Sunday, March 20, 2011

ஸ்ரீ ராஜ மாதங்கி

  மாதங்க கன்யாய் வித்மஹே: வீணா ஹஸ்தாய தீமஹி:
தன்னோ சியாமள்ப் பிரச்சோதயாத்:

என்ற காயத்ரியை படம் பிடித்து கண் முன் பிரத்யட்சமாகத் தோன்றும் வண்ணம் கையில் வீணையுடன் இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கர்பக்கிரகத்தின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அம்ர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ஸ்ரீ ராஜமாதங்கி. 

ஸ்ரீராஜ மாதங்கி பக்தர்களின் குறை தீர்த்து சகல சவுபாக்கியங்களும்
சவுகர்யங்களும், ஐஸ்வர்யங்களும் உண்டாகச் செய்ய வேண்டி கருணை ததும்பும் முக விலாசத்துடன் அவதரித்த கலாதேவியாகத் திகழ்கிறாள்..

 ஸ்ரீ ராஜ மாதங்கி மூன்று சக்திகளும் ஒருங்கே உருப்பெற்றவள். 
சேலம் மாநகர மன்னார் பாளையத்தில் சேலம் ஸ்ரீராஜ மாதங்கி அறக்கட்டளையினர் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறைந்த சுற்றுச்சூழலில் அருமையாக ஆலயம் அமைத்துள்ளனர்.
TheEternalMother

 ஸ்ரீசக்கர மகா மேரு ஸ்ரீசக்கரத்தின் முப்பரிமாண வடிவமாகும்.
திருவண்ணாமலை பறவைப் பார்வையில்ஸ்ரீசக்கரவடிவில்
தோன்றுவதால் அதற்கு ஸ்ரீசக்கரபுரி என்றும் பெயருண்டு.

பவுர்ணமி தினங்களில்  ஸ்ரீசக்கரத்திற்கே நவாவர்ணபூஜையும் அபிஷேகமும் குங்கும அர்ச்சனையும் உண்டு.

 ஸ்ரீமதங்க முனிவரின் தவத்தின் மகிமையால் அவருக்கு மகளாக மாதங்கியாக் அம்பாள் அவ்தரித்தாள்.

அன்னை பராசக்தியின் மந்திரிணியாக ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பெருமைப்படுத்தும் அறிவு வடிவமல்லவா அவள்!

குழந்தைகளின் கல்வி சிறக்கவும், மேல் படிப்பிற்கும் ஹோமங்கள் மிகச் சிறப்பாக அருமையாக சிரத்தையுடன் செய்யும் பாங்கு போற்றற்குரியது.

ஆலயத்தைச் சுற்றி நந்தவனம் அழகுறப் பராமரிக்கப்படுகிறது.

சுற்றிலும் மலைகளாலும் பச்சை வயல்களாலும் சூழப்பட்டு  ரம்மியமாகத் திகழ்கிறது.
  
7 comments:

  1. //கையில் வீணையுடன் இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாச்னமாய்
    கர்பக்கிரகத்தின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அம்ர்ந்து
    அருளாட்சி செய்கிறாள் அம்மன் ஸ்ரீ ராஜமாதங்கி.//

    அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ”லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து” உலகில் உள்ள அனைவரும் செளக்யமாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்.

    இது போன்ற அருமையான பதிவினைப்பகிரும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள், பாரட்டுக்கள், நன்றிகள்.

    ReplyDelete
  2. //கையில் வீணையுடன் இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாச்னமாய்
    கர்பக்கிரகத்தின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அம்ர்ந்து
    அருளாட்சி செய்கிறாள் அம்மன் ஸ்ரீ ராஜமாதங்கி.//

    அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ”லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து” உலகில் உள்ள அனைவரும் செளக்யமாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்.

    இது போன்ற அருமையான பதிவினைப்பகிரும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள், பாரட்டுக்கள், நன்றிகள்.

    ReplyDelete
  3. வை.கோபாலகிருஷ்ணன் said...

    இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  4. வை.கோபாலகிருஷ்ணன் said...

    இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  5. வை.கோபாலகிருஷ்ணன் said...

    இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  6. ;)
    ஓம் ஹரி
    ஓம் ஹரி
    ஓம் ஹரி

    ReplyDelete