Tuesday, August 16, 2011

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா









ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ணா மந்திரம், பதினாறு வார்த்தைகளைக் கொண்ட 
மஹா மந்திரம் என உபநிடதம் கூறுகின்றது.
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் அல்லது இஸ்கான் எனவும் அறியப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கம் அமைப்பு இந்து சமயத்தையும், இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

கல்கத்தாவில் பிறந்த ஸ்ரீல பிரபுபாதா இஸ்கானின் நிறுவனராவார்.

இவரது ஆன்மிகக் குருவாகிய ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸ்வாமி அவர்களின் வேண்டுகோளின் பெயரால் ஸ்ரீசைதன்யரின் போதனைகளை உலகமெங்கும் பரப்ப இஸ்கான் அமைப்பை உருவாக்கினார்.

இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் க்ருஷ்ணா கான்ஷியஸ் என்ற பெயரின் சுருக்கமே இஸ்கான்.

இந்த அமைப்பின் பெங்களூர்க் கிளை ராஜாஜி நகர் அருகே இஸ்கான் ஹில் என்றே பெயரிடப்படுள்ள சிறு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை ராதாகிருஷ்ண மந்திர் என்றும் சொல்கிறார்கள்.
பெங்களூர் ராதாகிருஷ்ணா மந்திருக்குச் சென்றிருந்தோம்.
தமிழர்களின் உழைப்பில் உருவான பிரமாண்டம் பிரபலமான அந்த ஆலயத்தின் கட்டுமான பணியாளர்கள் அனைவரும் தமிழர்களே.....
கொஞ்சம் மலை ஏறியதும் காலணிகள் வைக்கும் இடம் உள்ளது. 
வரிசையாக அடுக்குகள் உள்ளன. 

கொஞ்சம் மேலே ஏறினால், கைகளை கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் பைப்புகள். கால்களைக் கழுவிக் கொள்ள பாதையிலேயே ஒரு கிடைமட்ட பைப் வைத்து குளிர் நீர் கசிந்து படிக்கட்டை முழுக்க நனைத்துக் கொண்டிருக்க,திருப்பதி போல் நாம் அந்தச் சிறு நீர்ப்பரப்பில் நனைத்துக் கொள்ளலாம்.

பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலில் ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அக்ஷய பாத்ரா என்னும் தொண்டு நிறுவனம் இயங்கிவருகிறது.

பெங்களூர் மற்றும் சுற்றுப்புரத்து அரசுப் பள்ளிகள் அனைத்திலும் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு இந்த இஸ்கானாலேயே வழங்கப்படுகிறது.  தூய்மையாக உணவு தயாரிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்படுகிறது
 
முதலில் வருவது நரசிம்மர் கோயில். 
ஞ்சள் வெளிச்சத்தின் நடுவில் அத்தனை நகைகளுடன் 
இரணியனைக் கொல்லும் அதே கோபத்துடன் அமர்ந்திருக்கிறார்.
தகதகதகவென ஜொலிக்கிறார் வெங்கடாசலபதி .  உண்டியலும் இருந்தது.

இன்னும் கொஞ்சம் படிக்கட்டுகள் வழியேறினால் மிகப் பெரியதாக ராதாகிருஷ்ணர் கோயில்.

கூம்பு வடிவ உயர உச்சியின் உடலெங்கும் கண்ணன் ஓவியங்கள்.

மையத்தில் பிரம்மாண்டமான ஷாண்ட்லியர் மின் விளக்கு ஒன்று தொங்குகின்றது.

உயரமான மாடங்களில் திருவிழாக்களில் ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள்.
முன்னே பார்த்தால் தங்கக் கோபுரங்களின் கீழே மூன்று பகுதிகள். வலப்புறம் கண்ணன், பலராமன். இடப்புறம் நித்ய கெளரங்கா. கெளரங்கா என்ற பெயர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவையும், நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது.

மையத்தில் ராதையுடன் வட இந்தியப் பாணி கண்ணன்.  
பூரியில் இருக்கும் பாண்டுரங்கனைப் போன்ற அடையாள உற்சவர்கள்.


பஞ்ச லோகச் சிலைகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு). இவை கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலையில் தேவஸ்தான ஸ்தபதி மற்றும் அவரது மகனான இராதாகிருஷ்ண ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டவை.
radhalotusfeet.jpg - 374721 Bytes


தங்கக் கோயில்கள் அருமையாக ஜொலிக்கின்றன..!

புத்தகக் கடைகளில் ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஏன் சைனீஸிலும் புத்தகங்கள் உள்ளன. 

இராதாகிருஷ்ணர் கோயிலின் கதவுகளில் மேலிருந்து கீழாகத் தசாவதாரச் சிலைகள். அவற்றின் இரு புறமும் நாரதர், அழகுப் பெண்கள், யானைகள், பறவைகள்.
காற்றில் அழகாய் அசைந்தாடுகின்றது பச்சையாய்க் குளம் 
அன்னதானம் பருப்புச் சாதம் அளிக்கிறார்கள்.


Hare Krsna Hill

ISKCON BANGALORE Summer 2009



Nrsimha



Mohini Alankara

Raja Rani Alankara and Radha Rajagopala Alankara

51 comments:

  1. படங்களும் பகிர்வும் அவ்ளோ அருமையாயிருக்கு..

    ReplyDelete
  2. ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும் அதிய‌ற்புத‌ம்!!

    ReplyDelete
  3. பகிர்வு ரொம்ப அருமையா இருக்கு சகோ.

    ReplyDelete
  4. நேரிலே சென்று, கண்டு, மென்று, உண்டு, உளமாற‌
    வேங்கடவனை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது.

    நன்றி பல.

    சுப்பு ரத்தினம்.
    http:/pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  5. வழ்மை போலவே படங்களும் பதிவும் அருமையா இருக்கு.

    ReplyDelete
  6. ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
    கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
    ஹரே ராமா ஹரே ராமா
    ராம ராம ஹரே ஹரே

    அனைத்துப்படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் அருமையோ அருமை.

    பெங்களூர் இஸ்கான் டெம்பிளுக்கு 3 தடவை போய் வந்துள்ள பாக்யம் பெற்றுள்ளேன். மலரும் நினைவுகளைக் கிளறி விட்டுள்ளீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  7. ஆஹா! எங்க இஸ்கான் கோவில். மாதம் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வருவோம். அழகான படங்கள் அருமையான பதிவு.

    ReplyDelete
  8. @அமைதிச்சாரல் said...
    படங்களும் பகிர்வும் அவ்ளோ அருமையாயிருக்கு..//

    அருமையான அமைதிச்சாரலின் வருகைக்கும் க்ருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @ நிலாமகள் said...
    ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும் அதிய‌ற்புத‌ம்!!/

    அதிய்ற்புதமான நிலாமக்ளின் வருகைக்கும் க்ருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  10. @ FOOD said...
    பகிர்வு ரொம்ப அருமையா இருக்கு சகோ.//

    அருமையான வருகைக்கும் க்ருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  11. @ sury said...
    நேரிலே சென்று, கண்டு, மென்று, உண்டு, உளமாற‌
    வேங்கடவனை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது.

    நன்றி பல.//

    கருத்துரைகளுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  12. @ Lakshmi said...
    வழ்மை போலவே படங்களும் பதிவும் அருமையா இருக்கு.//

    கருத்துரைகளுக்கு நன்றி அம்மா..

    ReplyDelete
  13. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//

    அருமையான கருத்துரைகளுக்கும் மலரும் நினைவுகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  14. RAMVI said...
    ஆஹா! எங்க இஸ்கான் கோவில். மாதம் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வருவோம். அழகான படங்கள் அருமையான பதிவு.//

    அழகான அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  15. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள்.
    அருமை சகோதரி.

    ReplyDelete
  16. தகவல்களுக்கும், படங்களுக்கும் மிக்க நன்றி தோழி...

    ReplyDelete
  17. படங்கள் நன்றாக உள்ளன. எப்படி சேகரிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  18. நல்ல பகிர்வுங்க. படங்களும் ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  19. ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும்நல்லாயிருக்கு.அருமையான பதிவு.

    ReplyDelete
  20. அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் ஒவ்வொரு பதிவையும் இரசித்து எழுதுகிறீர்கள் என்பது கண்கூடாக தெரிகிறது.....

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  22. பெங்களூரில் ஜனவரியில் indiblogger meet கோயில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.நான் கலந்து கொண்டேன்.அது பற்றி பதிவும் எழுதியிருக்கிறேன்.நேரில் பார்த்ததை விட படங்கள் அழகு.

    ReplyDelete
  23. கோவில் ரொம்ப அழகாக இருக்கிறது. நல்ல பகிர்வு. ("ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...உலகம் எப்போ உருப்படுமோ சொல்லு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா..." ன்னு எம் எஸ் வி பாடற பாட்டு கேட்டுருக்கீங்களோ...! )

    ReplyDelete
  24. தாயாரின் மலர் வதனம் மட்டுமல்ல பாததரிசனமும் சிறப்புதான்.

    ReplyDelete
  25. 2ஸ்ரீராம். said...
    கோவில் ரொம்ப அழகாக இருக்கிறது. நல்ல பகிர்வு. ("ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...உலகம் எப்போ உருப்படுமோ சொல்லு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா..." ன்னு எம் எஸ் வி பாடற பாட்டு கேட்டுருக்கீங்களோ...! )//

    ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...உலகம் எப்போ உருப்படுமோ சொல்லு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா..." ன்னு எம் எஸ் வி பாடற பாட்டு கேட்டுருக்கீங்களோ
    கேட்டிருக்கிறேன்.
    பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி.
    கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  26. @ மகேந்திரன் said...
    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள்.
    அருமை சகோதரி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தகவல்களுக்கும், படங்களுக்கும் மிக்க நன்றி தோழி.../

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. @பாலா said...
    படங்கள் நன்றாக உள்ளன. எப்படி சேகரிக்கிறீர்கள் என்று தெரியவில்லை/

    தேடுங்கள் கண்டடைவீர்கள்.

    ReplyDelete
  29. @மாலதி said...
    ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும்நல்லாயிருக்கு.அருமையான பதிவு.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  30. @
    மாலதி said...
    ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும்நல்லாயிருக்கு.அருமையான பதிவு.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  31. @koodal bala said...
    அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....//

    போராட்டம் பயனுள்ளதாக அமைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  32. @shanmugavel said...
    பெங்களூரில் ஜனவரியில் indiblogger meet கோயில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.நான் கலந்து கொண்டேன்.அது பற்றி பதிவும் எழுதியிருக்கிறேன்.நேரில் பார்த்ததை விட படங்கள் அழகு.//

    மிக்க நன்றி கருத்துரைக்கு.

    ReplyDelete
  33. @சாகம்பரி said...
    தாயாரின் மலர் வதனம் மட்டுமல்ல பாததரிசனமும் சிறப்புதான்.//

    அன்னையின் சரணகமலங்கள் அல்லவா! அழகுதான்.

    ReplyDelete
  34. அற்புதமான பதிவு.
    படங்கள் மனசை கொள்ளை கொள்கின்றன.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  35. அதிகமான படங்கள்
    அருமையான படங்கள்
    விளக்கங்களும் மிக மிக அருமை
    தொடர்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்
    நல்ல தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. படங்கள் அனைத்தும் அருமை...
    அற்புத பகிர்வுக்கு நன்றிங்கம்மா!

    ReplyDelete
  37. வழமைபோன்று என்னத்த சொல்ல அருமையா இருக்குங்க உங்கள் ஆக்கம் வாழ்த்துக்கள் சோ....
    இன்றும் ஒரு வித்தியாசமா ஆக்கம் என் தளத்தில் உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

    ReplyDelete
  38. படங்களும் விளக்கங்களும் அருமை. நல்ல பயனுள்ள பதிவு. இவர்கள் கோயில்களில் படங்கள் எடுக்க அனுமதிக்க மாட்டார்களே? இதுபோல் படங்களை அனுமதித்தால் நேரில் சென்று காண முடியாதவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்

    ReplyDelete
  39. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா - ஆன்மீக பதிவு அசத்தலாக இருக்கிறது

    ReplyDelete
  40. ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே...

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே...

    கண்வழியே படங்களின் பிரகாசம் மனதில் சென்று நிலைத்து நிற்கிறது....

    பெங்களூரில் இருக்கும் இஸ்கான் அமைப்புக்கு என்னை தோழி லதா அக்கா கூட்டிச்சென்றது நினைவுக்கு வருகிறது...

    உள் நுழைந்ததும் எப்படி ஒரு உணர்வு பெற்றேன் என்றால் வெயிலில் இருந்து குளிர் சோலையில் சென்றால் உடலெல்லாம் சிலிர்க்குமே அதுபோன்று மனம் சிலிர்த்து கண் மூடி அமர்ந்திருந்தோம் அதிக நேரம்....

    கண்குளிர மனம்குளிர அங்கேயே சாஸ்வதமாய் தங்கிவிட மனம் ஏங்கியது என்னவோ உண்மை....

    இப்ப உங்கள் கட்டுரை படித்து படங்களை பார்த்தபோது திரும்ப அங்கே சென்றுவிட்டது போல் இருந்தது.

    மன அமைதி என்பது இதோ நீங்கள் தரும் வரபிரசாதமாய் இறைவனின் ஸ்தலங்களும் வழிபாட்டு முறைகளும் முகவரியும் அழகிய படங்களும் மனதுக்கு எத்தனை சாந்தி தருகிறது....

    எத்தனை புண்ணியம் எத்தனையோ தானதருமம் செய்ததின் பலன் உங்களுக்கு கிடைக்க என் அன்பு பிரார்த்தனைகளுடன் கூடிய நன்றிகள்...

    ReplyDelete
  41. @மஞ்சுபாஷிணி said...//

    ஆத்மார்த்தமான பிரார்த்தனை சிலிர்க்கவைக்கிறது தோழி. மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  42. @ மாய உலகம் said...
    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா - ஆன்மீக பதிவு அசத்தலாக இருக்கிறது/

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  43. @ பிரகாசம் said...
    படங்களும் விளக்கங்களும் அருமை. நல்ல பயனுள்ள பதிவு. இவர்கள் கோயில்களில் படங்கள் எடுக்க அனுமதிக்க மாட்டார்களே? இதுபோல் படங்களை அனுமதித்தால் நேரில் சென்று காண முடியாதவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  44. @அம்பாளடியாள் said...
    வழமைபோன்று என்னத்த சொல்ல அருமையா இருக்குங்க உங்கள் ஆக்கம் வாழ்த்துக்கள் சோ....
    இன்றும் ஒரு வித்தியாசமா ஆக்கம் என் தளத்தில் உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....//
    கருத்துரைக்கு நன்றி.
    அருமையான நான் தவறவிடாத தளம். நன்றி.

    ReplyDelete
  45. @ Ramani said...
    அதிகமான படங்கள்
    அருமையான படங்கள்
    விளக்கங்களும் மிக மிக அருமை
    தொடர்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்
    நல்ல தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    தங்கள் கருத்துரை பாக்கியம் பெற்றதாக உணரவைக்கிறது. நன்றி.

    ReplyDelete
  46. அம்மா,

    என்னே அற்புதம் !

    ஶ்ரீ கிருஷ்னரின் கதை படித்து, அருள் பெற்றோம்.

    பகிற்வுக்கு மிக்க நன்றி.

    அன்பு மகன்,
    தமிழ் பிரியன்.

    ReplyDelete
  47. @Prakash said...
    அம்மா,

    என்னே அற்புதம் !

    ஶ்ரீ கிருஷ்னரின் கதை படித்து, அருள் பெற்றோம்.

    பகிற்வுக்கு மிக்க நன்றி.

    அன்பு மகன்,
    தமிழ் பிரியன்.//

    தமிழ்பிரியனின் பிரியமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete