Monday, May 16, 2011

அரைக்காசு அம்மன் - ஸ்ரீலட்சுமி குபேரர்[Gal1]

அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை. 

ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 
கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, ‘அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன். தொலைந்த பொருள் கிட்ட வேண்டும்’ என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

ஆலயத்தில்  தல விநாயகர் அருள்கிறார்.
 ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18ம் தேதியன்று மட்டும் பதினெட்டாம் படி கருப்பர் சந்நதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் நடக்கின்றன. மற்ற நாட்களில் எல்லாம் பூட்டிய கதவிற்கே வழிபாடு.
அரைக்காசு அம்மனைச் சுற்றி புகழ்பெற்ற சக்தி தலங்களில் அருளாட்சி புரிந்து வரும் 107 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு தேவியருக்கும் விமான கலசம் உள்ளது. 

இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷம்.

 காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக்கால் பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும்  தரிசிக்க முடிகிறது. 

 அன்னையர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்யும் அன்பர்களுக்கு ஆலயத்தின் சார்பில் ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், ரவிக்கைத் துணி, கருப்பரின் பிரசாதமான சந்தனம், அம்மனுக்குப் பிடித்த நிவேதனமான வெல்லம் ஆகியவற்றை வைத்து பிரசாதமாகத் தருவது வழக்கம்.

ஆற்றுக்கால் பகவதி
சக்குளத்துக்காவு பகவதி
தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்சலோகத்தினாலான திரிசூலத்தை தரிசிக்கலாம். 

அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. 

அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்ரத்தின் வடிவான மேருவிற்கு பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்து வழிபடலாம்.

அர்த்த மண்டபத்தில் உள்ள விதானத்தில் 1 முதல் 108 வரை எண்கள் கொண்ட ப்ரச்ன யந்திரம் எழுதப்பட்டுள்ளது. 

செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அந்த யந்திரத்தின் கீழ் நின்று கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் இருந்து ஒரு திருவுளச் சீட்டை அன்னையை தியானித்தபடி எடுக்கிறார்கள். 

அதில் எந்த எண் வருகிறதோ அதற்கான பலனும் அந்த திருவுளச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி பயன் அடைந்த அன்பர்கள் ஏராளம்.
  
கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் வீற்றிருக்கின்றனர். 

அரைக்காசு அன்னை பாசம், அங்குசம், வரத, அபயம் தாங்கி அர்த்த பத்மாசனத்தில் சாந்த வடிவினளாய் பொலிகிறாள். 

அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது.

கருவறையை வலம் வரும்போது  முதலில் ஹயக்ரீவ சரஸ்வதியை தரிசிக்கிறோம். 

சரஸ்வதிதேவியை தன் மடியில் அமரவைத்து வேதங்களை தானே குருவாக இருந்து தேவிக்கு உபதேசித்தார் ஹயக்ரீவர். அரிய திருக்கோலம் இது. 

 ஹயக்ரீவ சரஸ்வதிக்கு ஹயக்ரீவ ஜயந்தியான ஆவணி மாதம் சிரவண நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. 
[Gal1]
ஹயக்ரீவ மூர்த்திக்கு கடலைப் பருப்பு, நெய், வெல்லம், தேங்காய், முந்திரி ஆகியவை கலந்த ஹயக்ரீவபிண்டி எனும் நைவேத்யம் படைக்கப்படுகிறது. 

 சுயம்வரா பார்வதி தேவி பரமேசுவரனை ஆலிங்கனம் செய்த நிலையில் அற்புதமான வடிவில்  அருள்கிறாள். 

மதங்க முனிவரின் மகளான மாதங்கியாக, மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சியாக, ஒரு பருக்கைகூட உண்ணாமல் தவமிருந்த அபர்ணாவாக, இப்படி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தன் மனதிற்குப் பிடித்த ஈசனையே மணாளனாகப் பெற்றவள் தேவி.
[SivaandParvati.jpg]
 தொடர்ந்து 12 வாரங்கள்  அன்னையை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியருக்கு உடனே திருமணம் கூடிவருகிறது. 

மணவாழ்வில் விரக்தி கண்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதியும் இந்த அன்னையை தரிசித்திட வேற்றுமை மறைந்து இல்வாழ்வில் இனிமை காண்கின்றனர். 

லட்சுமி நாராயணர்,லட்சுமி தேவி தம் கால் கட்டை விரலை அழுத்தி ஊன்றி நின்ற நிலையில் அருள்கிறார்கள்... 

லட்சுமிதேவி அஷ்டோத்திரத்தில் சபலாயை நமஹ என்றும் 
சஞ்சலாயை நமஹ என்றும் நாமங்கள் வரும். 

ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவள் திருமால் உள்ள இடத்தில் நிலைகொள்பவள். அதன்படி இங்கு திருமாலோடு அருள்புரிகிறாள்.

தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, வளங்கள், மறுமையில் மோட்சம் என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. 

அம்பிகை உபாசனையை பரப்பியவர் ஹயக்ரீவர். 

ஸ்ரீசக்ரமேருவில் உள்ள வசின்யாதி வாக்தேவதைகள்தான் திருமீயச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றினர். 

அந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தினால் துதிக்கப்பட்ட திருமீயச்சூர் லலிதாம்பிகையும் இத்தலத்தில் அருள்கிறாள். 

இப்படி மூவரும் ஓரிடத்தில் அருளும் அற்புதத் தலம் இது.
 • ஒருமுறை, மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருள் மீண்டும் கிடைக்க வேண்டி இந்த அம்பாளிடம் வேண்டினார். அதுவும் கிடைத்து விட்டது. அன்றுமுதல் தொலைந்த பொருளை மீட்டுத்தரும் தெய்வமாகவே இவளை மக்கள் கருதினர்.
 • அரைக்காசு அம்மனுக்கென தமிழகத்தில் தனிக்கோயில் எதுவும் இல்லை. ஒரு சில கோயில்களில் அவளுக்கு சன்னதி மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அரைக்காசு அம்மனை மூலவராகக் கொண்டு, ரத்னமங்கலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது..
  புதுக்கோட்டை பகுதியில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை இஷ்ட தெய்வமாக வணங்கி வந்தனர். 

  இவளுக்கு நவராத்திரி விழா கொண்டாடியபோது, பக்தர்களுக்கு பிரசாதமாக அரிசி, வெல்லம் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்த அரைக்காசில், அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். 

  இதனால் இந்த அம்பிகைக்கு, "அரைக்காசு அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.

  வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்தில் ரத்ன மங்கலத்தில் உள்ளது இத்தலம்.


  இந்த கோயிலுக்கு மிக அருகில் ஸ்ரீலட்சுமி குபேரருக்கு 
  தனிக்கோயில் இருக்கிறது


  இந்தியாவிலேயே   ஸ்ரீலட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை ரத்னமங்கலத்தில் உள்ள இக்கோவில் பெற்றுள்ளது.
  [Gal1]
  கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளன. 
  கோசாலையும் உள்ளது. 

  செல்வத்துக்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும்.

  இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். 

  ரத்னமங்கலம் குபேரரையும் ஸ்ரீலட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை. 

  திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.

  வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். 

  இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும். 

  குபேரன் காட்சி தரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். 

  சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.
  [Gal1]
  பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும்  பிறந்த விஸ்வாராவின் மகனே குபேரன். 

   இலங்கை அதிபதியாக இருந்த குபேரரிடம் இருந்து இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்த ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான்.

  குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். 

  குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது 

  சிவனிடம் அதிக பக்தி கொண்யு கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்ட.
  குபேரனது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். 
  சிவனுடன்  பார்வதியைக் கண்ட குபேரன், ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லை என்று எண்ணிய நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள்.

  குபேரன், மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான்.  குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக  நியமித்தார்

   லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். 

   பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, 

  அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது 
  அன்னை லட்சுமி.


  ரத்ன மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திருதியை நாட்களில்  சுக்ர ஓரை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின் அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் படித்து பக்தர்கள் பூஜை செய்வார்கள்.


  அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்பு பிரசாதமான ஹரி பலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனி  பிரசாதமாக வழங்கப்படும். 

   தங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட்சுமியிடம் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.


  ரத்னமங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் சன்னதியில் அமாவாசையில் விசேஷபூஜைகள்,ஹோமம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விஸ்வரூபதரிசனத்துடன் நடை திறக்கப்ப்ட்டு, கோபூஜை அட்சய பாத்திர அதிஷ்டலட்சுமிபூஜை,நாணயத்தால் குபேர பூஜை செய்து சிற்ப்பு தீபாராதனை நடைபெறும்.


  உலக மகளிர் தினத்தன்று லட்சுமியின் பெயர் கொண்ட 108 பெண்களை மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி 108 வெள்ளித்தாமரையால் சிறப்பு ஸ்ரீசூக்த பூஜை செய்து அருட்பிரசாதம் வழங்கியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.


   தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஸ்ரீவித்யா ஹோமம் செய்து பூஜையில் வைக்கப்பட்ட பேனா வழங்கப்படும்..!

  17 comments:

  1. அனைத்தும் அருமை. படித்து மகிழ்ந்தேன்.

   மேலிருந்து 6 வது படம், அசல் காஞ்சி காமாக்ஷி அம்மனைப்போலவே உள்ளது.

   இந்தப்படத்தை மிகப்பெரிய அளவில், ஒரு மஞ்சள் அட்டையில், என் கையால் வரைந்து, வர்ணம் கொடுத்து, காஞ்சி பரமாச்சார்யாள் [மஹா பெரியவா] ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம், குண்டக்கல் அருகில் உள்ள ஹகரி என்ற கிராமத்தில் 1976 ஆம் ஆண்டு முகாமிட்டிருந்தபோது, விநாயகச்சதுர்த்தியன்று, சமர்ப்பித்தேன்.

   தரையில் படத்தை விரித்து வைத்துக்கொண்டு, தன் இரு திருக்கரங்களையும் அதில் பதித்து, வெகு நேரம் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் உற்று நோக்கினார்.

   என்னையும் என் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்து வஸ்த்ரங்கள் கொடுத்து, திராக்ஷை கல்கண்டு பிரஸாதமும் அளித்து அனுக்கிறஹம் செய்தார்கள்.

   அந்தப்படத்தை மட்டும், அங்கு புதிதாகக் கட்டப்பட்டு வந்த சிவன் கோயிலின் சுவற்றில் ஃப்ரேம் செய்து மாட்டிவிடுமாறு, அங்குள்ள பன்யம் சிமிண்ட் தொழிற்சாலை அதிபரிடம் கொடுத்து உத்தரவு இட்டார்கள்.

   அதன் பிறகு ஓராண்டுக்குப்பிறகு அந்தக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக அறிந்தேன்.

   நான் வரைந்து ஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹித்த அந்தப்படம் அந்தக்கோயிலில் கும்பாபிஷேகத்தின் போது மாட்டப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறேன்.

   பிறகு நான் அந்த ஊருக்கு திரும்பிப்போய் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி மட்டும் பசுமையாக நினைவில் உள்ளது.

   தங்களின் இந்த 6 வது படத்தில் கையில் கரும்புடன் அம்மனைப்பார்த்ததும், அந்தக்காமாக்ஷி அம்மன் ஞாபகம் வந்து மெய்சிலிரித்துப்போனேன்.

   பதிவுக்குப்பாராட்டுக்களும், நன்றிகளும்.

   பிரியமுள்ள vgk

   ReplyDelete
  2. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
   நேரம் இருந்தால் பார்க்கவும்..   என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

   ReplyDelete
  3. படிக்க படிக்க
   மனம் சிலாகித்து சிலிர்த்து
   பக்தியில் பதிந்து போகிறது

   ஆன்மிகம் பற்றிய உங்களின் பார்வை
   மிகவும் சிறப்பு
   அடுத்த ஞாயிறு ரத்ன மங்கலம் தான்

   நன்றி
   பக்தியை
   பதிந்ததற்கு

   ReplyDelete
  4. குபேர லக்ஷ்மி கேள்வி பட்டேன். ஒருமுறை சென்று கோவில் மூடி இருந்ததால் திரும்பி விட்டேன். பகிர்வுக்கு நன்றி சார்

   @வைகோ சார்

   கண்டிப்பா இருக்கும். மகா பெரியவர் வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லையே

   ReplyDelete
  5. அரைக்காசு அம்மனை வெல்லத்தில் பிடித்து வைத்து பூஜை செய்து தொலைந்த பொருளை மீட்டுத்தரும்படி வேண்டிக்கொண்டு அந்த வெல்லத்தை நீரில் கரைத்து பிரசாதமாக பருகும் பழக்கம் இன்றும் உள்ளது. தொலைந்த பொருள் கிடைத்துவிடும். இதுவும் அனுபவம்தான். பதிவிற்கு நன்றி

   ReplyDelete
  6. மீண்டும் நல்லதொரு பகிர்வு.
   வைகோ சார்...சிலிர்க்க வைக்கிறீர்கள். பெரிய பேறு.

   ReplyDelete
  7. திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் உள்ள "சிவன் பார்வதி சிற்பம் கலைஅழகு மிக்கது.
   ஒருபுறம் பார்த்தால் அம்மன் "கோபமாகவும்" பிறிதொறு கோணத்தில்" சாந்தமாகவும்" இருப்பது
   சிற்ப அதிசியம் ஆகும்......பத்மா சூரி

   ReplyDelete
  8. @ வை.கோபாலகிருஷ்ணன் s//
   நான் சாதாரணமானவன் என்று அறிமுகப் படுத்திக்கொண்ட நேர்த்தியிலேயே பல அபூர்வ திறமைகள் கொண்டவராக இருப்பீர்கள் என்று கணித்தேன். என் கணிப்புகள் என்றும் தவறியதில்லை என்பதை நீங்கள் அனுமன் படம் வரைந்ததாகச் அறிவித்ததும், காஞ்சிப் பெரியவரிடம் காமாட்சி படம் வரை ந்து அவரிடம் பிர்சாதம் பெற்ற நிகழ்ச்சியிலும், பண்டரிபுரம் சென்ற நேரத்தில் அவர் தரிசனம் பெற்றபோதும் கல்கி சிறுகதை பரிசு வென்றதிலும் உங்கள் கைவண்ணம் பளிச்சிடுகிறது. பாராட்டுக்கள்.

   ReplyDelete
  9. கெளஞ்சியப்பரை தரிசித்துவிட்டு இங்கு வந்துள்ளேன்.

   உங்கள் பதிவுகள் பிரமிக்க வைக்கிறது

   ReplyDelete
  10. திருமீயச்சூர் சிற்ப அதிசியத்தை http://padmasury.blogspot.com/ காண்க--பத்மா சூரி

   ReplyDelete
  11. புதுகை மன்னர்கள் பூஜித்து இன்றும் அந்த வட்டார மக்களால் பூஜிக்கப்படும் அரைக்காசு அம்மன் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.

   ReplyDelete
  12. நண்பரே..... அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள்.. அதற்காக முதலின் எனது மனமார்ந்த பாராட்டுகள். மேலும் சில தகவல்கள் இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். புதுக்கோட்டை அருகே திருகோகர்ணம் என்ற இடத்தில் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுடை கோகர்ணேசுவரர் ஆலயம் உள்ளது. ஸ்ரீ பிரகதாம்பாள் அம்மனுக்கு அரைக்காச அம்மன் என்று பெயர். இக்கோயில் புதுக்கோட்டையினை ஆண்ட தொண்டைமான் மன்னர் வம்சத்தினரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்து. அன்னை பிரகதாம்பாளின் தீவிர பக்தனான நான் www.sreebragadambal.org என்ற இணைய தளத்தினை வடிவமைத்து வெளியிட்டுள்ளேன்... அனைவரும் மேற்கண்ட இணைய தளத்தின் படித்து இன்புறுமாறு கேட்டுக் கொள்கிறேன்....

   பா. ஆனந்த்
   வலையமைப்பு பொறியாளர்
   பாரதிதாசன் பல்கலைக்கழகம்
   திருச்சிராப்பள்ளி

   ReplyDelete
  13. நண்பரே..... அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள்.. அதற்காக முதலின் எனது மனமார்ந்த பாராட்டுகள். மேலும் சில தகவல்கள் இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். புதுக்கோட்டை அருகே திருகோகர்ணம் என்ற இடத்தில் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுடை கோகர்ணேசுவரர் ஆலயம் உள்ளது. ஸ்ரீ பிரகதாம்பாள் அம்மனுக்கு அரைக்காச அம்மன் என்று பெயர். இக்கோயில் புதுக்கோட்டையினை ஆண்ட தொண்டைமான் மன்னர் வம்சத்தினரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்து. அன்னை பிரகதாம்பாளின் தீவிர பக்தனான நான் www.sreebragadambal.org என்ற இணைய தளத்தினை வடிவமைத்து வெளியிட்டுள்ளேன்... அனைவரும் மேற்கண்ட இணைய தளத்தின் படித்து இன்புறுமாறு கேட்டுக் கொள்கிறேன்....

   B.Anand
   Network Engineer
   Bharathidasan University
   Tiruchirappalli.

   ReplyDelete
  14. //எல் கே said...

   @வைகோ சார்

   கண்டிப்பா இருக்கும். மகா பெரியவர் வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லையே//

   அன்புள்ள எல்.கே.,

   தங்களின் இந்த ஆறுதலான பதிலை இன்று தான் அகஸ்மாத்தாகப் பார்த்தேன்.

   எனக்கும் அந்த படம் நிச்சயமாக அந்தக்கோயிலில் மாட்டப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

   நானும் என் பெரிய பையனும் சேர்ந்து, திரும்ப அந்த இடத்திற்குச் செல்வதாகத் திட்டமிட்டுள்ளோம்.

   [பெரியவனுக்கு அப்போது நான்கு வயது. அடுத்தவனுக்கு மூன்று வயது. என் தாயார்+ மனைவி+ 2 குழந்தைகளுடன் தரிஸனத்திற்குச் சென்றிருந்தோம். பாதபூஜை செய்தோம். பசுமையாக நினைவில் உள்ளது.]

   அவன் வெளிநாட்டில் இருப்பதாலும், இங்கு அவன் வருடத்திற்கு ஒரு முறை வருகையில் மிகவும் TIGHT SCHEDULE உடன் வந்து போவதாலும், இந்த எங்கள் குண்டக்கல் ஹகரிப் பயணம் தட்டிக்கொண்டே வருகிறது.

   1978 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று அனுக்கிரஹம் கிடைத்தது.

   அது சமயம் அங்கே ஸ்ரீமஹாஸ்வாமிகள் அவர்கள் சாதுர்மாச்ய விரதம் மேற்கொண்டிருந்தார்கள்.

   1976 என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

   தங்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு என் நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   ReplyDelete
  15. //ஸ்ரீராம். said...

   வைகோ சார்...சிலிர்க்க வைக்கிறீர்கள். பெரிய பேறு.//

   அன்புள்ள
   ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்,

   தங்களின் இந்த வரிகளை இன்று தான் நான் அகஸ்மாத்தாக படிக்க நேர்ந்தது.

   மிகப்பெரிய பேறு தான். இது போல நிறைய பேறுகள் பெற்றிடும் பாக்யம் நான் பெற்றுள்ளேன்.

   அதிகமாக வெளியில் சொல்லிக் கொள்வது இல்லை. சொன்னால் யாராலும் நம்பக்கூட முடியாது.

   அவ்வளவு அற்புதங்கள் என் வாழ்வில் அவரின் அன்பான அனுக்கிரஹங்களால் நடைபெற்றுள்ளன. இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

   தங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   ReplyDelete
  16. ;)

   அச்யுதா!

   அனந்தா!!

   கோவிந்தா!!!

   ReplyDelete
  17. 480+4+1=485 [உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சியளித்தது ;) நன்றி]

   ReplyDelete