Tuesday, May 27, 2014

வைகாசி பிரமோற்சவ மஹோற்சவம்கொங்கேழ் தலங்களில் முதன்மை பெற்றது சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாலும்,   திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார திருப்பதிகத்திலும்,  அருணகிரிநாதரின் திருப்புகழாலும், கந்தரலங்காரம், சுந்தரந்தாதி, கவிராசப் பண்டிதர், பள்ளு, குறவஞ்சி, உலா, பிள்ளைத்தமிழ்,  போன்ற சிறப்புமிக்க நூல்களாலும் புகழப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்..

திரு திகழும் திருச்செங்கோடு                எனத்  திகழ்கிறது..!!

திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் முதன் முதலில் 
மலை மேல் உள்ள அம்மையப்பனை வழிபட்டு அதன் பின்னரே தங்களது இல்வாழ்க்கையை துவங்குவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கமாகும்..


அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
ஸ்தல விருட்சமான இலுப்பை மரத்தின் இரண்டு இலைகளைச்சேர்த்து பிரார்த்தனையாக முடிச்சு போட்டு வைக்கிறார்கள்...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா பதினான்கு நாட்கள் நடைபெறும். 

முதல் மூன்று நாட்களுக்கு மலைமீது விழா  நடக்கும். 

நான்காம் நாள் முதல் அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு இறங்கிவர, 
மலை யடிவாரத்தில் விழா நடைபெறும். 

9-ஆம் நாள் திருவிழா வைகாசி விசாகத்தன்று  நடைபெறும். அன்று இறைவன் தேரில் எழுந்தருளி நகர்வலம் வருவார். பதினான்காம் நாள் திருவிழாவின்போது சுவாமிகள் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் எடுத்து செல்லப்படும்

இதை பிரமோற்சவம்,மஹாஉற்சவம் என்று சிறப்பாக கொண்டாடுகிறார்கள்...

 திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும் . 

இங்கு மூன்று கொடி மரம் அமைந்துள்ளது ஆலயத்தின் தனிச்சிறப்பு . 
திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் ஆகியவை மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்பட்டு திருத்தேர் மீது வைத்து திருக்கொடிமாடசெங்குன்றூரின் நான்குமாட வீதிகள் வழியாக தேர்இழுத்து செல்லப்படும். 

பிறகு சுவாமிக்கு திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது... 

gallery

gallery

18 comments:

 1. பிரமோற்சவம் அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. அற்புதமான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள் அம்மா... நன்றி...

  ReplyDelete
 3. வணக்கம்
  அம்மா.

  விளக்கங்களும் படங்களும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அம்மையப்பனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலங்களுடன்
  இனிய தகவலைத் தந்த அழகிய பதிவு..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 5. அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்பற்றிய விவரங்களை புகைப்படங்களுடன் வீடியோ காட்சிகளையும் இணைத்து தந்திருக்கிறீர்கள். படங்கள் அத்தனையும் அருமை.

  ReplyDelete
 6. அழகிய படங்களுடன் அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி! ஏற்கனவே திருச்செங்கோடு குறித்து விரிவான விளக்கங்களுடனும் அழகிய படங்களுடனுடனும் நீங்கள் பதிவு ஒன்றை வெளியிட்டு, அதன் கருத்துரைப் பெட்டியில் நான் திருச்செங்கோடு சென்று வந்ததைச் சொல்லியதாகவும் நினைவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.. வாழ்க வளமுடன்..
   கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

   பதிவின் ஆரம்பத்தில்

   திரு கொழிக்கும் திருச்செங்கோடு
   திரு திகழும் திருச்செங்கோடு

   என இரு பதிவுகளுக்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்..
   சுட்டினால் இரு பதிவுகளையும் பார்க்கலாம் ..

   Delete
 7. திருச்செங்கோடு செல்லாத குறை இப்பதிவைப் படிபதால் குறைகிறது நன்றி

  ReplyDelete
 8. ’சுபம் + லாபம்’ உடன் துவங்கியுள்ள
  ‘வைகாசி பிரமோற்சவ மஹோற்சவம்’
  சிறப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 9. பஞ்சுமிட்டாய்களோடு இனிமையாய்த் துவங்கும்
  திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்விழாவினை
  கண்குளிர கண்டு ரஸிக்க முடிந்தது. எவ்ளோ கும்பல்!

  ஏழை எளிய மிகச்சாதாரண மக்கள், என்னைப்போலவே, கூட்டம் கூட்டமாக ..... எதற்கும் அசையாத தேரை அசைக்க!

  >>>>>

  ReplyDelete
 10. அடுத்த வீடியோவில் பாறை நெஞ்சத்துடன், பாறைகளைக் கடந்து செல்லும் பாராமுகமாகமான பணக்காரக் கார்கள்.... ஆனால் அதுவும் பார்க்க அழகாகவே...... !

  >>>>>

  ReplyDelete
 11. வழக்கம் போல
  அழகான படங்களுடன்
  அதிசயமான பதிவு .....
  அருமையான
  அசத்தலான விளக்கங்கள்.

  அர்த்தநாரீஸ்வர் !
  பொருள் பொதிந்த பெயரல்லவோ !!

  >>>>>

  ReplyDelete
 12. பக்திமயமான பதிவுக்கும் பகிர்வுக்கும்
  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ;) 1287 ;)

  ooooo

  ReplyDelete
 13. திருச்செங்கோடு பிரம்மோற்சவ தகவல்கள் சிறப்பு! படங்கள் அழகு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 14. நேரில் நான் பார்க்க முடியாத தெய்வங்கள் இங்கு பார்த்தது மகிழ்ச்சி வணங்குகிறேன்

  ReplyDelete
 15. இந்த ஆண்டு 03-06-2014 செவ்வாய்க்கிழமை காலை மலையில் முதலாம் திருவிழாவாகக் கொடியேற்றமும் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று நான்காம் திருவிழா அன்று சுவாமிகள் மலையில் இருந்து கீழே இறங்கி வருதலும் நடைபெற உள்ளது. அன்று இரவு நான்கு ரத வீதிகளிலும் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வாணவேடிக்கைகளுடன் திருவீதியுலா நடைபெற உள்ளது. 09-06-2014 அன்று எழுகரை செங்குந்தர்கள் சார்பாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி நல்வாக்கு வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. 11-06-2014 அன்று அம்மையப்பருக்கு கைலாசநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்து சுவாமிகள் தேரில் எழுந்தருளப்படுவார்கள். 11-06-2014 புதன் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும், 12-13,14-06-2014 நாட்களில் அர்த்தநாரீஸ்வரர் தேரும் அதன்பின் ஆதிகேசவப்பெருமாள் தேரும் இழுக்கப்படும். 16-06-2014ம் தேதி சுவாமிகள் மீண்டும் மலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். சுவாமிகள் கொண்டு வருவதும் மீண்டும் மலைக்கு கொண்டு செல்வதும் படிகளின் வழியாகவே பக்தர்கள் கொண்டு செல்கிறார்கள். 1ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரையும் மற்றும் 13,14ம் திருவிழா நாட்களிலும் சுவாமிகளுக்கு பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் பல இடங்களில் மண்டபக்கட்டளைகள் சிறப்பாக நடைபெறுகின்றது.

  ReplyDelete
 16. பிரம்மோற்சவம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி அம்மா.

  ReplyDelete
 17. திருச்செங்கோடு பிரம்மோற்சவம் பற்றி உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....

  ReplyDelete