Sunday, October 28, 2012

ஆனந்த மலர்கள் ...!





மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
பூலோகத்தில் பூக்கும் பூக்கள்... மலரும் போது தன் மணத்தைத் தன்னிடமே மட்டுமில்லாமல் 

எல்லோருக்கும், எல்லாஇடத்திலும் பரப்புகிறது. 

அதே போல் வாழ்க்கையில், மலர்ச்சி தேவை.

நல்ல மணத்துடன் உண்டான மலர்ச்சி.


அழகிய மலர்கள்  ஆனந்தம் தருபவை
துணை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும் மலர்ந்து மணம் பரப்பும் பூக்கள் தெய்வீகமானவை 


மலைச்சரிவுகளில் பூத்துள்ளன. மலர்கள் மலை முழுவதும் பூத்துள்ளதால் தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்த மலையே மலர் கம்பளம் போட்டு மூடி வைத்துள்ளதுபோல் காட்சியளிக்கின்றன.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலை முழுவதும் பூக்கும்.  அபூர்வ குறிஞ்சிமலர்க்காடு ...
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே என்னது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்


விண்ணோடும் நீதான் . .
மண்ணோடும் நீதான் …
கண்ணோடும் நீதான் ....!!


கோடையில் மழைவரும் வசந்த காலம் மலரும் 
பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் 












Saturday, October 27, 2012

ஜெய் அனுமன்.










ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்..

சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,வடைமாலை சாத்தி,வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி,ஆராதிக்க வேண்டும்.  
 ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.


ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

 `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று அனுமனிடம் கூறி அகன்றவர் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால்,சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

அகிலம் போற்றும் அஞ்சனை மகனே
வானவர் போற்றும் வானரர் தலைவா
மூன்று உலகையும் உணர்வுற செய்வாய்
வெற்றிக் கனியை அனுதினம் கொய்வாய்...!


காற்றின் கன்றே கடலைக் கடந்தாய்
அன்னை சீதையின் கவலைக் களைந்தாய்
ராம தூதனை வென்றவர் இல்லை
உன் ஆற்றலை அளக்க வானமே எல்லை...!


 SRI ANJANEYA SWAMY , KONDAGATTU

காற்று ஈன்ற காவியமே காக்கும் கருணைக் கடலே போற்றி !
கருத்தில் நிறைந்தாய் சொல்லின் செல்வா கழலே போற்றி ! 

எனை நீ காத்தால் கவலை இல்லை
உன் பாதுகாவலில் நெருங்குமோ தொல்லை?
உடலை வாட்டும் நோயும் அகலும்
மனதை வாட்டும் துன்பம் விலகும்...!


Dvaathrinsatdbhuja Anjaneya swamy.

வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியவர் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்...!


உனையே துதித்தார்க்கு நீ இன்ப ஊற்று
உன் பக்தர்க்கு உனை விட்டால் ஏது மாற்று
இனிய வீரனே நீ எல்லாம் வல்லவன்
உண்மை பக்தரின் துன்பம் தீர்ப்பவன் ...!







Posted by sury Siva to மணிராஜ் at October 27, 2012 12:36 PM
YouTube - Videos from this email