Saturday, February 5, 2011

Q1 உலகின் உயரமான குடியிருப்பு !!

ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் பகுதியிலிருக்கும் உயரமான குடியிருப்புப் பகுதி Q1 என்கிற பெயரில் வானளாவ உயர்ந்து நிற்கிறது.


அதை விட உயரமான கட்டிடங்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டு விட்டாலும் பார்வையாளருக்காக அவை காட்சிப் படுத்தப்டுவதில்லை.


சென்னையில் உள்ள L.I.C. பில்டிங்கைவிட பெரிய கட்டடங்கள் காலப்போக்கில் முளைத்து விட்டாலும், L.I.C. உயர்ந்த கட்டிடங்களின் அடையாளமாகிப் போனது மாதிரி..




Exterior - Q1 Resort and Spa




நுழைவுக்கட்டணம் வசூலித்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குடியிருப்பு வாசிகளுக்கு எந்த தொல்லையும் இல்லாமல், தனி நுழைவுப்பாதை அமைத்து அழைத்துச்செல்கிறார்கள்.


முகப்புப்பகுதியில் அந்த கட்டடம் கட்டப் பயன்படுத்திய இரும்புக்கம்பியின் துண்டு, கண்ணாடி, சிமெண்ட் ஜல்லி கலந்த கலவை, கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்திய தலைக்கவசம், கையுறை, உடைகள், பாதுகாப்புக்கவசங்கள், மற்ற கட்டுமானச்சாதனங்கள் எல்லாம் வரவேற்றன.


ஒரு புகைப்படக்கலைஞரும், கட்டிடத்தின் மிகப்பெரிய சித்திரமும் நினைவுப் படம் எடுத்து, நாம் கட்டிடத்தை சுற்றிவிட்டு திரும்பிவரும்போது கொடுக்க 10 டாலர் கட்டணம்.
அதிவிரைவு லிப்டில் பயணித்து கட்டிடத்தின் என்பத்தி ஒன்றாவது மாடியை அடைந்தோம்வட்டவடிவில்கண்ணாடிச்சுவர்கள் வழியே பசிபிக் பெருங்கடல் அலையடித்துக்கொண்டு ஆனந்தமாக பரந்துவிரிந்து தாலாட்டிக்கொண்டிருந்தது.

ஆங்காங்கே தொலைகாட்டி, அம்புக் குறியிட்டு எவ்வளவு கிலோமீட்டர் தூரத்தில் என்னென்ன நகரங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அங்கே தென் துருவம், அண்டார்டிகா பகுதி ஆறாயிரம் கிலோ மீட்டர், உலகப்படத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தென்துருவம் இதோ பார்வைக்கே எட்டிவிடுமோ என்கிற தூரத்தில்!!  சிட்னி நகரம், அமெரிக்கா, ஜப்பான் இந்தியா, சிங்கப்பூர் பார்வைத்திசையில்!


உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்றால் காற்று தூக்கி அடிக்குமே! இங்கு குளிர்சாதன பெட்டியின் காற்றுதான். இயற்கைக்காற்றை எங்கேயாவது உணரமுடியுமா என்று சுற்றிச்சுற்றித் தேடிப்பார்த்தேன்.


உலகிலேயே ஆழமான, பெரிய கடலான பசிபிக்கடலின் கரையில் இருப்பதால் அத்தனைத்தடிமனான கண்ணாடிசுவர் இல்லாவிட்டால் காற்றின் வேகத்தால் தூக்கி எறியப்பட்டு விடுவோமாம்.


நேர்க்கோட்டில் நீர்க்கால்வாய்கள் ஒவ்வொருவீட்டின் பின்புற்மிருந்தும் புறப்பட்டு பசிபிக்கடலில் முடிவதைக் கண்டேன். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் உலகில் மிகப்பெரும் பணக்காரர்களாம். சொந்த செலவில் தங்கள் வீட்டின் பின்புறமிருந்து பசிபிக் வரை கால்வாய் அமைத்துக் கொள்வார்களாம். வீட்டின் முன்புறம் கப்பல் போன்ற் கார். பின்புறம் சொகுசுக்கப்பல் போல் அனைத்துவசதிகளும் நிறைந்த விசைப்படகு.



வாரஇறுதி நாட்களில்
"கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..
கொண்டாடக் கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு.."
என்று விசைப்படகில் குடும்பத்தோடு, சகலவிதமான உணவு, பானங்கள், விளையாட்டுப்பொருகள் என்று கிளம்பிவிடுகிறார்கள்.


இன்றுவரை Q1 கட்டிடம் தான் உலகின் மிக உயர்ந்த குடியிருப்பு கட்டிடமாக தகுதி பெற்றிருக்கிறது. துபாயில் தற்போது கட்டப்பட்டு வரும் மரினா குடியிருப்பு கட்டிடம் முடிக்கப் பெற்றால் அதுவே மிக உயர்ந்த குடியிருப்பு கட்டிடமாக தகுதி பெறும்.


Q1 ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு சின்னம்!!


ஒலிம்பிக் படகுப்போட்டியில் சாதித்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இவ்வுயரமான கட்டிடத்திற்கு Q1 என பெயரிட்டிருக்கிறார்கள்.


புகைப்படம் வாங்கிக்கொண்டு திரும்பினோம்.


Q1 TOWER, GOLD COAST





7 comments:

  1. புதிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. துபாயிலிருக்கும் எனக்கு இது செய்தி...

    நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்....

    என் வலைப்பதிவை காண உங்களை அழைக்கிறேன்...

    கருப்பு எம்.ஜி.ஆர், வெள்ளை விஜயகாந்த் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post_17.html

    ReplyDelete
  3. உயரமான குடியிருப்பை காட்சிக்குத்தந்த தங்களின் உயர்ந்த உள்ளம் வாழ்க!

    ReplyDelete
  4. இதுவரை இதுபோன்ற பல உயரங்களை எட்டியுள்ளீர்கள்!

    இனியும் எட்டுவீர்கள்.
    அன்பான வாழ்த்துகள்.

    //உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுழன்றடிக்கும் காற்று//

    இனிமையான நினைவலைகளை ஏற்படுத்தியது! மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. ;)
    காயே ந வாசா
    மனஸேந்த்ரியைர் வா
    புத்யாத்மனா வா
    ப்ரக்ருதே ஸ்வபாவாத் !

    கரோமி யத்யத்
    ஸகலம் ப்ரஸ்மை
    ஸ்ரீமந் நாராயணாயேதி
    ஸமர்பயாமி !!

    ReplyDelete