Thursday, May 16, 2013

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:





மஹா விஷ்ணுவின் அவதாரமாகத்திகழ்பவர் ஸ்ரீராமானுஜர்.
ராமானுஜரின் பெற்றோரது தவத்தையும், வேண்டுதல்களையும் ஏற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளே, ‘ராமானுஜனாக அவதரிப்பேன்’ என்று உரைத்த வண்ணமே ராமானுஜர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். 

மக்களை உய்ய வந்த மாமுனி’ என்று  வைணவ சம்பிரதாயம் சிறப்பிக்கிறது.
.
ஆணவம், அகந்தை அகங்காரம் அழிந்து, சாதி, மத பித்து நீங்கி எல்லோரும் சமம் என்ற உயர்ந்த தத்துவத்தை போதிக்கும் நோக்கிலேயே அவதரித்தார்.. 

 ஜீவாத்மாவின் நோக்கமே பரமாத்மாவுடன் ஐக்கியமாவதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தினார். 

‘அவருக்கு உபதேசித்த ரகசிய மந்திர திருநாமத்தை திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் ஏறி நின்று மக்கள் பயனுற அந்த மந்திரத்தை உரக்க அறிவித்தார். ராமானுஜர் 

 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் உருவம் விக்கிரகமோ, வேறு உலோகப் பொருளோ அல்ல. ராமானுஜர் பத்மாசன திருக்கோலத்தில் இருக்கும் இந்த வடிவம் அவர் காலத்தில் உருவாக்கப்பட்டு அவரே அதை தழுவி தன் 
சக்தியை பரிபூரணமாக இந்த உருவத்தில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

பல மூலிகைகள், பச்சை கற்பூரம், அஷ்ட பரிமளங்கள் போன்றவற்றால் இன்றளவும் இந்த சிலையை பாதுகாத்து வருகின்றனர். இதை ‘தான் உகந்த திருமேனி’ என்கிறார்கள்.-

ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சமான ராமனுஜர் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் அவதரித்தார். 

இவரை வழிபடுவதன் மூலம் ராகு - கேது தோஷங்கள் நீங்கும். இவரின் அவதார ஜாதகத்தை பூஜையில் வைத்து பூஜித்தால் எல்லா விதமான தடைகளும் நீங்கி சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம் ..
 கோயில் கோபுரத்தின் மீதேறி வைணவ மந்திரத்தை உரக்கக் கூறி கடவுள் எல்லோருக்கும் சமம். குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு மட்டும் கடவுள் சொந்தமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தியவர். 


 ஸ்ரீ ரங்கத்தில்  அவரது உருவத்தில் கண் இமை திறந்திருப்பது போன்றும், நிஜ நகங்கள் மாதியே விக்ரகத்தில் நகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

16 comments:

  1. வைஷணவ கோவில் சம்பிதாயங்களை முறைப்படுத்தியவர் இவர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைதானா?

    ReplyDelete
  2. ஸ்ரீராமானுசர் பற்றிய விளக்கத்துடன் படங்கள் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ramanujar pictures and information are so good

    ReplyDelete
  4. ஶ்ரீ ராமாநுஜர் பற்றி இவ்வளவு விரிவாக இப்பொழுதுதான் அறிகிறேன்.
    அழகிய படங்கள், சிறந்த விபரங்கள் நல்ல பதிவு.
    பகிர்விற்கு நன்றி சோதரி!

    ReplyDelete
  5. உண்மையான நகங்களா ? காண வேண்டும் என்கிற ஆவல் தோன்றுகிறது. வழக்கம் போலவே படங்கள் சிறப்பு.

    ReplyDelete
  6. ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

    அழகான படங்களுடன் அசத்தலான பதிவு. அற்புதமான விளக்கங்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo 911 ooooo

    ReplyDelete
  7. ஸ்ரீராமாநுஜர் பற்றி விரிவான செய்திகளும் படங்களும் அருமை.திருக்கோஷ்டியூரில் கோவில் மேல் நின்று’ தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்/ என்று எல்லோருக்கும் ’ஓம் நமோ நாராயணாய ’என்று சொல்லிக் கொடுத்த பண்பாளார்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. இப்படியும் ஒரு கரு இருக்கிறதா இன்று தான் அறிந்தேன் அம்மா சாமி படமும் அருமை நன்றிகள்

    ReplyDelete
  9. வைணவ சமயத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்த பெரியவர். ஸ்ரீராமானுஜர். வைணவனாகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே, இங்கு ஏற்றத்தாழ்வு கிடையாது என்று சொன்னவர். அவருடைய வரலாற்றைப் படித்தால் ( பி.ஸ்ரீ எழுதிய ஸ்ரீ ராமானுஜர் ) அவர் ஆற்றிய தொண்டினைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    ஸ்ரீ ராமானுஜர் பற்றிய உங்கள் பதிவும் படங்களும் அவரது தொண்டினையும் பி.ஸ்ரீ யின் நூலினையும் எனக்கு நினைவூட்டின. நன்றி!

    ReplyDelete
  10. மக்களை உய்ய வந்த மாமுனி’ -யை சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு நன்றி.. படங்கள் அருமை மற்றும் அரியவை.

    ReplyDelete
  11. ஸ்ரீமதே இராமானுஜாய நம:
    நீங்கள் போட்டிருக்கும் முதல் புகைப்படம் திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேல்கோட்டையில் இருக்கும் உடையவரின் திருமேனி. அடியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் காலத்திலேயே செய்யப்பட திருமேனி. இந்த திருமேனியை 'தமர் உகந்த திருமேனி' என்பார்கள். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் திருமேனி ஸ்வாமி பரமபதித்தபோது அவரை திருப்பள்ளிப் படுத்தப்பட்ட இடத்தில் இருப்பது. இந்தத் திருமேனி அவருடையதே. அதனால் இந்தத் திருமேனியை 'தானான திருமேனி என்பார்கள்.

    உங்கள் பதிவுக்கு இந்த விஷயங்கள் மெருகூட்டும் என்பதால் எழுதுகிறேன்.

    ReplyDelete
  12. Ranjani Narayanan has left a new comment on your post "ஸ்ரீமதே ராமாநுஜாய நம:": //

    வாங்க ..வணக்கம் ..வாழ்க வளமுடன் ...!
    பதிவுக்கு மெருகூட்டிய தகவல்களுக்கு இனிய நன்றிகள்...

    http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_24.html
    காரேய் கருணை ராமானுஜர்

    என்கிற பதிவைப்படித்து கருத்தினைப்பகிருங்கள் ....நன்றிகள்...

    ReplyDelete
  13. ராமானுஜர் பற்றிய செய்திகள் அருமை.
    புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  14. நீங்கள் கொடுத்திருந்த சுட்டியில் போய் அந்தப் பதிவையும் படித்தேன்.இங்கு நான் பகிர்ந்திருக்கும் விஷயங்களை எல்லாம் வெகு சிறப்பாக அங்கு எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
    இணைப்பு கொடுத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  15. அனைத்தும் சரி வைணவத்தில் ராகு கேது பரிகாரம் கிடையாது.ஆதிஷேச அவதாரமானஸ்ரீ ராமாநுஜருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லவே இல்லை.

    ReplyDelete
  16. ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
    அனைத்தும் சரி வைணவத்தில் ராகு கேது பரிகாரம் கிடையாது.ஆதிஷேச அவதாரமானஸ்ரீ ராமாநுஜருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லவே இல்லை.

    ReplyDelete