Friday, January 11, 2013

கூடாரவல்லி வைபவம்..
தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் கோவிந்தனுடன் கூடிய நாள்.கூடார வல்லி" 

கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் 
அன்பால் வென்று அடிமைப்படுத்தும் 
பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதன் அமரர் ஏறு ஆயர்தம் கொழுந்தே போன்ற 
குணக்குன்றே கோவிந்தன் ..!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

கோபியருடன் கோவிந்தன் கூடி குளிர்ந்து பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய விட்டு முழங்கை வரை வழியுமாறு உண்ணும் நாளே கூடார வல்லி.

எத்தனை ஜன்மம் எடுத்தாலும் குறையொன்றுமில்லாத கோவிந்தனுடைய திருவடிகளே சரணம் என்று பிரதிக்ஞை எடுத்து கொண்டு ஆண்டாள் கூடியிருப்பதால் இது கூடாரவல்லி.


மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் (கூடாரம்)  கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. 
கூடாரத்தில், திருப்பாவை பாடலுடன் ஆண்டாள்  சேவை சாதிக்கிறாள். 


[ranga_mohini.JPG]
காஞ்சிபுரம் கூழம்பந்தல் பேசும் பெருமாள்தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கை,,,,
பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,வந்து வரம் தருவார் வரதராஜன் 


21 comments:

 1. கூடாரவல்லி பற்றி பலவிஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 2. மிக அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு,மேடம். நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 3. முதல்முறை கூடாரவல்லி பற்றி அறிகிறேன்.படங்களுடன் நல்லதொரு ப(திவு)கிர்வு.

  ReplyDelete
 4. கூடாரவல்லி பற்றி தெரிந்துகொள்ள உதவியது இப்பதிவு. வழக்கம் போலவே பல அருமையான புகைப்படங்களை இணைத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 5. ஆஹா..! இன்னிக்கு எங்க ஊர் பஜனை கோஷ்டி எல்லாரும் ஒரே யூனிபார்ம்மா புது புடவை எடுத்து உடுத்தி பஜனை பாடுவாங்க.. கோயில்லையும் முழங்கை வழி வழிய வர்ற மாதிரி பொங்கல் செய்து பெருமாளுக்கு படைப்பார்கள். வருடா வருடம் இந்த 27வது பாசுரம் அன்று நடைபெறும் நிகழ்சி.. படங்கள் அனைத்தும் மனதிற்கு நிறைவாக உள்ளது.

  ReplyDelete
 6. அருமையான விஷயங்கள்..
  நீங்கள் தினம்தினம் தரும் பக்தி மணம் மிகுந்த விஷயங்கள் மனதிற்கு நிறைய மகிழ்வைத் தருகிறது..
  அதே நேரம் இதையெல்லாம் என் வாழ் நாளில் ஒருமுறையாவது நேரில் தரிசிக்க மாட்டேனா என்று தாளாத ஏக்கமும் கூட வருகிறதே...

  அருமை அருமை...

  அற்புதமான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோதரி...

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு. கூடாரவல்லி பற்றி படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருந்தது.

  ReplyDelete
 8. கூடாரவல்லி பற்றி படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருந்தது.

  ReplyDelete
 9. கூடாரவல்லி பற்றிய விளக்கமும் கண்ணை கவரும் படங்களும் பதிவு மிக அருமை.

  ReplyDelete
 10. தெய்வீக அழகு பதிவு முழுக்க.. நன்றி!

  ReplyDelete
 11. வழமைப் போலவே அழகானப் படங்களுடன் சிறப்பானப் பதிவு!

  ReplyDelete
 12. தன் பகைவர்களை தனது வலிமையினாலும், தன் அன்பர்களை தனது எளிமையினாலும் வெல்லும் கோவிந்தனின் புகழ் பாடும் பாசுரம் இன்று.

  படங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை!

  ReplyDelete

 13. கூடாரை வெல்லும் கோவிந்தா என்பதுதானே பாடல். கூடாரவல்லி யானது எப்படி.?

  ReplyDelete
 14. நான் படித்த பள்ளியில் மார்கழி முழுவதும் திருப்பாவை பாடி, கூடாரவல்லி அன்று நெய் வாசனையுடன் கூடிய சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாகக் கொடுப்பார்கள்.உங்க பதிவைப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.

  ஆண்டாள்,கோவிந்தனின் படங்கள், கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றன.

  ReplyDelete
 15. கூடாரவல்லி பதிவு மிகவும் அற்புதம்.
  ஆண்டாள் பெருமாளை கூடி குலாவி நாணத்துடன் பெருமாள் அருகில் அமர்ந்திருக்கும் காட்சியில் மனதைப் பறிகொடுத்தேன்.

  பகிர்விற்கு நன்றி.

  ராஜி

  ReplyDelete
 16. ஹையா! நானும் கூடாரவல்லி வைபவத்துக்கு வந்துட்டேனே! :-)
  ஆண்டாளையும் ரங்க மன்னாரையும் காணக் கண் கோடி வேண்டும்.இந்த படங்களை பார்க்கணும்னே ஆர்வத்துடன் வந்தேன்

  ReplyDelete
 17. Aha aha.....
  Adhi arputham........
  Govindanai kanda neeraivoo
  Yani jodi.........super.
  viji

  ReplyDelete
 18. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - கூடாரவல்லி வைபவம் வழக்க்ம போல் அருமையான படங்களுடன் விளக்கங்களூம் சேர்ந்து பதிவாக்கிய திறமை பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 19. அருமையான பதிவு.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 20. கண்ணைக்கவரும் படங்கள்.

  கூடாரவல்லி பற்றிய அற்புதமான தகவல்கள்.

  தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட ஆண்டாள் போலவே .... ;)))))

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete