Thursday, August 4, 2011

அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாள்


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வித்திருக்காப்பு 

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத்திரு விழவில்

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே

பெரியாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பல்லாண்டு
ஓம் என்ற பிரணவத்தின் விரிவு,
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஒப்பு இலா ஆண்டாளை தமிழையும் அரங்கனையும் 
ஒருங்கே ஆண்டாளை தெள்ளுதமிழ் மொழியாளை வணங்குவோம். ஸ்ரீவில்லிப்புத்தூர் -தமிழக் அரசின் சின்னத்தில் இடம் பெற்ற 

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடைய மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர்.சென்று அழகாய் தரிசிக்கலாம்.
வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். ஆண்டாளின் புகுந்த வீடு. 

கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அவளது தாய் வீடு. 

எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ 
என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.
.Srivilliputhur gopuram

ஸ்ரீஆண்டாள் துளசியின் அவதாரம் பூதேவியின் மறு அவதாரம் 

'வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர்- வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்லஅவனை புலி கொன்று விட்டதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். 

சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறி, தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார்.  

இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.
 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயண ஓவியங்களும் காணப்படுகிறது. கோயிலின் கல்வெட்டுகளில் சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
[andal.jpg]
வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாளின் கரத்தில் கிளியாக அமர்ந்துள்ள வரம் பெற்றவர் . 

ரங்கநாதரிடம் அவரை ஆண்டாள் கிளி ரூபத்தில்  ஆண்டாள் தூது அனுப்பினாளாம் 

தூது சென்று வந்த அவரிடம் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, இதே கிளி ரூபத்தில் உங்கள் கரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற அவர் விரும்பியபடி ஆசிர்வதித்தாராம் ஆண்டாள்.
செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி.

இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள்.

இந்தக் கிளி தினமும் ஸ்ரீவில்லிப்புத்தூர்கோவிலில் புதிதாகச் செய்யப்படுகிறது.

ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. 

மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. 

ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். 

பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 

இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.
இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.
பெரியாழ்வார்

பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்து கொண்டு ஒப்பனைப்பார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஒன்று பிரகாரத்தில் கண்ணாடி தொப்பி போட்டுக்கொண்டு, 
இன்று உண்டியலாக மாறி இருக்கிறது.
பெரியாழ்வார் அவதார ஸ்தலமாகிய இந்த இடத்தில் அவருக்கும் ஒரு சன்னதி இருக்கிறது. 

 பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்.
General India news in detail
திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசங்களில் மட்டுமே இன்றும் அரையர் சேவை நடைபெறுகின்றது.  

திருவரங்கனாகிய இறைவனின் முன் நின்று அவருடைய குண நலன்களை அடுக்கிய தொடர் மொழிகளால் இசையிலே ஏற்றி மகிழ்விப்பது அரையர்களின் பணியாகும். 

இசை, நாதகம், அபிநயம் மூன்றும் ஒருங்கிணைந்து முத்தமிழ் கலையாக திவ்ய பிரபந்தங்களை விண்ணப்பிக்கும் முறையே அரையர் சேவை. 

அரையர் என்றால் அரசன் என்று பொருள். 

இத்தலைமை தோற்றவே தலையில் மகுடமாக பட்டுக்குல்லாய் அணிந்து கொள்ளும் உரிமை பெற்றனர். 

எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். , 

மூக்குத்தி சேவையின் போது ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.


கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். 

காலதாமதமானதால் ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 

அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. 

காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். 

எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். 

கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். 

நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே  என்று அனைவரும் உணர்ந்தனர்.


படிமம்:Andal pinnazhagu.jpg
ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் 8 நாள் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. 

கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை தினம் ஒரு அலங்காரத்தில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் வாகனங்களில் நகர்வலம் வருவதைக் காண கண்கோடி வேண்டும்.
ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 

தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். 

பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா' என்ற பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு தேர் வடம் பிடித்து அருள்பெறுகிறார்கள்.
General India news in detail
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற 
ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம். 
(உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு 
அருள்பாலித்த அருட்காட்சி

பஞ்சமி திதியில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீ ஆண்டாள் பிறந்த 
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம்  
 மிகவும் விசேஷமானது 
Sri Andal Temple – Srivilliputhur



Mural art in the Srivilliputhur Andal temple, Srivilliputtur, Tamil Nadu, Tamilnadu, South India, India, Asia (1848-413032 / 1479670 © imagebroker.net)
Periya Kovil, Srivilliputhur

32 comments:

  1. மிக மிக அருமையான பதிவு
    குடும்பத்துடன் இன்று அமர்ந்து பார்த்தோம்
    கிளி பிரசாத விஷயம்,கம்பர் ஸ்ரீவில்லிபுத்தூர்
    வந்த விஷயமும் புதிய அரிய தகவல்
    படங்களும் விளக்கமும் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. படங்களும் இடுகையும் மிக அருமை.. கிளிப்பிரசாதம் கிடைக்க கொடுத்துவெச்சிருக்கணும்ன்னு சொல்லுவாங்க.

    ReplyDelete
  3. ஒருமுறை சென்று இருகிறேன் அம்பாளை தரிசிக்க
    மறுமுறை தரிசித்த உணர்வு நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  4. கிளி பிரசாத விஷயம்,கம்பர் ஸ்ரீவில்லிபுத்தூர்
    வந்த விஷயமும் புதிய அரிய தகவல்//

    repeatu..

    nandri

    ReplyDelete
  5. படங்களும் விளக்கமும் அற்புதம்
    ...பகிர்வுக்கு நன்றி ...

    ReplyDelete
  6. கோயிலுக்கு அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ....

    ReplyDelete
  7. ஆண்டாளின் அருள்பெற்றோம்.
    நன்றி சகோதரி.

    ReplyDelete
  8. பின் அலங்காரம் (பின்னல் அலங்காரம்), தேர்கள், கோபுரங்கள், பிரகாரங்கள் உள்பட அனைத்துப்படங்களும் அருமையோ அருமை. ஆண்டாள்+ரெங்கமன்னார் நகர்வலம் வரும்போது உள்ள படம் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பாக கண்ணைக்கவருவதாக உள்ளது.

    அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஸ்ரீ ஆண்டாளின் சரித்திரம் எவ்வளவோ முறை சங்கீத உபன்யாசமாகக் கேட்டுள்ளேன். படித்துள்ளேன். தெவிட்டாத தேன் அமுதம் அது.

    வில்லி+கண்டன் கதை நான் புதிதாக இன்று தான் இந்தப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ர நாமத்தின் 69 ஆவது ஸ்லோகத்தில் “காலநேமி” யின் பெயர் வருவது ஞாபகம் வந்தது.

    ”காலநேமி னிஹா வீர: செளரி: சூரஜனேஸ்வர: த்ரிலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி:”

    ReplyDelete
  10. பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு பாகவதம் சொன்ன சுகர் சரித்திரம் தெரியும். ஸ்ரீமத் பாகவதமும் நிறைய முறை கேட்டுள்ளேன். வியாசரின் மகனான சுகப்பிரும்மரிஷியே ஆண்டாளுக்காக ரெங்கமன்னாரிடம் தூது சென்ற கிளி என்பதும், ஆண்டாளின் இடது தோளில் எப்போதும் அமர்ந்திருப்பவர் என்பதும் எனக்கு இந்தப்பதிவின் மூலம் கிடைத்த அருமையான தகவலகள். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //இந்த கிளி மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.//

    ஆஹா, கொஞ்சும் கிளி போன்ற ஆகிய அற்புதமான தகவல். நன்றி!

    ReplyDelete
  12. //திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசங்களில் மட்டுமே இன்றும் அரையர் சேவை நடைபெறுகின்றது. திருவரங்கனாகிய இறைவனின் முன் நின்று அவருடைய குண நலன்களை அடுக்கிய தொடர் மொழிகளால் இசையிலே ஏற்றி மகிழ்விப்பது அரையர்களின் பணியாகும். இசை, நாதகம், அபிநயம் மூன்றும் ஒருங்கிணைந்து முத்தமிழ் கலையாக திவ்ய பிரபந்தங்களை விண்ணப்பிக்கும் முறையே அரையர் சேவை.//

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாத் திருநாட்களில், நேரில் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன். நினைவூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  13. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் பற்றி அருமையான தகவல்கள்

    ReplyDelete
  14. //‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும்.//

    கம்பருக்காக ஆண்டாள் நடத்திய திருவிளையாடல் மகிழ்வளித்து மின்னுகிறது உங்களின் இந்தப்பதிவினில், அந்த வைர மூக்குத்தியின் ஜொலிப்பு போலவே!

    நன்றி.

    ReplyDelete
  15. //ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
    அருள்பாலித்த அருட்காட்சிபஞ்சமி திதியில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீ ஆண்டாள் பிறந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம் மிகவும் விசேஷமானது //

    சஷ்டியப்த பூர்த்தி விழா என்று 60 ஆண்டுகள் முடிந்ததும் கொண்டாடுவதன் நோக்கமே, அந்த தினத்தில் மட்டுமே நாம் பிறந்த போது இருந்த முக்கியமான கோள்கள் (Planets) மீண்டும் அதே நிலைக்கு திரும்புகிறதாம்.

    ஆடிப்பூரத்தண்று ஆண்டாள் பிறந்த தினமாகிய செவ்வாய்க்கிழமையும் (மங்கலவாரமும்) ஏதோவொரு ஆண்டு சேர்ந்துள்ளது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயமே.

    ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு [ஸ்ரீ ஆண்டாளின் பிறந்த ஊருக்கு]எங்களையெல்லாம் இன்று அழைத்துச்சென்ற உங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    தினமும் கடும் உழைப்பின் மூலம் பக்தியைப்பரப்பும் தங்களை அந்த ஸ்ரீ ஆண்டாளுடன் கூடிய ஸ்ரீ ரெங்கமன்னார் காப்பாற்றுவாராக!

    ReplyDelete
  16. புன்னிய தகவல்கள்...நிறைய அறிந்து கொண்டேன்.....மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  17. எங்கள் ஊரைப் பற்றிய அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அந்த கோபுர புகைப்படம் அற்புதமாக இருக்கு ...

    ReplyDelete
  19. உங்க பதிவுகளைப் போல படங்களும் அருமை..

    ReplyDelete
  20. அருமையான பதிவு

    ReplyDelete
  21. கோபுரத்தின் வலது பக்கம் இருக்கும் மாடியில் 1998ல் குடி இருந்தோம்.மீண்டும் அதனைப்பார்க்கையில் பழய ஞாபகங்கள் வருகிறது. அருமையான பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  22. படங்களும் அருமை . படிப்பவர்களையும் அங்கேயே அழைத்து சென்று விட்டீர்கள்.
    சுகமான அனுபவத்துக்கு நன்றி.

    ReplyDelete
  23. அழகான கடவுள் படங்களும் பகிர்வும்....
    அனைத்தும் அருமை...

    ReplyDelete
  24. என்ன அழகான படங்கள்! திருவில்லிப்புத்தூர் போய் வந்த மாதிரி இருக்கு.

    ReplyDelete
  25. அழகான படங்கள். அரிய தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  26. //மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.//
    உழைப்பின் உயர்வு.

    ReplyDelete
  27. சுடச் சுட பதிவு. ஆண்டாள் கோயில் தேரோட்டம்.

    ReplyDelete
  28. ஆஹா.. அருமையான ஆலய ஆன்மீக பதிவு ... அற்புதம் நேரில் சென்று பார்ப்பது போன்ற பிரமை படங்கள் தருகிறது... நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. நல்லதொரு ஆன்மீகப் பதிவு.. படங்கள் கலக்கல்...

    ReplyDelete
  30. ;)
    சர்வ மங்கள மாங்கல்யே
    சிவே சர்வார்த்த சாதிகே !
    சரண்யே த்ரயம்பிகே கெளரி
    நாராயணீ நமோஸ்துதே !!

    ReplyDelete