Tuesday, May 3, 2011

ஆஸ்திரேலியா - துறைமுகப் பாலம்

Sydney Bridge Sydney Bridge

File:Sydney Harbour Bridge night.jpg
ஆஸ்திரேலியாவின் ஹார்பர் பிரிட்ஜ் எனப்படும் சிட்னி மேம்பாலம்.
 இந்தியன் படத்தில் வரும் "டெலிபோன் மணி போல்" பாடலில் வரும் மேம்பாலம்...

இந்த மேம்பாலம்  Coathanger கோட் ஹேங்கர் என்று அழைக்கப்படுகிறது.

அதன் வளைந்த மேற் தோற்றம் வானிலிருந்து பார்த்தால் பெரிய கோட் ஹேங்கர் போன்று தோன்றுகிறது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1 8 ஆண்டுகள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 


6 மில்லியன் ஆணிகளும் 53000 டன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனவாம்.
Underthebridge.JPG (2304×3072)
தற்போது 8 வாகனச் சாலைகள் 2 ரயில் தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன.

சிட்னியின் ராக்ஸ் பகுதியில் உள்ல மில்லர்ஸ் பாயிண்ட் என்னும் இடத்தில் இருந்து வடக்கு கடற்கரையில் உள்ள மில்சன்ஸ் பாயிண்ட் என்னும் இடம் வரை  உள்ள பாலத்தின் மேலே உள்ள இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ளநெடுஞ்சாலை பிராட்பீல்ட் நெடுஞ்சாலை எனப்படுகிறது.

சிட்னி நிலத்தடி ரயில்பாதைகளும் அமைக்கபப்ட்டன.

இந்த பாலம் இரு கரைகளிலும் இரு பகுதிகளாக தனித்தனியாகக் 
கட்டப்பட்டது. 
இன்றுவரை சிட்னி பாலம் ஆஸ்திரேலியாவின் கம்பீரமான அடையாளமாகக் கருத்தைக் கவர்கிறது....

காசியில் கங்கைமேல் உள்ள பெரும் பாலமும் நினைவுக்கு வந்துசென்றது. இயற்கையை சவாலுக்கழைக்கழைத்து கட்டியது போன்ற தோற்றம் காட்டிய பாலம்.........
வருடாவருடம் உள்ளூர் மக்களும் சுற்றுலாப்பயணிகள் Bridge climb எனப்படும் பாலம் ஏறும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றார்கள். 

தகுந்த பயிற்சிகளுடன் பாலத்தின் மேற்பரப்பில் உலாவி வரலாம், 
கட்டணம் உண்டு.
ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து  (bridge walk)  தினத்தில் அன்றாட போக்குவரத்துக்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டு காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிக்குட்பட்ட வசதியான நேரத்தில் காலாற நடந்து வரலாம்.
வரலாற்றுப் பாலத்தில் நடை போட இருப்பவர்கள் ஹாபர் பிரிட்ஜ் இன் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்யவேண்டும்.


 அந்த முகவரி:

http://ourbridge.com.au/

சிட்னி பாலமும்  அருகே அமைந்திருக்கும் ஓப்ரா மாளிகையும் சிட்னிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும்.. 

  அடையாளமே சிட்னி பாலமும் அருகே உள்ள ஓபரா ஹாலும்தான். இந்தியாவுக்கு டெல்லி கேட் போல.
Sydney_Harbour_Bridge_07.jpg (600×401)
கின்னஸ் உலக சாதனைகளின் படி  
உலகின் மிக அகலமான பாலமாகும். 
உருக்கினாலான மிக உயரமான பாலம் ,
 உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலம்.20 comments:

 1. வணக்கம் இராஜ இராஜேஷ்வரி அவர்களே,

  தங்களது வலைத்தளத்தை இன்று கண்னுற்று இன்புற்றேன்.. மிக்க மகிழ்ச்சி ...

  இத் தளத்தை யாவரும் பெறுவதற்கு தங்களது தளத்தில்
  FEED BUNER EMAIL SUBSCRIPTION என்ற வசதியை இணைக்கவும் .

  வாய்ப்பிருக்கும் போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய

  http://sivaayasivaa.blogspot.com

  விற்கு வாருங்கள்,

  நன்றி.

  ReplyDelete
 2. As usual beautiful pictures made the presentation colorful and I can see the bridge virtually . Thank you.

  ReplyDelete
 3. Dear Thozi,
  Photographs given by you followed by explanation is so superb.

  ReplyDelete
 4. படங்களும்,பதிவும் அருமை....பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்....

  ReplyDelete
 5. சிட்னி துறைமுகப் பாலம் தலைப்பு அருகே முதன்முதலில் கொடுக்கப்பட்டுள்ள படம் பார்த்துக்கொண்டே இருந்தால் கண்ணை என்னவோ செய்கிறது மேடம்.

  அனைத்துப்படங்களும், விளக்கங்களும் பிரமிப்பூட்டும்படியாக உள்ளன.

  எப்பேர்ப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம்! மனித சக்தியால் கட்டப்பட்டது என்பது வியப்பாக உள்ளது.

  பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
  வாழ்த்துக்கள். செலவில்லாமல், களைப்பேதும் இல்லாமல் சிட்னிப்பயணம் தங்களால் எங்களுக்கும், நன்றிகள்.

  தொடரட்டும் இதுபோன்ற உங்கள் அபூர்வ ஆச்சர்யம் மிக்க அரும் பணிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 6. நிறைய படங்களுடன் விளக்கம். நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 7. சிட்னி மேம்பால விவரங்களும் புகைப்படங்களும் நேரில் பார்த்தறிந்த உணர்வை தந்தது.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. wow
  I never will have a chance to go over here and enjoy. But i really enjoy the pictures and write up. Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 9. திரைப்படங்களில் காட்டுகிற பாலத்தின் வரலாறு உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. எப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியா அதுவும் சிட்னி நிச்சயம் போகப் போகிறோம் அதனால் அதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்கு வசதியா இருக்கு உங்க பதிவு. அப்படி என்ன கட்டாயம்ன்னு கேக்கிறீங்களா பையன் சிங்கபூர்லேந்து இப்போதான் வேலையாக மாறி வந்துள்ளான். பேரன் வெறே தாத்தா வான்னு கூப்பிடரான். நன்றி

  ReplyDelete
 12. படங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை. பைசா செலவில்லாமல் சிட்னியை சுத்தி காட்டிட்டீங்க

  ReplyDelete
 13. அற்புதமான பதிவு... அதி அற்புதமான புகைப்படங்கள்

  ReplyDelete
 14. வீட்டில் அமர்ந்தபடியே
  கோடை சுற்றுலா போவது போல் உள்ளது
  அசத்தலான படங்களுடன் கூடிய பதிவு அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. எங்களை சிட்னி பாலத்திற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி

  ReplyDelete
 16. இசைபேழையில் படித்து விட்டு தமிழில் கருத்துக்கள் இடுவதற்காக கணணி மூலம் வந்திருக்கிறேன் .
  அம்மாடி... எந்த பந்தாவும் இல்லாமல் இவ்வளவு அருமையான எழுத்து நடையுடன், புகைப்படங்களின் தொகுப்புடன்.. எவ்வளவு தகவல்களை கொட்டியிருக்கிறீர்கள்...
  நன்றிகள்...கோடி நன்றிகள்...

  ReplyDelete
 17. உங்கள் பதிவில் இருக்கும் சில புகைப்படங்களை நான் திருடிக்கொள்கிறேனே? அனுமதியுங்களேன்...

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் .விரிவான ஆய்வு,சிட்னி பாலம் மாதிரி நம்ம நாட்டிலேயும் கட்டினா நல்லா இருக்கும் .

  ReplyDelete
 19. JAI HANUMAN ;)

  VGK

  ReplyDelete