Wednesday, August 6, 2014

முளைக்கொட்டுத் திருவிழா உற்சவம்Photo: கோயி‌ல்க‌ளி‌‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌தீப‌ம் ஏ‌ற்று‌ம் வ‌ழக்கமு‌ம் ஒரு ‌சிற‌ப்பு:

கோயி‌ல்க‌ளி‌‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌தீப‌ம் ஏ‌ற்று‌ம் வ‌ழக்கமு‌ம் ஒரு ‌சிற‌ப்பு அ‌ம்சமேயாகு‌ம். ‌தீப‌ம் எ‌ரி‌ந்த எ‌ண்ணெ‌ய் பசை (ஆ‌வி நிலையில்) கருவரை‌யி‌ன் சுவ‌ர்க‌ளி‌ல் உ‌ள்ள க‌ல்‌லி‌ன் ‌மீது படியு‌ம், அ‌த்துட‌ன் க‌ற்பூர‌ம் எ‌ரி‌ந்த சுட‌ர் படி‌ந்து கொ‌ள்ளு‌ம். இவை க‌ல்‌லி‌ன் குண‌த்துட‌ன் சே‌ர்‌ந்து இறைவனை வ‌ழிபட கருவறை‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் அனைவரு‌க்கு‌ம் இது ஆரோ‌க்‌கிய‌த்தை அளி‌க்க வ‌ல்லதாகும்.

#AadimaaPhoto: ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். 

அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? 

பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.


Photo: கோயி‌ல்க‌ளி‌‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌தீப‌ம் ஏ‌ற்று‌ம் வ‌ழக்கமு‌ம் ஒரு ‌சிற‌ப்பு:

கோயி‌ல்க‌ளி‌‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌தீப‌ம் ஏ‌ற்று‌ம் வ‌ழக்கமு‌ம் ஒரு ‌சிற‌ப்பு அ‌ம்சமேயாகு‌ம். ‌தீப‌ம் எ‌ரி‌ந்த எ‌ண்ணெ‌ய் பசை (ஆ‌வி நிலையில்) கருவரை‌யி‌ன் சுவ‌ர்க‌ளி‌ல் உ‌ள்ள க‌ல்‌லி‌ன் ‌மீது படியு‌ம், அ‌த்துட‌ன் க‌ற்பூர‌ம் எ‌ரி‌ந்த சுட‌ர் படி‌ந்து கொ‌ள்ளு‌ம். இவை க‌ல்‌லி‌ன் குண‌த்துட‌ன் சே‌ர்‌ந்து இறைவனை வ‌ழிபட கருவறை‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் அனைவரு‌க்கு‌ம் இது ஆரோ‌க்‌கிய‌த்தை அளி‌க்க வ‌ல்லதாகும்.

#Aadimaa
ஆடி வெள்ளிக்கிழமைகளில் வளையல்களால் சிங்கார சேவை அலங்காரம் கண்டு மகிழ்கிறோம்..!

 சாகம்பரியாக அன்னையைக் காய், கனிகளால் அலங்கரிப்பார்கள். 

 முளைப்பாரி என்னும் முளைக்கொட்டால் அம்மனை வழிபடுவார்கள்.!

மதுரையின் முளைக்கொட்டுத் திருவிழா உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் படுகிறது..!
Photo: ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இன்று வெள்ளி அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் பவனி.
ஆடி மாத ஆயில்ய நக்ஷத்திரத்தில் கொடியேற்றுவிழா தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம் நடக்கும்!

எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம்  முளைக்கொட்டு உற்சவம்..!

மதுரை எப்போதுமே ஒரு பெரிய கிராமம் என்றே பெயர் பெற்றது. ஆகையால் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு அவளுக்கு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திக்கிறார்கள். 
அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு

 ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப் படும். பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தருவாள். 

வரும் முளைப்பாரிகளை எல்லாம் அம்மனுக்கு எதிரே வைத்திருப்பார்கள். பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

கடைசி நாள் கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைப்பதோடு அம்மனுக்கு உற்சவம் நிறையும்.
உலக உயிர்களின் சுகவாழ்விற்குக் காரணமாக உள்ள ஆரோக்கியகாரகன் என்னும் கதிரவன் எமனுக்குரிய தென் திசையில் பயணம் செய்யும் காலத்தில் அம்பிகை தானே உலக மக்களைக் காப்பாற்ற வேண்டும். !
ஆடியில் வீசும் காற்றும் விளாசுகிற மழையும் அதிகமாக வரக் காணலாம். கால் என்கிற காற்றைக் கட்டுப்படுத்துகிற சக்தியில் ஒரு ரூபம் காளி.!

ஆடித் தேர்பவனியை கண்டு தரிசிப்பவர்க்குப் பிறவித்துன்பம் நீங்கும்

ஆடியில் மகிழ்ந்தாடி வரும் அம்மனை வரவேற்க ஊர்மக்கள் ஒன்றுகூடி ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், உடுக்கு சிலம்பம், புலியாட்டம், கம்பி சுற்றுதல் மற்றும் கிராமப்புற கலைகளை அம்மன் முன் ஆடிக்காட்டி மகிழ்வித்தபின் ஆலயத்திற்கு சந்தோஷம் பொங்க அனுப்பி வைக்கப்படுகிறாள்.


Photo: யாருக்கெல்லாம் கிளி பிடிக்கும்?
Photo: மதுரை மீனாட்சி அம்மன் நாளை மாலை ஊஞ்சலில் காட்சி.

Photo: மருது சகோதரர்களால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட திருவாச்சி. பண்டிகை நாட்களில் திருவாச்சு முழுக்க தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கும் அழகே தனி.

16 comments:

 1. இவை எல்லாம் புதிய விடயம் எனக்கு தோழி!
  அருமையான படங்களும் விடயமும் முளைப்பாரி கேள்விப்படவே இல்லை.மிக்கநன்றி பதிவுக்கு. வாழ்த்துக்கள் ,...!

  ReplyDelete
 2. அழகான படங்களுடன் இனிய பதிவு.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 3. மிகவும் சிறப்பான பகிர்வு.அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
 4. கடைசி இருபடங்களின் கோபுரங்கள் தரிசனக் காட்சி கொள்ளை அழகு போங்கள்! காணக் கண் கோடி வேண்டும்!

  ReplyDelete
 5. ’முளைக்கொட்டுத் திருவிழா உற்சவம்’
  என்ற தங்களின் தலைப்பே அருமை.

  முளைக்கொட்டுத் திருவிழா பார்க்க நான் மிகவும் மெனெக்கெட்டு வந்துள்ளேனாக்கும்.

  >>>>>

  ReplyDelete
 6. படங்கள் அத்தனையும்
  வழக்கம்போல
  அழகோ அழகு !

  >>>>>

  ReplyDelete
 7. பதிவுலகிலிருந்து எங்கோ
  காணாமல் போய் உள்ள
  சாகம்பரி தேவியை
  இங்காவது நன்கு
  தரிஸிக்க முடிந்ததில்
  மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

  >>>>>

  ReplyDelete
 8. விளக்கங்கள் ஒவ்வொன்றும்

  விசித்திரமாய்

  வித்யாசமாய்

  விதிகளுக்குட்பட்டு

  விதி

  விலக்கேதும் இன்றி

  வியப்பளிப்பதாக உள்ளன.

  விடிய

  விடியப் பார்த்து மகிழ்ந்தாலும்

  விடி

  விளக்காய்

  விடி வெள்ளியாய் உவகை அளிப்பவைகளே !

  >>>>>

  ReplyDelete
 9. Replies
  1. பசுமையான முளைகட்டிய பயிர்கள் / செடிகள் உள்ள தொட்டிகளைப் பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

   Delete
 10. ஆடிக்காற்றினில்
  ஒவ்வொரு
  பதிவினிலும்
  சும்மாக்
  கும்மியடித்துக்
  குதூகலப்
  ப டு த் தி த்தான்
  வருகிறீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 11. பொதுவாக
  ஆடி அரைவட்டை
  என்று சொல்லுவார்கள்.

  அதாவது ஆடிமாதம்
  அனைத்து பிஸிநெஸ்களும்
  ’டல்’ அடிக்குமாம்.

  அதனால் தான்
  ஆடித்தள்ளுபடி
  என்ற அறிவிப்புகள்
  அடிக்கடி அவர்களால்
  வெளியிடப்படும்.

  ஆனால் தங்கள் பதிவுகள் பிஸிநெஸ் மட்டும்
  ஆடி மாதத்தில் தான் சக்கை போடு
  போட்டு வருகின்றன.

  என் அம்பாளின் பிஸிநெஸ் அல்லவா !
  ஆடியாவது ஆவணியாவது .........
  என்றுமே 365 நாட்களுமே .....
  அதில் ஓர்
  தனி சிறப்புத்தான் ;)))))

  >>>>>

  ReplyDelete
 12. அனைத்துக்கும்
  என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்,
  அன்பான இனிய நல்வாழ்த்துகள்,
  நன்றியோ நன்றிகள்.

  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  ;) 1360 ;)

  oo oo oo oo

  ReplyDelete
 13. முளைக்கொட்டு உற்சவம் அறியாத தகவல்! அழகிய படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 14. சில நாட்களாக இணையம் ஒத்துழைக்கவில்லை சகோதரியாரே
  அதனால் தங்களின் சில பதிவுகளை பார்க்காமல் விட்டிருப்பேன்
  இனி தொடர்வேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 15. அனைத்து செய்திகளும் அறியாதது. அருமை. கடைசி இரண்டு படங்கள் சூப்பர்...!

  ReplyDelete