Monday, May 2, 2011

அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்

Sri Satyanarayana Swamy Vari ChakramSri Satyanarayana Swamy VaruSri Satyanarayana Swamy Vari Shanku - Annavaram
Lord Photo

ரத்னகிரி மலையின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார
ஸ்ரீ வீர வேங்கட சத்யநாராயண சுவாமி.

(சங்கராபரணம் திரைப்படத்தில் வருவது இந்தக் கோயில் தான்..பெரும்பாலும் கே.விஸ்வநாத் படங்களில் வரும்..)

அனின வரம் (கேட்ட வரம்) கொடுத்து பக்தர்களைக் காக்கும் சாமி இருக்கும் இடம் தான் "அன்னவரம்" ஆனது. 

ஹைதராபாத்திலிருந்து 498 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இத்திருக்கோவில்.

விசாகப்பட்டிணத்திலிருந்து 124 கி.மீட்டர்.

  [annavaram.jpg]

   [ap1944veer1.jpg]
   அன்னவரத்தில் சத்ய நாராயண விரதம் பூஜை மிக விஷேஷமாக செய்யப்படுகிறது...
   பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம் ஆண்டவனின் அருளாக கருதப்படும்
   பிரசாதத்தை அனைவருடனும் பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர் நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. 

   நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது விசேஷம். 

   அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.

   அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா. 

   சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது இங்கே.

    துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் சத்யவதியாகியும் ,
   முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்  கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச் செய்து கொண்ட தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும் அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள். 
   ... 
   ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். 

   சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?

   அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி விரதம் செய்து கொள்ளலாம்,
    116, 501, 1116 
   ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம். 

   நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு, தேங்காய்களை வைத்து ஆவாஹனம் செய்து சங்கல்பம் செய்து வைக்கிறார்கள். 

   சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம் இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து பூஜை நடக்கும். 
   [DSC01215.JPG]
   [DSC01220.JPG]
   நவக்கிரக பூஜை, அங்கபூஜை செய்து சத்யநாராயண அஷ்டோத்ரம் படித்து பூஜை முடிந்து ஆரத்தி எடுக்கிறோம்.

   பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள், நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து விடுவார்கள்.

   பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது. 

   சத்யநாராயணர் உருவம் பதித்த காசு பூஜையில் வைத்து தினமும் பூஜிக்கலாம். 

   கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்யநாராயண விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி பூஜை முடிகிறது.

   கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின் மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும்.

   அந்தணன் குசேலராக பிறந்தான்,
   விறகு விற்பவன் குகனாக பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், 
   உல்காமுகன் தசரதனாக பிறந்தான்

   வணிகன் மோரத்வஜனாக பிறந்து தனது உடலில் பற்றில்லாமல் அந்தணருக்காக தன் சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான், 
   அரசன் துங்கத்வஜன் நான்முகனான். 
   கோவையில் சாய்பாபா கோவிலில் பௌர்ணமி தோறும் சத்ய நாராயணா பூஜை நடைபெறுகிறது.

   வியாழக்கிழ்மைகளில் மதியம் சாய் பஜனும், அபிஷேகங்களும் சிறப்புற நடைபெறுகின்றன. 

   அன்னதானமும் நடைபறுகிறது.  நானும் கணவரும் பரிமாறி இருக்கிறோம்.

   கோவை பீளமேட்டில் குடியிருப்புகளின் மத்தியில் அருமையான சாய் மந்திர் அமைந்துள்ளது.

   ஷீரடி பாபா அமர்ந்து தியானித்த சிறு சிவப்பு வர்ணமடித்த கம்பத்தில் சாய்ந்து சிறிது நேரம் அமர்ந்து தியானித்தால் பல நோய்கள் வலிகள் தீருவதாகத் தெரிவித்தனர்.

   அணையாத தூணி என்னும் நெருப்பில் இடுவதற்காக முழு மட்டைத் தேங்காய்கள் பிரார்த்தனையுடன் வாங்கி நெருப்பில் சமர்ப்பிக்கலாம். 

   திருபுகழ் பஜனையில் பாடுவதற்காக இந்த ஆலயத்திற்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. 

   அனுபூதி பெற்ற மகான்கள் தங்களின் சாந்நித்தியங்களை நமக்காக உய்யும் பொருட்டு அமைத்திருக்கிறார்கள்.   

   ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் மலைக் கோவில் கொண்டு சேவை சாதிக்கும் சத்ய நாராயணப் பெருமாளை சென்னை மேற்கு மாம்பலத்தில் எல்லாரும் சேவித்து, அருள் பெற, மூலவர் ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள், வடக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரசன்ன வதனத்துடனும், கமல நயனங்களுடன், பவழம் போல சிவந்த இதழில் குமிண் சிரிப்புடன், நிர்மலமான பட்டுப் பீதாம்பரங்களுடன், கிரீட, ஹார, கேயூர கடகாதி திவ்ய ஆபரணங்களுடன், சங்கும், சக்கரமும், கதையும் தாங்கி அபய ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். 

   முத்தங்கியில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்க ஆயிரம் கண் கூடப் போதாது அவ்வளவு சௌந்தர்யம் 

   எம்பெருமானுக்கும் தாயாருக்கும். கல்யாணக் கோலமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் மேல் கரமிரண்டிலும் பத்ம மலரை ஏந்தி கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்தங்களுடன் நமக்கு பதினாறு செல்வங்களையும் வழங்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய் மஹா லக்ஷ்மித் தாயார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

   சக்ரவர்த்தி திருமகன் கையிலே வில்லேந்தி கோதண்ட ராமராக, அன்னை ஜானகி, மற்றும் இளைய பெருமாளுடன் தனி சன்னதியிலும் , சிறிய திருவடியாம் மாருதி வலக்கையிலே சஞ்சிவி மலையையும் இடக்கையில் சௌகந்தி மலரையும் ஏந்திய வண்ணம் சஞ்சிவி ஆஞ்சனேயராகவும் சேவை சாதிக்கின்றனர்.

   லக்ஷ்மி நரசிம்மருக்கும், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.

   சகல கலைகளையும் நமக்கு வழங்க வல்ல சரஸ்வதி தாயாருக்கே குருவான லக்ஷ்மி ஹயகிரீவருக்கும் ஒரு சன்னதி உள்ளது. 

   வியாழக்கிழமையன்று ஏல மாலை சார்த்தி இவரை வழிபட்டால் மாணவர்களுக்கு நன்றாகக் கல்வி விருத்தியடையும் என்பது ஐதீகம். 

   முன் பக்கம் அறு கோண சக்கரத்தில் பதினாறு கரங்களுடன் சக்கரத்தழ்வாரும், பின் பக்கம் முக்கோண சக்கரத்தில் யோக நரசிம்மரும் விள்ங்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி உள்ளது.

   திவ்ய தேசங்களிலே உள்ளது போல் பெருமாள் சத்ய கோடி விமானத்ததில் 10 நாள் இரவு சேவை சாதிக்கின்றார்.

   பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் 

    கருட சேவையின் சில காட்சிகள். 

   லயத்திற்கே உரித்தான பிரத்யேக பூஜை பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை ஆகும்.
   [g4.jpg]
   [g6.jpg]
   [g5.jpg][g11.jpg]

   [g2.jpg]   28 comments:

   1. ஆஹா, அருமையான படங்களும், அற்புதமான விளக்கங்களும். சங்கராபரணம் என்ற அந்த அற்புதமான (மொழிப்பிரச்சனையே இன்றி எல்லோருக்குமே எளிதாகப்புரியும் படியான) படம் கண்முன்னே நிற்கிறது.

    //அன்னதானமும் நடைபெறுகிறது. நானும் கணவரும் பரிமாறி இருக்கிறோம்.//

    ஆஹா, தங்கள் [இராஜராஜேஸ்வரி அம்மன்] கையால் பரிமாறிய பிரஸாதத்தை சாப்பிடக்கொடுத்து வைக்கவில்லையே என்று தோன்றுகிறது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
   2. ஆஹா, அருமையான படங்களும், அற்புதமான விளக்கங்களும். சங்கராபரணம் என்ற அந்த அற்புதமான (மொழிப்பிரச்சனையே இன்றி எல்லோருக்குமே எளிதாகப்புரியும் படியான) படம் கண்முன்னே நிற்கிறது.

    //அன்னதானமும் நடைபெறுகிறது. நானும் கணவரும் பரிமாறி இருக்கிறோம்.//

    ஆஹா, தங்கள் [இராஜராஜேஸ்வரி அம்மன்] கையால் பரிமாறிய பிரஸாதத்தை சாப்பிடக்கொடுத்து வைக்கவில்லையே என்று தோன்றுகிறது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
   3. பக்தி பரவசம் நிறைந்த பதிவு..
    படங்களும் அருமை...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
   4. ஒரு கோயிலையே நேரில் பார்த்தது போல் உள்ளது உங்களின் பதிவு...
    நன்றிகள்..

    ReplyDelete
   5. //பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் அந்த கருட சேவையின் சில காட்சிகள். //

    முதல் படத்திலுள்ள கருடன், மூக்கும் முழியுமாக, முரட்டு மீசையுடன், அழகிய காதுகளுடன், ஜம்மென்று மேக்-அப் போட்டதுபோல அட்டகாசமாக காட்சியளிக்கிறார். அழகிய படத்துடன் கூடிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
   6. நேரில் பார்ப்பது போல் உள்ளது.

    ReplyDelete
   7. கோயிலையே நேரில் பார்த்தது போல் உள்ளது உங்களின் பதிவு...அழகிய படத்துடன் கூடிய பகிர்வுக்கு .பாராட்டுக்கள்.

    ReplyDelete
   8. Aha,
    Today morning I had a Darshan of Sathyanarayana Swami.
    What a wounderful sight!
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
   9. எல்லா படங்களும் அருமை. குறிப்பாக கோபுர தரிசனம்.

    ReplyDelete
   10. ஆலயப்பயணம் அருமையாக இருக்கே! கொடுத்து வச்சவங்க நீங்க!

    ReplyDelete
   11. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.html

    ReplyDelete
   12. வழக்கம்போல படங்களும் பதிவும் மிக அருமை
    நேரடியாக இந்த ஸ்தலங்களுக்குப் போனால் கூட
    இவ்வளவு அழகாக தரிசிக்க முடியுமா
    என்பது சந்தேகமே
    தொடரட்டும் உங்கள் ஆன்மிகப் பயணம்
    நன்றியும் வாழ்த்தும்....

    ReplyDelete
   13. திருப்பதிக்கே லட்டு போல,
    திருநெல்வேலிக்கே அல்வா போல
    உங்களைப்போய் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் அப்பாவியாக ஒரு பெண்மணி.

    உங்களைத் தெரியாதவர்களும் வலையுலகில் உண்டோ என அந்த நாரதரிடம் கேட்டிருக்கலாம்.

    இருப்பினும் என் ஆசிகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
    உங்களுக்கு மட்டுமே !

    அன்புடன் vgk

    ReplyDelete
   14. அருமையான பதிவு. நானும் ஒருதடவை அன்னவரம் போயிருக்கேன். முத்துஸ்வாமி தீக்ஷதர் சுபபந்துவராளி ராகத்தில் ச்ரீ சத்யநாராயணம் உபாஸ்மஹே சத்ய ஞானா நந்தமௌஅம் சர்வம் விஷ்னு மயம் என்ற கீர்த்தனையில் ஸ்வாமியைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கார். முக்கியமாக வைஸ்யர்களுக்கு குல தெய்வம்" அவரே வைஸ்ய ஜாதி காரணம்" அப்படின்னு சொல்லியிருக்கார். அருமையான தகவல்களுடன் சிறப்பான பதிவு நன்றி.

    ReplyDelete
   15. @அப்பாவி தங்கமணி said...//
    வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி தோழி.தொடர்ந்து ஆதரவு தரக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
   16. @வை.கோபாலகிருஷ்ணன் s//
    முதல் படத்திலுள்ள கருடன், மூக்கும் முழியுமாக, முரட்டு மீசையுடன், அழகிய காதுகளுடன், ஜம்மென்று மேக்-அப் போட்டதுபோலஅட்டகாசமாக/
    முதல் படத்தில் இருப்பது பழைய கருடவாகனம். அடுத்தது புதிய வாகனம். பின்னழகு தரிசனமும் கண்கொள்ளக்காட்சிதானே ஐயா??
    சிரமம் பாராத பல கருத்துள்ள பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
   17. @பாட்டு ரசிகன் said.../
    பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க.

    ReplyDelete
   18. @ !* வேடந்தாங்கல் - கருன் *//
    நன்றி ஐயா.

    ReplyDelete
   19. @thirumathi bs sridhar said.../வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
   20. viji said...//
    ஒவ்வொரு பதிவுக்கும் உற்சாகப் பின்னூட்டமளித்து சிறப்பிக்கும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
   21. @ ஸ்ரீராம். said...//
    @ FOOD said...//
    @ Ramani said...//
    அன்பான உற்சாகமளிக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
   22. @தி. ரா. ச.(T.R.C.) said...//
    முதல் வருகைக்கும், முத்துசாமி தீட்சிதர் கிருதி பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete
   23. அருமையான பதிவு. நிறைய படங்கள். நேரில் சென்றைல் கூட இவ்வளவு விவரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
    உங்களது பதிவுகள் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
   24. அன்னாவரம் ஸ்ரீ சத்யநாராயண சுவாமி கோவிலுக்கு விசாகப் பட்டிணத்திலிருந்து, நான்கைந்து மணிநேரம் பஸ்ஸில் பயணித்து தரிசனம் செய்தது பதிவைப் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. கர்நாடகாவில் சத்தியநாராயணபூஜா விசேஷம். அன்னாவரத்தில் அன்னதானம் என்ற பெயரில் கொடுத்த பிரசாதம் மறக்க முடியாதது. அன்று பூராவும் கிட்டத்தட்ட பட்டினிதான்.

    ReplyDelete
   25. Thanks for a Valuable Message!!

    ReplyDelete