Thursday, August 21, 2014

உற்சாகத்திருவிழா உறியடிஉற்சவம்

"
"ராமகிருஷ்ண கோவிந்தேதி'' 

 நாமசங்கீர்த்தன பிரவாஹத்தில் ஸ்ரீராமநாமா கங்காநதியாகும், அதனுடன் சேர்ந்த கிருஷ்ண நாமா யமுனை நதியாகும், அவைகளுடன் சேர்ந்த கோவிந்தநாமா சரஸ்வதி நதியாகும். இந்த நாமசங்கீர்த்தன வெள்ளத்தில் மனத்தாலும், நாவாலும், உடலாலும் ஸ்நானம் செய்யலாம்


காயதி வனமாலீ மதுரம்
கேசவ மாதவ கோவிந்தேதி
கிருஷ்ணானந்த ஸ்தாநந்தேதி 

ராதா ரமண ஹரே ராமேதி
ராஜு வாக்ஷ கனச்யா மேதி 

கருட கமன நந்தகஹஸ்தேதி 
கண்டித தசகந்தர மஸ்தேதி 

அக்ரூரப்ரிய சக்ரதரேதி
ஹம்ஸ நிரஞ்சன கம்ஸஹரேதி


.வனத்தில் மலர்ந்த மாலை அணிந்த கண்ணன் பாடுகிறான்; இனிமையாய்ப் பாடுகிறான், மலர்ந்து மலர்களின் மணமும், மாமலையிலிருந்து வீசும் தென்றலும், முனிவர்கள் பலரும் சென்று தேடுகின்ற யமுனை நதிக் கரையில் அவன் பாடுகிறான். கிளி, குயில்கள் கூவும் காவினில், கருத்த மேகக் குழல்கள் படியும் யமுனை நதிக்கரையில் பாடுகிறான். கழுத்தில் துளசி மாலையணிந்து மனதைக் கவருகின்றவனும், தாமரையில் பிறந்த பிரம்மன் வழிபடுபவனும், நற்குணங்கள் வதிகின்றவனும், வீரர்வழித் தோன்றலான கிருஷ்ணன், முரளி எனப்படும் தன் புல்லாங்குழலில் இனிமையை வழியவிட்டுப் பாடுகிறான்.


திருவிழாவினால் பெருமை கொள்ளும்  வரகூரில்  நடைபெறும் மிகப் பிரசித்தி பெற்றது உறியடி உற்சவம் . .

வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். 

வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளைத்தான் தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர்

ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள்  நடைபெறும் உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்) வரகூர் கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். 

பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும்.  பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.

தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். 

பாகவதர்கள், நாராயண தீர்த்தர்  இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள். 

10 அடி உயரத்தில்  மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். 
மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.

வழுக்குமரம் ஏறுதல். உயராமான ஒரு தேக்கு மரத்தை வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து விடுவார். மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம்
விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.

இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. 

கிருஷ்ண அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. 

உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.

உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து கிருஷ்ண லீலா தரங்கிணி என்னும் அற்புத சங்கீதத்தை வடிவமைத்த   
நாராயண தீர்த்தரையே சாரும். 


23 comments:

 1. சிறு வயதில் கண்டு ரசித்த உறியடி உற்சவ நிகழ்ச்சிகள்
  மனதில் நிழலாடுகின்றன சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 2. உறியடி உறசவ கோலாகலங்களுக்குள் நாங்களும் இருப்பது போன்றதொரு உணர்வு!.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 3. உறியடி குறித்த பகிர்வும் படங்களும் அருமை அம்மா...

  ReplyDelete
 4. உறியடி உற்சவத்தின் தத்துவத்தை தெரிந்துகொண்டேன். அழகான படங்கள் உறியடி உற்சவ தகவல்கள் சிறப்பு.
  முதல் காணொளியில் க்யூட் ஆக குழந்தை கிருஷ்ணன். உறியடி ஊரில் பார்த்தது. காணொளியில் காண ஊர் ஞாபகம். சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. குழந்தைகளின் உறியடிப்படம் ரசித்தேன்.
  தகவல்களிற்கு நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. உறியடி விளக்கம் கண்டேன் இன்று
  உள்ளம் உவகை கொண்டேன் நன்று.

  ReplyDelete
 7. முதல் காணொளியில் அப்படியே
  மெய்மறந்து நான் சொக்கிப்போனேன்.

  எப்படி, எப்படி, எப்படி ?

  அசல் கிருஷ்ணனாக அலங்காரங்களும்
  அசைந்து அசைந்து அதன் நடிப்பும் ......
  ரொம்பப்பிரமாதம்.

  இதெல்லாம் தங்களால் மட்டுமே முடியும் ! ;)

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. என் மூத்த மருமகளுக்கும் எனக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமுண்டு.

   நாங்கள் இருவரும் சேர்ந்து என் பேரன் பேத்திகளை, அவர்களின் சிறிய வயதினில், பல போஸ்களில் இதுபோல நிறைய வீடியோ எடுத்துள்ளோம்.

   இப்போதும் அவற்றை அடிக்கடி போட்டுப்பார்த்து மகிழ்வதுண்டு.

   அவை என்றும் நீங்காத நினைவலைகளே ! ;)

   Delete
  2. என் மூத்த மருமகளுக்கும் எனக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமுண்டு.

   நாங்கள் இருவரும் சேர்ந்து என் பேரன் பேத்திகளை, அவர்களின் சிறிய வயதினில், பல போஸ்களில் இதுபோல நிறைய வீடியோ எடுத்துள்ளோம்.

   இப்போதும் அவற்றை அடிக்கடி போட்டுப்பார்த்து மகிழ்வதுண்டு.

   அவை என்றும் நீங்காத நினைவலைகளே ! ;)

   Delete
 8. குட்டிக்கிருஷ்ணன் போன்ற அழகான முகம்.

  தலையில் மயில் தோகைக்கொண்டை

  நெற்றில் அழகான சிறிய அளவில் கிரீடம்

  கழுத்தில் தொங்கிடும் ஏராளமான ஆபரணங்கள்

  இடுப்பினில் சிகப்பு நிறத்தில் புட்டா போட்ட பட்டுப்பீதாம்பரம் [அதுவும் கச்சமாகக் கட்டியுள்ளது - அவிழாமல் - அற்புதம்]

  என அனைத்தையும் அழகாகத் திட்டமிட்டுச் செய்துள்ளீர்கள்.
  முன்னால் மஹாமுரடான மேஜை ... ஆஹா ... அற்புதமான திட்டமிடல்.

  பாட்டியின் பதிவுக்காக அந்தக்குழந்தை எப்படியெல்லாம் தன் முழு ஒத்துழைப்பினைக் கொடுத்துள்ளது.

  மனதினில் தங்கிடும் தங்கத்தருணத்தைப் பார்த்து வியந்து போனேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வீடியோ பதிவுசெய்யும் தங்களை அந்தக் குழந்தை அடிக்கடி திரும்பிப்பார்ப்பது வெகு அழகாக உள்ளது.

   Delete
 9. உற்சாகத்திருவிழா !
  உறியடி உற்சவம் !!

  நல்லதோர் தங்கமான தலைப்பு

  >>>>> இடைவேளை >>>>>

  ReplyDelete
 10. ’ராமகிருஷ்ண கோவிந்தேதி’

  மிக அழகான வாக்யம். ;)

  ’ராமகிருஷ்ணன்’ என்பது தங்களின்
  அன்புத் தந்தையின் பெயராக இருக்கக்கூடும்
  என்பது என் யூகம்.

  >>>>>

  ReplyDelete
 11. உரியடி பற்றிய காணொளியும் கண்டேன்.

  ஆயிரம் தான் சொன்னாலும்
  பிரத்யக்ஷ தெய்வத்தை நம்
  கண்முன் நிறுத்தியுள்ள தங்களின் அந்த
  முதல் காணொளி போல வருமா ? ;)))))

  கொடுத்து வைத்த மகராஜி
  என் _ _ _ _ ! ;)

  >>>>>

  ReplyDelete
 12. அனைத்துப்படங்களும், விளக்கங்களும்

  ஸ்லோகங்களும், அதன் பொருள்களும்

  தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் சொல்லி

  மிகவும் மகிழ்வித்துள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 13. உறியடிக்கு பிரபலமான வரகூருக்கு
  அடியேன் பலமுறை சென்று வரும்
  பாக்யம் பெற்றுள்ளேன்.

  நீங்காத சில நினைவலைகளை என்
  கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள்.

  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 14. கடைசியில் யானைக்கும் பரிவட்டமா ?

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

  அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

  வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

  பதிவின் ஆரம்பமே ரிச்சோ ரிச்சு ....... [RICH]

  குழந்தைக்கும், தங்களுக்கும் முதலில்
  திருஷ்டி சுற்றிப்போடச் சொல்லுங்கோ !

  ;) 1375 ;)

  oo oo oo oo

  ReplyDelete
 15. உரியடி உற்சவ தகவல்களும் படங்களும் மனதை கவர்ந்தன! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. நம்மூர் உறியடிக்கும் மும்பையில் கோவிந்தர்களின் உறியடிக்கும் வேற்றுமைகள் பல. நம்மூர் உறியடி விழா எல்லோரும்பங்கு பெஅக் கூடியது. மும்பையில் அதற்கான விற்பன்னர்களால்தான் முடியும் படங்களும் விளக்கமும் நன்று.

  ReplyDelete
 17. சென்ற வருடம் திருவரங்கத்தில் உறியடி உற்சவம் கண்டு ரசித்தேன். இந்த வருடம் பயணத்தில்!

  படங்கள் அனைத்தும் கண்களைக் கவர்ந்தன.

  ReplyDelete
 18. வெண்ணெய் தாழி கிருஷ்ணன், முதல் கானொளியில் உங்கள் வீட்டுக் கிருஷ்ணர் போடும் ஆட்டம் எல்லாமே மனதைக் கொள்ளையடித்தன.
  வரகூருக்கு சென்று உறியடித் திருவிழா பார்த்ததில்லை. உங்கள் பதிவின் மூ'லம் கண்டு கொண்டேன். நன்றி
  வாழ்த்துக்கள்......

  ReplyDelete
 19. உறியடி உற்சவ செய்திகள் மற்றும் படங்கள் அருமை ! பக்தி மயம்!

  ReplyDelete