Monday, December 15, 2014

சோமவார சங்காபிஷேகம்




திருவையாறு ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாதம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்படுகம் சோமவார விரதம் .  சிவனுக்கு மிகவும் உகந்த விரதம் ஆலும்..

கார்த்திகை மாத சோமவாரசிவ ஆலயங்களில் 
1008 சங்காபிஷேகம் நடைபெறும்..
சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். 
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தில்    தங்கள் வேண்டுதல் நிறைவேற வலியுறுத்தி கொடிமரத்துடன் சேர்த்து சித்சபையை 108 முறை வலம் வந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடாரஜமூர்த்தியை தரிசிப்பார்கள்... 
1008 சங்குகளை கொண்டு ஐயாறப்பருக்கு சங்காபிஷேகம் செய்யப்படும்.. ருத்ரபாராயணம், ருத்ரஹோமம், வேதபாராயணம் மற்றும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்...
சங்காபிஷேகத்தில் பல மூலிகைள், மருந்து பொருட்கள், பச்சிலைகள், பல தலத்து புனித நீர், மண், வாசனைத்திரவியங்கள், சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. 
எனவே இந்த சிறப்பு சங்காபி ஷேத்தினை காண்பவர்கள் ஏழு ஜென்மங்களில் செய்தபாவம் நீங்கபெறுவர், இழந்தபதவியினை பெறுவர், சகல செல்வ சவுபாக்கியம் அடைவர், இம்மை மறுமை வினை தீரும்.
இந்த அபிஷேக தீர்த்தத்தை பெற்று அருந்தியவர்கள் அகாலமரணம் அடையமாட்டார்கள். உடலில் ஏற்படும் 4446 நோய்களிலிருந்து விடுபடுவர் இன்று புராணங்களும், வேதாக மங்களும், திருமுறைகளும் கூறுகின்றன. எனவே மகிமைமிக்க இந்த சங்காபி ஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தும் பிரசாதமாக தீர்த்தத்தை பெற்று அருந்தியும் சுவாமியின் அருள் பெறுகிறார்கள்.


11 comments:

  1. சோமவார சங்காபிசேகம் கண்டு மகிழ்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அழகிய படங்களுடன் கார்த்திகை சோமவார தரிசனம்!..

    ReplyDelete
  3. சந்காபிஷேகத் தகவல்கள் ஜோர். சங்கு வட்டத்தைக் கண்டால் கொழுக்கட்டை நினைவு வருகிறது! (சரியான சாப்பாட்டு ராமனாக்கும்)

    :)))

    ReplyDelete
  4. சோமாரவார சங்காபிஷேகத்தின் சிறப்புகளை அறிந்துகொண்டேன். படங்கள் அழகு. சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. சங்காபிஷேகத் தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  6. சங்காபிஷேகம் கண்டு களித்தோம்..நன்றி அம்மா.

    ReplyDelete
  7. சோமவார சங்காபிஷேகங்கள் திருவண்ணாமலையில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பஞ்சாயதன பூசையில் கூட சங்கிற்கு முக்கிய விசேஷம் உண்டு. விரிவான சங்காபிஷேகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. நன்றி அன்புடன்

    ReplyDelete
  8. புகைப்படங்களைத் தாங்கள் தெரிவு செய்யும்விதம் அருமை. கட்டுரைக்கு மெருகூட்டுகின்றன புகைப்படங்கள். சிறந்த சோமவாரம். நன்றி.

    ReplyDelete
  9. படங்களும் செய்தியும் அருமை

    ReplyDelete
  10. சோமவார விரதம், சங்காபிஷேகம் இவைகளின் பெருமையகூறும் பதிவு அருமை.
    படங்கள் அழகு.

    ReplyDelete