Wednesday, December 4, 2013

திருச்சானூர் பிரம்மோற்சவம்










அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு - நொடிப்பொழுதும் “அகலகில்லேன் இறையும்” அகன்றிருக்க மாட்டேன் என்று சொல்லி மிக்க விருப்பத்துடன் வஸிக்கப்பெற்ற அலர்மேல்மங்கையாம் திருமகள் உறைகின்ற  திருமார்பை உடையவனே! 
நிகரில்லாத புகழை உடையவனே! 

மேலுலகம், கீழுலகம், நடுவுலகம் என்ற 
மூன்று உலகங்களையும் உடையவனே! 

என்னை என்றும் ஆள்பவனே! 

நிகரில்லாத அமரர்களும் முனிவர்கள் கூட்டங்களும் 
விரும்பித் தொழுகின்ற திருவேங்கடத்தானே! 

வேறு கதி ஒன்றுமே இல்லாத அடியேன் உன் திருவடிகளின் 
கீழ் தஞ்சமாக வந்து அடைந்து அங்கேயே நிலையாக நிற்கின்றேன்.





திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பாஞ்சராத்ர விதிப்படி, கார்த்திகை மாதம், கொண்டாடப்படுகிறது. 
கோவில் அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றத்தை தொடர்ந்து உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ,பேரி தாண்டவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..
கோவில் ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி 
தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும்..!.
ஊஞ்சல் சேவையும்,  சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில்  பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். 

வாகன சேவைக்கு முன் ஜீயர்கள் குழு லக்ஷ்மி ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தபடி செல்ல, பல்வேறு ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் வர, தாயார் ஒய்யாரமாக மாடவீதியில் வலம் வருவார்.

பெரியசேஷ வாகனத்தில் வேணுகோபாலன் அலங்காரத்திலும், 
இரவு அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதிதேவியாகவும் வலம் வருவார்.! மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெறும்..!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்ச விழாவுக்காக நான்கு மாட வீதிகளில் வண்ணக் கோலங்கள் வரைந்து  அழகுபடுத்திருப்பார்கள்..!.
தினமும் தாயாருக்கு சுப்ரபாத சேவை முடிந்தவுடன் கோ பூஜையும் நடத்த திட்டமிட்டுள்ளது.கோயிலுக்குச் சொந்தமான யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளைப் பாதுகாக்க கோயில் நந்தவனத்தில் கஜ சாலை ஒன்று ஏற்படுத்தி உள்ளது









திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு வழங்கப்பட்ட "ஸ்ரீநிதி' என்று பெயரிட்ட குட்டி யானை


17 comments:

  1. திருச்சானூர் பிரம்மோற்சவம் கண்டு களித்தேன் சகோதரியாரே

    ReplyDelete
  2. அற்புதமான படங்கள் அம்மா.... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்கள் தயவில் அழகிய படங்கள் கண்டு களித்து கோயிலுக்குப் போன உணர்வு கிடைக்கப் பெற்றேன். அத்தனை அருமை!

    பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  4. அருமையான படங்கள். அற்புத தரிசனம்.

    ReplyDelete
  5. திருச்சானூர் பிரம்மோத்ஸவ படங்கள் எல்லாமே அழகாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  6. ஜொலித்திடும் மிகப்பெரிய சேஷ வாகனத்தில் வலம் வரும் ஸ்ரீவேணுகோபாலன் படம் நெஞ்சைவிட்டு என்றுமே நீங்காத அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  7. முதலில் எழுதியுள்ள பாடலும் அதற்கான விளக்கங்களும் மகிழ்வளித்தன.

    >>>>>

    ReplyDelete
  8. ’ஸ்ரீநிதி’ என்ற பெயரிடப்பட்ட குட்டியூண்டு யானை, நாமத்துடன் பார்க்கப் பரவஸம் அளிக்குது.

    >>>>>

    ReplyDelete
  9. சில தடவைகள் இந்தத்தாயாரை நேரில் போய் தரிஸித்துள்ளேன்.

    ஒருமுறை, குட்டியூண்டு இலைக் கிழிசலில் ஒரு ஸ்பூன் அளவு தயிர் சாதப் பிரஸாதம் அளித்தார்கள்.

    சுவை என்றால் அப்படி ஒரு சுவையாக இருந்தது. பால் மேலிட புளிப்பேதும் இல்லாத தயிர் சாத பிரஸாதம் - ஆங்காங்கே ஒருசில கடுகுகளுடன். இப்போது நினைத்தாலும் என் நாக்கே இனிக்கிறது.

    ooooo

    ReplyDelete
  10. அழகான படங்கள்.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. திருச்சானூர் பத்மாவதிதாயார் கோவில் தகவல்கள் அறிந்துகொண்டேன்.
    அழகிய படங்களுடன் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. திவ்ய தரிசனம் தங்கள் பதிவினால் கிடைத்தது. நன்றி!

    ReplyDelete
  13. திருச்சானூர் பிரம்மோத்ஸவ பகிர்வும் படங்களும்ரசிக்க வைத்தன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பத்மாவதி தாயாரின் தரிசனம் நன்று.. கண்டுகளித்தேன்....

    ReplyDelete
  15. திருச்சானூர் தேர் வைபவக் காட்சிகள் கண்டு மகிழ்ந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. திருச்சானூர் பற்றி கேல்வப்பட்டதில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete