Thursday, August 14, 2014

ஸ்ரீ ஐஸ்வரிய மஹா கணபதி
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி, கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்,

இன்றைய சமூக வாழ்வியல் சூழலில் சிக்கித்தவிக்கும்,  
குறை தீர்க்க  கிடைத்த சர்வ ரோக நிவாரணி , உய்விக்க வந்த      
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.

கருணைக்கடலாகிய ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் அருள் அள்ள அள்ளக் குறையாத கற்பக மேரு. எண்ணற்ற அரும்பெரும் ஆற்றலை நமக்குத்தரும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை அதிகாலையில் வணங்கி வந்தால் , காரிய சித்தியும் குடும்ப வாழ்வில் அமைதியும் வளமும் ஏற்படும்., அனைத்து ஐஸ்வரியமும், சுபிட்சமும் உண்டாகும்.

அன்னை அபிராமபுரம் - மந்தைவெளி வழித்தடத்தில், சிருங்கேரி மடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி ஆலயம்!
மூலவர் உச்சிஷ்ட மஹா கணபதி;
உப மூர்த்தியாக எழுந்தருளியிருப்பவர் வல்லப கணபதி! 

இவர்கள் தேவியுடன் எழுந்தருளியிருப்பதால்,  
ஞானமும் செல்வமும் அளிக்க வல்லவர்கள்! 

அருகிலேயே தனி சந்நிதியில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அமைந்துள்ளார். 
இவர், ஆயுளும், ஆரோக்கியமும், வீர்ய விஜயமும் அளிப்பவர்.


ஆலயத்தில் சிறு மேடையில், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பிரண்டுமாக ஒன்பது தலைகளுடன் நவக்கிரக நாகரைத் தரிசிக்கலாம். 

நவக்கோள்களையும் குறிக்க, ஒன்பது தலைகளுடன் உள்ள அபூர்வ நாகர் திருமேனியுடன், நாகேஸ்வரர் மற்றும் நாகாம்பிகை சிலைகளும் உள்ளன. 

ஜாதக ரீதியான தோஷ பரிகாரங்கள், சாந்திகள் செய்ய இந்த நாகரை ஆராதிக்கலாம். பாலாபிஷேகம் செய்யலாம். பாலன்னம் நிவேதனம் செய்வது நல்லது. 

அரை நூற்றாண்டுக்கும் மேலாக பக்தர்களின் அபிமான ஆலயமாக 
திகழ்ந்து வருகிறது..19 comments:

 1. வணக்கம்
  அம்மா.

  சிறப்பான தகவலுடன் அழகிய படங்களும் நன்றுபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ஸ்ரீ ஐஸ்வர்ய மஹா கணபதியான
  என் தொந்திப்பிள்ளையாரப்பாவுக்கு
  என் வந்தனங்கள்.

  >>>>>

  ReplyDelete
 3. Replies
  1. முதல் படத்தில் அசைந்து அசைந்து எரியும் விளக்குகள் அருமை.

   Delete
 4. இரண்டாம் படம் இன்னும்
  திறக்கவே இல்லையாக்கும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மேலிருந்து இரண்டாவது படமான விநாயகர் இப்போ காட்சியளிக்கிறார்.

   அதில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு தீபங்கள் ஜகத்ஜோதியாக எரிகின்றன.

   அதைத்தவிர இரண்டு பக்கமும் இரண்டு பெரிய பாத்திரத்தில் சாம்பிராணி புகை வேறு போட்டுள்ளீர்கள்.

   மனம் மணக்கிறது. ;)

   >>>>>

   Delete
  2. ’உச்சிஷ்ட கணபதி சாதக மந்த்ரம்’ காணொளியாகக் கொடுத்து மேலும் அசத்தியுள்ளீர்கள்.

   இப்போது அதனைப் பொறுமையாகப்பார்க்க எனக்கு நேரம் இல்லை.

   [இதுவரை வெளி வேலைகளால் ஒரே அலைச்சல்.]

   பிறகு தனிமையில் போட்டுக்கேட்டு ரஸிப்பேனாக்கும்.

   oo

   Delete
 5. மூன்றாம் படத்தில் கலசத்திற்குள்
  விநாயகர் ...

  எப்படித்தான் பானைக்குள்
  அந்தப் பானை வயிற்றோனையே
  அமுக்கி அடக்கினீர்களோ !

  சுப லாபம் தான் !
  நம் இருவருக்கும்.

  >>>>>

  ReplyDelete
 6. மகத்தான கணபதி காயத்ரி மந்த்ரம்
  கொடுத்துள்ளது ஜோர் ஜோர் !

  >>>>>

  ReplyDelete
 7. உச்சிஷ்ட மஹா கணபதி ஆலயத்திற்கே
  அழைத்துச்சென்று, அனைத்தையும்
  விளக்கோ விளக்கென விளக்கியுள்ளீர்கள்.

  மிக்க மகிழ்ச்சி

  >>>>>

  ReplyDelete
 8. ‘கணபதி’ என்றே ஓர் இடம் உள்ள
  ஊரில் வசிப்பவராயிற்றே ............

  பிள்ளையார் சதுர்த்தியும்
  வரப்போகிறதே ...............................

  பிறந்த நாளும் கூடவே ;)))))
  59 - 60 - 61 ???

  பிள்ளையாரப்பாவைப் பற்றிய
  பதிவுகளைப்பற்றிக் கேட்கவும்
  வேண்டுமோ !

  பாவம் ..... என் பிள்ளையார் ! ;)

  இன்னும் தங்களிடம் என்னென்ன
  பாடு படப்போகிறாரோ !!

  >>>>>

  ReplyDelete
 9. அனைத்துக்கும் பாராட்டுக்கள்.

  அன்பான நல்வாழ்த்துகள்.

  நன்றியோ நன்றிகள்.

  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  ;) 1368 ;)

  oo oo oo oo

  ReplyDelete
 10. ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதியைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
  அனைத்து படங்களும் மிக அருமை.

  ReplyDelete
 11. ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாகணபதியைப் பற்றிய அழகிய படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 12. உய்விக்க வந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கி மகிழ்வோம்.
  எல்லோர் மனக்குறைகளையும் நீக்கட்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ஶ்ரீ ஐஸ்வர்ய மஹாகணபதின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். நன்றி

  ReplyDelete
 14. ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் தகவல்கள்,படங்கள் அனைத்தும் சிறப்பு. நன்றிகள்.

  ReplyDelete
 15. அழகிய படங்களில் கணபதியை ஆசை தீர தரிசித்தோம்.

  ReplyDelete
 16. ஐஸ்வர்ய மகாகணபதி அறிந்தேன் உணர்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete