Monday, May 6, 2013

பேரழகு பேரூர்





பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே..

 -சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு கோவை பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு பாடினார்.

அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில் நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.

அதற்கு சுந்தரர் "அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது.  
அந்தப் பரவசத்தை அனுபவித்துதான் உணரமுடியும்" என்றார்.

        உடனே பேரூருக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கி, சுந்தரர் சொன்னது உண்மைதான் என்றுணர்ந்து "சிதம்பரத்தில் இருப்பது திருச்சிற்றம்பலம் இங்கிருப்பதோ அழகிய திருச்சிற்றம்பலம்" என்று கூறிச் சென்றனர்.

 ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார்...
அப்பரின் வாக்கில் வைப்புத்தலமாகத் திகழ்கிறது ..

அருள்மிகு நடராச மூர்த்திக்க திருப்பேரூர் கனகசபை  - நடன மண்டபத்தில் எட்டுத் தூண்களிலும் மிக அரிய சிற்ப அற்புதங்கள் , கல் சங்கிலி, சுழலும் தாமரை போன்ற விந்தைகளும் உள்ளன.
 நடராசர் வித்தியாசமான பேரழகுடன் காட்சியளிக்கிறார். தூக்கிய திருவடி கூட சற்றே தாழ்ந்துள்ளது. முகத்தின் அழகில் குறும்புக் கண்ணனின் சாயல்.

வழக்கமான நேர் கன்னங்களும்கூரிய நாசியுமில்லாமல், மேடிட்ட கதுப்புக் கன்னங்களுடன் காணப்படுகிறார். 

முன்புறத்தில் விரித்த சடையாக அன்றித் தாழ் சடையாக ஆடியடங்கப்போகும் நிலையில் நடராசர் சிற்பம் உள்ளது. 

நடனசபையின் உள் மண்டபத்தின் தூண்கள் நான்கும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. அவை சற்றே முன் சாய்ந்த நிலையில் பெருமானை வணங்குவதற்கான ஐதீகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

மூன்று பஞ்சாக்கரப்படிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 

முண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்கள் உள்ளன. அவை நர்த்தன விநாயகர், மயில் மீது அமர்ந்த சண்முகம், ஆலங்காட்டுக்காளி, ஊர்த்துவதாண்டவர், அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர், பிச்சாடர், யானையுரி போர்த்தவர் ஆகிய சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

தன்னை தரிசிப்போருக்கு பிறவாமை வரம் தரும் பேரூர் உலக அற்புதமான கல்லணை கட்டி புகழ் பெற்ற கரிகாற்சோழன் கட்டிய  திருக்கோயில் மேலைச்சிதம்பரம் என்னும் சிறப்புப்பெற்றது ..

 ஐயனின் அபிஷேகத்திற்காக காமதேனு தன் கொம்பினால் (சிருங்கம்-கொம்பு) உருவாக்கிய தீர்த்தம் மஹா மண்டபத்தில்  சிருங்க தீர்த்தம் கருத்தைக்கவருகிறது..
வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர், மேற்குப் பகுதியில் சொர்க்க வாசல் மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்ட மண்டபத்துடன் விளங்குகின்ற திருச்சுற்றில் நடராஜப்பெருமான் மார்கழித்திருவாதிரையிலும் பங்குனி உத்திரத்திலும் சொர்க்கவாசல் வழியாக கோலாகலமாக விழாக்காண்கிறார்..


மூலவர்  சன்னதிக்கு பின்புறம் சோமாஸ்கந்த ரூபத்தில் காசி விஸ்வநாதர், அருணகிரி நாதர் பாடிய வள்ளி தெய்வாணை சமேத முருகர், விசாலாட்சி மேற்கு முகமாக (பழனி முருகன் போல) அருள் பாலிக்கின்றனர்.

முருகர் சன்னதிக்கு அருகில் உள்ள வில்வ மரத்தடியில் 
கோரக்க சித்தர் அருவ வடிவில்  அருள்கிறார்.....
கோரக்கசித்தர்அமர்ந்து தியானித்த இடம்  முருகன் சன்னதிக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ..விலவ மரத்தின் அடியில் முருகனை எண்ணித்தியானத்தில் அமர்ந்து முருகனின் அருட்காட்சி கண்டாராம்  மஹான் கோரக்கசித்தர்  ..
மல்லிகைக்கொடியும் பூத்துச்சொரியும் கொன்றைமலர்களுமாக ரம்யமான இடம் அமைதியாக தியானிக்க அருமையான இடம் ..

காசி விஸ்வநாதர் விசாலஷி அம்மனுக்கு இடையில் சோமாஸ்கந்த மூர்த்தமாக மேற்கு நோக்கி எழிலுற அருள்பொழியும் முருகன் அருணகிரிநாதரால் பாடல் பெற்றவர் ..   





19 comments:

  1. பேரழகு பேரூருக்கு VERY VERY GOOD MORNING !

    >>>>>

    ReplyDelete
  2. பேரூர் என்ன சிதம்பரமா...? இக்கோவில் எங்குள்ளது..?>

    ReplyDelete
  3. அருமையான படங்கள்... சிறப்பான தகவல்கள்...

    வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  4. அத்தனையும் அழகு

    ReplyDelete
  5. படங்களை மட்டுமன்றி பதிவும் படித்தேன். இனி முதலில் கம்யுட்டர் ஓபன் செய்தவுடன் இந்த தளத்திற்கு வந்து தரிசனம் கட்டாயம் செய்ய வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். நல்ல விஷயங்கள் முதலில் பார்க்க வேண்டும். நன்றி ராஜராஜேச்வரி. இனியாவது உங்களுடன் மானஸீகமாக க்ஷேத்ராடனம் செய்ய வருகிறேன். அன்புடன்

    ReplyDelete
  6. பேரூரின் அழகிய திருச்சிற்றம்பலம் மிகமிக அழகுதான்.
    நல்ல தகவல்கள். அழகிய படங்கள்.

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. அழகிய சிற்ப+அலங்கரங்கள் கொண்ட அழகான மண்டபம். அழகான படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete

  8. இன்றைய படங்கள் எல்லாமே ஜொலிக்கின்றன.

    விளக்கங்கள் யாவும் வியப்பளிக்கின்றன.

    தங்களின் வெற்றிகரமான 900வது பதிவுக்காக தங்களுக்கு மாலை போட்டு மகிழ்வித்த யானையும், அதுபோதாது என சலாம் போடும் யானையும் சூப்பரோ சூப்பராக மிகப்பொருத்தமாகக் காட்டப்பட்டுள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 901 ooooo

    ReplyDelete
  9. Aha.........
    Ethanai inniya neenuvucal Perurudan.
    Appavin kai pithu kankal veeryu avar choolum Siva kathakalai keduukondu preakarum churriya neenaiyu,
    Mamaudan sanadhi thorum padal padi churrya neenaiyu...
    Ennai en palaya neenaiukalukku kondu chendra Rajeswari...
    Thanks thanks.

    ReplyDelete
  10. அழகிய திருச்சிற்றம்பலம் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    படங்கள் செய்திகள் எல்லாம் அழகு.
    பின்புறம் உள்ள முருகனை குருக்கள் மிக அழகாய் அலங்காரம் செய்வார், பார்த்துக் கொண்டே இருக்கலாம். அருமையாக பாடவும் செய்வார்.

    ReplyDelete
  11. இன்று பேரூர் அழகிய திருச்சிற்றம்பல நாதரை தர்சித்து மகிழ கிடைத்தது.

    கரிகாற்சோழனால் கட்டப்பட்டகோயில் கட்டடக் கலையிலும் பலசிறப்பு பெற்றிருப்பது அறிந்து வியப்புற்றோம்.

    ReplyDelete
  12. பேரூர் தரிசனமும் தகவல்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
  13. பேரூர் தரிசனமும் தகவல்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  14. அற்புதம். அந்த படத்திலிருக்கும் மண்ணும், படிகளும் , மரங்களும் பார்க்கவே ஆசையாக இருக்கு. ஓடிப்போய் இருக்கோணும் போல தோணுது.

    ReplyDelete
  15. போரூர் கோவில் கோபுரமும், முன் மண்டப சிற்பங்களும், யானையும் பேரழகோ அழகு!

    ReplyDelete
  16. அனைத்தும் அருமை அம்மா....

    ReplyDelete
  17. அருமை , படங்களும் விளக்கங்களும்..

    ReplyDelete