Thursday, August 11, 2011

நலமருளும் நாச்சியார் செல்வாக்கு


நலமருளும் நாச்சியார் செல்வாக்கு

[nachiyaar+koil.jpg]
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் 
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் 
செம்பியன் கொச் செங்கணான் சோந்த கோயில் 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
திருமங்கையாழ்வார் நூறு பாசுரங்கள் திருநறையூர் தலத்திற்கே பாடியுள்ளார்.
[naraiyur+nambi.jpg]
பரந்தாமன் ஐந்து தனி உருவம் கொண்டு தனது பஞ்சவியூக திருக் கோலத்துடன் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருவது, 

மூலவருடன் நான்முகன் மூலவரின் அருகில் நின்றிருப்பது

தாயார் கருவறையிலேயே மூலவருடன் காட்சியருள்வது, 

பெரிய திருவடி கருடன் தனி சந்நதியில் "சிலா ரூப கல்கருடனாய்" குடிகொண்டுள்ளது, 

கருட மண்டபம் 108 திவ்ய தேச பெருமாள்களையும் கொண்டிருப்பது 

என பல்வேறு சிறப்புகளை கொண்ட புண்ணிய ஷேத்திரம் திருநறையூர்" திவ்யதேசம்.
File:Nachiyarkovil-1.jpg
கோயிலில் மூலவர் சன்னதியில் திருநறையூர் நம்பி- ஸ்ரீநிவாசன், வாசுதேவன் என்ற திருநாமங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம்புரிந்து கொள்ளும் நிலை. 

தாயார் வஞ்ஜுளவல்லி ( நம்பிக்கை நச்சியார் ). 

பெருமாளுக்கு வலப் பக்கத்தில் நான்முகப் பிரமன். 

இடப் பக்கத்தில் அழகான திருமேனியுடன் அநிருத்தன் எழுந்தருளியுள்ளார். பக்கத்தில் புருஷோத்தமன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

இங்குள்ள வஞ்சுள மரத்தடியில் மேதாவி முனிவர் பெண் குழந்தையான நீளாதேவியை கண்டு அதற்கு வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து பின்னர் இங்குள்ள இறைவனக்கே மணமுடித்துக் கொடுத்தார்.

திருமகளுக்கு ஸ்ரீரங்கம், பூமி மகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், நீளா தேவிக்கு திருநறையூர் என்ற பெயர் உண்டு. 

கோயிலின் கருவறைக்கு கீழே மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பிரசித்தி பெற்ற கல் கருடன் எழுந்தருளியுள்ளார். 

கருடன் என்றால் கரு(சிறகுகளைக் கொண்டு) + ட (பறப்பவர்). 

கருடஸேவையின் போது, சன்னதியிலிருந்து கிளம்பும்போது பேர்கள் மட்டுமே ஏலப்பண்ணி (தூக்கி) வருவார்கள்.

அவ்வளவு எடைகுறைவாக இருப்பது, பின் 16 பேர் என்று மேலும் மேலும் ஏறத் துவங்கி முடிவில் கோயில் வாசலில் 64 பேர்களும் பிறகு படிகளில் இறங்கும் தருவாயில் பலபேர்கள் தாங்க வேண்டிய அளவுக்கு அதன் கனம் ஏறிக்கொண்டே போகும் அதிசயம் நிகழும்.

பெருமாள் கருட வாகனத்திலும் தாயார் அன்னவாகனத்திலும் எழுந்தருளுவார். 

இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது?

பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், 
தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் 
அன்னமோ நளினமான பறவை, 
பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். 

கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? 

எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. 

ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் ...!

இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் விணைகளின் சுமை குறைவாக இருக்கும், 

அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. 

அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.

அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம். 

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும் ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன, ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
பெருமாள் அசுரர்களை கொல்லும் போது மேலாப்பாய், 
குளிர்ந்த விசிறியாக எம்பெருமானின் வெற்றிக் கொடியாக காய்சினப்பறவையாய் பெருமாளின் பகைவர்களுக்கு தானே எதிரியாக குதிரை பூட்டாத தேராய் பெருமாளுக்கு வாகனமாய் 
புறக்கணிக்க முடியாத அடியவராய் 
இவ்வாறு பல் வேறு நிலைகளிலும் பெருமாளுக்கு வேறு துணை வேண்டாத துணையாய் திகழ்பவன்தான் கருடன்.
 Kalkarudan Nachiyarkoil
இந்தத் தலத்தில் நீண்ட காலமாக நந்தவனத்தில் வசித்துக்கொண்டு பூஜை நேரங்களில் வந்து காட்சி கொடுத்த இரண்டு கருட பட்சிகள், 1999 ஜனவரி மாதம் 18ஆம் தேதி (தை-சிரவணத்தன்று) கோயில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே ஒன்றை ஒன்று அணைத்தவாறு மோட்சம் அடைந்தது என்று குறிப்பு இருக்கிறது. இந்தப் பட்சிகளுக்கு ஒரு சன்னதியும் இப்போது வந்துள்ளது.

இரட்டை கருடன் பற்றிய அறிவிப்பு
கருடபட்சிகளின் நினைவு மண்டபம்

கல்கருடன் சன்னதியின் எதிர்ப்புறம் பழைய
பஞ்சலோக விக்கிரகங்கள் பல இருக்கின்றன. 
கல் கருடன் இத்தலத்திற்கு வந்த வரலாறு.

அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடன் செதுக்கி சிறகுகளை அமைத்து பிராணப்பிரதிஷ்டை செய்த போது அந்த கல் கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்து விட்டதாம்,

அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச அது கருடனின் அலகை தாக்க கருடன் திருநறையூரில் விழுந்ததாம்.

பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்தார்.

கல் கருடன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

இவரை 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து வழி பட பிரார்த்தணைகள் நிறைவேறும்.

இவர் விநாயகர் போல மோதகப்பிரியர் இவருக்கு அமிர்த கலசம் என்னும் மோதகம் நைவேத்யம் செய்யப்படுகின்றது,

இவ்வாறு மோதகம் படைத்து வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் எல்லா செல்வங்களும் அருளுகின்றார் இவர். 


திருநறையூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

எல்லோருக்கும் ஆச்சார்யன் தான் ஸமாச்சரயனம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் தனது பக்தன் ஒருவருக்கு பகவானே இத்தலத்தில் ஸமாச்ரயணம் செய்து வைத்தார் என்பது ஆச்சரியம்தானே! 

திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் ஸமாச்ரயணம் 
செய்து வைத்த தலம் என்பது மிகவும் சிறப்புடையது.
Kalkarudan Nachiyar Kovil
கருடனில் வந்து யானையின் துயரம் திருநறையூர் நம்பி தீர்த்த அழகை அவரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கையாழ்வார் பாடுகின்றார்.
தூ வாயபுள்ளுர்ந்துவந்து துறைவேழம் 
மூ வாமைநல்கி முதலை துணித்தானை 
தே வாதிதேவனைச் செங்கமலக் கண்ணானை
நா வாயுளானை நறையூரில்கண்டேனே.


படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்மதேவன் ஒருமுறை சரியாக தன் தொழிலைச் செய்யாததால் முனிவர்களால் சாபம் பெற்றான்.

சிவபெருமானும் பிரம்மாவைக் கைவிட்டார்.

அப்போது திருநறையூரிலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளை அங்குள்ள சங்கர்ஷண குளத்தில் நீராடியபின் வழிபட்டால் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் விலகும் என்று அசரீரி கூறியதால் பிரம்மன் இங்கு வந்து வழிபட்டார். 
சாப விமோசனம் பெற்றார். 
[a0712470.jpg]
 இந்திரனும் தன் மேலிருந்த சாபத்தைப் போக்க இந்த தலத்திலுள்ள அனிருத்தன் தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்து தனது நீண்ட நாள் சாபத்தைப் போக்கிக் கொண்டான். 

மற்றொரு முக்கியத் தீர்த்தமான ஸாம்பதீர்த்தத்தில் ஸப்தரிஷிகளும் அமர்ந்து ஸ்ரீநிவாசப் பெருமாளை நோக்கித் தவம் செய்தனர். 

பானுதத்தன் என்னும் அரக்கனுக்கும் பகவான் கருணைகாட்டி அவனது பாவங்களையும் தோஷங்களையும் தீர்த்தார். 
[Garudasevai31a.jpg]
 முன்னோர்கள் சாபம் உடனடியாக நீங்கவும் தெய்வக்குற்றம் செய்திருந்தாலும் அந்த பழி விலகவும் 
துஷ்டர்களோடு சேர்ந்து செய்யத்தகாத காரியங்களைச் செய்து அனைவருடைய கோபத்துக்கு ஆளாகி இருந்தாலும் 

பஞ்சமா பாதங்களை செய்திருந்தாலும் அப்பெம் பாவங்களை போக்கவும் இங்கு வந்து நான்கு வகைத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ஸ்ரீநிவாசப் பெருமாளைச் சரண் அடைந்து விட்டால் அத்தனையும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் தென்றலும் வீசும். மகான்களது அனுக்கிரகமும் தொடர்ந்து கிடைக்கும்.
[Garudasevai32a.jpg]
இயற்கை எழிலை இறைமையோடு சேர்த்து மங்களா சாஸனம் 
செய்வது திருமங்கை யாழ்வாருக்கே உரித்த அனுபவமாகும்.
File:Nachiyarkovil-2.jpg
அந்த வகையில் ஒரு ஆண் நண்டிற்கும் (அலவன்), ஒரு பெண் நண்டிற்கும் (நள்ளி) ஏற்பட்ட ஊடலை ஆழ்வார் பெரிய திரு மொழி 6 ஆம் பத்து ஏழாம் திரு மொழி 6 ஆம் பாட்டில் குறிப் பிட்டுள்ளார். ஸ்ரீ பராசரபட்டர் இந்தப் பாட்டிற்கு விரிவுரை வழங்கும்போது, குறிப்பாக ஒரு நிகழ்ச்சியினைச் சுவைபடக் கூறுவார் என்று நம்பிள்ளை பெரிய வாச்சான் பிள்ளையிடம் தெரிவிப்பாராம்.
திருநறையூரில், ஒரு ஆம்பல் மலரிலே ஒரு ஆண் நண்டும் ஒரு பெண் நண்டும் வாழ்ந்து வந்தன.

கருவுற்ற பெண் நண்டிற்கு அது ஆசைப்பட்ட தேனை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று ஆண் நண்டு விரும்பியது.

இந்த விருப்பத்தால், ஒரு தாமரை மலரை அடைந்து அம்மலரிலிருந்து நல்ல தேனைத் திரட்டிக் கொண்டு தனது மனைவியான பெண் நண்டிடம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தாமரை மலரைவிட்டு மெதுவாக நகரத் தொடங்கியது.

அப்போது சூரியன் அஸ்தமித்து விட்டதால், தாமரை மலர் தனது இதழ்களை மூடியது.

எனவே ஆண் நண்டு உள்ளே அகப்பட்டுக் கொண்டது.

எவ்வளவு முயன்றும் இதழ்கள் மூடியிருக்கும் தாமரை மலரை விட்டு அதனால் வெளியே வரமுடியவில்லை.

உள்ளே புரண்டு புரண்டு வெளிவர முயற்சித்ததால் அதன் உடலெல்லாம் தாமரை மலரின் மகரந்தம் ஒட்டிக் கொண்டது.

மறுநாள் சூரியன் உதயமானபோது மலர்ந்த தாமரை மலரிலிருந்து வெளிப்பட்டது ஆண் நண்டு. தன் மனைவி இருக்கும் ஆம்பல் மலரை நோக்கி விரைந்தது அது.

சூரியன் உதிக்கும்போது ஆம்பல் மலரின் இதழ்கள் மூடிக் கொள்வது இயல்பு. 
அதன்படி அதன் இதழ்கள் மூடிக்கொண்டன. இந்த இயற்கை நிகழ்ச்சியை பட்டர், ஓரிரவெல்லாம் ஆண் நண்டின் வரவை எதிர் பார்த்துக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த பெண் நண்டு, உட லெல்லாம் மகரந்தப் பொடியோடு வரும் ஆண் நண்டைக்கண்டவுடன் அதனுடன் ஊடிக் கதவை சாற்றிக் கொள்வது போல் அமைந்துள்ளதாக சுவைபட சித்தரிப்பாராம்.

இதைக்கேட்ட பிள்ளைத் திரு நறையூர் அரையர் “தீர ஆராய்ந்து குற்றம் உறுதிப்பட்ட பின்பன்றோ தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு பெண் நண்டு ஒருதலை பட்சமாக காரியத்தில் இறங் கலாமா?’ என்று பட்டரைக் கேட்க, அதற்கு மறுமொழியாக பட்டர், “”நாய்ச்சியார் கோயில் பற்றாசு ஆகையாலே, நள்ளிக்கு செலுகை விஞ்சியிருக்குமே” என்று அருளிச் செய்வாராம்.
imgTagimgTag
அதாவது, நாச்சியார் கோவிலைச் சேர்ந்த நண்டு ஆகையால், (நாச்சி யாருக்குதான் இங்கே செல்வாக்கு என்பதால்) பெண் நண்டுக்கே செல்வாக்கு அதிகம். எனவே பெண் நண்டு நினைத்ததைச் சாதித்தது என்ற பொருளில் இந்தக் காட்சியைச் சுவைபடச் சொல்வராம்.

இவ்வாறு ஆழ்வாரால் கொண்டாடப் பெற்ற பெருமை படைத்த நண்டு இனம் மக்களுக்குப் புரியும் நன்மை அதிகமே!
கடலோரப் பகுதிகளில் உள்ள தூய்மையான கடல் மணலையும், அந்த மண்ணில் துளையிட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் சிறிய நண்டுகளையும் பாதுகாக்க வேண்டும். 

இதன் மூலம் ஆழிப் பேரலைகளின் தாக்குதலில் இருந்தும், கடல் அரிப்பில் இருந்தும் தமிழகத்தைக் காப்பாற்ற இயலும் என்று புவியியல் & சுற்றுச் சூழல் ஆராய்ச்சி யாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

ஓடி விளையாடிய நண்டுகள் எங்கே?

ஒரு காலத்தில் கடலோர மணல் பகுதியில் எங்கு பார்த்தாலும் சிறிய வகை நண்டுகள் ஓடி ஒளிந்து விளையாடும்.

தற்போது இத்தகைய நண்டுகளை எல்லா இடங்களிலும் காண முடியவில்லை.இந்த நண்டுகள் வேகமாக ஓடுவதைப் போலவே, கடற் கரையோர மணலையும் வேகமாகத் துளையிடக் கூடியவை.

கடல் அலைகள் கரையைத் தொடும் இடங்களில் குறுக்கும் நெடுக் குமாகக் கடலோரப் பகுதி முழுவதும் நிறைய துளைகளை இவை அமைக்கும்.
கடல் அலை கரைக்கு வரும்போது இத்துளைகளின் வழியாகக் கடல் நீர் வடிந்துவிடும்.

இத்துளைகளின் வழியாகக் கடல்நீர் உறிஞ்சப்பட்டதும், இத்துளைகள் மூடப்பட்டுவிடும்.

அடுத்த அலை வருவதற்குள் இந்த நண்டுகள் அத்துளைகளை மீண்டும் திறந்துவிடும். நண்டுகளின் இத்தகைய செயல்களால் கடல் நீர் சுழற்சி நல்ல முறையில் நடை பெற்று வந்தது.

இந்த நண்டுகள் கரையோரத்தில் படியும் அழுக்குகளை உணவாகத் தின்று வாழக் கூடியவை. இவற்றை “கடற்கரையோரக் காவலர்கள்’ என்று வர்ணிப்பார்கள்.

இத்தகைய நண்டுகளைக் கடற் கரையோரம் நெடுக வளர்த்தால், உரிய பலன் கிடைக்கும் என்று புவியியல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி யாளர்கள் கருத்து.

[naraiyur.jpg]


28 comments:

  1. நாச்சியார் பற்றிய பதிவுக்கு நன்றிகள். படித்து மகிழ்ந்த நண்டுகளில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  2. வழக்கம் போல் நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமையான பதிவு.. படங்களும் கலக்கல்.. வழமை போலவே

    ReplyDelete
  4. படங்களுடன் சிறப்பாகப் பதிவிட்டுள்ளீர்கள். நண்டுகளின் வாழ்க்கை முறை பற்றிய செய்தி நான் இதுவரை அறிந்திராதது மிக்க நன்றி

    ReplyDelete
  5. ஒவ்வொரு பதிவும் மனதை நிறைப்பது போல தேடிப்பிடித்து அருமையானா
    படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் இருக்கு. நன்றி.

    ReplyDelete
  6. நாச்சியாரின் அருள் பெற்றோம் சகோதரி.

    ReplyDelete
  7. கருடபட்சி விவரம் ஆச்சர்யமாக இருந்தது. படங்கள் வழக்கம்போல அற்புதம்.

    ReplyDelete
  8. புது பேனர் சூப்பரா இருக்கு தோழி...

    ReplyDelete
  9. நண்டுகளின் வாழ்க்கை முறை பற்றிய செய்தி கேள்விப்படாத ஒன்று. நன்றி.

    ReplyDelete
  10. //கருடஸேவையின் போது, சன்னதியிலிருந்து கிளம்பும்போது 4 பேர்கள் மட்டுமே ஏலப்பண்ணி (தூக்கி) வருவார்கள். அவ்வளவு எடைகுறைவாக இருப்பது, பின் 16 பேர் என்று மேலும் மேலும் ஏறத் துவங்கி முடிவில் கோயில் வாசலில் 64 பேர்களும் பிறகு படிகளில் இறங்கும் தருவாயில் பலபேர்கள் தாங்க வேண்டிய அளவுக்கு அதன் கனம் ஏறிக்கொண்டே போகும் அதிசயம் நிகழும்.//

    அதிசயங்கள் நிறைந்த ஆலயத்தின் படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருக்கிறது.

    இறுதியாய் நண்டு பர்றிய தகவல்களும், அவைகளெல்லாம் எங்கே? என்ற கனத்த கேள்வியும் சிந்திக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  11. ஒவ்வொரு நாளும் மிக அருமையாக விடிகின்றது உங்கள் பதிவுகளை படிக்கும்போது ராஜேஸ்வரி....

    நேற்று ராமனின் பகிர்வு படித்தேன் ஆனால் பின்னூட்டம் இடவில்லை அங்கேயே வந்து இடுகின்றேன்...

    கருடருக்கு வியர்க்கும் அற்புதம் காணவும் நாச்சியார் அம்மையின் புன்னகையை காணவும் இப்போதே கோவிலுக்கு போகவேண்டும் போலிருக்கிறது...

    கடலோர நண்டுகள் அழுக்குகளை தின்று காவலராக வளர்கின்றது...

    நம் வினைகளை களைய நாலுவகை தீர்த்தத்தில் குளித்து அரங்கனின் தரிசனம் கண்டாலே போதும் இப்பிறவி எடுத்த பயனை முழுமையாய் பெற்றுவிடுவோம்...

    அன்பு நன்றிகள்பா அருமையான பகிர்வுக்கு...

    அந்த மணல் வேக வேகமாக அனிமேஷனில் ஓடுவது போல் அற்புதமாக இருக்கிறது....

    ReplyDelete
  12. படங்கள் நிறைந்த, விபரங்கள் நிறைந்த நல்ல பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Always ur topics are very informative.today the same...pictures are nice.

    ReplyDelete
  14. நலமருளும் நாச்சியாரில் ஏலப்பண்ணி தூக்கி வருவது ஆச்சர்ய தக்க விசயமாக இருக்கிறது... அற்புதம்.. ஆன்மீக பதிவை பதிவிடுவதற்கு தங்களுக்கு சந்தோசமளிக்கிறதோ... தங்களது பதிவிற்கு வந்து படிப்பதற்கு எங்களுக்கு சந்தோசமளிக்கிறது... நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நல்ல பகிர்வுங்க. கருட பட்சிகளின் வரலாறு மனதைத் தொடுகிறது.

    ReplyDelete
  16. படங்களும் பதிவும் அருமை
    நண்டு குறித்த தகவல் புதியது அரியது
    பதிவிட்டமைக்கு நன்று தொடர வாழ்த்துக்க

    ReplyDelete
  17. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    நாச்சியார் பற்றிய பதிவுக்கு நன்றிகள். படித்து மகிழ்ந்த நண்டுகளில் நானும் ஒருவன்.//

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @ Reverie said...
    வழக்கம் போல் நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. இங்கெல்லாம் செல்ல வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ தங்கள் தயவால் இத்திருத் தளங்களை சுற்றிப் பார்க்கிறேன் .

    பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  20. பல புதிய விஷயங்கள்.சிறப்பான உழைப்பு.

    ReplyDelete
  21. “கடற்கரையோரக் காவலர்கள்’
    மிகவும் நல்லா இருக்கிறார்கள்.

    படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  22. நாச்சியார் கோவில் பற்றிய அருமையான பதிவு.கல்கருட சேவை பற்றிய விளக்கம், படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  23. மீண்டும் இன்று ஒருமுறைக்கு இருமுறையாகப் படித்து மிகவும் மகிழ்ந்தேன்.

    எவ்வளவு அழகழகான படங்கள்.

    எவ்வளவு மிகச்சிறந்த விளக்கங்கள்.

    தன் ஆருயிர்த்தோழிக்காகத் தேன் எடுக்கச்சென்று தாமரையில் மாட்டிய ஆண்நண்டு + ஆம்பல் மலரில் மாட்டிய பெண் நண்டு. ஓர் இரவில் ஒருவரையொருவர் பிரிந்த சூழ்நிலையில் அவற்றின் காதல் உணர்வுகள், அடடா படிக்கும்போதே சொக்க வைத்தது

    திருமங்கையாழ்வாரும், ஸ்ரீ பராசரபட்டரும் சரியான ஆசாமிகள் தான்; வியந்துபோனேன் தங்களின் விளக்கங்களைப்படித்ததும். எப்படித்தான் தேடித்தேடி [தேன் சேகரிப்பதுபோல்] தகவல்களைச் சேகரித்து இனிமையாக எளிமையாக ருசிமிக்கதாகத் தருகின்றீர்களோ! ;))))

    கடைசியில் “ஓடி விளையாடிய நண்டுகள் எங்கே?” என சமூக விழிப்புணர்வு தரும் தகவல்கள் வேறு!

    உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய அறிவாளி, நிறைய விஷய ஞானம் உள்ளவர், சரஸ்வதி கடாக்ஷம் அண்டா அண்டாவாகப் பெற்றுள்ளவர் என்பதை ஒவ்வொரு பதிவிலும் என்னால் உணர முடிகிறது.

    மிக்க சந்தோஷம். மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் நண்டாக, வண்டாக, தினமும் தங்களின் செந்தாமரைப்பூவுடன் கூடிய வலைப்பூவினில் தேன் அருந்த அதிக ஆவலுடன், காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. என் திருமணத்திற்கு முன்பு, வேறொரு சொந்தக்காரர் திருமணத்திற்காக 1971 இல் இந்த நாச்சியார் கோயில் சென்று, பெருமாள் தரிஸனம் செய்துள்ளேன்.

    மிகவும் அழகிய கோயில். பார்த்து வியந்து போனேன். கல்கருடன் பற்றிச் சொன்னார்கள். கேள்விப்பட்டுள்ளேன். நேரில் அதைப் பார்த்தது இல்லை.

    இந்தத் தங்களின் பதிவு எல்லாக் குறைகளையும் தீர்த்து வைத்து விட்டது. மிகவும் சந்தோஷம்.

    ReplyDelete
  25. ;)
    சர்வ மங்கள மாங்கல்யே
    சிவே சர்வார்த்த சாதிகே !
    சரண்யே த்ரயம்பிகே கெளரி
    நாராயணீ நமோஸ்துதே !!

    ReplyDelete
  26. 887+4+1=892 ;)))))

    என் பின்னூட்டங்களை நானே திரும்பப்படிப்பதில் தான் எவ்வளவு சந்தோஷமாக உள்ளது ;) ஒரே ஒரு சிறிய பதில் கிடைத்துள்ளது. ஏதோ எத்கிஞ்சிது. அன்று அதுவாவது கிடைத்துள்ளதே ! நன்றி.

    ReplyDelete
  27. thank u very much good information..........

    ReplyDelete