Tuesday, November 27, 2012

அமுதக் கடல் அண்ணாமலை








'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்' 
சேக்கிழார் பெருமானார் ஜோதி வடிவான சிவபெருமானை ஆற்புத பாடல் மூலம் வாழ்த்திவணங்க வழிகாட்டியுள்ளார் 
முருகப் பெருமான் சிவபெருமானிடமிருந்து ஜோதி ஸ்வரூபமாகத் தோன்றினார். கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் 

முருகப் பெருமானுக்கு பிடித்த விரதமும் கார்த்திகை விரதமாகும். கார்த்திகை விரதத்தை கார்த்திகை நட்சத்திரத்திற்கு முன்பு வரும் பரணி நட்சத்திரத்தன்று தொடங்க வேண்டும்.

சிவத்தலங்களிலும்  ஆறுபடை வீடுகளில் முதலாவதான திருப்பரங்குன்றத்தில் மலை மீது "மகாதீபம்' ஏற்றப்படுகிறது. 
கார்த்திகை தீபத்தை பரணி தீபம், அண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் மற்றும் விஷ்ணு கார்த்திகை என்று கொண்டாடுகிறோம் ..
ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி  
கண்ணார் அமுதக் கடலே போற்றி




குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி  விரித்துரைக்கும் சிறப்புடைய கார்த்திகை தீபத்தன்று சிவலிங்கத்தின் முன்னால் நெய் விளக்கு ஏற்றுபவன் வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும். 

கார்த்திகைதீபத்தை வலம் வருபவரின் ஒவ்வொரு அடிக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலனுண்டு. 

சகல தானம் கொடுப்பதால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ, சகல தீர்த்தங்களில் நீராடினால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ அது, கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தாலே கிடைக்கும். 

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நஷத்திரத்தில் சோணாசல ஷேத்திரத்தில் தீபமேற்றினால் சந்தான ப்ராப்தி உண்டாகும்.”


திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவம் 

 

11 comments:

  1. படங்களுடன் ஜோதி மயமான பதிவு
    அற்புதம் ஆனந்தம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான தரிசனம்.

    ReplyDelete
  3. அருணாச்சல சிவனே போற்றி.....

    நல்ல பகிர்வு. படங்களும் அருமை.

    ReplyDelete
  4. சிறப்பான படங்கள்... தகவல்கள்...

    நன்றி அம்மா...

    தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. படங்கள் மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. படங்களும், பகிர்வும் அழகு....

    கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. புகைப்படங்களும் விளக்கங்களும் திருவண்ணாமலைக்கே சென்று தீபத்தை தரிசித்த உணர்வை கொடுத்தன.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. கார்த்திகைத் தீபச் சிறப்பு கூறப்பட்டது. இறுதிக் கோவில்கள் படங்களும், தீபப் படங்களும. மிக அருமை: இதைவிடத் தெய்வஙகள் தெய்வீகம். மிக்கநன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. ”அமுதக்கடல் அண்ணாமலை”

    பதிவும் அமுதக்கடல் தான்.

    அழகாக ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

    கீழிருந்து மூன்றாவ்து படத்தில் அந்தக்குத்துவிளக்கு திவ்யமாக உள்ளது.

    108 ஆம் எண் இல்லத்தில் எடுத்ததா? ;)

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”அமுதக்கடல் அண்ணாமலை”

    பதிவும் அமுதக்கடல் தான்.

    அழகாக ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

    கீழிருந்து மூன்றாவ்து படத்தில் அந்தக்குத்துவிளக்கு திவ்யமாக உள்ளது.

    108 ஆம் எண் இல்லத்தில் எடுத்ததா? ;)
    வணக்கம் ஐயா..
    திவ்யமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    குத்துவிளக்கு படம் வேறு இடத்தில் கிடைக்கப்பெற்றது ..

    ReplyDelete