Tuesday, May 20, 2014

ஸ்ரீதியாகராஜரின் ருத்ரபாத தரிசனம்
இறைவனுக்குச் செய்யும் சேவைகளில் பெரிதாகப் போற்றப்படும்  திருவடிச் சேவையே - இறைவனின் திருவடியைத் தொழுதல் முக்கியமான சம்பிரதாயம்.

சைவ சமயங்களில் திருவடிச் சேவைக்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வைணவத்தில், இறைவனை எழுந்தருள்வித்து தோளில் சுமந்து வருவோரை,  "ஸ்ரீ பாதம் தாங்கிகள்' என்பர்.

வைணவ ஆலயங்களில் "சடாரி சேவை' என்பது தொன்றுதொட்டு வரும் மரபாகும். .
தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன், தன் பெயரை "சிவபாத சேகரன்' (சிவனின் பாதத்தை சிரசில் ஏந்தியவன்) என்ற பட்டப் பெயரை பூண்ட. அவரது காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலும், சைவமும் செழித்து வளர்ந்தன. 

தஞ்சை பெரிய கோயிலில் நித்திய பூஜைகளுடன் வார, மாத, வருட திருவிழாக்களை ஏற்படுத்தி அவைகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதைத் தகுந்த நபர்களைக் கொண்டு கண்காணித்து வந்ததுள்ளதை கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா, 18 நாட்களுக்கு மிகப் பிரமாண்டமாக நடைபெறும் பெரிய விழாவாகும்.

இத்திருவிழாவில் எங்கும் இல்லாத சிறப்பாக, கொடியேற்றத்திற்கு முன்பே பிட்சாண்டேஸ்வரர் புறப்பாடு நிகழ்வுறும். 

விழா நாட்களில் தமிழ்மொழி சிறக்க உதவிய சைவ சமயாச்சாரியார்கள் திருவீதி உலா வந்து  தரிசனம் அருளுவது கண்கொள்ளாக்காட்சி..
இவ்விழாவில், "அஷ்டத்துவஜாரோகணம்' என்ற எட்டு கொடிகள் ஏற்றும் நிகழ்வு தஞ்சை பெரிய கோயில் திருவிழாவில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும். 

இது, ஸ்ரீதியாகராஜர் என்னும் சோமாஸ்கந்த மூர்த்தி புறப்பாட்டினை 
ஒட்டி நடைபெறுகின்றது.
உற்சவ நாட்களில், 18 ஆம் நாள் காலை 
ஸ்ரீதியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் புறப்பாடு நடைபெறுகின்றது.

அனைத்து உயிர்களுக்கும் முக்திபேறு அளிக்கத்தக்க "ருத்ரபாத தரிசன சேவை' வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே காணப்பெறலாம். 

இந்தத் தரிசனம் மறுபிறவியை அறுக்கும் தன்மை உடையது என்பது  அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
 18 ஆம் நாள் திருவிழாவில், ஸ்ரீதியாகராஜரின் ருத்ரபாத தரிசனமும் ஸ்ரீநடராஜரின் நான்கு ராஜ வீதி புறப்பாடும், யதாஸ்தான பிரவேசமும் நடைபெறும். 

பின்னர், பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டுடன் 
திருவிழா இனிதாக முடிவடையும்...

நாட்டியாஞ்சலி


15 comments:

 1. அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள் அம்மா... நன்றி...

  ReplyDelete
 2. இனிய பதிவு..
  தஞ்சை பெரிய கோயில் திருவிழாக்களைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் மகிழ்கின்றது.

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

  ReplyDelete
 4. ருத்ர பாத தரிசனத்தைப் பற்றி

  அறிந்து கொண்டேன் !

  நிறைய பொக்கிஷங்களையும்

  பார்த்து மகிழ்ந்தேன் !

  நன்றிகளும், வாழ்த்துக்களும் !

  ReplyDelete
 5. ருத்ர பாத தரிசனம் பற்றி, தஞ்சை கோவிலின் அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு .நன்றி.

  ReplyDelete
 6. சிவ சிவா !

  எத்தனை எத்தனைப்படங்கள்.

  அத்தனையும் அழகாக ஜொலிக்கின்றனவே !

  >>>>>

  ReplyDelete
 7. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள், பொம்மலாட்டம், கடைசி இரண்டு படங்கள் என எதைத்தான் சொல்வது? எதைத்தான் விடுவது? எல்லாமே சூப்பரோ சூப்பர் தான் !

  >>>>>

  ReplyDelete
 8. தஞ்சை பெரிய கோயிலைப்பற்றி புட்டுப்புட்டு வைத்துள்ள செய்திகள் அனைத்தும் அருமையோ அருமை தான்.

  >>>>>

  ReplyDelete
 9. தஞ்சை பெரிய கோயிலைப்பற்றி புட்டுப்புட்டு வைத்துள்ள செய்திகள் அனைத்தும் அருமையோ அருமை தான்.

  >>>>>

  ReplyDelete
 10. காணொளியில் ஸ்ரீ ருத்ரம் இனிமையாகக் கேட்க முடிந்ததில் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 11. தங்களால் தங்களின் ‘ருத்ர பாத தரிஸன சேவை’ கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே !

  >>>>>

  ReplyDelete
 12. அனைத்துக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். ஜொலிக்கும் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ooo 1280 ooo

  ReplyDelete
 13. ருத்ர பாத தரிசனம் என்ற சேவையைப் பற்றி இன்றுதான் முதன்முதலில் கேள்விப் படுகிறேன். அழகழகான படங்கள். அதுவும் நடனமாடும் பாவையர்கள் மிகவும் பாவத்துடன் ஆடுகிறார்கள்.

  ReplyDelete
 14. ஆருத்திரா தரிசனம் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று ருத்ர பாத தரிசனத்தையும் தெரிந்தூ கொண்டேன். நன்றி அம்மா.

  ReplyDelete
 15. ருத்ரனின் பாத சேவை....! சேவை அநேகமாக திருவடிகளுக்கே அல்லவா. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete