக இருக்கின்றன.

  பகிர்விற்கு நன்றி,
  ராஜி

  ReplyDelete
 8. அறிந்ததும் அறியாததும் இன்று உங்களால் தெரிந்துகொண்டேன்...
  நன்றி!

  ReplyDelete
 9. காணாமல் போன பொருட்கள் இந்த கடவுளை வேண்டுவதால் கிடைப்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்! மந்திரங்களையும் படங்களையும் கூடுதலாக இணைத்து அருமையாக பதிவிட்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 10. சுவாரஸ்யமான தகவல்கள்

  ReplyDelete
 11. Hello there! Do you use Twitter? I'd like to follow you if that would be ok. I'm absolutely enjoying your blog and look forward to new posts.
  Also visit my homepage ; cheap 49ers jerseys

  ReplyDelete
 12. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 13. சிறப்பான சிற்பங்கள் மற்றும் படங்கள்....

  ReplyDelete