Wednesday, April 23, 2014

உடனே உதித்த உத்தமர் உக்கடம் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹா





 உக்கடம் கோயம்புத்தூர் நரசிம்ஹர் லக்ஷ்மி நரசிம்மர் லட்சுமி ஸ்ரீ
Sri Lakshmi Narasimhaswami temple, Ukkadam, (Rahu Parihara Sthalam)
மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்யா நரசிம்ஹா, த்ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹா,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே

SRI LAKSHMI NARASIMHAR, UKKADAM, COIMBATORE, 

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்”.

புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் ஏற்படுத்துவதில்லை.

பூமியின் உள்ளே மனித ஜீவாதார சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி இருக்குமாம். அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப் பெயர். அது நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும்.  

இத்தகைய இடம் நம் இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான் இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும் கூறினார்.

ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில்
ஆலயங்கள் பல தோன்றின.

தானே உகந்து எழுந்தருளிய தலம் சுயம்வர்த்தம் எனப்படும்.

புராணங்களின்படி ஏற்பட்ட  தலம் புராண ஸ்தலம்.

பெருமாள் மீது ஏற்பட்ட பக்தி மேலீட்டால் கோவையின் இதயப்பகுதியான உக்கடம் தலத்தில்  கட்டப்பட்டுள்ளதால்  அபிமான தலமாகத்திகழ்கிறது..

ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்டதை அபிமான ‘ஸ்தலம்’ என்பர்.

அதிலும் ஸ்ரீ நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. 

நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள். நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள். 

ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். 
இதை ‘சிதாக்ஷீர நியாயம்’ என்று சொல்வார்கள்.

உக்கடம்  ஸ்ரீலஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் தற்போது புண்ருத்தாரணப்பணிகள் நடைபெற்று ராஜகோபுரமும் கட்டப்பட்டு வருவதால் பக்க வாயிலின் வழியே ஆலய தரிசனம் செய்யலாம் .. இன்னும் மூன்று ஆண்டுகளில் பணி நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெறுமாம்.. சிறுதுளி அமைப்பினரால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இப்போது எண்டோமெண்ட் குழு திருப்பணிகளை தொடர்ந்துகொண்டிருக்கிறதாம்..!


எதிரே புன்னை மரமும் வன்னிமரமும் இணைந்திருக்க சக்தி மாரியம்மன் ,  சக்தி விநாயகர் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன..
Displaying altAjqv0rQVU5lJohTpgmLlUIX8yOmd_9iGlmkPmuEoxJeT.jpg
நரசிம்மர் கோவிலுக்கு உள்ளே பிரம்மாண்டமான அரசமரமும் , விநாயகர் , நாகர் சிலைகள் உண்டு..சுமார் 450 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்று சொல்கிறார்கள்.. அரசமரத்தைப்பார்த்தால் நம்பத்தோன்றுகிறது..!

சர்வதோஷப்பரிகாரமாக  ஆலயங்களில் தீபமேற்றுதல் திகழ்கிறது..
ஆலயத்தின் உள்ளேயே விளக்குகளும் ,நெய்யும் ,திரியும் கட்டணத்துடன் கிடைக்கிறது.. வெளியிலிருந்து கொண்டுவரப்படுபவை அனுமதியில்லை.. விளக்குகளுக்கு அலங்கரிக்க மஞ்சள் குங்குமம் ,ஏற்றுவதற்கு பிரதான தீபம் , தீபங்கள் வைக்க வசதியான தனி அடுக்குகள் என வசதியாக அமைத்திருக்கிறார்கள்..!

நரசிம்மரின் மந்திரராஜபத ஸ்தோத்திரம் ,மற்ற துதிகளையும் எழுதி அமர்ந்து பாராயணம் செய்ய ஏற்பாடுசெய்திருக்கிறார்கள்..!

நரசிம்மர் ஸ்தம்பத்தில் ஆவிர்ப்பித்த சுவாதி நட்சத்திரத்தில் மாதம் தோறும் சுதர்சன ஹோமம் காலை வேளையில் நடைபெறுகிறது..கலந்துகொண்டு நலம் பல பெறலாம்..!

திருமணம் ,உத்தியோகப்பிராப்தி, புத்திரப்பிராப்தி போன்ற வேண்டுதல்களுக்காக நாற்பத்தி எட்டு நாட்கள் பெயர் ,நட்சத்திரம் , வேண்டுதல் ஆகியவற்றைக்குறித்தறர்ச்சனை செய்ய 96 ரூபாய் கட்டணமாம்..
Displaying image.jpeg
அர்ச்சனை 48 நாட்கள் முடிந்தபிறகு ஆலயத்திற்கு வந்து தரிசித்து பிரசாதம் பெற்றுக்கொண்டால் எண்ணிய செயல்கள் தடங்கலின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை..!

ஆலயத்தில் அர்ச்சகர் பெயரும் லஷ்மி நரசிம்மர்.. சிரத்தையாக அர்சனை செது தகவல்களும் தந்தார்..



8 comments:

  1. உக்கடம் லட்சுமி நரசிம்மர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. சிறப்பான படங்களுடன் உக்கடத்தின் சிறப்புகள் அனைத்திற்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. திவ்ய தரிசனம்.. தெய்வ தரிசனம்!..
    உடன் எழுந்த உத்தமன் உலகுக்கெல்லாம் அருளட்டும்!..

    ReplyDelete
  4. உக்கடம் லஷ்மிநரசிம்மர் சிறப்புகள்,தகவல்கள்,படங்கள் பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. உக்கடம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள் இன்று கிடைக்கப் பெற்றேன்.

    ReplyDelete
  6. உடனே
    உதித்த
    உத்தமரான
    உக்ரஹமான
    உக்கடம்

    ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹாவை
    தரிஸித்து மகிழ்ந்தேன்.

    உக்கடம் என்பதும் கோவையில் தான் உள்ளது
    என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

    நேரில் தரிஸிக்கும் பாக்யம்
    எனக்கு எப்போது கிடைக்குமோ !

    அழகான
    அசத்தலான
    அச்சாவான
    அற்புதமான

    படத்திலாவது நினைத்தமாத்திரத்தில் உடனே பார்த்து மகிழமுடிவதில் இப்போதைக்கு மட்டற்ற மகிழ்ச்சியே !!

    தினமும் பலமுறை தரிஸித்து மகிழ முடிகிறது.

    என்ன தவம் செய்தேனோ !!!

    ReplyDelete
  7. லக்ஷ்மி நரசிம்மரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது, நன்றி அம்மா.
    ஸ்ரீ நரசிம்ம தரிசனப் படங்கள் அருமை.

    ReplyDelete
  8. அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் பெருமானை மனத்தால் எண்ணினாலே
    நம் பாவங்கள் தீரும். அப்படியிருக்க உங்கள் பதிவின் மூலம் இத்தனை
    நரசிம்மர் தரிசனம். கோடி புண்ணியம் உங்களுக்கு. நிறைவான பதிவு. வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete