Wednesday, February 13, 2013

வசந்தமாய் வாழ்த்தும் வசந்த பஞ்சமி

தமிழகத்தில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல் வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாக  வசந்த பஞ்சமி க் கொண்டாடப்படுகிறது.
வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு ஒரு சமுதாய விழாவாகவே  திகழ்கிறது ....

பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப் படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக  வசந்த பஞ்சமி விளங்குகிறது.
பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். 
அன்று பட்டங்கள் விடுவதில் போட்டிகளும் பரிசுகளும் வழங்குவதும் உண்டு. பெரியவர்களும் சிறுவர்களும் போட்டி போட்டிக் கொண்டு வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். 

பெற்றோர்களும் பெரியோரும் அன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் 
சுதந்திரமாக இருக்க விடுவதால்  சிறுவர்கள் அளவற்ற உற்சாகத்தோடு   
மன மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்..

ராஜஸ்தான் மாநிலத்தில் வசந்த பஞ்சமி நாளில் வகை வகையான உணவு வகைகளைத் தயாரித்து உண்பதிலும், பொது இடங்களில் பாடி மகிழ்வதிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் இயற்கையையும் வசந்தத்தையும் போற்றுவதாக அமைந்துள்ளன.

அசாமில் வசந்த பஞ்சமிக்குத் தனி இடம் உண்டு. மலைவாழ் மக்கள்- குறிப்பாக மலைவாசி இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வட்டமாக நின்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அன்று சரஸ்வதிதேவிக்கு மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

 வசந்தகாலத்தில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும் பேரிக்காய்களும், மூலி எனப்படும் வெள்ளை முள்ளங்கி விதைகளும் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு சரஸ்வதிதேவிக்குப்  பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன. 

பஞ்சாப் மாநிலத்தில் மிகச் சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, 

அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர். 

காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் 
வசந்த பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். 

மஞ்சள் நிறம் தேவர்களால் விரும் பப்படுவதாகக் கூறப்படுகிறது. 

வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதிதேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படு கிறது. 

மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங் களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய   முதன்மை மலராகத் திகழ்கிறது. 

சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். 

பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! 

மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.Butterfly Yellow Flowers41 comments:

 1. கடவுளும் மலர்களும் பொருத்தமான படங்கள்.அருமையான பதிவு

  ReplyDelete
 2. வசந்த பஞ்சமி புதிய தகவல்.கண்கவர் படங்கள்.

  ReplyDelete
 3. Good day! I could have sworn I've been to this site before but after checking through some of the post I realized it's new to me.
  Anyhow, I'm definitely happy I found it and I'll be book-marking and checking back often!
  Here is my weblog - Ray Ban Uk

  ReplyDelete
 4. amaam madam..ore manjal thaan.varum 15 aam thethi thaan intha panjami enru ninaikiren,pakirvirku nanrikal.

  ReplyDelete
 5. அறிந்தேன் அம்மா... நன்றி...

  ReplyDelete
 6. அருமையான படங்கள்... நன்றி..

  ReplyDelete
 7. மஞ்சள் பிள்ளையார் எல்லோர் வாழ்விலும் வசந்தம் மலரசெய்யட்டும்.
  வசந்த திருவிழா கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வை தந்தது.

  ReplyDelete
 8. Magnificent website. Plenty of useful information here.
  I'm sending it to a few pals ans additionally sharing in delicious. And of course, thank you for your sweat!
  My web blog ; louis vuitton official site

  ReplyDelete
 9. வசந்த பஞ்சமி பற்றிய சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.படங்கள் மிக அழகு,அதிலும் கடைசியில் உள்ள மஞ்சள் வண்ண பூக்கள் மனதை கொள்ளைகொண்டது.

  ReplyDelete
 10. பள்ளிக் குழந்தைகள் வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் ஆடை உடுத்தி, மஞ்சள் உணவு , மஞ்சள் மலர் எடுத்துக் கொண்டு செல்வார்கள்..

  ReplyDelete

 11. முன்பெல்லாம் தமிழ் நாட்டிலும் கூட வசந்தத் திருவிழா கொண்டடினார்களாமே. பழைய சினிமாக்களில் வசந்தவிழா என்று காட்சிகள் பார்த்திருக்கிறேன். பல தகவல்கள் புதிது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வசந்த பஞ்சமி படங்களும் தகவல்களும் மிகச்சிறப்பு! பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. முதல் படத்தின் அனிமேஷன் வெகு அருமை.

  கலைவாணி வீணையை மீட்பதுபோலவே அமைந்துள்ளது.

  அசையும் உலகில் .......
  இசையும் நானே .........

  என்ற பாடல் போல பின்னனியில் உலகம் அசைவது போலக் காட்டியுள்ளது மேலும் அழகோ அழகு!

  >>>>>>

  ReplyDelete
 14. Very good information. Lucky me I discovered your blog by accident (stumbleupon).
  I've saved it for later!
  Visit my blog post ... cheap ray bans

  ReplyDelete
 15. தகவல் களஞ்சியம் கொடுத்துள்ள வஸந்த பஞ்சமி பற்றிய அனைத்துத் தகவல்களும் அற்புதமாக உள்ளன.

  ராஜஸ்தான், அஸ்ஸாம், பஞ்சாப், காஷ்மீர் என வட மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் கூட்டிச்சென்று அசத்தோ அசத்தென அசத்தி விட்டீர்கள்.

  ஆனால் நீங்கள் சமத்தோ சமத்தாக்கும்! ;)))))

  >>>>>>>>>>

  ReplyDelete
 16. வஸந்தாமாய் வருகை தந்து

  வஸந்த பஞ்சமி வாழ்த்துக்கள் கூறி

  மஞ்சள் நிலவாய் எல்லாமே காட்டி

  அருளிய மஹோன்னதமான

  வாக்தேவிக்கு என் வந்தனங்கள்.

  >>>>>>>

  ReplyDelete
 17. கடைசியில் [அடியில்] காட்டப்பட்டுள்ள நான்கு படங்களுமே ஜோர் ஜோர்.

  அதுவும் அந்த அடியிலிருந்து நான்காவது ........... அடடா

  அது என்னிடம் என்னென்னவோ சொல்லுதுங்க !

  சூப்பரோ சூப்பர் தான் ;))))))


  >>>>>>>>

  ReplyDelete
 18. படங்கள் + படவிளக்க்ங்கள் + பதிவு

  அனைத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  oooooo

  ReplyDelete
 19. உண்மை. இங்கே வசந்த பஞ்சமி சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.....

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 20. I had never heard about this before... Good post!

  ReplyDelete
 21. வசந்த காலம் -- பெயரே என்ன அழகாயிருக்கிறது!

  மலர்களைப் போல மனசும் பூத்துக் குலுங்கும் காலம் தான்!

  ReplyDelete
 22. You've made some really good points there. I looked on the net to learn more about the issue and found most individuals will go along with your views on this website.

  Here is my site: ray ban outlet

  ReplyDelete
 23. வசந்த காலம் என்றாலே மகிழ்ச்சிதான்!
  ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் முறையை அற்புதமாக எழுதி படங்களுடன் (மஞ்சள் வர்ணம் ஜொலிக்கிறது எங்கும்!) பதிவாக்கிய விதம் அருமை!

  ReplyDelete
 24. வை.கோபாலகிருஷ்ணன் said...
  படங்கள் + படவிளக்க்ங்கள் + பதிவு

  அனைத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.//


  வணக்கம் ஐயா .

  வசந்தமாய் வருமை தந்து இனிய கருத்துரைகளால் பதிவை மலரச்செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 25. Ranjani Narayanan said...
  வசந்த காலம் என்றாலே மகிழ்ச்சிதான்!
  ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் முறையை அற்புதமாக எழுதி படங்களுடன் (மஞ்சள் வர்ணம் ஜொலிக்கிறது எங்கும்!) பதிவாக்கிய விதம் அருமை!//

  வாருங்கள் வணக்கம் ..

  அற்புதமாய் ஜொலிக்கும் கருத்துரைகளால் மனம் மகிழச்செய்தமைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 26. G.M Balasubramaniam said...

  முன்பெல்லாம் தமிழ் நாட்டிலும் கூட வசந்தத் திருவிழா கொண்டடினார்களாமே. பழைய சினிமாக்களில் வசந்தவிழா என்று காட்சிகள் பார்த்திருக்கிறேன். பல தகவல்கள் புதிது. வாழ்த்துக்கள்.

  வணக்கம் ஐயா .

  வசந்தவிழா பற்றிய மலரும் நினைவுகள் பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 27. கோமதி அரசு said...
  மஞ்சள் பிள்ளையார் எல்லோர் வாழ்விலும் வசந்தம் மலரசெய்யட்டும்.
  வசந்த திருவிழா கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வை தந்தது.

  வாருங்கள் .. வணக்கம் .
  வாழ்க வளமுடன் ..

  வசந்தம் மலரும் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 28. T.N.MURALIDHARAN said...
  வசந்த பஞ்சமி புதிய தகவல்.கண்கவர் படங்கள்.

  வணக்கம் ..

  இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 29. பழனி. கந்தசாமி said...
  நல்ல பதிவு.//

  வணக்கம் ஐயா

  இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 30. கவியாழி கண்ணதாசன் said...
  கடவுளும் மலர்களும் பொருத்தமான படங்கள்.அருமையான பதிவு/

  வணக்கம்

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 31. hirumathi bs sridhar said...
  amaam madam..ore manjal thaan.varum 15 aam thethi thaan intha panjami enru ninaikiren,pakirvirku nanrikal.

  வாருங்கள் வணக்கம் .. 15 ம் தேதி கொண்டாடப்பட்ட பண்டிகை பற்றிய கருத்துரைகளுக்கு இனிய நன்ற்கள்.

  ReplyDelete
 32. ஸ்கூல் பையன் said...
  அருமையான படங்கள்... நன்றி..

  வணக்கம்

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 33. கோவை2தில்லி said...
  பள்ளிக் குழந்தைகள் வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் ஆடை உடுத்தி, மஞ்சள் உணவு , மஞ்சள் மலர் எடுத்துக் கொண்டு செல்வார்கள்..

  வாருங்கள் வணக்கம் .. வசந்த பஞ்சமி பற்றிய மங்களகரமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 34. ஜீவி said...
  வசந்த காலம் -- பெயரே என்ன அழகாயிருக்கிறது!

  மலர்களைப் போல மனசும் பூத்துக் குலுங்கும் காலம் தான்!//  வணக்கம் ஐயா

  அழகான இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 35. திண்டுக்கல் தனபாலன் said...
  அறிந்தேன் அம்மா... நன்றி...

  வணக்கம்

  இனிய கருத்துரைகளுக்கு
  மனம் நிறைந்த நன்றிகள்

  ReplyDelete
 36. RAMVI said...
  வசந்த பஞ்சமி பற்றிய சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.படங்கள் மிக அழகு,அதிலும் கடைசியில் உள்ள மஞ்சள் வண்ண பூக்கள் மனதை கொள்ளைகொண்டது.

  வாருங்கள் வணக்கம் .. வசந்த பஞ்சமி பற்றியமஞ்சள் வண்ண பூக்களாய் மனதை கொள்ளைகொண்ட கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 37. Matangi Mawley said...
  I had never heard about this before... Good post!

  வாருங்கள் வணக்கம் ..
  கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

  ReplyDelete
 38. வெங்கட் நாகராஜ் said...
  உண்மை. இங்கே வசந்த பஞ்சமி சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.....

  நல்ல பகிர்வு.  வணக்கம் ..
  சிறப்பான கருத்துரைகளுக்கு
  இனிய நன்றிகள்

  ReplyDelete
 39. viji said...
  Very interesting post.
  viji

  வாங்க விஜி வாங்க ..

  உற்சாகமான கருத்துரைகளுக்கு
  இனிய நன்றிகள்

  ReplyDelete
 40. s suresh said...
  வசந்த பஞ்சமி படங்களும் தகவல்களும் மிகச்சிறப்பு! பகிர்வுக்கு நன்றி

  வணக்கம் ..
  சிறப்பான கருத்துரைகளுக்கு
  இனிய நன்றிகள்

  ReplyDelete