Tuesday, January 14, 2014

மங்களம் பொங்கும் மங்களப்பொங்கல் திருநாள்


தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பாலும் வெள்ளம் போலப் பாயலாம்,

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங் கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்


இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். 
தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.பொங்கல் திருநாள்..
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.
என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றும் பொன் நாள்..!

பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

 மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், தைப்பொங்கல் விழாவாக  “பொங்கல் திருநாள்’ காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், மிகவும் புனிதமானதாகும். 

சூரியனின் வடதிசை நோக்கிய பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது நாட்டிற்கு கோடையின் தொடக்கமாகும். 

கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. 

அதன் தொடக்கம், இந்த “மகர சங்கரமணம்’ என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது. 

 'சூரியனின் வடதிசைப் பயணம் ஆரம்பமாகும் உத்தராயண காலத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

கேரளாவில், இந்நாள் "மகர சங்கராந்தி'. அன்று ஒளி வடிவமாக சாஸ்தாவை மக்கள் வணங்குகின்றனர். சபரிமலையில் விசேஷ பூஜை நடக்கிறது.

மற்ற தெய்வங்களை நாம் சிலை வடிவிலேயே பார்க்கிறோம். ஆனால், சூரியன் கண்கண்ட தெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார்அதிகாலையில் சூரியனைப் பார்க்காத கண்கள் வீணே என்கின்றனர் மகான்கள்.

சூரிய நமஸ்கார பாடல் ( சுட்டியில் பார்க்கலாம் ,கேட்கலாம் ..)

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி...!
அருள்பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி...!

தாயினும் பரிந்து சால  சகலரை அணைப்பாய் போற்றி...!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி...!

தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி...!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி...!

ஞாயிறே... நலமே வாழ நாயகன் வடிவே போற்றி...!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி...!

28 comments:

 1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
  பொங்கலோ.. பொங்கல்!..
  அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 6. தங்கள் குடும்பத்தினர்களுக்கும்,தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. என்றும்போல இன்றும் சிறப்பான பதிவு.தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. என் மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......

  ReplyDelete
 10. வித விதமான பொங்கல் பானைகள் உள்ளம் கவர்கின்றன.
  பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி

  ReplyDelete
 12. முதலில் காட்டியுள்ள அநிருத் முதல் இறுதியில் காட்டியுள்ள கோலங்கள் வரை அனைத்தும் அழகோ அழகு. கரும்புச்சாறாய் இனிக்கின்றன.

  >>>>>

  ReplyDelete
 13. பேரன் அநிருத் + அவன் தாயார் [வயிற்றில் தங்கள் பெயருள்ள என் பேத்தியுடன்] + 2 பிள்ளைகள் என வீடே அமர்க்களமாக உள்ளது.

  இப்போது 1.30 க்கு மேல் தான், ‘பொங்கலோ பொங்கல்’ சொல்லி அடுப்பில் பொங்கல் ஏற்றினோம். இனிமேல் அது வெந்தபின்தான் பூஜை + நைவேத்யம் செய்ய உள்ளோம்.

  பசி தாங்காது என்பதால் மடத்துப்பஞ்சாங்கப்படி இந்த ஏற்பாடுகள்.

  பாம்புப்பஞ்சாங்கப்படி மாலை 4.30 க்கு மேல் தான் பொங்கல் வைக்கணுமாம்.

  >>>>>

  ReplyDelete
 14. பொங்கல் அடுப்பில் வைத்தபின் தான் இன்றைய உத்தராயண மாதப்பிறப்பு மகர சங்கராந்தி தர்ப்பணமும் செய்து முடித்தேன்.

  அதனால் தாமதமான வருகை. மீண்டும் பூஜை வேலைகள் உள்ளன.
  முடிந்தால் மீண்டும் பிறகு வர முயற்சிக்கிறேன்.

  "BEST WISHES FOR A VERY VERY HAPPY PONGAL"

  Bye for Now.

  அன்புடன் VGK

  ReplyDelete
 15. .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா!!

  ReplyDelete
 17. நன்றி! எனது உளங்கனிந்த
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி அக்கா.

  ReplyDelete
 19. அருமையன பாடல் பகிர்வுக்கு நன்றி.
  படங்கள், மற்றும் செய்திகள் மிக அருமை.
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. https://www.youtube.com/watch?v=Hz2mvabZdZo

  sooriya namaskaram song here.

  meenachi paatti

  ReplyDelete
 21. இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 22. பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
  எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
  இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 23. //இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி. சந்தோஷம்.

  //பொங்கலன்று இனிப்பான ஜாங்கிரி பற்றிய பகிர்வுகள்..//

  ஏதோ இலையில் முதன்முதலாக வைக்கும் சொட்டுப்பாயஸம் போல !

  //ஜாங்கிரிகளைப் பார்த்ததும் எடுத்து ஜாக்கிரதையாக கோர்த்து அனுமனுக்கு மாலையாக்கிப் போட விருப்பம் வந்தது ..//

  உயர்ந்த
  உன்னதமான
  உள்ளமல்லவா
  உங்களுக்கு .... ;)

  ReplyDelete
 24. //கதை மாஸ்டர் ஸ்வீட் சாப்பிடமாட்டாரோ..!//

  ;))))) புரிந்து கொண்டேன். மகிழ்ச்சி. ;)))))

  கொடுப்பவர் கொடுத்தால் எதையும் சாப்பிடுவார், இந்தக் கதை மாஸ்டர் !

  விமர்சனங்கள் மறக்காமல் கொடுங்கோ, அதுவே எனக்கு ஸ்வீட்டுக்கு மேல் இனிப்போ இனிப்பாக, டேஸ்டோ டேஸ்டாக, என்றும் மனதுக்கு இனிமையாக இருந்து மகிழ்ச்சியளிக்கும். ;)

  ReplyDelete

 25. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!


  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 26. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 27. வணக்கம் தோழி ...!
  ஊரையே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய பொங்கல் நிகழ்வுகள் படங்கள் பானைகள் அனைத்தும் அருமை .....!
  என் உளம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் இல்லத்தாருக்கும் உரித்தாகட்டும்....!

  ReplyDelete