Saturday, January 11, 2014

கோலாகல வைகுண்ட ஏகாதசி விழா



https://play.google.com/store/apps/details?id=com.relizen.lordbalaji
இந்த சுட்டியில் திருப்பதி பெருமாளை ஆராதிக்கலாம்..!

 கதிரவன்குணதிசைச்சிகரம் வந்தணைந்தான் 
கனவிருளகன்றது காலையம் பொழுதாய்

மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்து வந்தீண்டி

எதிர்திசை நிறைந்தனரிவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலிலலை கடல்போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

மார்கழி மாத சுக்ல பக்ஷ-  வளர்பிறை  ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். 

மார்கழி மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது
அரங்கனான நம் பெருமாள் சிவப்பு நிற ரத்ன அங்கியில்  
கஸ்தூரி திலகத்துடன், ரத்னங்கியில் சிவப்பு, வெள்ளை, பச்சை, முத்து , பவளம் என்று எல்லா நிற மணிகளும் மின்னி ஒளிர  

மெல்லிய சல்லாத் துணி இடையினில் உடுத்தி, 
கிளி மாலையுடன் , கோல விளக்கே , கொடியே, விதானமே என்று ஆண்டாள் பாடியபடி அழகாக எம்பெருமான் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளுவார்   அரங்கன் ..
பட்டர் வம்சத்தினரின் வேத விண்ணப்பம் கண்டருளி 
அரையர்கள் திருவாய்மொழி தொடங்க 
இரத்தின அங்கியில் சிம்ம கதியில்  வைகுண்ட பேற்றை வழங்க ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடனே எழுந்தருளுவது கண்கொள்ளாக்காட்சி ..!
வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்..!!
பகல் பத்து நிகழ்ச்சியின் நிறைவு நாளில் நம்பெருமாள் 
மோகினி அலங்காரத்தில் மோகனமாக தரிசனம் த்ருவார்..!
நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை உள்பட பல்வேறு ஆபரணங்கள்    அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 2-ம்  பிரகாரத்தை வலம் வந்து நாழிகோட்டான் வாசல் வழியாக 3-ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக ரெங்கா... ரெங்கா...' என்ற பக்தி கோஷத்துடன் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை வந்தடைவார்..! 
ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். 
இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன்  அதிகாலை மூலஸ்தானம்    சென்றடைவார்..1
 அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் மற்றும் உற்சவர் வைர அங்கி, ரத்ன அங்கி, முத்தங்கி, புஷ்ப அங்கி அல்லது சிறப்பு அலங்காரத்தில் இன்று சேவை சாதிக்கின்றனர். 


[ratnam.jpg]





30 comments:

  1. அன்புடையீர்,

    உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html

    தங்கள் தகவலுக்காக!

    நட்புடன்

    ஆதி வெங்கட்
    திருவரங்கம்

    ReplyDelete
  2. சிறப்பு... இனிய வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770

    --------------------------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
    தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
    http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
    பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இனிய வைகுண்ட ஏகாதஸி நல் வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  5. இன்று காலை எழுந்ததும் தங்கள் பதிவினில் மிகவும் ஆச்சார்யமான பெருமாள் தரிஸனம் கண்டு அகம் மகிழ்ந்து போனோம்.

    >>>>>

    ReplyDelete

  6. ஸ்திரவாரம், சனிக்கிழமையன்று, அதுவும் வைகுண்ட ஏகாதஸியன்று, பெருமாளையும் தாயாரையும் தரிஸிக்கும் பாக்யம், தங்களால் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    >>>>>

    ReplyDelete
  7. சுட்டி கொடுத்துள்ளது மேலும் சிறப்பு.

    அங்கும், திருப்பதிக்கே சென்று ஆனந்தமாக சொர்க்க வாசல் திறப்பிலிருந்து அபிஷேகங்கள், தீப ஆராதனைகள், மாலை சாற்றுதல், ஆபரணங்கள் அணிவித்தல் என பலப்பல விஷயங்களை, பேக்-கிரவுண்டு ம்யூஸிக்குடன் கண்டதில் மேலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    >>>>>

    ReplyDelete
  8. ஸ்ரீரங்கம் ரத்தின அங்கி சேவை சும்மா ஜொலிக்கிறது, தங்கள் பதிவினில் ;)))))

    >>>>>

    ReplyDelete
  9. அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    எல்லாப்படங்களையும் தொட்டுத்தொட்டுக் கண்களில் பலமுறை ஒத்திக்கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  10. அச்சுதா, அனந்தா, கோவிந்தா, கேஸவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதிசூதனா, திருவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேஷா, பத்மநாபா, தாமோதரா எனச்சொல்லிச்சொல்லி மகிழ்ந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  11. இனி தான் ஸ்நானம் செய்துவிட்டு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்போகிறேன்.

    இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    சந்தோஷம். தாங்கள் மேலும் பல்லாண்டுகள் சகல செளபாகங்களுடன் நீடூழி வாழ்க, வாழ்கவே !!

    அன்புடன் VGK

    oo oo oo oo

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது ... மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    VGK

    ReplyDelete
  13. மிக அழகிய பதிவு
    இனிய நல்வாழ்த்துக்கள் ராஜி
    நாங்கள் தங்கள் நல்வாழ்த்துக்களுடன் அரங்கனை சிறப்பாக தரிசனம் செய்து வந்தோம் ராஜி
    அன்புடன் ராஜசரஸ்வதி

    ReplyDelete
  14. வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. காட்சிகளும் விவரிப்பும் கனிரசம்போல் அருமையாக உள்ளது தோழி .
    வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள் உங்களுக்கும் இறைவன் எல்லா
    நலனும் வளமும் தந்து வாழ வைப்பான் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  16. அழகான - அருமையான தரிசனம்!.
    அரங்கநாதனின் திருவருள் பெற்று
    அனைவரும் இன்புற்று வாழ்க!..

    ReplyDelete
  17. அம்மா வைகுண்ட ஏகாதசி அன்று அருமையான படங்களின் தரிசனம்...

    ReplyDelete
  18. tHANKS rAJARAJESWARI. ELLAAP PERUMAAlAIYUM DHARISAM SEYTHU KODUTHTHiRKAl.kodi puNNiya ungaLukku.

    ReplyDelete
  19. Fabulous post with Fantastic pictures celebrating the occasion of Vaikunta Ekadasi..
    The picture of Lord Ranganatha adorning Ratnangi is simply superb..

    ReplyDelete
  20. perumal dharsanam janma chaapalyam.
    subbu thatha.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  21. உங்கள் பதிவின் மூலம் இதன் அங்கி அலங்காரம் மின்ன ரங்கனை சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். நன்றி.

    ReplyDelete
  22. நேரில் சென்றாலும் காண இயலாக் காட்சி
    தெளிவான படங்கள்
    அதுவே உங்கள் பதிவின் மாட்சி.
    காண்போர் மனத்தை கொள்ளை
    கொள்ளும் வலைப் பட்சி
    நன்றி.

    ReplyDelete
  23. வைகுண்ட ஏகாதேசி வாழ்த்துக்கள். இன்றைக்கு எல்லாப் புகைப்படத்திலும் , "HAPPY VAIKUNDA EKATHESI" என்று எழுதியிருப்பது, வித்தியாசமாக இருக்கிறது.

    ReplyDelete
  24. வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவில் படங்களும் பகிர்வும் மிக அழகு! நன்றி!

    ReplyDelete
  25. கண் நிறைந்த சேவை!

    ReplyDelete
  26. arumaiyaana blog madam I never forget to see your blog daily, thodarga ungal deiviga pani. Nandri Vanakkam. Nandhini Thanikachalam.

    ReplyDelete
  27. வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள். நேரில் சென்றால்கூட இப்படிப்பட்ட தரிசனம் கிடைக்காது. படங்களும் விவரங்களும் அருமை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  28. VERYGOOD AND NICE PICTURE .PERUMAL COME OUR EYE. THANK FOR YOUR KAIGARAM.

    ReplyDelete
  29. PUNIAM GOOD PICTURE. ENA THAM CHAI THAN ETHA PADATHI KANA.

    ReplyDelete
  30. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete