Tuesday, January 7, 2014

சிரஞ்சீவி மார்க்கண்டேயர்.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdnbf9YqesEZhej0TXiE86VJ6XXyowvCBIVBUJWHB-PaTbFN2ieN4jplx7Wy0yLbq0-4XZBjvrVy7h-wLiYTx7FVZ4sWIvajfoRY245q7s2aDYmB6YzvZY2Y2kvQY2Ske-6-sDUot5eZGl/s400/mruthyunjaya.jpg
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் 
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோ முக்ஷீயமாம் அம்ருதாத்”

“நான் முக்கண்ணணான சிவனைத் தியானம் செய்கின்றேன். 
எனக்கு நல்ல ஜன்ம வாசனைகளையும் (பந்தங்களையும்) ஆரோக்கியத்தையும் தர வேண்டும். 
பழுத்த பக்குவமடைந்த வெள்ளரிப்பழம் போல் என்னைப் பற்றுகளிலிருந்து விடுவித்து மரண பயம் போக்கிப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.   என்பது பொருள்..

ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மார்க்கண்டேயர் அருளிய மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். 

"மார்க்கண்டர்காக அன்று மறவிபட்ட பாட்டை உன்னிப்
பார்க்கில் அன்பர்க்கு என்ன பயங்காண் பராபரமே!

என்று தாயுமான அடிகள் மார்க்கண்டேயர் வரலாற்றைக் குறிப்பிடும் போது இனி அன்பர்கள் மரணத்தைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தெளிவுறுத்துகிறார்.
தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி  அவர். 

மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். 
தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்தார்..!
 மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின்  பெருமையை நமக்கு உணர்த்துகிறது. 
எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி  மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள்,
மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் எனறால் ம்ருத்யு அல்லது மரணத்தையே ஜெயிக்கக்கூடிய மந்திரம் என்ற பொருள்.
அதாவது மரண பயத்தை அடியோடு போக்கக்கூடியது என்று பொருள்.

நூற்றுக்கணக்கான சதுர்யுகங்களுக்குப்பின், பிரளயம் வந்து உலகமே மூழ்கியது. என்றும் இறவா வரம் பெற்ற மார்க்கண்டேயர் முன்பு பிஞ்சுக் குழந்தையாய் பகவான் தோன்றினார். 

பகவான் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் இழுக்கப்பட்டார். 

சகல ஜீவராசிகளும் அங்கேயிருப்பதைக் கண்டார். 

பிரளயத்திற்கு பின்பு அங்கிருந்தே மீண்டும் உலகத்துக்கு சகல ஜீவராசிகளும் வந்தடைவதென உணர்ந்தார்.

நரநாராயணர்களாக அவதரித்த இறைவன்,
வரங்கள் பலவற்றைத் தர விரும்பினாலும்,
இறைவனின் மாயா விலாசத்தை காணவே,
மறை முனிவர் மார்க்கண்டேயர் விழைந்தார்.

வீசும் காற்றாலும், பெய்யும் மழையாலும்,
வாசம் செய்து வந்த உலகமே மூழ்கிவிட்டது!
எங்கு நோக்கினும் சுழித்து ஓடும் நீர்தான்,
எங்குமே எதுவுமே காணப்படவில்லை!

பத்துக் கோடி ஆண்டுகள் தனிமையிலே
ஒற்றையாகச் சுழன்றவர் பிறகு கண்டார்,
ஆல் இலை மேல் ஒரு அழகிய குழந்தையை;
கால் விரலை வாயில் இட்டுச் சுவைப்பவனை!

தழுவ விரும்பி அதன் அருகே சென்றவரை,
முழுதுமாக கவர்ந்தது உள் மூச்சுக் காற்று.
முழு உலகமும் கண்டார் குழந்தையினுள்!
முழுதுமாய் வெளி வந்தார் வெளி மூச்சில்.

மீண்டும் குழந்தையைத் தழுவ முயன்றவர்,
மீண்டும் தன் ஆசிரமத்திலேயே இருந்தார்!
காற்று, வெள்ளம், மேகம், மழை, சுழல்கள்
பார்த்த எல்லாம் மாயா விலாசம் அல்லவா?

மாயையின் சக்தியை வெல்வது கடினம்.
மாலவன் பூரண அருள் இருந்தால் அன்றி
மாயையை வெல்லவே முடியாது என்று
மாதவனே தன் கீதையில் உரைக்கின்றான்!

ம்ருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர், மகாலக்ஷ்மி தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்தார்.

திருத்துழாய் வனத்தில், பூமியில், தாயாரையே மகளாய்ப் பெற்றார்.

பூமியிலிருந்து கிடைத்ததால் பூமிதேவி என்று திருநாமம். அவள் திருமணப் பருவம் அடைந்தாள்.

திருமால் முதியவர் வேடமிட்டு மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். மார்க்கண்டேயர், ‘‘அவள் குழந்தை. மிகச் சிறியவள். உப்பு போட்டு சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது " என்று கூறினார்.

அப்போது முதியவர், அவருக்கு ஸ்ரீமந் நாராயணனாகக் காட்சி தந்தார். அதைக்கண்ட மார்க்கண்டேயர், மனம் மகிழ்ந்து, திருமணத்துக்குச் சம்மதித்தார். 

பெருமாள், "உங்கள் பெண் உப்பில்லாமல் சமைப்பதையே நாம் ஏற்றுக்கொள்வோம், மகாலக்ஷ்மியான இவளை மணம் புரியவே யாம் வந்தோம்" என்று கூறி பூமிதேவியை மணந்தார்.

திருவிண்ணகர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் ஒப்பற்றவனாய் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் ஸ்ரீநிவாசனாய், பூமி தேவி நாச்சியார் வலப்பக்கம் மண்டியிட்டு வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் வணங்கும் திருக்கல்யாணக் கோலத்துடனும், இடப்பக்கம் மார்க்கண்டேய முனிவர் மண்டியிட்டு கன்னிகாதானம் செய்து தரும் கோலத்திலும் திவ்யமாக சேவை சாதிக்கின்றார்.

திருமலை திருவேங்கடத்தானுக்கு தமையனாராக  கருதப்படுகின்றார். எனவே திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட வேண்டுதல்களை இங்கே நிறைவேற்றலாம். எனவே பூலோக வைகுந்தமான திருவிண்ணகரை தென் திருப்பதி என்றும் அழைப்பர்.

ஆகாச நகரம் திவ்ய தேசம் விஷ்ணு க்ருஹமே அதாவது திருமாலின் இல்லமே விண்ணகர் ஆனது...15 comments:

 1. மார்க்கண்டேயர் மற்றும் சப்த மார்க்கண்டேயர்கள் பற்றிய விவரம் அருமை. திருவிண்ணகர் -உப்பிலியப்பன் கோவில் -விவரங்களும் அருமை.

  ReplyDelete
 2. மார்க்கண்டேயன் மகிமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. ஒப்பிலியப்பனின் ஆனந்த தரிசனம்.. அருமை!..

  ReplyDelete
 4. தரிசனத்திற்கு மிக்க நன்றி அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. Interesting and Elaborate account of Life of Sage Markandeya.. The post reflects your Devotion, Determination and Dedication in bringing out the best of spiritual matters..

  ReplyDelete
 6. Interesting and Elaborate account of Life of Sage Markandeya.. This post reflects your Devotion Dedication and Determination in bringing out the best of spiritual matters..

  ReplyDelete
 7. மார்க்கண்டேயர் பற்றி அறிந்து கொண்டேன்...படங்கள் எல்லாமே சிறபாக இருந்தன... தூங்கும் குழந்தை கண்ணனையும், சிவனையும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கத் தோன்றியது...

  ReplyDelete
 8. மார்க்கண்டேய சரித்திரம் என்பது புரிகிறது.

  மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

  படங்களைக் கண்களில் ஒத்திக்கொண்டேன்.

  மார்க்கண்டேயரைப் போலவே சிரஞ்சீவியாக நோய் நொடியின்றி அனைவரும் வாழ பகவான் அருள் புரியட்டும்.

  ReplyDelete
 9. எல்லாம் வல்ல எம்பெருமான் எல்லோரையும், மார்க்கண்டேயரைக் காத்தது போல் காப்பாற்றட்டும்.
  திருவிண்ணகரம் /உப்பிலியப்பன் திருக்கோவில் செய்திகள் அருமை.

  ReplyDelete
 10. ஸ்லோகங்களையும் அதற்கான விளக்கங்களோடு தந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 11. மார்கண்டேயர் குறித்த தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 12. மார்க்கண்டேயர் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை.

  ReplyDelete
 13. நாளை காலை தித்திக்கும் பதிவோ ? ;))))))

  தித்திக்கும் திருமாலிருஞ்சோலை அழகர்.. மணிராஜ் இல் இராஜராஜேஸ்வரி - 56 நிமிடங்கள் முன்பு

  அழகு பொருந்திய திருவென்னும் சொல்லோடும் சோலையென்னும் சொல்லோடும் தொடர்ந்த மொழியாகிய ‘திருமாலிருஞ்சோலை’ என்னும் நாமம்’ என பரிமேலழகர்,போற்றும் செழிப்பான திருமாலிருஞ்சோலை அழகரை .தன் சீடர்களுடன் ராமானுஜர் திருவரங்கம் செல்லும் வழியில், மதுரைக்கு அருகில் உள்ள அழகர்மலை தலத்தில் எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாளை தொழுது அவர் திருவடி பணிந்து நின்றார். நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை ....... ;)))))

  ReplyDelete
 14. திருக்கடையூர் திருத்தலத்தோடு சம்பந்தப்பட்ட மார்க்கண்டேயர் கதை மட்டும் எனக்குத் தெரியும். தங்கள் பதிவின் மூலம் இன்ன பிற விவரங்களைத் தெரிந்து கொண்டேன். சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete