






மனித குலத்திற்கு வரமாய் வந்தவை தாவரங்கள்..
கம்பீரத்தின் உருவாய் வளர வேண்டிய விசுவரூப மரங்கள் ....
உயரம் குறைத்து கம்பீரம் கரைத்து வேர்கள் நறுக்கி சிறு தொட்டிக்குள்
அடைக்கும் போன்சாய் ஆக குறுக்கப்பட்டு வளர்க்கப் படும் மரங்களின்
சந்தை மதிப்பு மிக அதிகம்.
சந்தை மதிப்பு மிக அதிகம்.
ஜப்பானிய கலையான போன்சாய் ஆலமரம் , அரசமரம் போன்ற நூற்றாண்டு தாவரங்களையும் ஜாடிக்குள் வளர்த்து வியப்பளிக்கிறது...
ஜப்பானிய மொழியில் போன் என்றால் ஆழமற்ற தட்டுக்கள்
சாய் என்றால் செடிகள் என்று பொருள் .
சாய் என்றால் செடிகள் என்று பொருள் .
போன்சாய் மரங்கள் அழகுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், வாஸ்துக்காகவும் அலுவலகங்களிலும் வரவேற்பறையிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.
உணவு,மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்துவதில்லை அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்
100 முதல் 200 ஆண்டுகள் வயது வாழும் தாவரங்களையும் , எந்த பல்லாண்டு தாவரத்தையும் போன்சாயாக வளர்க்க முடியும்
போன்சாய் தாவரங்கள் பரம்பரை முறையில் குள்ளமாக்கப்படாமல்
வளர்ந்து கொண்டிருக்கும் தாவரம் ஒன்றின் குருத்து இலைகள் ,வேர்கள் போன்றவற்றை கத்தரித்தல் இராசயனங்களை தூவுதல் போன்றவற்றால்
குள்ளமாக்கப்படுகின்றது
மரங்களின் தண்டுபாகம் தடிமனாகவும், கீழ்புறத்தில் அதிகமாகவும், மேற்புறத்தில் குறைந்ததாகவும் கிளைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
கிளைகளுக்கு நடுவே இடைவெளி இருப்பது அவசியம்.
காய்ந்த இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
காலை, மாலை வேளைகளில் நீர் ஊற்ற வேண்டும்.
ஆனால், தண்ணீர் தேங்க கூடாது.
மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரில் கரையும் உரங்களை இடலாம். மரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொட்டியை மாற்ற வேண்டும்.
அப்போது, தடிமனான வேரை வெட்டிவிட வேண்டும்.
அலுமினிய ஒயர்களை கொண்டு விரும்பிய வடிவத்திற்கு கிளைகளை வளைக்கலாம்.
வீடுகளில், எல்லா தட்ப, வெப்ப நிலைகளிலும் போன்சாய் மரங்கள் வளரும்.
ஆல், அரசு, வேம்பு, புளி, எலுமிச்சை, சப்போட்டா, மூங்கில், நாவல், சவுக்கு, கொன்றை போன்றவை போன்சாய் முறையில் வளர்க்க ஏற்றவை.
ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய போன்சாய் மரங்கள் வளர்ப்பு கலை ஜப்பானில் முக்கிய கலையாக உள்ளது.
தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் போன்சாய் வளர்ப்பு பிரபலம் அடைந்துள்ளது.
உள்ளங்கையில் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில், விழுதுகள் கொண்ட ஆலமரம், இரண்டடி உயரமே கொண்ட எலுமிச்சை, சப்போட்டா மரங்கள் காய்த்து குலுங்கும் அதிசயத்தை ரசிக்கலாம் ...


குல்மொஹர், காகிதப்பூ, இம்பால் லில்லி உள்ளிட்ட பூ மரங்கள், பார்த்துக் கொண்டே இருக்கும் படி தோற்றம் கொண்ட அழகுக்காக வளர்க்கப்படும் மரங்களும், மா, சீத்தா, கொடுக்காப்புளி, சப்போட்டா உள்ளிட்ட பழவகை மரங்களும் கண்களையும் கருத்தையும் கவருகின்றன..
சாதாரண மரங்களைப் போலவே பூத்துக் காய்த்து, கனிகள் தருகின்றன. எல்லாமே அளவில் மிகச் சிறியதாக இருக்கும்.
சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம்
போன்சாய் கலையையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.
சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர்...
வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும்.
முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் ...
போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, . எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது..
Vertical Forest.....at Milan, Italy.












