Tuesday, July 23, 2013

கோமகள் அன்னை கோமதி









கேடாவரும் நமனைக்கிட் டவரா தேதூரப்
போடாயென் றோட்டியுன்றன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்
வாடாவென அழைத்துவாழ் வித்தாலம் மாயுனைக்
கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.

கோழி தனது இறகுகளுக்குள் தன் குஞ்சுகளை மறைத்து, கழுகிடமிருந்து அவற்றைக் காப்பதுபோல, எமனிடமிருந்து கோமதி அம்மை தம்மைக் காக்க வேண்டும் என்கிறார் அழகிய சொக்கநாதர் இந்த அருமையான பாடலில்......!

ஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை:
ஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.
(சங்கரநாராயண ஸ்தோத்திரம் சிவன்-விஷ்ணு இருவரின் திருவருள் பெற )

ஈசனும் திருமாலும் ஓருருவாய் அமைந்த அற்புத வடிவினரான சங்கர நாராயணரே நமஸ்காரம். 

சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்ற  சங்கு, கபாலம் ஆகிய சிவ-விஷ்ணு அம்சங்களை ஒருங்கே தாங்கி நிற்கும் சங்கரநாராயணரே நமஸ்காரம். 

சிவனும் விஷ்ணுவும் ஒரு சக்தியே  என்பதை இந்தத் திருவடிவத்தால் விளக்கும் சங்கர நாரயணரே நமஸ்காரம். 

(ராம நாமத்தின் முதல் அக்ஷரமான ரா என்பது நாராயணனின்  அஷ்டாக்ஷர மந்திரத்தின் (ஓம் நமோ நாராயணாய) இரண்டாவது எழுத்து; ம என்பது  ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தின் (ஓம் நமசிவாய) இரண்டாவது  எழுத்து. இவ்வாறு ராம நாமத்திலேயே சிவ-விஷ்ணு ஒன்றிணைப்பு குறிப்பிட்டுக்  காட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்லோகத்தை ஜபித்தால் பரமேஸ்வரன்,  திருமால் இருவரின் திருவருளையும் பெற்று நிறைவாக வாழலாம்)

சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என சர்ச்சையில் அன்னை பார்வதியை சரணடைந்தனர். 

சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற பேத புத்தி இல்லாமல், இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை நிரூபிக்க வேண்டும்!’ என்று எண்ணிய அம்பிகை. சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லா மல் பொருந்தி இருக்கும் திருக் காட்சியைக் காட்டியருள வேண் டும்!'' என வேண்டி இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். 

சிவபெருமானும் மனமுவந்து, 'அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றும் தலத்தில் தவம் செய்தால்,  விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்" என அருளினார் ..!

தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!

'தெய்வப் பெண்களை பசு (ஆ) வடிவெடுத்து பால் கொடுத்து மகிழ்ச்சி தாருங்கள்" என்ற பார்வதி. 'ஆ" வடிவெடுத்து தெய்வப் பெண்கள் உமாதேவியுடன் வந்ததால், அன்னை 'ஆவுடையாள்" என்றும் அழைக்கப்படுகிறாள். 


புன்னைவனமாகிய சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் தவமியற்றினார்.

தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் 'சங்கரநாராயணராக", உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார். 


ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்!,
ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர-மாணிக்க மகுடம்!,
ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு!
ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்!,
ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை! ,
ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்;
மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான்!. 

 

சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும்,

இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார்.

மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக அருள்கிறார்..!.

அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்!  இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு!

கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும்.

குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! 

அலங்காரம் மட்டுமே!

சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் அன்னாபிஷேகங்கள் செய்யப்படுகிறது.


சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசீ தீர்த்தம் உண்டு!,

வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு!

இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!
ஐம்பூதங்களில்  நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்வதால், கோயிலில் உள்ள 'புற்றுமண்" வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும்.

மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள்.

இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

உடல் உபாதைகளுக்காக நூற்றுக்-கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்பட்டால்,  உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் 

ஆடித் தபசு  மண்டபத்தில் அன்னையின்  தவம் நடித்துக் காட்டப்படுகிறது!

ஒரு கையில் விபூதிப் பை!
ஒரு காலில் தவம்!
சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!

தன் வலக் காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தபசுக் காட்சி அருள்கிறாள்.

அம்பாளின் தபசுக் காட்சியின்போது  பருத்தி, ,  நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை
'சூறை விடுதல்" என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று" என்ற பெயரில், கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். 

 ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக  நம்பிக்கை ..!

 கோபுரம் ஒன்பது நிலைகளுடன் விளங்குகிறது. 
மேல் நிலையின் உயரம் மட்டும் 27 அடி.
File:Skoil1.jpg
உச்சியில் ஏழு கலசங்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொன்றும் ஏழு அடி, நான்கு அங்குல உயரம் கொண்டவை.
இந்திரனின் மகன் ஜெயந்தன் ஒரு நாள் ராமபிரான் கண்ணயர்ந்த சமயம் பார்த்து, காக வடிவம் கொண்ட ஜெயந்தன் சீதாதேவியைக் கொத்த முயன்றான். சீதை அலற, திடுக்கிட்டுக் கண் விழித்த ராமபிரான், "நீ காக்கை யாகவே இருக்கக் கடவாய்' என சாபமிட்டார்.

நடந்ததை அறிந்து பதறிப் போன இந்திரன், சாப விமோசனம் வேண்டி ராமபிரானிடம் கெஞ்சி நின்றான். அண்ணலோ அது தன்னால் ஆகாத காரியம் என்றார்.

இறுதியாக சிவபெருமானிடம் தஞ்சமடைந்த இந்திரன், மகனுக்காக வேண்டினான்.

சிவ பெருமானும், "சங்கரன்கோவிலில் உமையோடு தவக்கோலத்தில் இருக்கிறேன். அங்கு சென்று நாகசுனையில் குளித்துப் பூஜித்தால் பரிகாரம் கிடைக்கும். ஜெயந்தன் பழைய உருவத்தை அடைவான்' என்று அருளினார்.

காக்கை வடிவிலிருந்த ஜெயந்தனும் வழிபட்டு சுயஉருவம் பெற்றான்.




25 comments:

  1. வணக்கம்
    அம்மா

    பலகருத்துக்கள் நிறைந்த பதிவு, பதிவு அருமையாக உள்ளது ஒவ்வொரு படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. VERY GOOD MORNING !

    கோமகள் அன்னை கோமதி

    தலைப்பே அழகாக ’கோ’ ’கோ’ வாக உள்ளதில் மகிழ்ச்சி

    என் பதிவுக்குத் தாங்கள் கொடுத்திருந்த பழைய பின்னூட்டம் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்து என்னை இப்போது மகிழ்விக்கிறது. ;)))))

    >>>>>

    ReplyDelete

  3. 'http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    இராஜராஜேஸ்வரிMarch 10, 2011 at 3:01 AM

    **நான் பார்க்காத கோடிகளா என்ன ! **

    கோவிலூரில் பிறந்து

    கோபாலகிருஷ்ணன் பெயரை ஏற்று

    கோடிகளில் புழங்கி

    கோடிகோடியாய் என்றும் வாழ்க!!

    -=-=-=-=-

    வை.கோபாலகிருஷ்ணன்March 10, 2011 at 8:07 PM

    //இராஜராஜேஸ்வரி said...

    **நான் பார்க்காத கோடிகளா என்ன ! **

    கோவிலூரில் பிறந்து
    கோபாலகிருஷ்ணன் பெயரை ஏற்று
    கோடிகளில் புழங்கி
    கோடிகோடியாய் என்றும் வாழ்க!!//

    ஒரே
    ’கோ’ மயமாக எழுதித்தள்ளி விட்டீர்கள்.
    தங்கள்
    ‘கோ’பம் தணிந்து விட்டது என்பது புரிகிறது.

    இனி
    ‘கோ’லாட்டம் தான். கொண்டாட்டம் தான். ;)))))

    -=-=-=-=-

    >>>>>>

    ReplyDelete
  4. கோமதி அம்மன் தரிசனம் அற்புதம்

    ReplyDelete
  5. நம் பதிவர் திருமதி ’கோமதி அரசு’ அவர்கள் நல்லபடியாக நியூஜெர்ஸி போய்ச் சேர்ந்து அங்கிருந்து பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

    கோமதி அம்மன் பற்றிய பதிவாகையால் அந்த நம் பதிவர் கோமதி அரசு அவர்கள் ஞாபகம் வந்து விட்டது, எனக்கு. ;)))))

    >>>>>

    ReplyDelete
  6. தூக்கம் கண்களைத் தழுவுகின்றது தோழி .மீண்டும் காலையில் வந்து படிக்கின்றேன் .அழகி படங்கள் மனதோடு வசப்பட்டு விட்டன .வாழ்த்துக்கள் .இன்று வலைச்சரத்தில் தாங்களும் .
    http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_23.html

    ReplyDelete
  7. //கோழி தனது இறகுகளுக்குள் தன் குஞ்சுகளை மறைத்து, கழுகிடமிருந்து அவற்றைக் காப்பதுபோல, எமனிடமிருந்து கோமதி அம்மை தம்மைக் காக்க வேண்டும் என்கிறார் அழகிய சொக்கநாதர் இந்த அருமையான பாடலில்......!//

    ஆஹா, எவ்வளவு அழகானதோர் உதாரணம் !!!!!!

    எங்கிருந்தோ எப்படியோ பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்து பதிவினில் கொடுத்து அசத்திவிடுகிறீர்களே!

    அந்தக்கழுகு போலவே கூர்மையான பார்வைதான் உங்களுக்கும், தகவல்களைத் திரட்டிடும் விஷயத்தில்.

    திரட்டுப்பாலாக இனிக்கின்றீர்கள்..

    கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல உங்கள் பதிவு என்றால் எனக்கும் வேகமாக ஓடிவந்து வரிசையாக 7-8 பின்னூட்டங்களாவது கொடுத்தால் தான் அன்றைய பொழுது நிம்மதியாகப்போனால் போலத் தோன்றுகிறது.

    நம்மில் யார் கழுகோ ? யார் கோழிக்குஞ்சோ ?

    கோமதி அம்பாளே ....... உனக்கே வெளிச்சம்.

    >>>>>

    ReplyDelete
  8. //தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!//

    இயக்குனர் [‘மக்கள் அரங்கம்’ ] விசு அவர்கள் எடுத்த சூப்பர் படமல்லவா “திருமதி ஒரு வெகுமதி”. நான் பலமுறை பார்த்து ரஸித்துள்ள படம்.

    அதில் அடிக்கடி விசு சொல்லும் “ ஆ... ண்... டா... ள் ” டயலாக் + காட்சிகள், மிகவும் சிரிப்பூட்டுவதாக இருக்கும்.

    கிஷ்மு அடிக்கடி சொல்லும் “ பெரியவா சொன்னா ..... பெருமாள் சொன்னாப்போலே” ......... ;)))))

    நினைத்தேன்....... ரஸித்தேன்........ சிரித்தேன்.

    >>>>>>

    ReplyDelete
  9. //தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி! அவள் ஒரு வெகுமதி! அவளே அன்னை கோமதி!//

    இயக்குனர் [‘மக்கள் அரங்கம்’ ] விசு அவர்கள் எடுத்த சூப்பர் படமல்லவா “திருமதி ஒரு வெகுமதி”. நான் பலமுறை பார்த்து ரஸித்துள்ள படம்.

    அதில் அடிக்கடி விசு சொல்லும் “ ஆ... ண்... டா... ள் ” டயலாக் + காட்சிகள், மிகவும் சிரிப்பூட்டுவதாக இருக்கும். கிஷ்மு அடிக்கடி சொல்லும் “ பெரியவா சொன்னா ..... பெருமாள் சொன்னாப்போலே” ;)))))

    நினைத்தேன்....... ரஸித்தேன்........ சிரித்தேன்.

    >>>>>>

    ReplyDelete

  10. ஆடித்தபஸு போன்ற பல்வேறு தகவல்களுடன், அழகழகான படங்களுடன் இன்றைய தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

    முதலில் காட்டியுள்ள படமும், சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை உடையுடுத்திக் காட்டியுள்ள கோமதி அம்மனின் இன்னொரு படமும் மிக அழகாக உள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  11. ஒவ்வொரு ’ஆடி’யிலும் ஒவ்வொரு புதுப்புதுத் தலைப்புகளில் எழுதி, ஏற்கனவே சொன்ன விஷயங்களையே மீண்டும் நினைவூட்டும் போது, படிக்கும் நாங்களும் ’ஆடி’த்தான் போகிறோம்.

    தொடருட்டும் தங்களின் இதுபோன்ற இனிமையான [வெல்லச்] சேவை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 979 ooooo

    ReplyDelete
  12. என் அன்புக்குரிய அம்பாள் இன்று அம்பாளடியாளால் வலைச்சரத்தில் புகழ்ந்து பேசப்பட்டு இருக்கிறார்க்ள்.

    மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_23.html

    ReplyDelete
  13. அருமையான படங்களும் விளக்கங்களும் மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  14. கோமதியோர் நிறைமதி.அத்தனைப் படங்களும் அருமை

    ReplyDelete
  15. அற்புதமான கோமதியம்மன் தரிசனம்... சங்கரன்கோவிலுக்கு நேரில் சென்று வந்த உணர்வு.... நன்றி...

    ReplyDelete
  16. வணக்கம்
    அம்மா
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/07/blog-post_23.html
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  17. இனிய செவ்வாய் காலையில் கோமதி அம்மன் தரிசனம்.....

    நன்றி.

    ReplyDelete
  18. கோமதி அம்மன் தரிசனம் உங்களால் கிடைக்கப் பெற்றேன். போட்டோக்களுடன் கதையும் நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  19. கோமதி அம்மன் தரிசனமும் சிறப்புவாய்ந்த விடயங்களும் அருமை!
    அத்தனையும் அழகு!

    பதிவினிற்கும் பகிர்வினுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete

  20. மூகாம்பிகை கோயிலில் இருந்து ஆகும்பே வழியே சிருங்கேரிக்குச் செல்லும் வழியில் ஒரு சங்கர நாராயணர் கோயில் கண்டோம். பழைமையானது. அர்ச்சகரை வீட்டிலிருந்து அழைத்து வந்து பூஜைகள் செய்தோம். அங்கு பிரசாதமாக திருமண் கொடுத்தார்கள். அர்த்தநாரீஸ்வரர் பற்றிப் படித்தபோது நினைவலைகளில் மூழ்கிவிட்டேன். பகிர்வுக்கு நன்றி. .

    ReplyDelete
  21. உங்கள் அருளால் ஆடிதபசு, ஆடிசுற்று என்று ஸ்ரீ சங்கரநாரயணன் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் பற்றி அறிந்தோம்.

    நன்றி!

    ReplyDelete
  22. தலைப்பு அருமை...
    படங்களும் விளக்கங்களும் அழகு...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. nice post about sankara narayanar thanks for sharing

    ReplyDelete
  24. ஆடி தபசுக்கு சிறிய வயதில் அடிக்கடி போவோம்.
    சங்கரன் கோவிலில் இருந்து உறவினர் விழா பத்திரிக்கை, புற்றுமண் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
    உங்கள் பதிவில் அம்மன் தரிசனம் கிடைத்தது.
    கோமதி அம்மன் பதிவை படித்தவுடன் நம் பதிவர் கோமதிஅரசு அவர்கள் நினைவுக்கு வந்து விட்டது என்று திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது சாருக்கு நன்றி.

    ReplyDelete
  25. வற்றாத தெய்வீக ஊற்று ராஜேஸ்வரியின் பதிவுகள்.

    ReplyDelete