Friday, August 5, 2011

சந்தோஷமருளும் சந்தோஷிமாதா



விநாயகப் பெருமான், "பிரம்மச்சாரி' என்று போற்றப்பட்டாலும், அவருக்கு சித்தி, புத்தி என்ற இரு மனைவியர்கள் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. 

சித்தி, புத்தி சமேத விநாயகரை பல ஆலயங்களிலும் தரிசிக்க முடிகிறது.

ganesh chaturthi utsav 2009 ganesh pictures ganesha vinayaka chavithi

வீட்டில் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால்தான் அந்த இல்லத்திற்கே ஒரு அழகு – மகிழ்ச்சியுண்டாகும் என்று பிள்ளையாரின் பிள்ளைகள் தன் தந்தையிடம் சொன்னார்கள்.

அதை கேட்ட விநாயகர், “திடீரென பெண் குழந்தைக்கு நான் எங்கு செல்வேன்“ என்று தன் மனைவியர் சித்தி – புத்தியை பார்த்து சிரித்தார்.

எதுவும் அறியாத குழந்தைகள், “எங்களுக்கு இப்போதே தங்கை வேண்டும். பூலோகத்தில் அவரவர்களின் அண்ணன்களுக்கு அவர்களின் தங்கைகள் கையில் கயிறு கட்டி சகோதர பந்தத்தை கொண்டாடுவது போல் எங்களுக்கும் எங்கள் கையில் கயிறுகட்ட ஒரு தங்கை வேண்டும்.“ என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

அவர்களின் தொல்லை தாங்காமல் தன் சக்தியால் அழகான பெண் குழந்தையை உருவாக்கினார் கணபதி.


அந்த பெண் குழந்தை பிறந்த நாள் வெள்ளிகிழமை.

அந்த அழகான பெண் குழந்தை தன் இருகரங்களால் தன்னுடைய அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டியவுடன் அழுத பிள்ளைகள் சிரித்தன.

இதை கண்ட விநாயகர், “மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இந்த குழந்தையின் பெயர் “சந்தோஷி“ என்று அழைக்கப்படட்டும்.!“ என்றார்..

 இதை கேட்டே நாரதர், “இனி வெள்ளிகிழமை தோறும் சந்தோஷியை பூலோகவாசிகள் வணங்கினால் அவர்களின் இன்னல்கள் மின்னல் வேகத்தில் மறைய வேண்டும். அதற்கு உங்களின் ஆசி, உங்களின் மகளுக்கு கிடைக்க வேண்டும்“ என்று வேண்டியபடியே எல்லாம் நடக்கும் நாரதா“ என்று ஆசி வழங்கினார் கணபதி.


தமிழகத்தில், திருச்சி மலைக் கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்குப் படியேறி செல்வதற்கான முதல் நுழைவாயில் அருகில், ஸ்ரீமாணிக்க விநாயகர் கோயில் சந்நிதி முகப்பில், விநாயகர் நடுநாயகமாகத் தனித்தும், அதற்குப் பக்கத்தில் சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் சுதை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.

சித்தி, புத்தி ஆகியோர் பிரம்ம தேவனின் மகள்கள் . அவர்களுக்குத் திருமணம் செய்விக்க பிரம்ம தேவன் முயற்சிக்கையில், பிரம்ம தேவனின் மகனான நாரதர் அந்தப் பொறுப்பினை ஏற்றாராம்; 

தன் தங்கைகளான சித்திக்கும், புத்திக்கும் நல்ல வரனைத் தேர்ந்தெடுத்தாராம். அந்த மாப்பிள்ளையே விநாயகப் பெருமான் என்று ஒரு கதை உண்டு.

சித்தி, புத்தியை மணந்த விநாயகருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்று பாரதத்தின் வட பகுதி வாழ் மக்கள் கருதுகின்றனர். 

சித்தி தேவிக்கு சுபன்' என்ற மகனும், புத்தி தேவிக்கு "லாபன்' என்ற மகனும் பிறந்தார்கள் 

விநாயகரும், சித்தி புத்தியும் அருளிய லாபம், சுபம் -  ரக்ஷாபந்தன் விழாவின் போது, அவரவர் சகோதரிகளுக்கு ரக்ஷை கட்டுவதைப் பார்த்து, தங்களுக்கும் ஒரு சகோதரி  வேண்டுமென விநாயகரை வேண்டினர். 

அவர்களைச்   சந்தோஷப்படுத்த பிறந்தவளே சந்தோஷிமாதா. சகோதர உறவுக்குரிய தெய்வம் இவள். 

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி!

வட நாட்டில் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று "ரட்சா பந்தன்' என்னும் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.

அன்று பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு, "சகல சௌபாக்கியங்களும் வந்து சேர வேண்டும்' என்ற மகாலட்சுமியை  வேண்டி  விரதம் இருப்பார்கள்;

அப்போது செய்யப்படும் பூஜையில் வைக்கப்படும் ரட்சையை தங்கள் சகோதரர்களின் கையில் கட்டி மகிழ்வார்கள்.

தங்கள் உடன் பிறந்த சகோதரர்களுக்காகக் கடைப்பிடிக்கும் இந்த முறையை, தங்களை சகோதரியாகக் கருதிப் பழகும் பிற ஆடவர்களுக்கும் ரட்சை கட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தும் முறை வடக்கே உள்ளது.

இவ்வாறு ஒரு பெண், பூஜையில் வைக்கப்பட்ட ரட்சையை ஒருவன் கையில் கட்டி விட்டால், அவன் அவளை உடன் பிறந்த சகோதரியாகவே ஏற்றுக் கொள்வது வழக்கம்.

இந்த விழாவினைப் பூலோகத்தில் கண்டு மகிழ்ந்தார் நாரதர்.

உடனே தன் சகோதரிகளைக் (விநாயகரின் மனைவியருமான சித்தியையும், புத்தியையும்) காணச் சென்றார்.

தன் அண்ணன் நாரதர் மகிழ்வுடன் வந்திருப்பதைக் கண்ட சித்தியும், புத்தியும் அவரின் மகிழ்விற்கான காரணத்தைக் கேட்டனர்.

அப்போது பூலோகத்தில் தான் கண்ட "ரட்சா பந்தன்' விழாவினைப் பற்றி விவரமாகச் சொன்னாராம் நாரதர். 

சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன்.

லாபன் லாபத்தைத் தரக் கூடியவன். 

அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். 

ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு.
 விநாயகர் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டது. 

சித்தி, புத்தியின் பார்வைகள் அந்த ஜோதியில் கலந்து தங்கமயமாயின. அங்கே, அனைவரும் வியக்கும்படி அழகே திரு உருவாக ஒரு கன்னிப் பெண் தோன்றினாள். அவள் தங்கள் பெற்றோர்களான விநாயகரையும், சித்தி-புத்தியையும் வணங்கினாள்.

"சந்தோஷி மாதா விரதம்' கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் உப்பில்லாத உணவு உண்ண வேண்டும்.  

தயிர், மோர், புளிப்பு உணவு ஆகியவைகளைத் தவிர்க்க வேண்டும். 

கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டி இந்த விரதம் இருந்தால் பத்து வெள்ளிக்கிழமைகளுக்குள் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது ஆன்றோர்களின் நம்பிக்கை. 

இந்த விரதத்தினால் சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் 

சில கோயில்களில் சந்தோஷி மாதாவின் சித்திரம் உள்ளது.  

திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதிக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டபத்தின் தென் பகுதியில், வடக்கு நோக்கிய திசையில் சந்தோஷி மாதாவின் அழகிய சித்திரம் உள்ளது. 

அதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள். சந்தோஷி மாதாவை வழிபட சங்கடங்கள் விலகும்! சந்தோஷம் பெருகும்!
விநாயக புத்திரியின் அவதாரம் எல்லா உலகங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முப்பெரும் தேவியர்களும் தங்கள் கணவர்களுடன்  வருகை தந்து கணேச புத்திரியை வாழ்த்தினார்கள்.

விநாயகரின் மகளுக்கு தங்கள் சக்திகளை வழங்கினார்கள்.

மூன்று சக்திகளின் திருவுருவாக விளங்கினாள் விநாயகரின் செல்வி.

இவள் உலகத்தில் வாழ்பவர்களுக்கு சந்தோஷத்தை தர இருப்பதால் விநாயகச் செல்வியை "சந்தோஷிமாதா' என்றே அனைவரும் அழைப்பார்கள் என்று வாழ்த்தினார்கள்.
Santoshi Maa Wallpaper
சந்தோஷமான வேளையில் அவதரித்த செல்வியைக் கண்ட மற்ற தேவர்கள், "பூலோக மக்களுக்கு வேண்டிய வரத்தினை அளிக்கும் சக்தியை உனக்கு வழங்குகிறோம்' என்று வாழ்த்தினார்கள்.

, நீ அவதரித்த இன்னாள், சகோதர-சகோதரிகளுக்கு ஒரு பொன்னாள் என்று அருளினார்கள்.

, சந்தோஷி மாதா, அருகிலிருந்த தன் சகோதரர்களான லட்சனுக்கும், லாபனுக்கும் ரட்சை கட்டி மகிழ்ந்தாள்.


ஆவணி மாதம் பௌர்ணமி நாளான ஒரு வெள்ளிக்கிழமையில் அவதரித்தவள் சந்தோஷி மாதா. 

எனவே, பிரதி மாதம் வருகின்ற பௌர்ணமி தினங்களிலோ, அல்லது பிரதி வாரம் வருகின்ற வெள்ளிக்கிழமைகளிலோ சந்தோஷிமாதாவை வழிபட, சகல பாக்கியங்களும் கிட்டும். அன்று விரதம் கடைப்பிடித்து, சந்தோஷி மாதா படத்தின் முன் நெய் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.


சகோதர உறவு நிலைத்திருக்கவும், விரைவில் திருமணம் கைகூடவும் சந்தோஷிமாதா 108 போற்றியை மாலை வேளையில் விளக்கேற்றியதும் பாடிப் பலன் பெறலாம்.

41 comments:

  1. இனி வெள்ளிக்கிழமைகளில் சந்தோசியை வணங்குவோம்... வணக்கத்துடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வடக்கே சந்தோஷி மாத்தாவுக்கு நிறைய கோயில்கள் உண்டு..

    சந்தோஷிமாத்தா வ்ரத்(விரதம்)த்தும் இங்கே பெண்கள் கடைப்பிடிக்கறதுண்டு. சிலவீடுகளில் அன்னிக்கு சாயங்காலம் சுமங்கலிகளை வீட்டுக்கு அழைச்சு 'ஹல்திகுங்கும்' தர்றது வழக்கம்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வந்தேன், படித்தேன், பரவசமடைந்தேன்.

    ReplyDelete
  4. அழகிய புகைப்படங்களுடன், அருமையான வரலாறு சொன்னது பதிவு. நன்றி.

    ReplyDelete
  5. வழக்கம் போல்
    பக்திப் பதிவு
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. சந்தோஷி மாதாவை வணங்கிவிட்டு இன்றைய பொழுதை துவக்குகிறேன்.

    ReplyDelete
  7. சகோதரி! முதல முதலாக இக்கதையை அறிகிறேன் .பிள்ளையார் மணமே செய்யாதவர் என்று தான் தெரியும் மகிழ்ச்சி. சகோதரர் சி.பி. செந்தில்குமார் கூறியது போல படங்கள் மிக அழகு. நன்றி. மகிழ்ச்சி.
    வேதா.இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  8. அருமையான வரலாறு,அழகிய புகைப்படங்களுடன், சொன்னது பதிவு. நன்றி

    ReplyDelete
  9. //சந்தோஷி மாதாவிற்கு என்று தமிழகத்தில் தனியாகக் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. சில கோயில்களில் சந்தோஷி மாதாவின் சித்திரம் உள்ளது. திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதிக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டபத்தின் தென் பகுதியில், வடக்கு நோக்கிய திசையில் சந்தோஷி மாதாவின் அழகிய சித்திரம் உள்ளது. //

    சந்தோஷிமாதாவுக்கு தனிக்கோயில் உள்ளது. அதுவும் எங்கள் திருச்சியிலேயே உள்ளது. அதுவும் நான் பணியாற்றிய BHEL Township அருகில் அமைந்துள்ள ஜெய் நகர் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு 10 ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட்டது. வெகு அழகான கோயில். நாங்கள் பலர் அந்தக்கோயில் கட்ட நிதி உதவியும் செய்தோம். அந்தக்கோயில் பற்றிய மேலும் விபரங்கள் பிறகு தனியாக தங்களுக்குத் தருகிறேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  10. சித்தி புத்தி சுப லாப சந்தோஷம் அளிப்பதாக உள்ளது தங்களின் இந்தப் பதிவைப்படித்ததும். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. @ வை.கோபாலகிருஷ்ணன் said.//
    சந்தோஷிமாதாவுக்கு தனிக்கோயில் உள்ளது. அதுவும் எங்கள் திருச்சியிலேயே உள்ளது. அதுவும் நான் பணியாற்றிய BHEL Township அருகில் அமைந்துள்ள ஜெய் நகர் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு 10 ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட்டது. வெகு அழகான கோயில். நாங்கள் பலர் அந்தக்கோயில் கட்ட நிதி உதவியும் செய்தோம். அந்தக்கோயில் பற்றிய மேலும் விபரங்கள் பிறகு தனியாக தங்களுக்குத் தருகிறேன்.//



    சந்தோஷம். பதிவாகவே தாருங்கள் ஐயா. மிக்க நன்றி அருமையான தகவல் தரிசனத்திற்கு.

    ReplyDelete
  12. @மாய உலகம் said...//

    மாய உலகத்தின் மகத்தான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. @ அமைதிச்சாரல் said...//

    அருமையான தகவல்களுக்கு நன்றி.

    ரக்‌ஷாபந்தன் விழா வடநாட்டிலும், சினிமாக்களிலும் பிரபலமானதாயிற்றெ!

    ReplyDelete
  14. @ DrPKandaswamyPhD said...
    வந்தேன், படித்தேன், பரவசமடைந்தேன்.

    பரவசக்கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  15. @ தமிழ் உதயம் said...
    அழகிய புகைப்படங்களுடன், அருமையான வரலாறு சொன்னது பதிவு. நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  16. @ புலவர் சா இராமாநுசம் said...
    வழக்கம் போல்
    பக்திப் பதிவு
    புலவர் சா இராமாநுசம்//

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  17. @கோகுல் said...
    சந்தோஷி மாதாவை வணங்கிவிட்டு இன்றைய பொழுதை துவக்குகிறேன்./

    வாழ்க வளமுடன். நன்றி.

    ReplyDelete
  18. @ kavithai said...//

    வாருங்கள் சகோதரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அருமையான வரலாறு,அழகிய புகைப்படங்களுடன், சொன்னது பதிவு. நன்றி//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  20. சந்தோஷி மாதாவைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன் ...

    ReplyDelete
  21. வணக்கம்,

    நான் ஸ்ரீ சந்தோஷி மாதாவின் பக்தை. சந்தோஷிக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில் பிள்ளையார்பட்டிக்கு அருகில் பாதரகுடி என்ற ஊரில் கோயில் உள்ளது. மேலும் சென்னையில் விருகம்பாக்கத்தில் ஆற்காடு செல்லும் வழியில் சந்தோஷிக்கு கோயில் உள்ளது. இரண்டு கோயில்களுக்குமே நான் சென்றிருக்கிறேன்.. வரும் 13ம் தேதி ஸ்ரீ சந்தோஷியின் பிறந்ததினம்... அனைவருக்கும் அம்பிகையின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
  22. நல்ல பதிவு

    படங்களும் அருமை

    ReplyDelete
  23. பதிவும் அதற்கேற்றார்போல் உள்ள படங்களும் பதிவை மேலும் மெருகூட்டுகிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வண்ணமய விநாயகர் அழகு. பிள்ளையாகவே மனதில் வரித்துள்ள கணபதிக்கு இரண்டு மனைவிகள் என்று கேள்விப் பட்டிருந்தாலும், கபன், லாபன் மற்றும் சந்தோஷி மாதா கதை புதிது. (ஜெய் சந்தோஷி மா என்று ஒரு ஹிந்திப் படம் கேள்விப் பட்ட ஞாபகம். அதனால் அன்னையை வடநாட்டு தெய்வமென எண்ணியிருந்தேன்!) விக்னங்கள் தீர்ந்தால் சித்தி புத்தி சந்தோஷம் எல்லாம் மக்களுக்குக் கிடைக்க வேண்டியவையே என்பதை உருவகமாக இந்தக் கதை உணர்த்துகிறது போலும்.

    ReplyDelete
  25. சித்தி புத்தியில் ஒருத்தி அம்மி மிதிக்க வர, அந்தத்தொந்திப் பிள்ளையார், கஷ்டப்பட்டுக் குனிந்து, அவளின் கட்டை விரலைப் பிடிக்க வரும் காட்சி அபூர்வமானதொரு படம். எங்கிருந்து எப்படித்தான் சேகரிக்கிறீர்களோ?

    எல்லாப்படங்களுமே ஜோர் தான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  26. கடைசி பக்தன்
    கொஞ்சம் லேட்
    புதிய விசியங்கள்
    பொறுமையான உங்கள் ஒரு ஒரு பகிர்வுக்கும் வர போற பதிவுக்கும் நன்றி அம்மா

    ReplyDelete
  27. அருள் மணக்கும் ஆன்மிக பதிவுக்கு நன்றிகள். எல்லோருக்கும் சந்தோஷி மாதாவின் ஆசிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்..

    ReplyDelete
  28. அருமை.ஆலயங்கள் பற்றிய பதிவுகளை புத்தகமாக கொண்டுவரும் எண்ணம் இருக்கிறதா? இருந்தால் நல்லது.

    ReplyDelete
  29. உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நான் நிறைய புதிதாய் தெரிந்து கொள்கிறேன்..

    ReplyDelete
  30. சித்தி
    புத்தி
    சுபம்
    லாபம்
    சந்தோஷம்
    அனத்தும் கிடைத்தது
    உங்களின் பதிவை
    கண்டு
    உணர்ந்து
    உருகி
    அருமையான
    அற்புதமான
    பதிவு

    ReplyDelete
  31. //தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை//
    நம்பிக்கை வீண் போகாது.

    ReplyDelete
  32. நானும் சிலவருடங்களுக்கு முன்பு
    சந்தோஷிமாதா விரதம் தொடர்ந்து 7 வாரங்களுக்கு கடைப்பிடித்து வந்திருக்கேன் வடனாட்டில் தான் இந்தவிரதம் அதிக அளவில் கடைப்பிடிக்கிரார்கள்.

    ReplyDelete
  33. சந்தோஷி மாதா வினாயகரின் புத்திரி என்பது எனக்கு புது தகவல்.சந்தோஷி மாத ,வினாயகரை பற்றி புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  34. சந்தோஷமருளும் சந்தோஷிமாதா பற்றிய விவரங்கள், படங்கள் எல்லாம் அழகு, அற்புதம்.

    என் தங்கை சந்தோஷமாதா விரதம் இருப்பாள்.

    ReplyDelete
  35. மிகவும் அறுபுதமான பதிவு பாரட்டுக்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete