Thursday, April 25, 2013

சித்திரத்தில் அருளும் சித்திரகுப்தர்







காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறும் வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) ,. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய ஆக்ஷய திருதியை, சித்திரா பெளர்ணமி என்று புண்ணிய நாட்கள்   சிறப்பாகக் கிடைக்கின்றன ..
சித்திரைப் பருவந்தன்னில் உதித்தனை சித்ரகுப்தர்
அத்தின மவனை உன்னி அர்ச்சனை கடன்களாற்றிற்
சித்தியும் பெறுவர் பாவம் தீரமே யேமனூரில்
இத்திறனறிந்தே யன்னேனிரங்கு வானறங்கள் சொற்றே
பரமசிவனால் பொற்பலகையில் சித்ரமாக வரையப்பட்டு அம்பாளின் அருட்பார்- வையால் உயிர் பெற்றவர் -சித்ரத்தில் இருந்து பிறந்ததால் சித்ரபுத்ரன், சித்ரகுப்தன் என்ற  திருநாமங்கள் ஏற்பட்டன. 

சித்திரம்’ என்ற சொல்லுக்கு வியப்பூட்டுவது என்று பொருள். ‘

குப்தம்’ என்பது மந்தணம் என்று பொருள்படும்.

 ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக் 
காப்பாற்றுவதால், ‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார்.
மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் 
அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர்

உயிர்களைப் பறிக்கும் எமதர்மராஜனிடம் தலைமைக் கணக்கராக  இருப்பவர். 

சித்ரகுப்தரைக் கொண்டாடி விழா எடுக்கும் நாளே சித்ரா பௌர்ணமி ..

இந்தியாவில் பதினொரு இடங்களில்  சித்ரகுப்தருக்கு  கோயில் உண்டு ...

தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் தனிக் கோயில் உள்ளது. 
பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள நெல்லுக்கார  வீதியில் உள்ள 
கோயிலில், மனைவி  சித்ரலேகாவுடன் அருள்புரிகிறார். 
 மூலவராக அமர்ந்த நிலையிலும், உத்ஸவராக 
நின்ற  நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார். 
சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் 
வந்து பூஜிப்பதாக  ஐதீகம். 
காலையில் சித்ரகுப்தருக்கு மகாபிஷேகமும், மாலையில் 
திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 
நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதை சித்ரகுப்தர்..

சித்ரா பௌர்ணமி நாளன்று  சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால், 
கேது கிரகத்தால்  விளையும் தீமைகள் ஒடுங்கும். 
சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து நீனாதேவி  ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்தபுத்திரனே  சித்திர புத்திரன் ... இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாகதோன்றினார்.

வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும்
பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாற்றுவார்கள்.
கயிலாயத்தில் ஒருநாள் சிவபிரான் ஒரு பொன்னாலான பலகையில் ஓர் 
உருவத்தை வரைந்தார் என்றும், அச்சித்திரம் உயிர்பெற்றது என்றும் 
அவரே சித்திரகுப்தர் என்றும் மற்றுமொரு புராணம் சொல்லும்

 சித்ரகுப்தனின் படத்தை அலங்கரித்து,
சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகளீ புத்ர தாரிணம் 
சித்ரா ரத்னாம்பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்”
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி,
இதுவரை செய்த தவறுகளை எல்லாம் மன்னித்தருளும்படியும், இனிமேல் தவறு ஏதும் செய்யாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

கோலமாவில் சித்ரகுப்தனின் உருவத்தை எழுதி, கலசத்தில் அவரை ஆவாஹணம் செய்து பூஜை செய்யும் வழக்கமும் உண்டு. 

சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள் அன்று பசுவின்பால், தயிர், நெய் சேர்க்காமல் இருந்தால் நல்லது.

சாதாரணமாக பூஜைகளில் பெரும்பாலும் பசும் பாலையே பயன்படுத்து-வோம். 
ஆனால் சித்ரகுப்த பூஜையில், எருமைப்பாலை அபிஷேகத்துக்கும் பாயசத்துக்கும் பயன்படுத்த வேண்டும்.

எமதர்மராஜனுடைய வாகனம் எருமை என்பதால், இந்த பூஜையில் எருமைப்பால் விசேஷம். 

எமதர்மராஜன் தென்திசைக்கு அதிபதி என்பதால், இந்நாளில் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்கள் தென்புறவாசலை அடைப்பதுபோல் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. 

மாக்கோலம் போடும்போது தெற்குப் பக்கத்தை மூடிவிட்டு மற்ற 
இடங்களில் கோலமிட வேண்டும்.

மாக்கோலத்தில் தெற்கு நோக்கிய தேரில் எழுத்தாணி ஓலை இவற்றைக் கையில் கொண்ட சித்திரகுப்தர் திருவுருவம் வரைந்து கொள்ள வேண்டும்.
அதன் முன் ஒரு சிறு பித்தளை அல்லது வெள்ளி அல்லது தங்கக் குடத்தில் நூல் சுற்றிவைக்கவேண்டும் ..

அவர் கையில் பென்சில்பேனாகாகிதம் ஆகியவற்றை வைக்க வேண்டும். 


உப்புமோர்பால் சேர்க்காமல் பகலில் மட்டும் உணவருந்தி விரதமிருந்து 
சித்திரகுப்தனை வழிபட்டு பூஜை செய்ய வேண்டும்.
வழிபட்டு முடிந்ததும் சித்திரகுப்தன் கையிலுள்ள பேனா,பென்சில்காகிதம் 
போன்றவைகளை தானமாகத் தந்துவிட வேண்டும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமய சடங்கினால் தேவதைகள் 
திருப்தியடைவதோடு மனிதர்களின் செயல்கள் மிகுந்த பரிவுடன் 
தீர்மானிக்கப்படுகின்றன என்பது நம்பிக்கை...


உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர்  என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். 

தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். 

உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். 

மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! 

நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! 

சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! 

ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. 

அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். 

தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! 

தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். 

அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.
தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. 

அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். 

பரந்தாமன் மனமிரங்கி சித்ரகுப்தர் முன் தோன்றி சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். 

முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். 

அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். 

வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! 

அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். 

இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். 

மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். 

ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்

23 comments:

  1. படங்களும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  2. யமனை விட சித்திரகுப்தனைத்தான் அதிகம் வழிபடவேண்டும்போல் இருக்கிறது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி அதைத் தடுக்காமல் இருக்கவேண்டுமல்லவா!

    ReplyDelete
  3. இவருக்கு ஏன் குப்தர்னு பேர் வந்தது என்று ரொம்ப நாளாக குழப்பம். தங்களின் விளக்கம் கண்டேன். ஒருவேளை வடநாட்டவர்களால் வந்திருக்குமோ?

    ReplyDelete
  4. புதுப் புது தலைப்புகளில் புதுப்புது படங்களுடன், ஆன்மிக நெறியில் வாசகர்களை அழைத்துச் செல்ல நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்று நினக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. சித்ரா பெளர்ணமிக்கு ஏற்ற மிக நல்ல பதிவு.

    >>>>>

    ReplyDelete
  6. ”சித்திரத்தில் அருளும் சித்திரகுப்தர்” மிக நல்ல தலைப்பு.

    >>>>

    ReplyDelete
  7. படங்கள் எல்லாமே வழக்கம் போல மிக அருமை.

    >>>>>

    ReplyDelete
  8. பதிவுக்கும், பகிர்வுக்கும், வெகு அழகான விளக்கங்களுக்கும் நன்றியோ நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ooooo 890 ooooo

    ReplyDelete
  9. மிக அருமையாக சித்திரகுப்தரைப்பற்றி விரிவாகக் கூறினீர்கள். அறிந்தேயிராத பல விஷங்கள்.

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete

  10. //ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக் காப்பாற்றுவதால், ‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார்.//

    எதையுமே வெளிக்காட்டாமல் ரகசியமாகக் காப்பாற்றிவரும் சித்திரகுப்தன் + சித்திரகுப்திக்கு வந்தனங்கள். வாழ்க ! வாழ்க !!

    >>>>>

    ReplyDelete

  11. //மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர்//

    அச்சா, ப்ஹூத் அச்சா, அப்படியே அமைத்துத்தரட்டும். சந்தோஷமே. ”மனம் போல் மாங்கல்யம்” ;)

    >>>>>>

    ReplyDelete

  12. //சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகளீ புத்ர தாரிணம்
    சித்ரா ரத்னாம்பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்”

    என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, இதுவரை செய்த தவறுகளை எல்லாம் மன்னித்தருளும்படியும், இனிமேல் தவறு ஏதும் செய்யாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.//

    சரி, சரி அப்படியே செய்திடுவோம்.

    >>>>>>>

    ReplyDelete

  13. //மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! //

    எளிது அல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம். செய்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் தெரியும்.

    >>>>>>

    ReplyDelete

  14. கடைசியில் காட்டியுள்ள வானவில்லும், மேலிருந்து கீழ் மூன்றாவது வரிசையில் தம்பதி ஸமேதராய் காட்சியளிக்கும் காஞ்சீபுரம் சித்ரகுப்த ஸ்வாமி + அம்பாள் நன்றாக உள்ளன.

    //வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்//

    வேணுகானம் போன்ற இனிமையான பதிவினைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    தங்களின் அருட்பார்வை பரவினாலே போதும்.

    அதுவே சித்ரகுப்தரின் அருட்பார்வை போல மகிழ்ச்சியளிக்கும்.

    தங்களுக்கும் தங்கள்: குடும்பத்தார் அனைவருக்கும் சித்ரா பெளர்ணமி நல்வாழ்த்துகள். ;))))).

    -=-=-=-=-=-=-=-

    ReplyDelete
  15. படங்கள் அபாரம்... விரிவான விளக்கங்களுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  16. படங்களும் தகவல்களும் அருமை. நல்லது நடக்க பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  17. கண்ணனைத் துதித்து சித்ரகுப்தன் அருள் பெறுவோம்.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  18. இங்கே தில்லியிலும் ஒரு சித்திர குப்தன் கோவில் உண்டு. விரைவில் அது பற்றிய தகவல்களுடன் பதிவிடுகிறேன்....

    ReplyDelete
  19. சிதம்பரத்தில் உள்ள சித்திரகுப்தரை தரிசித்து வந்தோம்.
    உங்கள் பதிவிலும் அவரை கண்டு களித்துவிட்டேன்.
    நம்குறைகளை களைந்து மனதிட்பத்துடன் வாழ அருள்புரியட்டும்.

    ReplyDelete
  20. மனிதரின் உள்மனகணக்கை கணக்கிடும் சித்திர குப்தனைப் பற்றிய கட்டுரை, படங்கள் அருமை.

    ReplyDelete
  21. new information about chitraguptar

    ReplyDelete
  22. நல்ல தகவல் தயவு .நன்றி

    ReplyDelete
  23. சித்ரகுப்தர் விவரங்களுக்கு நன்றி. இவருக்குக் கோவில் இருப்பதே தெரியாது. சித்ரா பௌர்ணமி இவருக்கான விழாவா?
    கடைசியில் க்ருஷ்ணரைக் கும்பிட்டால் சித்ரகுப்தரும் நம் வசம்னு சொல்லிட்டீங்களே?

    ReplyDelete