Monday, September 12, 2011

மனம் மயக்கும் மரகத புத்தர்


மரகத புத்தர் கோவில் நுழைவு வாசல்

புகைப்பட ஆல்பத்தில் இன்று பகிர்ந்து கொள்ள கிடைத்தது தாய்லாந்து பயணம்.

மரகத புத்தர் ஆலயத்தில் முதலில் நம்மை வரவேற்பவர் மருத்துவக் கடவுளான 'தாய் தன்வந்திரி'!மருந்து அரைக்க பெரிய குழவியுடனும் அம்மிக்கல்லுடனும் வரவேற்கிறார். 
Image

Image
துவாரபாலகர்கள் இரண்டு பேர்களாக பக்கத்துக்கொன்றாக நிற்கிறார்கள். அச்சில் வார்த்த மாதிரி ஒன்றுபோல இருந்தாலும் வண்ணங்கள் மட்டும் ஜோடிக்கொன்றாக இருக்கிறது. 
Image
இந்த அரண்மனையைக் கட்டியவர் அரசர் முதலாம் ராமா அவர்கள். 1782 ஆண்டு. இங்கே வருமுன் தலைநகரம் தொன்புரி என்ற இடத்தில் இருந்தது.
இது சாவ் பராயா ஆற்றின் அக்கரை. அதற்கும் முன்னால் அயுத்தியாதான் தலைநகரம்.

( என்ன பொருத்தம் -ராமன் இருந்த இடம் அயோத்தியா) பர்மா போரினால் அரசர் டாக்சின் அயுத்தியாவை விட்டு வெளியேறி, இவர்தான் தொன்புரி வம்சத்தின் கடைசி அரசர். சக்ரி வம்சம் பிறகு ஆட்சிக்கு வந்தது அவர்கதான் பட்டம் சூட்டியவுடன், ராமா என்று பெயர் வைத்துக்கொண்டவர்கள்.

அரண்மனை வளாகம் மொத்தம் 60 ஏக்கர். ராஜகுடும்பத்துக்கென்று வசிக்கும் மாளிகைகள் கட்டினார்கள்.

அரசாங்க அலுவல்கள் பார்க்கத் தனி இடங்கள்.

அரசவை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடங்கள் வளர்ந்துகொண்டே போக, ஒரு கோவில் கட்டி அதில் மரகத புத்தரைப் பிரதிஷ்டை செய்தார்கள். இந்தக் கோவிலுக்கு பெயர். WAT PHRA KAEW  .

நமக்கு எமரால்ட் புத்தர்-மரகத புத்தர் கோவில் தான் சரிவருகிறது.
Image
மூன்று வாசல் உள்ள முகப்பு. 

சுற்றுச்சுவர்கள் எல்லாம் கண்ணாடிச்சில்லுகள் பதித்து அழகான வர்ணங்களால் டிஸைன் செய்து அழகாக காட்சிதந்தது. 

சுற்றிலும் அடிப்பாகம் முழுக்க தங்க கருடன்கள் கையில் இரண்டு சர்ப்பம் பிடித்துக்கொண்டு கை கோத்தமாதிரி நின்று கருத்தைக் கவர்ந்தன.
Image
முகப்பில் நடுவாசலுக்கு வெளியே ஒரு பெரிய வெண்கலக் கும்பாவில் புனித நீர் . பக்கத்தில் தாமரை மொட்டுகள் இரு தட்டுகளில் அந்த பூவின் காம்பைப்பிடித்து அந்த புனித நீரில் தொட்டு அந்த நீரைத்தலைக்குத் தெளித்துக் கொள்கிறோம். கோவிலுக்கு வந்த புண்ணீயம் நம்ம கணக்கில் ஏறும் அதே சமயம் செஞ்ச பாவங்கள் எல்லாம் தீரவும்!

 புத்தரை தரிசனம் செய்து வலது பக்க வாசலில் வெளி வருகிறோம்.. உடைக்கட்டுப்பாடுகள் உண்டு.

நாம் கவலைப்படவேண்டியதில்லை. வெள்ளைக்காரர்கள் தான் கவனிக்கணும். உடலை மூடும் உடை சரியாக இல்லாதபட்சத்தில் கோட்டை வாசலிலேயே விஷயத்தை விளக்கிச் சொல்லிவிடுகிறார்கள்.

அங்கே கிடைக்கும் சராங்கை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலில் போர்த்திக்கொண்டும் வரலாம்.

 பாஸ்போர்ட்டையோ இல்லை கிரெடிட் கார்டையோ அங்கே கொடுத்துவிட்டு துணிகளை வாங்கிக்கொள்ளலாம்.

மரகதம் என்று சொல்கிறார்களே தவிர புத்தர் அசல் மரகதக் கல்லில் செய்யப்படவில்லை.

பச்சை நிறமுள்ள ஜேட் கல்லில் செதுக்கியுள்ளது.

66 செ.மீ உயரம். அகலம் 48.3 செமீ. புத்தர் மறைவுக்குப்பின் ஐநூறு ஆண்டுகள் கழித்து இவரை உருவாக்கினார்களாம்.

இந்தியாவில் செதுக்கப்பட்டதோ என்று கூட ஒரு ஐயம் .

ஒரு சமயம் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து இவரைக் காப்பாற்ற இலங்கை அனுப்பிவிட்டார்களாம்.

அதற்குப் பிறகு 457 வது வருடம் பர்மா அரசர் அனுருத் இலங்கைக்கு அவரது ஆட்களை அனுப்பி, எங்க நாட்டுலே புத்தமதத்தைத் தழைக்க வைக்கப்போகிறோம். சிலையை எங்களுக்குத் தரவேண்டுமென்று வேண்டியதும் இலங்கை எடுத்துக் கொடுத்து, பர்மாவுக்குப் புறப்பட்ட கப்பல் நடுவழியில் புயலில் சிக்கி, சிலை எப்படியோ கம்போடியா ( காம்போஜம்) போயிருக்கிறது.

தாய்லாந்து கம்போடியா அங்கோர் வாட்டைக் கைப்பற்றியதும் சிலை தாய்லாந்துக்கு வந்து சேர்ந்தது .

இந்த கலாட்டாவில் இவரை யாரோ சுண்ணாம்பும் மண்ணும் கலந்த கலவையில் மறைத்து வைத்து அது இறுகி ஒரு பாறையா ஆகி இருந்தது.

நம் உத்தரகோசமங்கை -மண்முந்தியோ மங்கை முந்தியோ - மரகத நடராஜர் ஞாபகம் வநதது!
மரகத புத்தர்
Image
1454வது ஆண்டில் செடி என்ற தாய்லாந்தின் வட பகுதியில் அந்த பெரிய காரைப்பாறையில் மின்னல்தாக்கி அது பிளந்து அதற்குள்ளே புத்தர் இருந்தததைக் கண்டுபிடித்தாகளாம் புத்த பிக்குகள். 
[marakatha++bhudda.jpg]
பூமியில் புதைத்து, பசுவின் காலிடறி, அல்லது பசு தானாக பால் சொரிந்து ,இல்லை அரசனின் ரதம் இடறி, கனவில் இன்ன இடத்தில் புதையுண்டு இருக்கேன்னு சேதி அனுப்பி இப்படியெல்லாம் நாம் கேள்விப்பட்ட 'கதைகளாக' இல்லாமல் இங்கெல்லாம் மின்னல் தாக்கியோ இடி இறங்கியோ வெளிப்பாடுகள் நடந்திருக்கின்றன்.ஐந்தரை டன் தங்க புத்தரும் இப்படியே வெளிப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அரசர் தலைநகரை மாற்றும்போதெல்லாம் புத்தரும் கூடவே அயூத்தியா, தொன்புரி, ரத்னகோஸின்னு மாறிக் கூடவே வந்திருக்கிறார். ரத்னகோஸின் என்பது பாங்காக்கின் பழைய பெயர்.

புத்தருக்கு ஒரு கோடைகால உடை, ஒரு மழைக்கால உடை குளிர் கால உடை என்று வருடத்திற்கு மூன்று முறை மரகதப்புத்தருக்கு வெவ்வேறு உடைகள் போட்டு அலங்கரிக்கிறார்கள். 

நினைத்த போது உடையை மாற்றிட முடியாது. அரண்மனை ஜோசியர்கள்/ பண்டிதர்கள் நல்ல நாள், முகூர்த்தம் எல்லாம் பார்த்துக் கொடுக்க்வேண்டுமாம்.

கோடைக்கு கூம்பு க்ரீடம், கழுத்திலிருந்து கால்வரை தங்க நகைகள்

குளிர்காலத்துக்குத் தங்கக்கம்பிகளாலும் தங்க மணிகளாலும் பின்னிய மெல்லிய வலைபோன்ற கம்பி உடை

மழைகாலத்துக்கு சஃபையர் கற்கள் பதித்து எனாமல் வேலைப்பாடுகளுமாக உள்ள தங்கத்தொப்பி, இடதுதோளை மூடி இருக்கும் தங்க உடுப்பு பாதங்களில் தங்க ஆபரணம் இப்படி. வலதுதோள் மட்டுமே பச்சை நிறத்தைக் காண்பிக்குமாம்.

கோவிலில் விற்கும் தலபுராணம் புத்தகத்தில் இருந்து திரட்டிய தகவல்கள் இவை.  முக்கால உடை அலங்காரங்கள் படங்கள் தனியாக கிடைக்கிறது. விற்கும் தொகை முழுவதும் கோவிலைப் புதுப்பிக்கவாம்.
Image

Image

Image


[DSCN1270.JPG]

Wat phra kaew.Bangkok

Wat phra kaew.Bangkok

Grand palace.Bangkok

Grand palace.Bangkok
Wat phra kaew.Bangkok

20 comments:

  1. தாய்லாந்து பயணம் அருமை.படங்களும் சூப்பர்

    ReplyDelete
  2. படங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்
    போல் உள்ளது. க்ளியராக உள்ளது .

    ஒன்றிரண்டு படங்கள் மட்டும் மங்கலாக உள்ளது,மற்றவை எல்லாம் அருமை.

    தங்கள் தளம் வந்தால் பதிவை படிக்கும் முன் முதலில் படங்களை பார்ப்பேன் .

    எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்தது போதும் என்று நினைப்பு வந்ததும் தான் பதிவை படிப்பேன் .

    அவ்வளவு அழகு தங்கள் பதிவின் படங்கள் மேடம்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. மரகத புத்தர்,படங்கள் தகவல் அருமை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கலக்கலான கட்டிடங்களை கொண்ட கோவில்...... படங்கள் பட்டைய கிளப்புதுங்கோ.... கலக்குங்க

    ReplyDelete
  5. மரகத புத்தர் சூப்பர்

    ReplyDelete
  6. அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம் போல் நல்லாவே இருக்கு.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.vgk

    ReplyDelete
  7. முதல் படம் 3-டி போல் அட்டகாசமாக இருக்கிறது!
    மனம் மயக்கும் பதிவு!

    ReplyDelete
  8. மடாலயத்தின் ரத்தினப் பொலிவு

    மனதை உருக்குகிறது.

    மரகதப் புத்தர் வைரமாய் ஜொலிக்கிறார்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. என்றும் போல் இன்றும் ஆக்கம் சிறப்புத்தான். படங்களும் அற்புதமாக இணைத்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  11. தகவல்கள் வியக்க வைக்கின்றன.அருமையாக சேகரித்து வழங்கி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. நல்ல படங்கள்....

    எத்தனை இடங்கள் எங்களுக்குச் சுற்றிக் காணிபித்து இருக்கீங்க!

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. ஆகா! பிரமாதம் நேரில் பார்த்ததை நினைவு படுத்துகிறது. பாராட்டுகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. அருமையான புகைப்படங்களுடன்கூடிய பதிவுக்கு மிக்க நன்றி சகோ ........

    ReplyDelete
  15. மரகத புத்தர் பற்றிய அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  16. கௌதமபுத்தர் பஎன்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டது கிடையாது. தான் புத்தநிலையை அடைந்த ஒரு மனிதன் மட்டும்தான் என்பதனையும் இந்தப் பூமியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்தநிலையை அடையமுடியும் என்பதையும் தெளிவாக கௌதமபுத்தர் வலியுறுத்தினார். ஆசைதான் துன்பங்களின் அடிப்படையாகும். சுயநலம்தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆசையை விட்டால் மனநிம்மதியும் சந்தோஷமும் அடைய முடியும். தீயனவற்றை செய்யாது நல்ல விடயங்களை மட்டும் செய்து வந்தால் ஆசைதானாக அகன்றுவிடும். இவ்வுலக வாழ்க்கை வறுமை, பிணி, நோய் போன்றன நிறைந்த எளிதில் விலக்கிக் கொள்ளமுடியாத துயரம் நிறைந்தது. சிற்றின்பங்கள் மீதான அதீத நாட்டமும் சுயநலமும்தான் துயரங்களுக்கு வழிசமைக்கின்றன. ஆசையை ஒழித்தாலொழிய துயரத்தை ஒழிக்க இயலாது என கௌதமபுத்தர் கூறினார்.
    பௌத்தம் மதத்தில் கூறப்படும் நல்லவனவற்றைச் செய்தல், தீயனவற்றை விலக்குதல், தியானம் என்பனவற்றின் மூலம் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு "ஞானம் பெறுதல்" என்ற நிர்வாண நிலையை அடையமுடியும்.
    பெளத்தமதத்தை பொறுத்தவரையில் கடவுள் என்று ஒருவர் கிடையாது.. கர்மவிதிகளுக்கு அமையவே இவ்வுலகம் இயங்குகின்றது என பௌத்தமதம் தெரிவிக்கின்றது. கௌதமபுத்தர் ஒரு கடவுள் இல்லை. கௌதமபுத்தர் ஒரு விடுதலைபெற்ற மனிதர். உண்மையான பெளத்தர்கள் கௌதமபுத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.
    - நல்லையா தயாபரன்

    ReplyDelete
  17. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete