Monday, January 28, 2013

எண்ணம் நிறைக்கும் வண்ணத்தீவு ..வர்ணமயமான பல்வேறு மணற் குன்றுகள் பிரேசர் தீவுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்து எண்ணம் கொள்ளை கொள்கிறது...

பிரேசர் தீவு, பிரிஸ்பேன் நகருக்கு வடக்காக , ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்திற்கு அண்மையில் வடக்காக எழிலாக அமைந்துள்ள
 மிகப்பெரிய தீவாகவும் விளங்குகின்றது.

ஆஸ்திரேலியாவின் 6 வது மிகப்பெரிய தீவாகவும் , உலகில் மிகப்பெரிய மணல் தீவாகவும்  ஆஸ்திரேலியாவின் பிரேசர் தீவு விளங்குகிறது.

பிரேசர் தீவு, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மிகப்பெரிய தீவாகும்,

பிரேசர் தீவில் நூறுக்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகள் அமைந்துள்ளது..

உலகில் காணப்படுகின்ற தூய்மையான ஏரிகளில் சில, பிரேசர் தீவிலேயே அமைந்துள்ளன.

 சில ஏரிகள் வெள்ளை மணற் கரைகள் சூழ தேயிலையின் நிறத்திலும், சில தெளிவாகவும், நீல நிறத்திலும் அமைந்து ககொள்ளாக்காட்சியாகத்திகழ்கிறது

பிரேசர் தீவில் அமைந்துள்ள மணற் குன்றுகள், கடல் மட்டத்திலிருந்து 240மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டவை..

பிரேசர் தீவில், தங்குதடையற்ற நீண்ட வெள்ளை மணற்கரைகள், ஆச்சரியத்தக்க நிறமுள்ள மணல் குன்றுகளினால் அசாதாரணமான அழகு நிறைந்த இடமாக காட்சியளிக்கின்றன.பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, , பறவைகள், மீனினங்கள் வாழ்கின்றன.


ஜெல்லி மீன்கள் அதிகம் காணக்கிடைத்தன..
bouncebouncebouncebouncebouncebouncebouncebouncebouncebouncebounce
நிறைய தவளைகளும் காட்சிப்படுகின்றன...பிரேசர் தீவில் வாழ்கின்ற டிங்கோ(Dingo) நாய்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
ஜனவரி மாதம் தங்கள் குழந்தைகளுக்கு அந்த காட்டு நாய்கள் பயிற்சி அளிக்கும் பருவமாம் .. ஆகவே அதிகம் காணக்கிடைக்காதாம் ..
பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்திருக்கிறார்கள்...இயற்கை சுற்றுலா இடமாக விளங்கும் பிரேசர் தீவு 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமையத்தினால் உலகப் பாரம்பரிய  -மரபுரிமை இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ..

பசுமையைப் பாதுகாக்க வெளிநாடுகளிருந்து தருவிக்கப்பட்ட 
விதைகள் மூலம் மரங்கள் வளர்க்கிறார்கள்..


நான்கு சக்கர இயக்கமுள்ள ஜீப் போன்ற வாகனங்களே 
இங்கே பயணிக்க ஏற்றவை ..

பிரிஸ்பேனிலிருந்தே பெர்ரி என்னும் படகுகளில் சொந்த ஜீப்,
 ஜீப்பின் பின்னால் இணைக்கப்பட்ட சகல வசதிகளுடனான படகுகள் சகிதம் குடும்பத்தோடு வாரக்கணக்கில் விடுமுறையைக்களிக்க வரும் ஆஸ்திரேலியர்களைக்காண முடிந்தது .. 


Coral Bay Panorama, St John, US Virgin Islands Photographic Print

28 comments:

 1. Nice! Thanks for sharing about a beautigul place!

  ReplyDelete
 2. உம், கொடுத்த வச்ச மகராசன்கள் போகும் இடம். நான் வயித்தெரிச்சல் பட்டு என்ன ஆகப்போகிறது?

  ReplyDelete
 3. கண் கொள்ளாக் காட்சிஇன்பம்!

  ReplyDelete
 4. வண்ணத்தீவு எண்ணத்தை நிறைத்தது உண்மை.

  அழகிய படங்கள், பிரேசர் தீவு பற்றிய அருமையான செய்திகள் எல்லாம் தந்தைமைக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வண்ணத்தீவு எண்ணத்தை நிறைத்தது உண்மை.

  அழகிய படங்கள், பிரேசர் தீவு பற்றிய அருமையான செய்திகள் எல்லாம் தந்தைமைக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பிரேசர் தீவின்நீண்ட வெள்ளை மணற்கரையில் பேரக்குழந்தையுடன் விளையாட ஆசை ஏற்படுகிறது.
  அது போல் ஏற்பட்ட ஆசையால் தான் குடும்பத்துடன் ஆஸ்திரேலியர்கள் வருகிறார்கள் போலும்.

  ReplyDelete
 7. பிரேசர் தீவு பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்... அருமையான படங்கள்.. நன்றி...

  ReplyDelete
 8. Having read this I thought it was really enlightening.
  I appreciate you finding the time and effort to put this informative article together.
  I once again find myself spending a significant amount of time both reading and posting comments.
  But so what, it was still worthwhile!
  Have a look at my blog ; clarisonic pro

  ReplyDelete
 9. படிக்கும் ஒவ்வொருவரையும் பார்க்க தூண்டும் இடம். நல்ல பதிவு..

  ReplyDelete
 10. வெள்ளைநிற அதிசய மணற்குன்றுகள், காட்டு மரங்கள், நீலவானம், அழகான கடற்கரை – உண்மையிலேயே பிரேசர் தீவு ஒரு வண்ணத்தீவுதான்.

  ReplyDelete
 11. I am truly grateful to the holder of this web site who has shared this great
  paragraph at at this time.
  Have a look at my website ... clarisonic

  ReplyDelete
 12. அழகான படங்களுடன் அருமையாக நேர்முக வர்ணனை போல் விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. அழகிய படங்கள், சிறந்த வர்ணனை, நல்லபதிவு.

  ReplyDelete
 14. Nice post. I was checking constantly this blog and I
  am impressed! Very helpful info specially the last part :) I care for such info a lot.

  I was seeking this certain information for a long time.
  Thank you and good luck.
  Feel free to visit my blog ; louis vuitton official site

  ReplyDelete
 15. அழகான தீவைப்பற்றிய அழகானபதிவு! நன்றி!

  ReplyDelete
 16. அழகிய வண்ண மயமான படங்களுடன் கண்ணை கவரும் பதிவு .பிரேசர் தீவு பற்றிய தகவல்கள அருமை ..
  தவழும் குட்டி தவளை அனிமேஷன் கண்ணை கவர்கிறது

  ReplyDelete
 17. That is very fascinating, You're an overly skilled blogger. I've joined your feed
  and look forward to in the hunt for more of your magnificent post.
  Additionally, I've shared your website in my social networks
  Visit my blog ; clarisonic uk

  ReplyDelete
 18. நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற அஆளைத் தூதும் பதிவு.நன்றி

  ReplyDelete
 19. பார்க்கவே பரவசமூட்டும் ஒரு இடத்தினைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 20. அழகிய படங்கள் விளக்கம் அருமை . கொடுத்து வைத்தவர்கள்

  ReplyDelete
 21. கண் கொள்ளா காட்சி...

  ReplyDelete
 22. மிக அழகிய தீவு
  இறைவன் அள்ளிக்கொடுத்த
  இயற்கை வரம் காண
  இருகண்கள் போதாது.. அருமையான புகைப்படங்கள் அதனைப்பற்றிய விமர்சனங்கள். அருமை சகோதரி..

  ReplyDelete
 23. வண்ணத் தீவிற்கு தங்களோடு மனதால் சென்று வந்தேன்.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 24. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - வண்ணமயமான மண்ற்குன்றுகள் - அழகான படங்கள் - அருமையான பதிவு - கொடுத்து வைத்தவர்கள் ஆஸ்திரேலியர்கள் - பிரேசா தீவு வாழ்க்கையில் ஒரு தடவையாவது காணக் கண் கோடி வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு நன்றி

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 26. அழகிய தீவு பலதகவல்கள் படங்களுடன் காணக் கிடைத்தது.

  ReplyDelete
 27. வெகு அழகான படங்கள்.

  அதைவிட சிறப்பான வர்ணனைகள்.

  நீங்கள் தீவுக்குக்கூட்டிச்சென்றாலும் தெய்வ சந்நதிக்குக் கூட்டிச்சென்றாலும் திகட்டுவதில்லை தாங்கள் காட்டிடும் படங்கள்.

  அத்தனையும் திரட்டுப்பால் போல அத்தனைச்சுவையாக்கும். ;)

  ”ஆஸ்திரேலியா - பிரேசா தீவு” அதைக்காணக் கண் கோடி வேண்டும்.

  மிக அழகான அற்புதமான தீவு தான்.

  தீவை விட்டு வெளியே வரவே மனது இல்லாமல் தான் நானும் ஒரேயடியாக மயங்கியிருந்தேன்.

  அதனாலே கொஞ்சம் தாமதம்.

  கோச்சுக்காதீங்கோஓஓஓஓஓ!
  ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 28. இயற்கை அழகும் அதை விளக்கும் படங்களும் அருமை.தகவல்களும் இரத்தின சுருக்கமாக உள்ளது. பாராட்டுக்கள். நீலக்கடலின் மத்தியில் பச்சை வண்ண முத்து.அது இயற்கையின் சொத்து.

  ReplyDelete