Sunday, April 6, 2014

தங்கிய தங்கத் தருணங்கள்....!






குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே




ஸ்ரீதர்ஷன்
Displaying image.jpegDisplaying image.jpeg
using his hair electricity to hang balloons--little scientist 
I think the little one also enjoying :)




அழகுநிலையம் செல்லும் வாரிசுகளை வசைபாடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த என்னை வலுக்கட்டாயமாக அங்கே அழைத்துச்சென்று அமரவைத்தார் மகன்..

தலை முடி எங்கும் கிளிப்புகள் நிறைந்திருக்க வெள்ளை துணி போர்த்தப்பட்டு  முகத்தில் வெள்ளை மாஸ்க்கும் கண்களில் வட்டமாக வெட்டிய வெள்ளரிக்காய் துண்டமுமாக அமர்ந்திருந்த உருவத்தைப்பார்த்து நானொன்றும் பயத்தால் அலறவில்லை..!
ஃபேஸ்பேக் போட்டால் சிரிக்கக்கூடாதாம் முகத்தை அசையாமல் வைத்திருக்கவேண்டுமாம்.. கொடுமைதான்..
அதைவிட புருவத்தைத் திருத்துகிறேன் என்று நூலால் புருவத்தை வெடுக் எனப் பறிக்கும் அலங்காரமும் (சித்ரவதை ..!??) நடந்துகொண்டிருந்தது..
குளிர்சாதன அறையில் தலைமுடிகளை பிரித்து சீப்பினால் கோதி இயந்திரத்தால் உலர்த்தி இசைக்கேற்ப ஆடிக்கொண்டு கிளிப் போடும் நேர்த்தியைப் பார்த்தால் நாய்வாலைக்கூட நிமிர்த்திவிடுவார்போல தோன்றியது..!

நான் கால் மசாஜ்மட்டும் செய்துகொள்ள சம்மதித்தேன்.. 
சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்த பெண் ஒருவர் சுடுநீரில் கால்களை  அமிழ்த்தி சிறிதுநேரம்  வைத்திருந்த பிறகு ,ஸ்கிரப் செய்து ,ஷாம்பூ போட்டு கால்களை தூய்மைசெய்து நகம் வெட்டி , பேக் போட்டு , சடக்கு எடுத்து சிச்ரூசை செய்ததில்  கால்களின் வீக்கம் காணாமல் போயிருந்தது ..
இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க சிரமப்பட்டு நடந்துகொண்டிருந்த நான் கனமில்லாமல் மேகத்தில் நடந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன்..

அந்தப்பெண்ணின் நேர்த்தியான அழகுபடுத்தலுக்குப் பாராட்டுதல்களும் நன்றியும் சொல்லி வந்தேன்.. 

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பெடிக்யூர் செய்துகொண்டால் கால்களில் வெடிப்புகள் வராது ..என்று விடை கொடுத்தாள் அந்தப்பெண்..

ஆக அழகு நிலையம் செல்வது புத்துணர்ச்சிக்கும் , 
ஆரோக்கியத்திற்காகவும் உதவும் ...

ஸ்ரீதியா...!
Inline image 1PhotoPhoto: Kaalai vanakkam.. Go0d m0rning friendz...

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி


சித்திரைத் திருவிழா

திருச்செந்தூர் ஆலயத்தின் அர்ச்சகர் இல்லத்திருமண அழைப்பு..!



24 comments:

  1. சுகமான தங்கிய தங்கத் தருணங்கள்! எத்தனை நேரம் நாம் அழகுநிலையத்தில் இருந்து மீண்டு வந்தாலும், ந்மது கண்ணாடியில் தெரிவது அதே முகம், அதே கண்கள்.

    குழந்தைகள் படம் அருமை!


    ReplyDelete
  2. நமது எண்ணங்களின் தன்மையைப் பொருத்தே வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
    உண்மைதான் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. அகத்தின் அழகு தான் முக்கியம்... குழந்தைகள் படங்கள் மனதை கவர்ந்தன... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  4. வணக்கம் அம்மா
    தங்கள் கருத்துகள் அனைத்தும் மிக அழகு. அகத்தின் அழகு தான் உண்மை அழகு. மத்ததெல்லாம் மற்றவர்களுக்காக நாம் போட்டுக் கொள்ளும் பொய் வேடங்கள்.

    ReplyDelete
  5. முதல் காணொளியில் AC SWITCH PLUG POINT COVER ஐ, அந்தக்குழந்தை தொட்டு இழுக்கும்போது எனக்கே ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டு துடித்து விட்டேன்.

    பிறகு வளைக்கரம் ஒன்று அருகே இருக்கின்றது என்பதை அறிந்த பிறகே என் மனதுக்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

    எங்கள் இல்லத்து வாலுகளாலும் அடிக்கடி இதே தொல்லைகள் தான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் .. கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..

      காணொளி பார்த்ததும் ஆபத்து என பதறிவிட்டேன்..

      பார்த்துக்கொண்டிருப்பது படத்தில் என்பதையும் மறந்து குழந்தையை எடுக்க விரைந்து எழுந்து பேசியதை மகன் மீண்டும் காணொளியாக்கி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்..

      Delete
  6. இரண்டாவது அசையும் படத்தில் அந்தக்குழந்தையின் டான்ஸ் மிகவும் ரஸிக்க வைப்பதாகவே உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. மூன்றாவது படத்தில் [காணொளியில்] மீண்டும் தங்கள் பேரன் தன் கொலுசுகள் அணிந்த பிஞ்சுக்கால்களை மடித்துக்கொண்டு, முழங்கால்களை முன்னால் நீட்டிக்கொண்டு, அதன் மேலேயே ஒய்யாரமாக அமர்ந்து தன் விழிகளால் தங்களின் கவன ஈர்ப்பினை மேல் நோக்கிப்பார்த்து .... அடடா ... அழகோ அழகு தான். ;)

    இதுபோல அமரும் குழந்தைகள் பெரும்பாலும் தவழ்வது இல்லை என நான் ஓர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளேன்.

    குப்பறிக்கும், நீஞ்சும், பிறகு தவிழ்ந்து செல்லாமலேயே உட்கார்ந்து விடும். எதையாவது பிடித்துக்கொண்டு நிற்கும். பிறகு சில தப்படிகள் வைத்து நடக்கும். பிறகு துணிந்து ஓடக்கூடும்.

    இந்த பற்பல நிலைகளில் தவழுதல் என்பது மட்டும் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. கொழுகொழுக் குழந்தைகள் எல்லாமே பெரும்பாலும் இப்படித்தான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இல்லத்தில் குழ்ந்தைகள் யாரும் தவழ்வதில்லை -நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என அரவிந்த்குமாருக்கு குறை..

      எனவே எதையாவது பிடித்து நடக்க முயற்சிக்கும் குழந்தைகள் முன் தவழ்ந்து தவழ்ந்து காட்டுவார்..

      உடனே அவர்களும் பின்னாலேயே தவழ்ந்து சென்று மகிழ்விப்பார்கள்.! ஆனால் தவழ்வதில் ஆர்வம் குறைவுதான் .. மாடிப்படிகளில் ஏறுவதிலும் , ஏணியைப்பற்றி ஏற முயற்சிப்பதிலும் , ஏதாவது மின் சாதனங்கள் -
      குறிப்பாக பிளக் - சாக்கெட் என விளையாடுவதிலும் ஆர்வம் அதிகம்.. எந்த நேரமும் கண்காணிப்பு அவசியம்..!

      Delete
  8. சின்னக்குழந்தையின் முடியிலே பலூனைத் தேய்த்து மின்சக்தியை வரவழைத்து அதை சுவற்றிலே ஒட்டிடும் வருங்கால விஞ்ஞானி அவர்களின் படமும் ரஸிக்க வைத்தது.

    இது இன்றைய அநிருத் + ஆதர்ஷ் நிலைமையை ஒத்துப்போகிறது.

    >>>>>

    ReplyDelete
  9. தலையணியை தூக்கிப்போட்டு, மேலே ஏறி அதனை எட்டிப்பார்த்து, அதன் மேலேயே தானும் தொப்பென்று விழும் மொட்டைத்தலையன் சூப்பர்.

    ஜேஷ்டைகளில் அவன் அப்படியே அநிருத்தை ஒத்திருக்கிறான்.

    ஆனால் அநிருத்துக்கு அடர்த்தியான முடி. அடிக்கடி முடிவெட்ட அழைத்துச்செல்ல வேண்டியதாக உள்ளது.

    இடதுபுறம் முடி வெட்டி விட்டு வலதுபுறம் வெட்டுவதற்குள் மீண்டும் இடதுபுறம் முடி வளர்ந்து விடுகிறது ;)

    முடி வளர்ச்சியில் அப்படியொரு வேகம். முடிபூராவும் மூளையுள்ளவனாகவும் இருந்து வருகிறான். ;)

    >>>>>

    ReplyDelete
  10. தங்களின் காலடிகளைப் பற்றி, பாதபூஜைகள் செய்யும் பாக்யம் பெற்ற சிக்கிம் மாநிலப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். ;)

    >>>>>

    ReplyDelete
  11. சொர்க்கலோக சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அல்லவோ அனைவரும் அழகு நிலையங்கள் செல்கின்றார்கள் !! ;)))))

    >>>>>

    ReplyDelete
  12. சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்று வந்தேன். வயதான பல பெண்மணிகளும் பளிச்செனத் தோன்றினார்கள்.

    உலக அழகிகள் போட்டிக்கு வந்தவர்கள் போல வரிசையாக மேடையில் தோன்றினார்கள்.

    எப்படி? என்று என் வயதை ஒத்த ஒருவரிடம் அப்பாவித்தனமாக நான் ஆச்சர்யமாக விசாரித்தேன்.

    அவரின் பதில்:

    ”எல்லோருமே மத்யானம் 11 மணிக்கு எங்கோ புறப்பட்டுச் சென்றனர். இப்போ சாயங்காலம் 5 மணிக்குத்தான் திரும்ப வந்துள்ளனர்.

    ஏதோ அழகு நிலயமாம். பிழைக்கத்தெரிந்தவர்கள் வைத்துள்ளார்கள். ஏகப்பட்ட பணம் செலவு.

    இருப்பினும் எல்லாக்கிழவிகளும் ஆளுக்கு 10 வயது குறைந்தாற்போல ஆகிவிட்டனர்”

    என்று சற்றும் சிரிக்காமல் விளக்கினார்.

    இதைக்கேட்ட எனக்குத்தான் சிரிப்புத் தாங்க முடியவில்லை.

    >>>>>

    ReplyDelete
  13. கலர் கலர் பந்துகளில் புகுந்து விளையாடி வாலாட்டும் நாய் அனிமேஷன் நல்லா இருக்குது.

    துபாயில் ஓர் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் நுழை வாயிலில் குழந்தைகளுக்காக இதுபோல கலர் கலரான லக்ஷக்கணக்கான பந்துகளைக் குவித்துள்ளனர்.

    அந்தக்குழந்தைகளின் முதுகில் [சட்டையில்] நம் கைபேசி எண்ணை ஒட்டி விட்டு, அவர்களை அங்கேயே விளையாடச்சொல்லி விட்டு, நாம் நிம்மதியாக ஷாப்பிங் செய்யவே இந்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    முதுகில் சுலபமாக ஒட்டும் தாள் அவர்களே தந்துவிடுகிறார்கள். சப்பென அவை குழந்தைகளின் சட்டையில் ஒட்டிக்கொள்ளும். அவர்களை அங்கு விட்டுச்செல்ல தனியாக பணம் தர வேண்டும்.

    எல்லாமே ஒருவித புதுமையான வியாபார யுக்திகள் தான்.

    >>>>>

    ReplyDelete
  14. இடையில் 4 படங்களும் கடைசியில் 3 படங்களும் திறக்கவே இல்லை. ஏதோ திறந்தவற்றை மட்டும் நான் கண்டு களித்தவற்றை மட்டும் பற்றி இங்கு கருத்தளித்துள்ளேன்.

    அதுவே ஜாஸ்தியாகி விட்டது. அதனால் நான் இப்போ எஸ்கேப்.

    oo oo oo oo oo

    ReplyDelete
  15. குழந்தைகளின் வால்தனம் எல்லாமே ரசிக்கக்கூடிய விஷயங்கள்...

    சுகமாக தங்கிய தருணங்களை மிக நேர்த்தியாக இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள்பா..

    அழகுநிலையத்தில் போய் கால்கள் மட்டும் மசாஜ் செய்துக்கொண்டு வந்தது மேகத்தில் நடந்தது போன்றதொரு உணர்வை தந்தது உணர்ந்தேன்.


    அழகுப்பா...

    ReplyDelete
  16. வாண்டுகளின் அட்டகாசங்கள் அருமை
    குழந்தை பிளக்கைபிடுங்கி விளையாடும் விளையாட்டு ஆபத்தானது
    படப் பகிர்வு கண்ணை கொள்கிறது

    ReplyDelete
  17. வாலுகளின் காணொளி அருமை.

    ReplyDelete
  18. காணொளிகளை ரசித்தேன்.....

    படங்களும் அருமை.

    ReplyDelete
  19. விஸ்வா,ஸ்ரீதியா,(ஸ்ரீதர்ஷன் படம் ஓபன் ஆகல) ஸோ..க்யூட்..மழலைகளின் குறும்புதனங்கள் பார்க்க அலுப்பே வராது.நாள்முழுக்க பார்க்கலாம்.
    மசாஜ் செய்வதால் புத்துணர்ச்சி ஏற்படுவது 100%உண்மை.அதுவும் பாதங்களுக்கு செய்தால் முழு உடம்புக்கும் செய்தமாதிரி ஆகிவிடும்.பாதத்திலும்,கைகளிலும் எல்லா உறுப்புகளின் புள்ளிகள்point
    இருப்பதாக வாசித்தும்,கேட்டும் இருக்கிறேன். அழகான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  20. இந்தப் பதிவைப் பார்த்ததும் நானும் ஒன்று கூற வேண்டும்.
    தாய்லாந்தில் நான் முழு உடலிற்கும் எண்ணெய் மசாஜ் செய்தேன்.
    அதைக் கணவரும். அனுபவிக்க விட ஆசையாக இருந்தது.
    இறுதியில் பாதம் மசாஜ் செய்ய சம்மதித்து 3-4 தடவை செய்தார்.
    எத்னையோ இறுக்கங்கள், பிரச்சனைகள் இதன் பின்பு விலகி விட்டதாக கணவர் மகிழ்ந்தார்.
    உற்கள் பதிவு மிகச் சிறப்பு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com/2014/04/04/4-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-4/

    ReplyDelete
  21. நீங்களும் அழகு நிலையத்திற்கு போய் வந்து விட்டீர்களா அம்மா?

    குழந்தைகள் படம் ஒவ்வொன்றும் மிக அழகு,, அருமை.

    ReplyDelete