Thursday, May 26, 2011

முருகன் கண் வளரும் விளத்தொட்டி


Salutations to GodV

திருவாடுதுறை ஆதீனம்..
v

dfdf


விளங்கு வள்ளி காந்தனாம் முருகன் தனக்கே உரிய தனிச்சிறப்போடு தான் குடிகொண்ட திருத்தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு காரணத்திற்காக சிறப்புற்று விளங்கி வரமருள்கிறான்.
சிக்கலிலே சக்திவேல் வாங்கி திருச்செந்தூரில் அசுரனைப் போரில் வென்று வாகை சூடுவான்.
சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்து ஸ்வாமிநாதனாவான்.


சினம் கொண்டு பழனியில் குடியேறி, திருத்தணியில் சினம் தீர்ந்து தணிவான்.
தெய்வானையைக் கரம்பிடிப்பான்

பழமுதிர்ச்சோலையில் முதிர்ந்த பழமாக.பக்திப் பசியோடு வருவோர்க்கு அவன் ஞானப்பழம்.

வள்ளிக்கு வாய்த்தவன் கொள்ளித்தலையில் எறும்பதுபோல் தவிக்கும் பக்தருக்கு அஞ்சுதல் நிலைமாற்றி ஆறுதல் தருவான்.

சோலை மலை மீதினில் சிங்கார வேலனாக நின்றருள்வான்.

கார்த்திகைப் பெண்களால் காத்து இமைபோல் வளர்க்கப்பெற்று அன்னை பார்வதி சேர்த்தணைக்க ஆறுமுகமானவன்.

அந்த ஆறுமுகவன் தொட்டிலில் வளர்ந்த தலமாகப் போற்றப்படுவது விளத்தொட்டி என்ற திருத்தலம்.

ஒருபுறம் மண்ணியாறும், மறுபுறம் கொள்ளிடம் நதியும் பாய்ந்து பசுமையும் தாலாட்டுகிறது.

திரும்பும் திசையெங்கும் பச்சைப்பசேலென்று நெற்பயிர்களும் மணக்கும் நற்கருப்பஞ் சோலைகளும் சூழ்ந்திருக்கும் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.

சிவாலயம் என்றாலும் தனிச்சிறப்பு முருகனுக்குத்தான்.

பிரம்மாவுக்கும் தொடர்பு உண்டு.

சிவனால் தலை ஒன்று கிள்ளிக் களையப்ப்ட்டவுடன் ஆணவம் அடங்கி சிவனைப் பூஜித்த தலங்கள் எல்லாம் சிவன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.தல வரலாறு

முருகன் தொட்டிலில் வளர்ந்த தலம்; 'வளர்தொட்டில்' என்பது மாறி, வழக்கில் 'விளத்தொட்டி' என்று வழங்குகிறது.

இந்திரன், பிரமன், திசைப்பாலகர்கள் முதலியோர் வழிபட்ட தலம்.

சிறப்புக்கள்

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.


முன் மண்டபத்தில் இடதுபுறம் - பிரம்மன் சிவலிங்கத்தை வழிபடும் ஐதீகச் சிற்பம் உள்ளது.

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இவ்வூர்த்தல புராணம் - விளத்தொட்டி புராணம் பாடியுள்ளார்.

தலபுராண வரலாற்றையொட்டி, இன்னும் இவ்வூரில் வாழ்வோர், குழந்தை பிறந்து பத்து நாள்கள் வரை தொட்டிலில் போடாமல் 'தூளி'யில் குழந்தையை இட்டு கண்வளரச் செய்து வருகின்றனர்.

பைத்தியம் முதலியனவும், கொடிய நோய்களும் நிவர்த்தியாகும் மேன்மையுடைய தலம்.

வைகாசி விசாகத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது

கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அம்மன் இட்சு ரசநாயகி தனிச்சன்னிதியில் உள்ளார்.

கரும்புச் சாறு போல் பக்தர்களுக்கு இனிய வாழ்வும்,இன்னருளும் தருவதால் இந்த இனிய பெயர்.

இட்சு என்றால் சம்ஸ்கிருதத்தில் கரும்பு. ரசம் என்றால் சாறு.

விநாயகர் ஆபத்துக்காத்த விநாயகர்.

அகன்ற மேனியுடன் அருள் பாலிக்கும் ஆனைமுகன் ஆபத்துகளிலிருந்து தன் பக்தர்களை காத்தருளுகிறார்.

உள்பிரகாரத்தில் பாலசுப்ரமணியர், கஜலஷ்மி, மகாலஷ்மி, பைரவர், சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன.

சைவ வைணவ சமய ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக மகா மண்டபத்தின் இடதுபுறம் பாமா ருக்மணி சமேத வேணுகோபாலரின் சந்நிதி அமைந்துள்ளது.


 பிரமன் படைப்புத் தொழில் வேண்டிப் பூசித்த தலம். பிரமன் பூசித்த ஐதீகச்சிற்பம் உள்ளது.
மூலவரின் நேர் பின்புறம் இத்தலத்திற்குப் பெருமை சேர்க்கும் பாலமுருகனின் சந்நிதி அமைந்துள்ளது.
தந்தையின் பின் நின்று, தாயின் நேரடிக் கண்காணிப்பில் முருகன் அருளுவது தனிச்சிறப்பு.

இத்தலத்தில் தான் அன்னை பார்வதிதேவி குழந்தை முருகனை தொட்டிலில் கிடத்தி தாலட்டுப் பாடி தூங்க வைத்தாளாம்.

பாலோ தேனோ பாகோ கனியோ வானோர் நேசத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ வான்முத்து என வாழ்வளிக்க வந்த தமிழ்க்கடவுளின் ஆனந்த கண்வளர்ப்பின் களிப்பை ஏந்திய தலம்.

தாலோ தாலேலோ என தாயின் அணைப்பில் ஆனந்தம் கண்ட திருத்தலம்.

இவ்வூர் மக்களுக்கும், சுற்றுப்பகுதி மக்களுக்கும் இந்த முருகனே செல்லப்பிள்ளையாகத் திகழ்கிறான்.

பாலமுருகன் குழந்தையாக மட்டுமல்லாமல் காவல் தெய்வமும் கூட.

இங்கு வரும் பக்தர்களுக்கு பாலமுருகனிடம் பக்தியை விட பாசத்தையே அதிகம் காணலாம்.

முருகப்பெருமான் தொட்டிலின் கண் வளர்ந்த தலம்.

வளர்தொட்டில் என்ற சொற்களே இணைந்து விளத்தொட்டி என்று ஆயிற்று. இவ்வூரில் வாழ்வோர் இந்த புராணவரலாற்று நிகழ்ச்சியொட்டி குழந்தை பிறந்த 10 நாட்கள் வரை குழந்தையைத் தொட்டியில் போடாமல் தூளியில் கண்வளரச் செய்து வருகின்றனர்.
இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்ட கத்தில் இத்தலம் குறிப்பிடப்படுகிறது.
- பந்தணைநல்லூர் அருகே இந்த ஊரில் யார் குழந்தைவேண்டி வருகிறார்களோ, அவர்களுக்கு இங்கிருக்கும் அம்பிகையின் பேரருளால் நல்ல மகவு கிடைக்கிறது.இவ்வூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு தொட்டில் போடும் வழக்கம் கிடையாது. யார் வீட்டிலும் தொட்டிலும் கிடையாது.

திருச்சிற்றம்பலம் எனும் தலமும் இதன் அருகே தான் அமைந்திருக்கிறது.
அமைவிடம்:
வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல்மேடு வழியாய் குடந்தை போகும் பேருந்தில் மணல்மேட்டிலிருந்து 10 கி.மீட்டர் தூரம்.
குடந்தையிலிருந்து வருகிறவர்களாக இருந்தால் பந்தணைநல்லூரிலிருந்து மணல்மேடு சாலையில் 3 கி.மீட்டர்
30 comments:

 1. விநாயகர் போல அமர்ந்து கொண்டு, நிறுத்தி நிதானமாகப் பொறுமையாகப் படித்து விட்டு, மனதில் பதிந்துகொண்டு, பிறகு மயிலேறி முருகன் போல ஓடிவருவேன் பின்னூட்டமிட.

  அதுவரை பொறுத்தருள வேண்டும், தாயே, இராஜராஜேஸ்வரி அம்மா.

  பிரியமுடன் vgk

  ReplyDelete
 2. பாலமுருகனைப்பற்றிய இந்தப்பதிவும் இட்சுரஸம் (கரும்புச்ச்சாறு) போல இனிமையாக உள்ளது.

  உங்களின் சின்னமான மலந்த அழகிய தாமரைக்குள் ஆறுதலைகளுடன் வீற்றிருக்கும் குமரக்குழந்தை அழகோ அழகாக உள்ளது.

  விளத்தொட்டி என்ற பெயர் விளக்கம் அறியாதிருந்த எங்களுக்கும் கண் வளர்த்ததாய் உள்ளது.

  ஆங்காங்கே பிரும்மபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோவில்கள் அழைக்கப்படுவதற்கான விளக்கமும் வெகு ஜோர்.

  //மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இவ்வூர்த்தல புராணம் - விளத்தொட்டி புராணம் பாடியுள்ளார்.//

  எனக்கு இது ஒரு புதிய தகவல்.

  தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயர் வாழ்க்கைச்சரித்திரம் படித்த போது மகாவித்வான் மினாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்களைப்பற்றி அறிந்து கொண்டேன்.

  கோவில் அமைந்துள்ள இடம் பற்றிய கூடுதல் விபரம் அளித்துள்ளது, நேரில் செல்ல விரும்புவோருக்கு, பயனுள்ள தகவலாக இருக்கும்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தினமும் தொடர்ந்து அசத்துங்கள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 3. Todays morning darshan AlAHAN mURUGAN.
  I never knew this place. Now came to know. Thanks for sharing.
  viji

  ReplyDelete
 4. கண்ணனை போல் தமிழ் கடவுள் முருகனைத்தான் நாம் குழந்தையாகவும் கொஞ்சி கூத்தாடுவோம் , அந்த தமிழ்ப்ரியனை பற்றி எழுதி அருளியதர்க்கு மனம் மகிழ்ந்த நன்றி

  ReplyDelete
 5. விளத் தொட்டி தலத்தின் சிறப்பினை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி

  இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  ReplyDelete
 6. வெளிச்சத்துக்கு வராத இது போன்ற ஆலயங்களைப்பற்றியும் அதன் அமைவிடம, வரலாறு, சிறப்புகள், புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது..
  தங்களின் ஆன்மீகப்பணி தொடர என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. பல தலங்களை [பற்றி எழுதறீங்க. நன்றி

  ReplyDelete
 8. Dear Thozi,

  Very good presentation of this article.

  ReplyDelete
 9. புதிய தகவல்கள்...

  ReplyDelete
 10. hi perima,
  this is sowndarya...today only exams over....so only couldn't able to connect u......... very good collections i m very happy to get informations about beautiful temples.......really good collections perima....continue ur auspicious work more and more....i m really awaiting.......congrats great job....

  ReplyDelete
 11. hi perima, this is sowndarya i hope u al fine there.....today only exams got over cant able to connect maa...really good collections perima....did a great job....do more and more auspicious work like this....i m really awaiting for new updates maa.....all the very best maa...with love sound

  ReplyDelete
 12. ஆன்மீகம் இல்லையென்றாலும் புதிதான தகவல்கள் அறிந்துகொள்கிறேன் ஆவலுடன் !

  ReplyDelete
 13. வை.கோபாலகிருஷ்ணன் s//
  நற் கரும்புச் சாற்றிலே தேன் கலந்து, பால் கலந்து சர்க்கைரையும் விரவியது போல் இனிய அரிய கருத்துரைகளுக்கு மிகுந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 14. @ viji said...
  Todays morning darshan AlAHAN mURUGAN.
  I never knew this place. Now came to know. Thanks for sharing.
  viji//
  வாங்க விஜி. வாங்க. தொடர்ந்து புதிய தல அறிமுகங்கள் பெறுவதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. @ A.R.ராஜகோபாலன் said...//
  மனம் மகிழ்ந்த அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 16. @ r.v.saravanan said...//
  நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. @ # கவிதை வீதி # சௌந்தர் //
  ஆன்மீக கருத்துரைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 18. @ FOOD said...
  இதுவும் ஒரு வகை தொண்டே!நிறைய விஷயங்கள் அறிகிறோம், உங்களால்.//
  தொடர்ந்து கருத்துரை வழங்கும் தங்கள் தொண்டுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. @ எல் கே said...
  பல தலங்களை [பற்றி எழுதறீங்க. நன்றி
  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 20. @ அப்பாவி தங்கமணி said...
  Luvly pictures and nice post.. thanks for sharing//
  கருத்துரைப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 21. @ ஸ்ரீராம். said...//
  நன்றி கருத்துக்கு.

  ReplyDelete
 22. @ arya said.../
  சௌந்தர்யமே வருக.
  தொடர்ந்து கருத்துக்களை அள்ளித்தருக.
  நன்றி.

  ReplyDelete
 23. @ ஹேமா said...
  ஆன்மீகம் இல்லையென்றாலும் புதிதான தகவல்கள் அறிந்துகொள்கிறேன் ஆவலுடன் !//
  நம் கோவில்கள் ஆன்மீகம் மட்டும் வ்ளர்க்கவில்லையே. உடன் கலைகள், கலாச்சாரங்கள், ஒற்றுமை போன்ற அரிய பொக்கிசங்களையும் வளர்த்தனவே. என் தேடலும் அதுதான்.
  வெறும் அன்மீகம் மட்டும் க்ருதாமல் உள்ளுறை அர்த்தங்களையும் அறிந்த கூர்த்த தங்களின் சிந்தனைக்கு பாராட்டுக்கள். நன்றி.

  ReplyDelete
 24. ;)

  அச்யுதா!

  அனந்தா!!

  கோவிந்தா!!!

  ReplyDelete
 25. 516+3+1=520 ;)

  [என் பின்னூட்டங்களுக்கான தங்கள் பதில் எனக்கு மிகவும் மகிழ்வளித்தது. இனிப்போ இனிப்பு. மிக்க நன்றி.]

  ReplyDelete