Wednesday, January 8, 2014

கோவர்த்தனம் - கொற்றக் குடை’





அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி*

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி*

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*
bala krishna
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
thanjavur14
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி*

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*

என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


மகாபலி உலகங்களையெல்லாம் தன் கட்டுக்குள் வைத்திருந்த அக்காலத்தில், உன் திருவடிகளால் உலகங்களை அளந்து, அவற்றை அவனிடமிருந்து இரந்து பெற்றவனே ! உன் திருவடிகள் வாழியே !

தென் இலங்கைக்கு வானரப் படையெடுத்துச் சென்று, இராவணனையும் அசுர கூட்டத்தையும் அழித்தவனே ! உன் வலிமையும், திறமையும் வாழியே !

வண்டிச் சக்கர வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து அழித்தவனே ! உன் கீர்த்தி வாழியே !

கன்றின் உருவெடுத்து வந்த வத்சாசுரனை எறிதடியாக்கி, விளாங்கனி மர வடிவில் நின்ற கபித்தாசுரன் மீது வீசியெறிந்து, அவ்விரு அரக்கர்களையும் ஒரு சேர மாய்த்தவனே ! உன் திருவடிக் கழல்கள் வாழியே !

கோவர்த்தன மலையை குடை போல் தூக்கி நிறுத்தி, தேவேந்திரன் உண்டாக்கிய பெருமழையிலிருந்து ஆயர்பாடி மக்களைக் காத்தவனே ! உன் குணம் வாழியே !

பகைவர்களை வென்று அழிக்கின்ற, உன் கையிலுள்ள 
வேலாயுதம் வாழியே !

ஆச்சார்யனுமான தந்தையின் பல்லாண்டுக்கு நிகராக, துயிலெழுந்து மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கண்ணபிரானுக்கு பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறாள்!

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும்  பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

அடியவருக்கு பரமன் மீதுள்ள பேரன்பின் வெளிப்பாடே 
இந்த பல்லாண்டு பாடுதல். 
வைணவத்திலுள்ள சிறப்பே இந்த மங்களாசாசனம் தான். 
சிறியவரும் பெரியோரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தலாம்!

"குன்றைக் குடையாக எடுத்து" பெருமழையிலிருந்து ஆயர்களைக் காத்தபோது, கண்ணனின் (இந்திரனை அழிக்கப்புகாமல் பொறுத்த!) பெருந்தன்மையுடனான கருணையை, "குணம் போற்றி" என்றாள் ஆண்டாள்!
இப்படி, ஒவ்வொரு போற்றுதலிலும், ஒரு 
அழகான பொருள் உள்ளது, இப்பாசுரத்தில்!

கோபியர்கள் மாயக் கண்ணனை, "அடி போற்றி, திறல் போற்றி, 
புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி" 
என்று ஆறு வகையாய் (தங்கள் நாவால்) மங்களாசாசனம் 
செய்து அறுசுவை பெறுகின்றனர் !

இப்பாசுரத்தில் பரமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம் (போற்றி) செய்யப்படுகிறது. அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி" என்று கோபியர் பாடும்போது, பரமபதத்தில் ஸ்ரீவைகுந்தனாக, அனைத்துலகங்களையும் ரட்சிக்கும் சர்வேஸ்வரனாக, வெண்கொற்றக் குடையின் கீழ் எழுந்தருளியிருக்கும், பரந்தாமனின் கல்யாண குணங்கள் போற்றப்பட்டுள்ளன.


படங்கள் பலவும் உடைப் பாம்பு  அரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்

தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்

அடங்கச் சென்று இலங்கையை ஈடு அழித்த
அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை

குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே!

கண்ணன் கோவர்த்தன கிரியைத் தூக்கும் அழகை மிக அற்புதமாக வர்ணிக்கிறது பெரியாழ்வார் பாடல். 
தன் கையில் இருக்கும் விரல்கள்  ஐந்தையும் ஒரு மலர்போல விரித்து கண்ணன் அந்த மலையைத் தாங்குகிறானாம்! 

அப்போது கண்ணனின் கை, ஆதிசேஷனைப் போலவே இருந்தது’ 
என்று பெரியாழ்வார் கற்பனை செய்கிறார். 

காரணம், ஆதி சேஷனுக்குப் பல தலைகள் உண்டு. அவை எல்லாம் 
சேர்ந்து இந்த பூமியைத்  தாங்கி நிற்கின்றன.
கண்ணன் வாழ்கின்ற ஆயர்ப்பாடியின் மீது இந்திரனுக்குக் கோபம். 

தன் கட்டுப்பாட்டில் உள்ள மேகங்களை அங்கே ஏவுகிறான். ஊரெல்லாம் பெருமழை பொழிகிறது. மழை விடாமல் பெய்யப்  பெய்ய, அங்குள்ள மக்கள், மாடுகள் மற்ற உயிரினங்கள் எல்லாம் துன்பப்படுகின்றன.
இதைப் பார்த்து மனம் இரங்கிய கண்ணன் அருகே இருந்த கோவர்த்தன மலையையே ஒரு குடையாகக் கையில் பிடித்துத் தூக்குகிறான். 

அதற்குக்  கீழே எல்லாரும் சரண் அடைந்து உயிர் பிழைக்கிறார்கள். 
‘கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கினான் என்பது  
அவனுக்குப் பெருமை, 

ஆனால், கண்ணனால் தூக்கப்பட்டது என்பது அந்த மலைக்குப் 
பெருமை அல்லவா? 

பகவான் கை படுவதற்கு அந்த மலை  என்ன பாக்கியம் செய்ததோ’ 
என்று நெகிழ்கிறார் பெரியாழ்வார். 

கோவர்த்தன மலையின் பெருமைகளைப் பல பாடல்களாக எழுதுகிறார்.  ஒவ்வொன்றும் மிகச் சுவாரஸ்யமான, அருமையான காட்சிகள்
‘கோவர்த்தனம் என்பது வெறும் மலை அல்ல, 
அது ஒரு கொற்றக் குடை’ என்கிறார் பெரியாழ்வார்.

‘பெரிய மன்னர்கள் வரும்போது அவர்களுக்கு  
மற்றவர்கள் குடை பிடிப்பார்கள். 

ஆனால், கண்ணன் தனக்குத் தானே கோவர்த்தன மலையைக் 
கொற்றக் குடையாகத் தாங்கிப் பிடிக்கிறான்! 
ஆக, கண்ணனின் விரல்கள் ஒவ்வொன்றும், ஆதிசேஷனின் ஒரு தலையைப்போல் பெரியாழ்வாருக்குத் தெரிகிறது. ‘

அவற்றால் கோவர்த்தன கிரியை  இப்படி அழகாகத் தூக்குகிறானே!’ என்று வியந்து நிற்கிறார்.

எத்துணையோ மலைகள் இருக்க, கண்ணன் ஏன் கோவர்த்தன கிரியைத் தூக்கவேண்டும்? அதற்கு அப்படி என்ன சிறப்பு?

அந்த மலைமீது குரங்குக் குடும்பங்கள் இருக்கின்றன.

அவற்றில் பெண் குரங்குகள் தங்களுடைய சிறு குழந்தைகளைக் கதைச் சொல்லி, பாட்டுப் பாடித் தட்டிக் கொடுத்துத் தூங்க வைக்கின்றன. அதுவும் அனுமன் கதை!

ஆமாம்! இலங்கை நகரத்துக்குள் அதிரடியாக நுழைந்து, 
சீதாப் பிராட்டியைச் சந்தித்து, ராமனின் கணையாழியைக் கொடுத்து, அவள் உயிரை மீட்டுத் தந்து, அதன்பிறகு அங்கிருந்த அடாவடிப் பேர்வழிகளோடு சண்டை போட்டு ஜெயித்து, ராவணன் போன்ற அரக்கர்களின் கர்வத்தை அடக்கிய  ஆஞ்சநேயரின் வீர தீர சாகசங்களைத் தான் அந்தக் குரங்குகள் தங்கள் குட்டிகளுக்குச் சொல்கின்றன.

நாமெல்லாம் நம்முடைய குழந்தைகளுக்குப் புகழ் பெற்ற மனிதர்களின் கதையைச் சொல்வதில்லையா? அதுபோல, வானரக் குலத்தில் 
புகழ் பெற்ற  வானரம் அனுமன்தானே? 
தாய்க் குரங்குகள் அவனுடைய புகழைப் பாடி ‘நீயும் அனுமன் மாதிரி வரணும்’ என்று சொல்லித் தங்களுடைய குழந்தைகளைத் 
தூங்கவைப்பதுபோல் அழகாகக் கற்பனை செய்கிறார் பெரியாழ்வார்
ராமன் வேறு, கிருஷ்ணன் வேறா? 
ராமனுடைய அன்புக்குரிய  தொண்டனாகிய அனுமனின் பெயரை அந்தக் குரங்குகள் பாட, அதனால் அந்த மலையே புனிதம் பெற்றுவிட்டது. ஆகவேதான் கிருஷ்ணன் அந்த  மலையைக் கையில் தூக்கி மேலும் பெருமைப்படுத்திவிட்டான்!





27 comments:

  1. ஆண்டாள் திருப்பாசுரம் அழகாக -
    விளக்கம் செய்யப்பட்டுள்ளது.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

      அழ்கான இனிய கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த நன்றிகள்...

      Delete
  2. இந்த பாசுரத்தை இங்கு கண்டது போல் எங்கும்
    காண முடியாது.

    என் வலை வழியே உங்கள் பதிவை எல்லோரும்
    முதற்கண் படிக்க வேண்டி இருக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

      இனிய கருத்துரைகளுக்கும் ,
      வலைவழி இணைப்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்...

      Delete
  3. Fantastic post highlighting the Greatness of Lord Krishna and His lifting of Mount Govardanagiri..
    Lord Krishna, in this lila emphasises that He is our Supreme Emperor..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

      அழ்கான இனிய கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த நன்றிகள்...

      Delete
  4. கோவர்த்தனமலை மிகவும் பெருமை வாய்ந்தது தான். கோவிந்தன் குடையாக பிடித்தபெருமை அந்த மலைக்கு உண்டே! அருமையாக சொன்னீர்கள்.
    அந்த கோவர்த்தனைத்தை வழிபட்டு கோவரத்தன கிரிதாரியை வணங்கி வந்தோம். கிரிவலம் வந்தோம் . அன்று அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம். அன்று போல் இன்றும் மகிழ்ந்தேன் இந்த பதிவைப் படித்து.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

      அழ்கான மகிழ்ச்சியான இனிய கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த நன்றிகள்...

      மகிமைகள் நிறைந்த கோவர்த்தன கிரிவல வழிபாட்டுக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

      Delete
  5. கோவர்த்தன மலையின் சிறப்பை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். படங்களும் மிக அருமை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete
  6. ஆண்டாள் பாசுரம் அழகாக, சிறப்பான படங்களுடன் விளக்கியுள்ள விதம் அருமை. கோவர்த்தன மலையின் சிறப்பை தங்கள் பதிவின் மூலம் கூடுதலாக அறிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      அருமையான அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete
  7. ஒவ்வொரு படமும் அழகு... அற்புதம்... விளக்கமும் அருமை... நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete
  8. ஆண்டாளின் போற்றிப் பாசுரத்தின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமான புராணக்கதைப் படங்கள். வலைப்பதிவினில் புதுமைதான். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      புதுமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete
  9. படங்கள் அத்தனையும் அழகு. கண்களில் ஒற்றிக்கொண்டேன். அந்த கோவர்த்தனகிரிதாரி இந்த ஏழை எளிய கோபாலகிருஷ்ணனுக்கும் தன் அருள் பார்வையைக் குடையாகப்பிடித்து, தெளிவான பார்வையைத் திருப்பித்தரட்டும் என வேண்டி விரும்பி பிரார்த்தித்துக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்..!

      Delete
  10. அடியேன் சோதனையை சந்திக்க இருக்கும் நாள் : 23.01.2014 வியாழன் காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள். அந்த நேரத்தில் எனக்காக தாங்கள் தயவுசெய்து தங்கள் இல்லத்தில் பூஜை அறையில் ஓர் நெய்தீபம் ஏற்றி விசேஷமாகப் பிரார்த்தித்துக்கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      விஷேச பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறேன்...

      Delete
    2. //விஷேச பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறேன்... //

      என் மனதுக்கு மிகவும் ஆறுதலான வார்த்தைகள். இதுபோதும். மிக்க நன்றி.

      Delete
    3. இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....!

      Delete
    4. //இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....! //

      ;)))))

      குருவருளாலும், இறையருளாலும், எனக்கு இதுநாள் வரை, என் இரு கண்களும் மிகத்தெளிவாக, கண்ணாடி ஏதும் அணியாமலேயே, பொடிப்பொடி எழுத்துக்களைக்கூட படிக்க முடிந்து வந்தது.

      இதைப்பார்த்து எல்லோருமே ஆச்சர்யப்பட்டதும் உண்டு.

      தூரத்தில் இருப்பதை தெளிவாகப் பார்க்க மட்டுமே, எப்போதாவது அதுவும் வெளியே செல்லும்போது மட்டும், கடந்த 10 ஆண்டுகளாக கண்ணாடியைத் தனியாக கையில் / பையில் எடுத்துச்செல்வேன்.

      கடந்த 15 நாட்களாக மட்டுமே இடது கண் பார்வை மங்கலாகத்தெரிகிறது. இப்போதைக்கு வலது கண் எப்போதும்போல பளிச்சென்றே தெரிகிறது.

      இருப்பினும் பிறகு ஒரு நாள் வலது கண்ணுக்கும் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என டாக்டர் தம்பதியினர் கூறியுள்ளனர்.

      மேம்பட்ட நவீன விஞ்ஞான சிகிச்சைகளில் இது ஓர் சாதாரண ஆபரேஷன் மட்டுமே என எல்லோரும் சொல்கிறார்கள். சமீபத்தில் ஆபரேஷன் செய்துகொண்ட பலரையும் பேட்டி கண்டு விட்டேன். எல்லோருமே நம்பிக்கை அளிக்கிறார்கள்.

      இருப்பினும் கண் விஷயமாக - பார்வை விஷயமாக இருப்பதாலும், அதுவும் எனக்கே எனக்கு என்பதாலும், சற்றே கவலையாக உள்ளது.

      சமயபுரம் மஹமாயீ உள்பட எல்லாக் குலதெய்வங்களுக்கும், எசைந்து முடிந்து வைத்து விட்டு 22.01.2014 மாலை 4 மணிக்குள் அங்கு போய் ஆஸ்பத்தரியில் அட்மிட் ஆக உள்ளேன்.

      23.01.2014 இரவே டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதன்பிறகும் கொஞ்ச நாட்கள் STRAIN செய்துகொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்.

      பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது.

      அன்புடன் VGK

      Delete
  11. படங்கள் ஒவ்வொன்றும் அருமை அதைவிட தகவல்கள் பாசுர விளக்கம் ஆஹா அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      அழகிய அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      Delete
  12. அருமையான பாசுரம்! அழகான விளக்கம்! குழந்தைகளுக்கு பாசுரங்களை கற்றுக்கொடுக்கவேண்டியது நமது கடமைதான்! நன்றி!

    ReplyDelete
  13. பெரியாழ்வாரின் பாசுரத்தையும், ஆண்டாளின் திருப்பாவையையும் சேர்த்துச் சொல்லி அழகழகான படங்களுடன் விவரித்து இருப்பது அருமை!

    ReplyDelete