Saturday, May 21, 2011

பழத்தோட்டங்கள்... பணத்தோட்டங்கள்....

முக்கனிகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் இனிய மாம்பழத்தை அம்மையப்பனைச் சுற்றி வந்து ஞால முதல்வனாம் கணபதி பெற்றதற்கு ஆண்டியின் கோலமுற்று பழம் நீ என்று ஔவையால் பாடப் பெற்ற பழனி மலை மேல் நின்று அருள் புரியும் ஞானப்பழம் முருகன்.போக முனிவரால் அபூர்வ நவபாஷாண முருகனும், போகரின் அருளாட்சிபுரியும் ஜீவசமாதியுமாக தொன்மையான தலம்.
இத்தகைய தொன்மைக்கும், பழமைக்கும் ஆஸ்திரேலியாவில் சரித்திரம் கிடைக்கவில்லை. மிஞ்சிப்போனால் முன்னூறு ஆண்டு சரித்திரக்குறிப்புகளே கொண்ட நாடு.
அவர்கள் அந்நாட்டு பழத்தோட்டங்களை சுற்றுலா மையமாக்கி, ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகள்,நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், பார்கள், உல்லாச ஏற்பாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்தி விடுமுறை தினங்களையும், வாரவிடுமுறையையும் இனிமையாக்கிக் கொள்கின்றனர். 


ஆஸ்திரேலியாவில் பவன் மாம்பழ்ம் பிரபலமானது. வருடம் முழுவதும் வெப்பமுள்ள வட குயின்ஸ்லாந்து மாநிலத்தின் காலநிலையே இந்த மாம்பழ உற்பத்திக்கு ஏற்றதாயினும்,நியூசவுத் வேல்ஸின் கடற்கரையோரப் பகுதிகளிலும் உற்பத்தி நடை பெறுகிறது. என்றாலும் குயின்ஸ்லாந்து பவன் மாம்பழத்திற்குத்தான் அதிகமான வரவேற்பு உண்டு

வட குயின்ஸ்லாந்தில் பவன் (Bowen) எனும் இடத்தில் விளைவதால் பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற மாம்பழம். பவன் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் (The BIG Mango) "ஒரு பெரிய மாம்பழம்" என்ற இடம் சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும்வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த இனிய மாம்பழம் பவன் நகரத்தின் பெயருக்குப் புகழ் சேர்ப்பதால்அங்கு "ஒரு பெரிய மாம்பழம்" செயற்கையாகச் செய்யப்பட்டு இருக்கிறது.நம் ஊரில் எது எதற்கோ கட் அவுட் வைத்து நகரை மாசுபடுத்தும் கலாச்சாரம் ஏனோ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


ஐரோப்பிய குடியேற்ற ஆரம்ப காலங்களில் வடகுயின்ஸ்லாந்திற்கும் தென்கிழகாசியாவிற்கும் இடையிலான வியாபார கப்பல்களின் வழியாக மாம்பழங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான மாம்பழம் கென்சிங்டன் (Kensington Pride or Bowen Special) அல்லது பவன் எனப்படும் விசேடசமான மாம்பழந்தான்.இது கடும் மஞ்சள் நிறமுடைய அடிப்பாகத்தில் சிவப்பு நிறமுடைய பெரிய மாம்பழமாகும். இந்த மாம்பழம் தும்பற்ற, சதைப்பிடிப்புள்ள, வைட்டமின் "சீ" நிறைந்த மிக இனிப்பான மாம்பழம் ஆகும்.

பவன் (BOWEN) மாம்பழம் என அழைக்கப்படும் கென்சிங்டன் பிறைட் (Kensington Pride) இன மாம்பழம்தான் ஆஸ்திரேலியாவிலேயே மிகச் சிறந்த மாம்பழம் எனில் தவறாகாது. அண்மைக் காலத்தில் கிளென்,நாம் டொக் மாய், ஏளி பேட், புளோரிகன், ஆன், இர்வின், கென்ற் (Glenn, Nam Dok Mai, Early Gold, Florigan, Ann, Irwin,Kent) என்ற பல வகை மாம்பழங்கள் சந்தைக்கு வந்தபோதும், அவற்றில் எந்த மாம்பழமும் பவன் மாம்பழத்தின் ருசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. . இப்படி எத்தனை மாம்பழங்கள் இருந்தாலும் அனைவருக்கும் பிடித்ததும் (BOWEN)மாம்பழம்தான். தித்திப்பான சதைப் பிடிப்புள்ள மிகவும் பெரிய பழம். தெவிட்டாத சுவையுடையது.


இந்த பவன் மாமரம் நடுத்தரத்திலிருந்து பெரிய மரம் வரை காணப்படுகிறது. இம் மரம் இந்தியாவில் தோன்றியதாக முதலில் கருதப்பட்டாலும், மிக நெடுங்காலமாக இம்மாம்பழ உற்பத்தி இடம்பெற்று வருவதால் உண்மையில் இது எங்கு தோன்றியது எனச் சொல்வது கடினமெனக் கருதப்படுகிறது.


திறமான மாம்பழக் கொட்டையிருந்து பவன் மாமரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் கொட்டை பல மாங்கன்றுகள் முளைக்கக் கூடிய தன்மையைக் கொண்டதாம். அண்மைக் காலத்தில் நியூசவுத் வேல்ஸ் போன்றஏனைய இடங்களில் "ஒட்டு இன பவன்" மாமர உற்பத்தி இடம் பெற்றுவருகிறது.Jucy Van at the Big Mango 


the 2nd Anniversary party at The Big Mango was a success. 


The Big Gumboot - Tully, QLD

இதே மாதிரி பழத் தோட்டங்களை எல்லாம் சுற்றுலா மையங்களாக்கி அந்தந்த பழங்களை பெரிய பெரிய அளவில் காட்சிப் பொருளாக்கி, மகிழ்விக்கிறார்கள். பழப்பதனிடுதல், செல்லப்பிராணிகள் பராமரித்தல்,உணவகம், போட்டிப் பந்தய மைதானங்கள், விளயாட்டு ரயில் என்று விடுமுறையைக் குடும்பத்தோடு களித்துக் கொண்டாடிக் கழிக்க எத்தனை எத்தனையோ நவீன வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி மாயாஜால உலகம் போல் சிருஷ்டித்திருக்கிறார்கள்.

Big Mango Bar


Breakfast area under the big mango tree

The View
Lovina house rental - The View

Entry
Lovina house rental - Entry

The Overflow Pool

Lovina house rental - The Overflow Poolஇதோ அந்தந்த பழத்தோட்டங்களின் படங்கள்!இது ஆஸ்திரேலியாவின் அவகேடோ பழத்தோட்டம்


 
 

The Big Cherries - Young, NSW


animated gifsAnimated Food - FruitFree AnimationsFree Animations                          animated gifs

Animated selection patternAnimated selection patternAnimated selection patternAnimated selection patternAnimated selection pattern

17 comments:

 1. நல்ல பகிர்வு. படங்களைப் பார்த்தவுடன் எடுத்துச் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கம் வந்து விட்டது… :))))))

  ReplyDelete
 2. நல்ல பதிவு.
  நிறைய தகவல்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. குயின்ஸ்லாந்து பவன் மாம்பழத்திற்குத்தான் அதிகமான வரவேற்பு உண்டுநல்ல பகிர்வு. படங்களைப் பார்த்தவுடன் எடுத்துச் சாப்பிட....

  ReplyDelete
 4. //இப்படி எத்தனை மாம்பழங்கள் இருந்தாலும் அனைவருக்கும் பிடித்ததும் (BOWEN)மாம்பழம்தான். தித்திப்பான சதைப் பிடிப்புள்ள மிகவும் பெரிய பழம். தெவிட்டாத சுவையுடையது.//

  இந்த வாக்கியங்களுக்கு அடியில் இருந்த நறுக்கிவைத்த மாம்பழத்துண்டுகள் என் நாக்கில் நீரை வரவழைத்தது.

  நம் நாட்டு இமாம் பஸந்து, பங்கனப்பள்ளி இரண்டுமே நல்ல ருசியாகத்தானே உள்ளன. அதைவிட ஆஸ்திரேலியாப்பழம் ருசியானதாக இருக்குமா? சாப்பிட்டிருக்கும் நீங்கள் தான் இதற்கான விடை கூற முடியும்.

  பதிவு பூராவும் பழ வாசனை கமகமவென்று அடித்தது. பாராட்டுக்கள்.

  பழ அன்புடன் vgk

  ReplyDelete
 5. கடைசியில் கொடுத்துள்ள பழங்களின் நடனம் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

  //இந்தக் கொட்டை பல மாங்கன்றுகள் முளைக்கக் கூடிய தன்மையைக் கொண்டதாம். //

  கோவைக்குக் கொண்டுவந்து வளர்த்து பின்னூட்டமிடுபவர்களுக்கு, கொடுக்கலாம் தானே !

  ReplyDelete
 6. இனிமையான பதிவுன்னு சொல்லலாமா....! நிரம்பிவழியும் நீர்நிலை சென்னையின் கோடையோடு பார்க்கும்போது குளுமையாக இருக்கிறது.

  ReplyDelete
 7. மாம்பழத்தில் இத்தனை வகைகளா! தகவல்களும் படங்களும் கண்ணுக்கும் கருத்துக்கும் நிறைவாய் உள்ளது தோழி. நம் நாட்டிலும் இப்படியான ஏற்பாடுகள் செய்யலாம்... செய்யுமிடத்தில் இருப்பவர்கள் சிந்தித்தால்...

  ReplyDelete
 8. Aha
  kalaivellayil palza darshinam.
  Ethoo petikiran anntha oodum palangalai fruitsalad saivatharkku.
  viji

  ReplyDelete
 9. உங்களின் இந்த பதிவு மிகவும் சுவையாகவும்
  ருசியாகவும் இருந்தது
  நன்றி புதிய தகவல் பல தந்ததற்கு

  ReplyDelete
 10. ஆஹா, இன்று மாம்பழமா! அசத்துங்க.ஆனா, கல் வைத்து பழுக்க வைக்காங்க. பார்த்து வாங்கி சாப்பிடுங்க.

  ReplyDelete
 11. @ வை.கோபாலகிருஷ்ணன் s//
  என்ன ருசியாக இருந்தாலும் நம் பங்கனப்பள்ளி மாபழத்தையும் நம் மண்ணின் மனத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
  அங்கே மனம் ஒட்டவில்லை. நம் ஊர் மாமபழங்களின் சுவை தான் எனக்குப் பிடித்தது .
  என் மகன் சொர்க்கத்திலேயே கொண்டுபோய் விட்டாலும் என் வீட்டிற்குப் போகணும் என்று அடம் பிடிப்பீர்களே என்று கிண்டலடித்தார்.

  ReplyDelete
 12. @வை.கோபாலகிருஷ்ணன் //
  விமான நிலையத்தில் என்ன கொண்டு வரக்கூடாது என்று பட்டியல் கொடுத்து, அமரவைத்து படித்துப்பார்த்து புரிந்ததா எனக்கேட்டு டிக்ளேர் செய்து தானே விமானம் ஏற்றுகிறார்கள்?
  அவற்றுள் செடி வகைகளும் அடக்கம். நம் ஊரில் இல்லாத மாம்பழங்களா?இங்கேயே மாம்பழங்களை ஏற்றுமதி செய்கிறார்களே.

  ReplyDelete
 13. முறையாக எந்தப் பதிவையும் துவங்கி
  சரியாகச் அனைத்து விவரங்களையும் சொல்லித் தொடர்ந்து
  முடிவில் நிறைவாக பதிவை முடிக்கும் உங்கள்
  திறன் கண்டு உண்மையில் பிரமித்துப்போகிறேன்
  பழத் தகவல்களும் நடனங்களும் அருமையோ அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ;)

  அச்யுதா!

  அனந்தா!!

  கோவிந்தா!!!

  ReplyDelete
 15. 497+3+1=501

  [நம் ஊரை உயர்வாகச்சொன்ன தங்கள் பதிலுக்கு மகிழ்ச்சி + நன்றி]

  ReplyDelete