Thursday, January 17, 2013

விஸ்வரூபம்

சூரியனைப் போல ஒளிமிகுந்த, அழகிய முகம் கொண்டவரே, 
கருணை மழைபொழியும் கண்களை உடையவரே, ஆஞ்சநேயா,  நமஸ்காரம். யுத்தத்தில் மூர்ச்சித்தும் இறந்தும் விழுந்தவர்களை, சஞ்சீவி மலை கொண்டுவந்து பிழைக்கச் செய்தவரே, 
அனைவரும் புகழத்தக்க  மகிமை பொருந்தியவரே, 
அஞ்சனாதேவியின் புதல்வரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். 
மன்மத பாணத்தைக் கடந்தவரே, 
தாமரை இதழ் போன்ற அகண்ட  அழகிய கண்களைக் கொண்டவரே, 
சங்கு போன்ற கழுத்தை உடையவரே, 
வாயுதேவனின் பாக்ய புதல்வரே, ஆஞ்சநேயா, நமஸ்காரம்.

கண்ணன் அர்ச்சுனனின் தேர்ச் சாரதியாய் இருந்தார். 
அனுமன் அர்ச்சுனன் தேரில் வெற்றிக் கொடியாய் இருந்தார். 
கண்ணன் பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார். 
அனுமன் ராம- லட்சுமணர்களுக்காக இராவணனிடம் தூது சென்றார். 

கண்ணன் கோகுலத்தவர்களைக் காப்பாற்ற கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தார். அனுமன் லட்சுமணன் மூர்ச்சை தெளிவிக்க சஞ்சீவி மலையைத் தூக்கி வந்தார். 

இருவருமே விஸ்வரூப தரிசனம் காட்டியவர்கள் தான்.

அசோக வனத்தில்அனுமன் அஷ்டமா சித்துவாலே மகிமாவாகிய விஸ்வரூபம் கொள்ளத் தொடங்கி விறுவிறுவென்று வளர்ந்து வானை முட்டத் தொடங்கியது அனுமனது திருவுருவம்.
நினைத்தபோது, நினைத்த வடிவைத் தான் எடுக்க முடியும் என சீதைக்குக் காட்ட வேண்டி, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் வளர்ந்து நிற்கின்றார் ஆஞ்சநேயர், வானர வீரன், வாயுகுமாரன், மங்களங்களை அள்ளித் தரும் சுந்தரன். மேலும், மேலும், மேலும் வளர்ந்து கொண்டே போகும் அந்த அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியக்கின்றாள் வைதேஹி. 


சிவபெருமானும்  மஹாவிஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும்,ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள அபயவரத ஆஞ்சநேயர் மார்பில் 
சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகில் உள்ள தெய்வச்செயல்புரம் என்ற ஊரில்
 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு.


தருமபுரி ஆஞ்சநேயர் கோயில். 300 ஆண்டுகள் பழமையானது.
அனுமன் சிலையின் தலையில் ஒரு சிறு பள்ளம் அமைந்துள்ளது. தினமும் காலை நேரத்தில் மட்டுமே  நடத்தப்படும் தேனாபிஷேக காலத்தில் அனந்த பத்மநாத சுவாமி ஆவிர்பவித்துள்ள சாளக்கிராமத்தை இப்பள்ளத்தில் வைத்து அபிஷேகம் செய்வது  தனிச்சிறப்பு. 
அப்போது 41 பாடல்கள் கொண்ட ஹரிவாயுதுதி பாடுவார்கள். 


DSC09069 Kaaliamman Statue, Sindhalakarai 20100404 117

Statue  Shiva Sur Lîle Samui En Thaïlande Banque Dimages


22 comments:

 1. அருமையான படங்கள். ரசித்தேன்.

  ReplyDelete
 2. பிரம்மாண்டத்தின் பிரம்மிப்பு!

  வலைச்சர அறிமுகம் பற்றிய தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 3. விஸ்வரூப தரிசனம் கிட்டியது. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 4. விஸ்வரூப தரிசனம் செய்தோம் நன்றி.

  ReplyDelete
 5. உங்களின் வலைப்பூவினை வலச்சரத்தில் இன்று அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை ம‌கிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
  http://blogintamil.blogspot.com/

  ReplyDelete
 6. இது தான் உண்மையான விஸ்வருபம்....அனைத்து படங்களும் மிக மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 7. விஸ்வரூபம், படங்களும் புதிய தகவல்களும் அருமை.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. ஆனந்த மூர்த்திகளின் அற்புத விஸ்வரூப தரிசனம் உங்கள் தயவால் நாம் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றோம். அருமை.

  பகிர்வுக்கு மிக்கநன்றி சகோதரி!

  ReplyDelete
 9. அழகுமிகு படங்கள் கண்களைக் கவர்கின்றது! கவிதைப் பிரவாகமான பதிவு கருத்தைக்கவர்கின்றது! சகோதரியின் இறைபக்தி நாளுக்கு நாள் விஸ்வரூப பதிவுகளாய் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி! தொடருங்கள் சகோதரி! தொடர்கிறோம்! கண்ணன் நலம் பயப்பான்!

  ReplyDelete
 10. தங்கள் தளத்தில் கமல் படமா! என எண்ணிவிட்டேன். ஹா..ஹா.. ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் வியக்கவைக்கிறது.

  ReplyDelete

 11. Muralidharan Parthasarathy

  to me
  dear Maniraj, I saw your blogs. You are very religious. I find full and full of temples and gods everywhere. I have very great regards of our rich tradition and in fact i am proud to be part of indian culture. but at the same time spirituality is a step ahead of idol worship./

  நன்றிகள்...

  ReplyDelete
 12. சிறப்பான விஸ்வரூப தரிசனம்....

  ReplyDelete
 13. Hello, I enjoy reading all of your article post. I like to write a little comment to support you.
  my webpage > michael kors outlet

  ReplyDelete
 14. My family always say that I am killing my time here at net, but I know
  I am getting experience every day by reading thes pleasant articles or
  reviews.
  Also see my website: christian louboutin discount

  ReplyDelete
 15. Aha very nice pictures. As usual very nice write up. I enjoyed Rajeswari.
  viji

  ReplyDelete
 16. பார்க்ககிடைக்காதவை.அருமையான படங்கள்.நன்றி.

  ReplyDelete
 17. அரிய புகைப்படங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
  விஸ்வரூப அஞ்சனா புத்திரன் தரிசிக்கும் எல்லோருக்கும் அருளை கொடுக்காட்ட்ம்.

  ReplyDelete
 18. விசுவரூப தரிசனத்திற்கு மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. காலத்திற்கேற்ற அருமையான தலைப்பு ”விஸ்வரூபம்” என தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது வியக்க வைக்கிறது.

  மிகவும் புத்திசாலி தான் நீங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லவும் வேண்டுமோ!!!!!

  இதே தலைப்பில் இன்று ஆயிரம் பேர்கள் பதிவிடுகிறார்கள்.

  ஆனாலும் இந்த தங்களின் பதிவுக்கு அவை ஏதும் ஈடாகுமா? ;)))))

  >>>>>>

  ReplyDelete
 20. பதிவும் படங்களும் விஸ்வரூபமாகவே காட்சி அளிக்கின்றன.

  விஸ்வரூப தரிஸனங்கள் கண்டு மகிழ்ந்தோம், உங்களால்.

  எல்லாமே மனதை மகிழ்விக்கின்றன.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  -oOo-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

   மகிழ்வுடன் அளித்த கருத்துரைகளுக்கு
   மனம் நிறைந்த நன்றிகள்..!

   Delete