Saturday, March 19, 2011

தேனே தேனீயே!!




விட்டு விடுதலையாகிப் பறக்கும் சிட்டுக் குருவியைப் போலவே தேனீக்களும் அழிந்து வரும் இனமாகி வருவது மிகவும் கவலைக்குரிய அம்சமாகும்.
இயற்கைச் சமநிலை அடைந்தால் தான் மனித குலம் வாழ்வு வளமாகும்.

தேனீக்களின் இயற்கை மகரந்தச் சேர்க்கை குறைந்தால் விளைச்சல் குறைந்து விவசாயிகளும், மக்களும், பயிர்ச் செழுமையும் பாதிக்கப்படும்.


தேனீக்கள் தேன் கூட்டில் கூட்டமாக(சமுதாயமாக) வாழும்.



பயிர்களுக்குத்தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள் பயிர்களின் இலைகளாலும் பூக்களாலும், கனிகளாலும் உட்கிரகிக்கப்பட்டு, அவற்றை நுகரும் உயிரினங்களைப் பாதிக்கின்றன.
இன்னும் சில ஆண்டுகளில் தேனீக்கள் அருங்காட்சியகங்களில்
மட்டும் காட்சிப்படும் உயிரினமாகி விடும் அபாயமிருப்பதாக
விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பது கவனத்தில் கொண்டு, கவலை தரும் விஷயமாகும்.
மேற்குலகத் தேனீ பூவில் இருந்து பூந்தேன் உறிஞ்சுகின்றது
தேனீக்களின் வாழ்க்கை தேனைப் போல் சுவைக்கும்.
சுறுசுறுப்பாக  இருப்பவரை தேனீயைப் போல் சுறுசுறுப்பு என்று உதாரணம் காட்டுவார்கள்.

தன்வந்திரி பகவான் கையில் அட்டைப்பூச்சியுடன் அருளுவதை வணங்கியிருக்கிறோம்.
படிமம்:Apis dorsata nest.jpg
முற்காலத்தில் அசுத்த ரத்தத்தை உடலிலிருந்து அகற்ற அட்டை,
பூரான் போன்றவற்றை வைத்தியர்கள் பயன் படுத்தியதை அறிவோம்.
பக்கவாத நோயைப் போக்க தேனீக்களின் கொட்டை பயன் படுத்துவது
கேரள மற்றும் ஜப்பானிய மருத்துவம்.

ApisDorsataHive.jpg (1024×768)
விவசாயிகளின் நண்பனான தேனீக்களை வேளாண்மை பல்கலைக் கழகங்கள் தேன்பெட்டியைப் பயன்படுத்தி தேனீ வளர்ப்பை லாபகரமான தொழிலாகச்செய்ய பயிற்சியும், உபகரணங்களும் தந்து ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது.
Bee_crocus_macro_3.jpg (2272×1704)


இந்த தேன் கூடு வேலைக்கார தேனீயிடமிருந்து உருவாகும்
 மெழுகால் கட்டப்படும். இலேசானதும், அறுகோண வடிவமுடைய
 பல அறைகளாலான அறுகோண அமைப்பு மிகவும் உறுதியானது.

இதனாலே தான் ஆகாய விமானங்களில்இந்த தேன் கூடு  போன்ற அமைப்பில்
 தயாரிக்கப்பட்ட அலுமினிய வலைச்சட்டகம் ஆகாய விமான உடலின்
 தகடுகளுக்கிடையில் இடப்பட்டுள்ளது.

இதனால் ஆகாய விமானங்கள் உறுதியாகவும் இலேசானதாகவும் வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும் உள்ளது.


வேலைக்கார தேனீக்களால் பூக்களிலிருந்து அமுதம்(Nestor)
 என்னும் பதார்த்தம் உறிஞ்சப்படுகின்றது.

இது தேனீக்களில் இரைப்பையில் பதப்படுத்தப்படுகின்றது.
பின் அவை தேன் அடையில் சேமிக்கப்படுகிறது
Drawf_Honey_Bee_(India).jpg (800×500)
பூக்களிலிருந்து மகரந்தததைச் சேகரித்துத் திரும்பும் தேனீ
உடலெங்கும் திருநீறு பூசிய சிவனடியாரை நினைவூட்டும்.

பூக்களில் அமர்ந்து தேனுண்ணும் காட்சி மற்ற புலன்களை
அடக்கி ஒரே சிந்தனையில் இறைவனைத் தியானிக்கும்
முனிவரை ஒத்திருக்கும். 

பூக்களில் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்பவை
வேலைக்கார தேனீக்கள் ஆகும்.

இராணியைக் கவனிப்பது, முட்டையிலிருந்து வெளியேறும் புழுக்க்ழ்ளைப் பாதுகாப்பது, அவற்றிற்கு உணவு கொடுப்பது,சுத்தப்படுத்துவது மற்றும்
 உணவு தேடுதல் என அனைத்து செயற்பாடுகளும்  இந்த வேலைக்கார தேனீக்களால் மேற் கொள்ளப்படுகின்றன.

14 comments:

  1. "தேனே தேனீயே!!"//
    very sweet post. Tasty.Interesting.

    ReplyDelete
  2. படங்களும் பதிவும் நல்லா இருக்கு,

    ReplyDelete
  3. தேன் தேனிப் பற்றியபடங்களும் விபரங்களும் அருமை.

    ReplyDelete
  4. இந்தப்பதிவு தேனாய் இனிக்குதே!

    தினமும் ஒரு பதிவு,
    ஏராளமான படங்கள்,
    தாரள்மான விளக்கங்கள்.

    தேனி போல சுறுசுறுப்பான தங்கள் இயக்கம் பிரமிக்க வைக்குதே என்னை!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  5. Very well written.
    i cannotstop campare with me that velaikara theni..
    a little change i am a mother,grandmother,still doning the same householdwork.......................
    viji

    ReplyDelete
  6. இந்தப்பதிவு தேனாய் இனிக்குதே!

    ReplyDelete
  7. ;)
    ஓம் ஹரி
    ஓம் ஹரி
    ஓம் ஹரி

    ReplyDelete
  8. How did calculate for the 'rani theni' ?

    ReplyDelete
    Replies
    1. ராணி தேனீ அளவில் பெரியவை ..

      ராணித்தேனிக்களுக்கு மட்டும் ஸ்பெஷல் royal jelly உணவை உழைப்பாளித்தேனிக்கள் தருகின்றன..

      தேன் கூட்டில் இருக்கும் மற்ற தேனீக்களைவிட பெரிய உருவம் கொண்டதால் அறியமுடியும் ..!

      Delete
  9. How do calculate the Rani theni ?

    Difference between rani theni & velaikara theni

    ReplyDelete
    Replies
    1. தேன்கூட்டில் இருக்கும் மற்ற தேனீக்களை விட அளவில் பெரிதாக இருக்கும் ராணித்தேனீ பார்த்தமாத்திரத்திலேயே வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்..!

      Delete
  10. How do calculate the Rani theni ?

    Difference between rani theni & velaikara theni

    ReplyDelete