Sunday, May 26, 2013

‘பாசப் பறவைகள்..!,











ஆஸ்திரேலியாவில் உள்ள 'பிரஷ் டர்க்கி' என்னும் ஒருவகைப் பறவையின் குஞ்சு மட்டும் முட்டையவிட்டு வெளியே வந்ததும் பறக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.

வெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும் பறவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை,  தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும். 

இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி, 
அதைச் சுற்றிலும் முட்டையிடும். 
முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாதங்கள் ஆகும். 

இந்த ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ஒரே சீராகப் பாதுகாக்கும் கடமை ஆண் பறவையினுடையது.

பெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன.


இதன் கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும்.
வெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். 
இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும். 
மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த ‘தெர்மாமீட்டர்’ பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது. 
ஆண் கோழியின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது. 
 
நம்ம ஊருக்குக் கூட்டிட்டு வந்தா, இந்தப் பறவை ஃப்ரிட்ஜுக்குள்ளதான் முட்டை போடணும்!






10 comments:

  1. வித்தியாசமான பகிர்வு... படங்கள் கலக்கல்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு படங்களைப் பார்க்கும் போது நகைச்சுவை உணர்வு
    மேலிடுகின்றது அருமை ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  3. பாசப்பறவைகள்! மனிதரையும் மிஞ்சிடும் பாசம் அவைகளுக்கு! எத்தனை முயற்சியோடு அந்த முட்டைகளை பாதுகாக்கின்றன. அருமையான பதிவும். அசத்தல் படங்களும்!...
    அனைவருக்கும் நல்ல மனஅமைதியையும் ஓய்வினையும் வழங்கட்டும் இந்த இனிய ஞாயிறு. வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தகவல். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பாசப்பறவைகள் மிகவும் அழகான பதிவாக உள்ளது.

    பறவைகளிடம் உள்ள பாசம் கூட, இன்று மனிதர்களிடமும், நட்புக்களிடமும் இல்லாததை, நினைத்துப்பார்த்தால் மிகவும் மனதுக்கு வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ooooo 921 ooooo

    ReplyDelete
  6. பல தகவல்களுடன் பாசப்பறவைகள் மகிழ்சி தருகின்றன.

    ReplyDelete
  7. வான்கோழிகள் எங்க வீட்டிற்கு பக்கத்தில் இருக்குங்க. அதிக நேரம் நின்று பார்த்துவிட்டு செல்வேன். பறவைகள் என்றாலே தனிப்பாசம் தான்.

    ReplyDelete
  8. என்னை ஒரு சிறுவனாக்கி கண்கள் அகல வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  9. பாசப்பறவைகள் ரொம்ப மென்மையான பகிர்வு

    ReplyDelete
  10. ஆஸ்திரேலிய புதர்க்கோழி (brush turkey) பற்றிய அபூர்வ தகவல் பகிர்வுக்கு நன்றி மேடம். விரைவில் இப்பறவை பற்றிய விரிவான பதிவை என் வலையில் எழுதவிருக்கிறேன்.

    ReplyDelete